அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை - 636807

அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை - 636807

🙏 Available Pooja Services

  • 🪔 அபிஷேகம் – ₹250
  • 🪔 விரைவு தரிசனம் – ₹100
  • 🪔 பூசணி தீபம் – ₹10
View All Poojas

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், தருமபுரி நகரில் இருந்து நல்லம்பள்ளி வழியாக சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டை என்ற கிராமத்தில் தெற்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது. காசி நகரத்திற்கு அடுத்தப்படியாக, காலபைரவர் சுவாமிக்கென்று அமையப்பெற்ற பழமையான ஒரே தனித்திருக்கோயிலாக இத்திருக்கோயில் அறியப்படுகிறது. எனவேதான் பக்தர்களால் இக்கோயில் தட்சிணகாசி ஷேத்திரம் என்றும், தென்னகக்காசி திருத்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாக மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் சத்ரு சம்கார யாகம் நடைபெறுகிறது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழித்திருந்து பூசணி தீபங்கள் ஏற்றியும் யாகபூஜையில் கலந்து கொண்டும் வழிபடுகின்றனர். இத்தல இறைவனை வழிபடுவதால் நவக்கிரக தோஷநிவர்த்தி, எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவதுடன் வாழ்வில் வளங்கள் கைக்கூடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Temple History

தல வரலாறு

சங்ககாலச் சிறப்புகொண்ட தகடூர் எனப்படும் தருமபுரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதியமான்கோட்டை கிராமம் ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற அதியமான் நெடுமானஞ்சி மன்னரின் பெயரால் விளங்கும் இந்த ஊரில் தரைக்கோட்டை இருந்ததற்கான எச்சங்கள் இன்றைக்கும் மண்மேடுகளாக ஆங்காங்கே தென்படுகின்றன. இவ்வூரை அகழ்வாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்த மக்கள் இங்கே வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். கறுப்பு, சிவப்பு மண் கலங்களும் பானை ஓடுகளும் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு அவற்றின் காலம் கி.மு-300 எனக் கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகு சிறப்பு வாய்ந்த அதியமான்கோட்டையில் அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலை அதியமான் மன்னரால் நிர்மாணிக்கப்பட்டதாக காலங்காலமாக இப்பிரதேச மக்களால் கூறப்பட்டு வருகிறது. ஔவைக்கு நெல்லிக்கனி...
சங்ககாலச் சிறப்புகொண்ட தகடூர் எனப்படும் தருமபுரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அதியமான்கோட்டை கிராமம் ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற அதியமான் நெடுமானஞ்சி மன்னரின் பெயரால் விளங்கும்...
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Madurai (IXM)

💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.

From Trichy (TRZ) 159 km
From Chennai (MAA) 245 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹250

approx. 4.0 SGD / 13.5 MYR

🪔

அர்ச்சனை

₹5

approx. 0.08 SGD / 0.27 MYR

🪔

பூசணி தீபம்

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

சந்தன காப்பு

₹10

approx. 0.16 SGD / 0.54 MYR

🪔

விரைவு தரிசனம்

₹100

approx. 1.6 SGD / 5.4 MYR