அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004
🙏 Available Pooja Services
- 🪔 தங்கத்தேர் – ₹1501
- 🪔 அண்ணாமலையார் அபிஷேகம் – ₹900
- 🪔 பைரவர் அபிஷேகம் கட்டணம் – ₹900
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கோயில் விவரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி (கி.பி.90-168) என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்களில், இந்நகரம் வணிகம் செழித்து வளர்ந்த நிலையில், மிகவும் புகழ்பெற்ற கடற்கரைப் பட்டினமாக விளங்கியுள்ளது. மேலும் இந்நகரமானது, பண்பாட்டுச் சிறப்பினையும் தன்னகத்தே கொண்டது. உலகப்புகழ்பெற்ற அற இலக்கியமான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் வாழ்ந்தவர். ஏழாம் நூற்றாண்டை சார்ந்த சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தரும் அப்பரும் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். கி.பி.1566-ல் மயிலாப்பூர் போர்ச்சுகீசியரின் வசம் வீழ்ந்த போது திருக்கோயில் சேதமுற்றது. தற்போதுள்ள திருக்கோயிலானது 300 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்டதாகும். தென்னிந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றான, மயிலை அருள்மிகு கபாலீசுவர் திருக்கோயிலானது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் உள்பட பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இத்திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இத்திருக்கோயிலின் இறைவன் அருள்மிகு கபாலீசுவரர்,...
தல வரலாறு
திருக்கோயில் தலவரலாறு :1.உமையம்மையார் மயிலுருக்கொண்டு காபலீசுவரரைப் பூசித்த தலம்.
2.முருகப் பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம்.
3.நான்முகன் பூசை புரிந்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்ட தலம்.
4.நான்மறைகள் பூசித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்றது.
5.சுக்கிரன் பூசித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற பெருந்தலம்.
6.இராமபிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய நற்றலம்.
7.திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்த்தலம்.
8.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் நாயனார் தோன்றி வழுத்திய தலம்.
9.பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத்தலம்.
10.ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற தெய்வத்தலம்.
11.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்றதலம்.
12.வான் புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்.
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
304 km
From Chennai (MAA)
12 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அண்ணாமலையார் அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
பைரவர் அபிஷேகம் கட்டணம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
தக்ஷணாமூர்த்தி அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
துர்கை அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
தங்கத்தேர்
₹1501
approx. 24.02 SGD / 81.05 MYR
கபாலீஸ்வரர் அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
கற்பகாம்பாள் அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
நர்த்தன விநாயகர் அபிஷேக
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
பழனி ஆண்டவர் அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
பிரசாத கட்டளை - தயிர் சாதம்
₹200
approx. 3.2 SGD / 10.8 MYR
சிங்காரவேலர் அபிஷேகம்
₹900
approx. 14.4 SGD / 48.6 MYR
📅 2023 Gallery
தெப்ப உற்சவம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 05-ம் தேதி முதல் நாள் இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர், திருக்கோயில் திருக்குளத்தின் தெப்பத்தில் எழுந்தருளி உலாவந்து திருவருள் புரிவர்
தெப்ப உற்சவம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 06-ம் தேதி இரண்டாம் நாள் இரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை அருள்மிகு சிங்காரவேலர் திருக்கோயில் திருக்குளத்தின் தெப்பத்தில் எழுந்தருளி உலாவந்து திருவருள் புரிவர்.
தெப்ப உற்சவம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 07-ம் தேதி மூன்றாம் நாள் இரவு 7.00 மணி முதல் இரவு 11.00 மணிவரை அருள்மிகு சிங்காரவேலர் திருக்கோயில் திருக்குளத்தின் தெப்பத்தில் எழுந்தருளி உலாவந்து திருவருள் புரிவர்.
கனு உற்சவம் இத்திருக்கோயிலில் 16.01.2023 அன்று கனு உற்சவம் அருள்மிகு நந்திகேஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, பல வகையான இனிப்பு மற்றும் கார வகைகளான பலகாரங்களால் சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு நந்திகேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மகா சிவராத்திரி மயிலையில் மகா சிவராத்திரி விழா 2023 மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் விளையாட்டு மைதானத்தில் 18.02.2023 அன்று மாலை 6.00 மணி முதல் 19.02.2023 காலை 6.00 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் ஆன்மீக மற்றும் கலை நிகழ்ச்சிகள்.
பங்குனி திருவிழா 2023 ஆம் ஆண்டு பங்குனி பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் 28.03.2023 கொடியேற்றத்துடன் துவங்கி 06.04.2023 அன்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணத்துடன் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றன. இவ்விழாவில் அதிகாரநந்தி, திருத்தேர், ரிஷப வாகனம், அறுபத்துமூவர், சுவாமி இரவலர் கோலம், திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய விழாக்களாக நடைபெற்றன. பங்குனி பெருவிழா பத்து நாட்களிலும் பகல், இரவு காலங்களில் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடைபெற்றது.
📅 2022 Gallery
பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழா 2022
மஹா கந்தர் சஷ்டி மஹா கந்தர் சஷ்டிதிருவிழா முதல் நாள்: 25-10-2022
நவராத்திரி விழா விற்கு 2022 26-9-2022,நவராத்திரி விழா 1 ஆம் நாள்,அருள்மிகு கற்பகாம்பாள் அன்னவாகனத்தில் கொலு மண்டபம் எழுந்தருளல்
27-9-2022, நவராத்திரி விழா2 ஆம் நாள் அருள்மிகு கற்பகாம்பாள் காமதேனு வாகனத்தில் அலங்காரம்
28-9-2022,நவராத்திரி விழா3,ஆம் நாள், அருள்மிகு கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம்
29-9-2022நவராத்திரி விழா4,ஆம் நாள், அருள்மிகு கற்பகாம்பாள் நாக வாகனத்திலி பத்மாசினி அலங்காரம்
30-9-2022நவராத்திரி விழா5 ஆம் , அருள்மிகு கற்பகாம்பாள் ரிஷப வாகனத்தில் மகேஸ்வரி அலங்காரம்
1-10-2022 நவராத்திரி விழா6 ஆம் நாள், அருள்மிகு கற்பகாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்
2-10-2022 நவராத்திரி விழா7,ஆம் நாள்,அருள்மிகு கற்பகாம்பாள் குதிரை வாகனத்தில் மீனாட்சி அலங்காரம்
3-10-2022 நவராத்திரி விழா8,ஆம் நாள் அருள்மிகு கற்பகாம்பாள் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்
4-10-2022 நவராத்திரி விழா 9 ஆம் நாள், அருள்மிகு கற்பகாம்பாள் காமாட்சி சிவபூஜை அலங்காரம்
மஹா கந்தர் சஷ்டி திருவிழா மஹா கந்தர் சஷ்டி திருவிழா 2 ஆம் நாள் திருவிழா
சூரசம்ஹாரம் சூரசம்ஹாரம் 30.10.2022
📅 2018 Gallery
ஆருத்ரா நடராஜர்
Navarathiri Festival
ராஜகோபுரம் கபாலீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம்
பங்குனி உத்திரம் திருவிழா பங்குனி உத்திரம் திருவிழா
பங்குனி உத்திரம் திருவிழா பங்குனி உத்திரம் திருவிழா
இத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் பங்குனி உத்திரமாக அமையும். பிரமேற்சவ நாட்களில் உற்சவ சிலைகள் மாட வீதிகளில் திருவீதி உலா சென்று வரும். இந்த உலா ஒளி விளக்குகளோடு, நாதஸ்வரத்தோடு, வேதமுழக்கம் மற்றும் தேவாரப்பாடல்களோடும் நடைபெறும்.
பரதநாட்டியம்
அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமி கற்பகாம்பாள்
கபாலீஸ்வரர் திருக்கோயில்
Panguni Festival
லட்ஷ தீபம் பௌர்ணமி லட்சதீபம் அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் சந்தனக்காப்பு. அருள்மிகு சந்திரசேகரசுவாமி திருவீதி விழா
அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீசுவரர் சந்நிதிக்குமுன், வெளியில் இடப்புறம் தெற்கு நோக்கிய வண்ணம் கற்பகாம்பாள் சந்நிதி இருக்கிறது. இச்சந்நிதி10 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இச்சந்நிதிக்குமுன் சிம்மத்தின் உருவமும், பலிபீடமும் உள்ளன. இச்சந்நிதியின் தென்மேற்கு கோடியில் பள்ளியறை உள்ளது. கற்பகாம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் அபிராமி அந்தாதிப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கற்பகாம்பாள் தெற்கு நோக்கியவாறு நின்று அருள்புரிகிறார்.
அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமி இங்குள்ள இறைவன் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இவரை புன்னைவனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிரபுரியான், கபாலீச்சரத்தினான் என்றும் அழைக்கின்றனர். கபாலீசுவரரை பூம்பாவை, ஈசன், புன்னைவன மயூரநாதன், கபாலிமாநகரான் என்றும் போற்றுகின்றனர். இச்சிவலிக்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இப்பெரிய சிவலிங்கத் திருமேனியோடு மேற்கே பார்த்தவாறு எழுந்தளியிருக்கிறான் கபாலீசுவரன், கபாலீசுவருக்கு உற்சவ மூர்த்தி உள்ளது.
தெப்பக்குளம்
கொடிமரம் மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கிய வண்ணம் நந்தி அமைந்துள்ளது. நந்தியையொட்டி கொடிமரமும், பலிபீடமும் அமைந்துள்ளது. இக்கொடிமரம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு தங்கமெருகேற்றப்பட்டு பக்தர்களின் சிந்தை குளிரும்வண்ணம் நெடிதுயர்ந்து காட்சியளிக்கிறது. நந்தியம் பெருமானுக்கு விசேஷ காலங்களிலும் பிரதோஷ காலங்களில் வெள்ளிக் கவசம் சாத்தப்படுவது காண இனியதாகும்.
15 விமானங்கள்
தங்க ரதம் தங்க ரதம்