Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இறைவன் : தாண்டேஸ்வரர் இறைவி : அங்காளம்மன் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம், மயில் கொன்றை தலவரலாறு : போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும், தண்ட காருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியைக் கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப் பெயரானது. மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன...என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது, ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனைப் பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர், இதற்குச் சான்றாக அங்காளம்மன் பதிகத்தில் பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவனத் தாயே என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. மேல்மலையனூரின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது. தல வரலாறு : ஆதிகாலத்தில் சிவபெருமானைப் போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப்போன்று இருந்த அவன் ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது பதியே என நினைத்த பார்வதி தேவி பிரமனை வணங்கி அவனுக்குப் பாத பூசை செய்தாள். அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட பார்வதி தனது தவறை உணர்ந்தாள்.பின்பு பிரம்மனுக்குத் தண்டனை அளிக்க உறுதிகொண்டு பெருமானை வணங்கி, சுவாமி இவன் தங்களைப் போன்று உள்ளான். அறியாமல் நான் செய்த பூசைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அதற்குத் தண்டனையாக இவனது ஒரு தலையைக் கொய்துவிட வேண்டும் என்று வேண்டி பணிந்தாள். சிவபெருமான்,பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்தார். .இதனால் அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றிற்று. கீழே விழுந்த தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. தனது கணவனின் நிலையறிந்த சரஸ்வதி தேவி கோபமுற்று, பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக என்று பெருமானைச் சபித்து தனது கணவனின் தலையைக் கொய்திட காரணமாயிருந்த பார்வதியை நோக்கி நீ செடி, கொடிகளை அணிந்து கோர ரூபமாய் கானகத்தில் அலைந்து திரிக என்று சபித்தாள். பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்கத் துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி, தாகத்தால் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, திருமாலிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டறிந்தாள். பின்னர் சிவபெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தினருகில் ஒரு தீர்த்தமுண்டாக்குமாறு கூறினாள். பெருமான் தனது சூலாயுதத்தால் ஒரு தீர்த்தமுண்டாக்கினார். அத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று இன்றும் வழங்கப்படுகிறது. அங்குத் தேவி உணவு வகைகளைத் தருவித்து மயானத்தில் சூறையிட்டாள். அந்த உணவையருந்த பெருமானின் கையைப் பற்றியிருந்த பிரம்ம கபாலம் கீழே இறங்கியது. கபாலம் இறங்கியதும் பெருமான் அக்னி தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அப்போது கபாலம் பார்வதி தேவியைப் பற்றிக் கொண்டது. தேவி பேருருவங்கொண்டு தனது காலால் கபாலத்தை மிதித்து பின்பு அதனையடுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டாள். அப்போது தேவியின் கோர உருவம் அவளை விட்டு விலகியது. அந்தத் திருவுருவமே அருள்மிகு அங்காளம்மன் ஆகும். கபால மாலை தரித்துக் கோபத்துடன் விளங்கிய அங்காளம்மனைச் சாந்தம் செய்து மதியில்லாத காரிருள் நாளில் உனதருள் வேண்டி மக்கள் வருவர், நீ இவ்விடத்தே எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள் செய்து வருக என்று பார்வதி தேவி கூறியருளினாள். அதன்படி அங்காளம்மனும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தாண்டிய பெருமான் தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட சிவன், பூங்காவனத் தாயின் இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால் அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். தனிச்சிறப்பு : சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள், சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஓம் சக்தி என்ற ஓங்கார சக்தியாக, ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவாகச் சூறையிடுவதாக உணவு வழங்குவதாகக் கருதப்படுகிறது. ஆகையால் ஒம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவைச் சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள் ஆவி ஆன்மாக்களைத் தலைகளாகக் கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப் பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதைப் போன்று தலைகளால் மாலை கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காளி அங்காளியாக விளங்குகிறாள்- மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாகக் கருதப்படுவதால் அமாவாசை தோறும் தொடர்ந்து மூன்று முறை வருகை தந்தால் அவர்களைப் பிடித்துள்ள பிணிகள், தோஷங்கள், வைப்பு, ஏவல், பில்லி, சூனியம், காட்டேரி, சேட்டை எதுவாயினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது. குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளி (ம) ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி கபால வேடம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்புகளாகும். இத்திருக்கோயிலுக்கு ஒருமுறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கிறது. இத்திருக்கோயில் இளங்கோயில் வகையைச் சேர்ந்தது, சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. திருவிழாக்கள் அமாவாசைதோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.
தல வரலாறு
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் இறைவன் : தாண்டேஸ்வரர் இறைவி : அங்காளம்மன் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம், மயில் கொன்றை தலவரலாறு : போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும், தண்ட காருண்ய... தலவரலாறு : போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்....தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும், தண்ட காருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியைக் கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப் பெயரானது. மேல்மலையனூரில் மலையன் ஆட்சி புரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச்சுவடுகள் இருந்தன என்றும், மேல்மலையனூரில் ஒரு தெருவின் பெயர் கோட்டை மேட்டுத் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது, ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனைப் பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர், இதற்குச் சான்றாக அங்காளம்மன் பதிகத்தில் பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவனத் தாயே என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. மேல்மலையனூரின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது. தல வரலாறு : ஆதிகாலத்தில் சிவபெருமானைப் போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப்போன்று இருந்த அவன் ஒரு சமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது பதியே என நினைத்த பார்வதி தேவி பிரமனை வணங்கி அவனுக்குப் பாத பூசை செய்தாள். அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட பார்வதி தனது தவறை உணர்ந்தாள்.பின்பு பிரம்மனுக்குத் தண்டனை அளிக்க உறுதிகொண்டு பெருமானை வணங்கி, சுவாமி இவன் தங்களைப் போன்று உள்ளான். அறியாமல் நான் செய்த பூசைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அதற்குத் தண்டனையாக இவனது ஒரு தலையைக் கொய்துவிட வேண்டும் என்று வேண்டி பணிந்தாள். சிவபெருமான்,பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்தார். .இதனால் அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றிற்று. கீழே விழுந்த தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. தனது கணவனின் நிலையறிந்த சரஸ்வதி தேவி கோபமுற்று, பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக என்று பெருமானைச் சபித்து தனது கணவனின் தலையைக் கொய்திட காரணமாயிருந்த பார்வதியை நோக்கி நீ செடி, கொடிகளை அணிந்து கோர ரூபமாய் கானகத்தில் அலைந்து திரிக என்று சபித்தாள். பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை பிரம்ம கபாலம் புசிக்கத் துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி, தாகத்தால் காடு, மலையெல்லாம் அலைந்து திரிந்தார். பார்வதி தேவி, திருமாலிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டறிந்தாள். பின்னர் சிவபெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தினருகில் ஒரு தீர்த்தமுண்டாக்குமாறு கூறினாள். பெருமான் தனது சூலாயுதத்தால் ஒரு தீர்த்தமுண்டாக்கினார். அத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று இன்றும் வழங்கப்படுகிறது. அங்குத் தேவி உணவு வகைகளைத் தருவித்து மயானத்தில் சூறையிட்டாள். அந்த உணவையருந்த பெருமானின் கையைப் பற்றியிருந்த பிரம்ம கபாலம் கீழே இறங்கியது. கபாலம் இறங்கியதும் பெருமான் அக்னி தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அப்போது கபாலம் பார்வதி தேவியைப் பற்றிக் கொண்டது. தேவி பேருருவங்கொண்டு தனது காலால் கபாலத்தை மிதித்து பின்பு அதனையடுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்து கொண்டாள். அப்போது தேவியின் கோர உருவம் அவளை விட்டு விலகியது. அந்தத் திருவுருவமே அருள்மிகு அங்காளம்மன் ஆகும். கபால மாலை தரித்துக் கோபத்துடன் விளங்கிய அங்காளம்மனைச் சாந்தம் செய்து மதியில்லாத காரிருள் நாளில் உனதருள் வேண்டி மக்கள் வருவர், நீ இவ்விடத்தே எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள் செய்து வருக என்று பார்வதி தேவி கூறியருளினாள். அதன்படி அங்காளம்மனும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தாண்டிய பெருமான் தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட சிவன், பூங்காவனத் தாயின் இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால் அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். தனிச்சிறப்பு : சிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள், சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஓம் சக்தி என்ற ஓங்கார சக்தியாக, ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவாகச் சூறையிடுவதாக உணவு வழங்குவதாகக் கருதப்படுகிறது. ஆகையால் ஒம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவைச் சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள் ஆவி ஆன்மாக்களைத் தலைகளாகக் கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப் பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதைப் போன்று தலைகளால் மாலை கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காளி அங்காளியாக விளங்குகிறாள்- மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாகக் கருதப்படுவதால் அமாவாசை தோறும் தொடர்ந்து மூன்று முறை வருகை தந்தால் அவர்களைப் பிடித்துள்ள பிணிகள், தோஷங்கள், வைப்பு, ஏவல், பில்லி, சூனியம், காட்டேரி, சேட்டை எதுவாயினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது. குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளி (ம) ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி கபால வேடம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்புகளாகும். இத்திருக்கோயிலுக்கு ஒருமுறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கிறது. இத்திருக்கோயில் இளங்கோயில் வகையைச் சேர்ந்தது, சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. திருவிழாக்கள் அமாவாசைதோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)188 km
From Chennai (MAA)117 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.