அருள்மிகு திந்திரினீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம் - 604001
🙏 Available Pooja Services
- 🪔 வீடியோ கட்டணம் ரூ – ₹50
☀️ Best Time for Pilgrimage
Ideal for NRI travelers used to AC environments.
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இந்நடுநாட்டில் புகழ்பெற்ற நகரமாக கிடங்கில் என்ற பெயருடன் திண்டிவனம் சிறப்புற்று விளங்கியுள்ளது. சங்க காலத்தில் ஓய்மா நாடு எனப்பட்ட பகுதியில் கடங்கில் அமைந்திருந்தது. ஓய்மான்கள் ஆண்ட நிலப்பகுதியே ஓய்மா நாடு எனப்பட்டது. இவ்வூர் திந்திருணிவனம் எனவும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றுள்ளது. திந்திருணி என்பது புளிய மரத்தைக் குறிக்கும் வனம் என்பது காடுகளைக்குறிக்கும். இவ்வூர் புளிய மரங்கள் அடங்கிய காடுகள் நிறைந்திருந்த பகுதியாதலால் திந்திருணிவனம் எனப்பட்டது.எனவே தான் இத்தலத்திறைவன் திந்திரிணீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருளாட்சி புரிகின்றார். திண்டி என்ற முனிவர் வழிபட்டதால் இத்தலம் திண்டீச்சுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இத்திண்டீச்சுரமே மருவி திண்டிவனம் எனப்பெயர் பெற்றுள்ளது.
தல வரலாறு
இக்கோயில் விமானம் வால்மீகி முனிவரால் பூசிக்கப்பட்டது எனக் குறிப்பிடுவதிலிருந்து இக்கோயில் சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறதுமகேந்திரவர்மனை சை வ சமயத்திற்கு மாற்றிய சமயக் குரவர் நால்வருள் ஒருவரான அப்பர் தனது ஷேத்திரக் கோவையில் இத்தலத்தை கயிலாய நாதனைக் காணக் கூடிய இடங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.
தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச்சுரஞ் சேய்ஞலூரில்
கயிலாய நாதனையே காணலாமே
எனப் பாடி புகழ்கின்றார்
ஈசன் மேவும் தலங்களை ஈச்சரம் என்பர் அவ்வகை ஈச்சரங்களை பட்டியலிட்டு இன்புறும் சமயத்திலும் திருநாவுக்கரசர் இத்தலத்தை மேலும் சிறப்பு படுத்துகிறார்,
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
வீடியோ கட்டணம் ரூ
₹50
approx. 0.8 SGD / 2.7 MYR