Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அமைவிடம்
திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 7.5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகளும், மாவட்டத்தின் இதர முக்கிய பகுதியில் இருந்து புறநகர் பேருந்து வசதிகளும் உள்ளன. திருக்கோயில் இருந்து நவதிருப்பதி, நவகைலாயம் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லலாம். தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் புகைவண்டி வசதிகள் உள்ளன அருகில் உள்ள தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் சுமார்35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தல வரலாறு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் திருநெல்வேலிப் பதிகம் பாடியிருப்பதால் அதற்கு முன்பே திருநெல்வேலி என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும்...நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் திருநெல்வேலிப் பதிகம் பாடியிருப்பதால் அதற்கு முன்பே திருநெல்வேலி என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் ராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். திருநெல்வேலி என இவ்வூர் அழைக்கப்படுவதற்கு மரபுவழிக் கதையொன்று உள்ளது: முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இவற்றில் 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. இவற்றில் பொற்றாமரை, கருமாறி தீர்த்தம், வையிரவ தீர்ததம், சர்வ தீர்த்தம் இந்நான்கும் இக்கோவிலுக்குள் அமைந்தவை. கம்பை, தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்ககைத் தீர்த்தம், குறுக்குத்துறை ஆகிய ஐந்தும் கோவிலுக்கு வெளியே இருப்பவை. இத்திருக்கோவிலுக்கு தல விருட்சம் மூங்கிலாகும். இந்த ஆலயத்திற்கு சுவாமி ரதம், அம்பாள் ரதம், விநாயர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டேசுவரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன. இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. இலக்கிய சிறப்பு சீர்சான்ற நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ எனும் மதுரைக் காஞ்சி வரிகளுக்கு திருநெல்வேலிக்கு சாலியூர் (வளமான நெற்கொண்ட நகரம்) என பொருள் கொள்கிறார். உ.வே.சாமிநாதய்யர் காந்தியம்மை பிள்ளைத்தமிழும் கூறுகின்றன. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய மூன்றாம் திருமுறை, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய ஏழாம் திருமுறை, 12-ஆம் திருமுறை, திருவிளையாடற் புராணம் ஆகியவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றிலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. திருநெல்வேலி தல புராணத்தை நெல்லையப்ப பிள்ளை என்பார் எழுதியுள்ளார். அது 120 சர்க்கங்களையும், 6891 செய்யுள்களையும் கொண்டது. தேவார மூவர் முதலிகளின் பார்வையில் திருநெல்வேலி இத்திருக்கோயிலை சைவசமய குரவர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் எழுந்தருளி தமிழ்வேதம் பாடிப் பரவி இருக்கின்றனர். ஆனால் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய மருந்தவை மந்திரம் என தொடங்கும் 11 பாடல்கள் அடங்கிய திருப்பதிகம் மட்டும் கிடைத்து உள்ளது. (சம்பந்தர் தேவாரம் 92-103) தேவார மூவரில் முதல்வரான திருஞானசம்பந்தர் (திருஞானசம்பந்தர் புராணம்) திருநாவுக்கரசர் (திருநாவுக்கரசர் புராணம்) ஆகியோர் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளியதையும் தெய்வச் சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திலும் (பெரிய புராணப் பாடல் 410, 886, 887) காணலாம். பற்றார்தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமானார் திருப்பத்துார் பணிந்து போந்து புற்றாகும் பணிப்பூண்ட புனித னார்தம் பூவனத்தை புக்கிறைந்து புகழ்நது பாடிக் காற்றொரும் தொழுத்தேத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டேத்திக் கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகி னாரே -பெரிய புராணம் -886 புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப் புரிசடையார் திருப்பதிகள் பலவும் சென்று நண்ணி இனி தமர்ந்தங்கு நயந்துபாடி நற்றொண்ட ருடன் நாளும் போற்றிச் செல்வார் விண்ணவரைச் சென்றுந்தான் இலங்கை செற்ற மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித் திண்ணிய பொற்தடக்கை இராமன் செய்த திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார் பெரிய புராணம் -887 அங்குறைந்து கண்ணுதலார் அடிசூடி அகன்றுபோய்ப் பொங்குதமிழ்த் திருநாட்டுப் புறம்பனைசூழ் நெல்வேலி செங்கண்விடை யார்மன்னுந் திருக்கானப் பேர் முதலா எங்குநிகழ் தானங்கள் எல்லாம்புக் கிறைஞ்சுவார். பெரிய புராணம் -410 நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ் பல்வேறு பதிப்பிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார் வில்வேட ராய்வென்றி விசயனெதிர் பன்றிப்பின் செல்வேத முதல் வரமர் திருவிரா மேச்சரத்து பெரிய புராணம் -108 கலைச்சிறப்பு இத்திருக்கோயிலானது திருநெல்வேலி நகரத்தின் பாண்டிய மற்றும் பல்லவ ஆட்சிக்காலங்களில் மதம் மற்றும் கலாசாரத்தை சார்ந்து கட்டப்பட்ட மிக அழகிய கலை நுட்பத்துக்கு எடுத்துக்காட்டானது மதுரை கோயிலை விட பெருங்கோயிலான இத்திருக்கோவிலை சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம். இக்கோவில் 5 கோபுரங்களோடு விளங்கும் ஒரு பெரிய கோயில். ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறது. இறைவன் சன்னதி கோபுரத்தை விட இறைவி கோபுரம் அழகு வாய்ந்தது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக் கரையில் நின்று பார்த்தால் அதன் கம்பீரம் புரியும். இப்பொற்றாமரை தீர்த்தத்தில் இறைவனை நீர் வடிவாகவும், பிரம்மன் பொன் மலராகவும் பூத்த புண்ணிய தடாகம் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இத்திருக்கோயிலானது சிவபெருமான் சுவாமி நடராஜராக தாமிர சபையில் பிரப்பஞ்சத்தை ஈர்க்கும் வகையில் ஞானமா பிரம்ம தாண்டவ நர்தனம் புரிந்த புனித ஸ்தலமாகும். புராணங்களின் படியும் பழங்கால ஏடுகளின் படியும் இக்கோயிலானது ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. ஒரே கல்லில் ஆன ஒரு மத்திய துாணை சுற்றிய 48 துாண்கள் கொண்ட அழகிய கலை நுட்பமான படைப்பாகும். மேற்படி துாண்களை மரக்கட்டையால் தட்டும் பொழுது ஏற்படும் குறிப்பிட்ட ஸ்வரராகமானது நம்மை மகிழ்விக்கும் வகையில், மிகச்சிறந்த தொழில் நுட்பத்தின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்பது மிகவும் ஆச்சரியப்படத் தக்கதாகும். ஆயிரங்கால் மண்டபம் ஆனது சிறந்த அழகிய கலை நுட்பம் கொண்டது. மிகச்சிறந்த வகையில் கற்களில் வடிக்கப்பட்ட கற்சிலைகள், தாழ்வாரத்தில் உள்ள பிரகாரங்களில் காணும் துாண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள், கலை சிற்பிற்கான பெருமையினை விளக்குகிறது. இத்திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் கொடிமரத்தின் அருகிலுள்ள நந்தியானது சிவபெருமானின் வாகனமாக தோற்றம் அளிக்கும் வகையில் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பெருமை மிக்கது. மிகப்பெரிய ஐந்து கோபுரங்கள் தாழ்வாரங்கள் சன்னதிகள் முதன்மை கருவறை மற்றும் உபசன்னதி கருவறை மேலுள்ள விமானங்கள் மிக நுன்னிய அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டது. மேலும் இத்திருக்கோயிலுக்கு கலை அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ள மணிமண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சோமவார மண்டபம் ஆகியவை எண்ணற்ற அழகிய நுாதனமான வேலைப்பாடுகளை கொண்டது. நாயக்கர் கால சிலை வடிவங்களான மகா மண்டபத்தில் அமைந்துள்ள வீரபத்திரன், அர்ஜுனன், பகடை ராஜா முதலியார் சந்நிதி வாயிலில் அணி செய்கின்றனர். வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாக குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள். மேலும் சேவல் சண்டை, அர்ஜுனனின் உடன்போக்கு பிரகாரங்களின் மேற்கூறையில் செதுக்கப்பட்டுள்ள 12 இராசிகளின் சக்கரம், காமதகனம் நடந்த இடமா மாதலால் ஆங்காங்கே தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ரதி, மன்மதன் சிற்பங்கள் மற்றும் தாமிர சபையில் இறைவனின் திருநடனத்தை தேவர்குலமெல்லாம் தரிசிக்கும் மர சிற்பங்கள் போன்றவை காண வேண்டிய சிற்பங்கள். சுவாமி சன்னதியின் மேல் பக்கம் உள்ள ஸ்ரீ ஆறுமுக நயினார் சந்நிதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருப்பது ஒரே கல்லில் ஆனது. ஆறு திருமுகத்தையும் நாம் சுற்றி வந்து பார்த்து வணங்கலாம். சந்நிதி முன்பு மகா மண்டபத்திரையில் பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி என்பவரால் வடிக்கப்பட்ட தாளச்சக்கரம் அமைந்துள்ளது. இது இசைக் கலைஞர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியது. சுவாமி சன்னதிக்கு அருகில் உள்ள 63 நாயன்மார் சன்னதியில் ராவணன் கயிலை மலையை பெயர்க்கும் காட்சி, யாழில் இசை பாடுவதைப் போன்ற சிற்பக்காட்சி மனதை மிகவும் கவரும், சுவாமி சன்னதி மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கச் சுவரில் இராவணன் கைலாச மலையை பெயர்த்தபோது, அம்பிகை பயந்து சுவாமியைத் தழுவும் சிற்பம் உள்ளது. 1.ஆயிரங்கால் மண்டபம் : ஆயிரம் தூண்கள் உடையது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும் மண்டபம். இம்மண்டபம் 520 அடி நீளம் 63 அடி அகலம் உடையது. பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி இம்மண்டபத்தில் நடைபெறும். இம்மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றம் உடையது. ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ் பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூசிப்பதாய் ஐதீகம். (கச்சபாளையம்) 2.ஊஞ்சல் மண்டபம் : 96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 துாண்கள் உடையது. திருக்கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாதம் வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும். இங்குள்ள யாழி சிற்பங்கள் சிறப்புடையன. இந்த ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையன் கி.பி.1635இல் கட்டுவித்தார். 3.சோமவார மண்டபம் : சுவாமி கோயிலின் வடப்பக்கம் இது உள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கும் இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. 78 தூண்களுடைய பெரிய மண்டபம். 4.சங்கிலி மண்டபம் : சுவாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயர். 1647ல் வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இம்மண்டப தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிற்பங்கள் கண்ணைக் கவரும். 5.மணி மண்டபம் : இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணிமண்டபம் என்பர். நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது. ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறிய தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய துாணை தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையால் தட்டினால் அற்புதமான சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இசை தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. 6. வசந்த மண்டபம் : 100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடைக்காலத்தில் வசந்த திருவிழா நடைபெறத்தக்க வகையில் காலங்களுக்ககேற்ப . சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756ல் திருவேங்கட கிருஷ்ணமுதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது 7.சிந்துபூந்துறைத் தீர்த்த மண்டபம் : சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையர்களால் கட்டப்பட்டது. முக்கிய தீர்த்தவாரிகள் அனைத்தும் இங்கு நடைபெறுகிறது. இதனை தைப்பூச மண்டபம் என்பர். திருவிழாக்கள் தோறும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளுவதற்கான உள்ள பல வாகனங்களும் வேறெங்கும் கானா வகையில் மிகவும் அழகானவை. பஞ்ச ரதங்கள் இத்திருக்கோயிலின் சுவாமி தேர் தமிழ்நாட்டிலேயே 3வது பெரிய தேர் 1505ல் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதர வீதிகள் அரியநாயக முதலியரால் வகுக்கப்பட்டது. பெரிய தேர் எடை 450டன்கள். பெரிய தேரின் இரும்பு அச்சுகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்திலுள்ள , என்கிற நிறுவனத்தாரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வார்ப்பு இரும்பு அச்சுகள் ஊதுளையில் மூலம் தயாரிக்கப்பட்டவை. பஞ்சமூர்த்தி களுக்கும் தேர் உள்ளன. (சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்). மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்பு தேர் பவனி வரும் தமிழ்நாட்டிலே வேற எந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான அற்புத மரச் சிற்பங்கள் கொண்ட அம்மன் தேர் இத்திருக்கோயிலில் உள்ளது. தாமிர சபை அருள்தரும் காந்தியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிர சபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்தத் தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பாலத்தில் சுந்தரத் தாண்டவமும், திருக்குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமரை சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது. உற்சவமூர்த்தி தாமர சபாபதி என்றும், மூலவர் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர் பெருமானின் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜர் சன்னதியும் காண வேண்டிய ஒன்று. தனிச்சிறப்புகள் 1.திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். 2.இரட்டை கருவறைகள் (வேணுவன நாதர், நெல்லை கோவிந்தர்) 3.முத்துசாமி தீட்சிதர் இத்திருத்தலத்து இறைவி மீது ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற ஸ்ரீ காந்திமதிம் என்னும் பாடலை பாடியுள்ளார். 4.வருடாவருடம் தை அமாவாசையன்று பத்ர தீபமும், (பத்தாயிரம் விளக்குகள்) 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்சதீபமும் ஏற்றப்படுகின்றது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின் போது மணிமண்டபத்தில் தங்க விளக்கு 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. நீத்தார் கடன்களை (பித்ருகர்மா) சரிவர செய்யாதவர்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும். பத்ர தீபம் அல்லது லட்சதீப திருவிழாவின்போது தீபம் ஏற்றினால் குடும்ப சாபங்கள் விலகி வாழ்க்கை செம்மை அடையும் என்று கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பார் இந்நிகழ்ச்சியை திருக்கோயிலில் ஏற்படுத்தி உள்ளார். 5.ஆறுமுக நயினார் சன்னதியில் வித்யா சக்கரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீவித்யா ஹோமம் செய்ய ஏற்ற தலம். 6.இல்லற வாழ்வில் கணவன் மனைவி இடையே நிலவ வேண்டிய கருத்தொற்றுமையை வலியுறுத்தும் விதமாக இத்திருக்கோவில் இறைவனுக்கு உச்சிக்கால பூஜைக்கான நிவேதனம் இறைவி சன்னதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு அர்ச்சகர்களால் எடுத்துச் செல்லப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இறைவியே இறைவனுக்காக உணவு தயார் செய்து எடுத்துச்சென்று படைப்பதாக ஐதீகம். 7.பங்குனி திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் சாயிரட்சை பூஜையில் உடையவர் லிங்கம் எனப்படும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளும் திருமணமான பெண்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற்று பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வார் என்பது ஐதீகம் 8.புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம். திருக்கோயிலைச் சார்ந்த நிலங்கள் அருள் புரியும் ஆண்டவன் நெல்லையப்பர் உறையும் இவ்வாலயத்திற்கு சுமார் 512 ஏக்கர் 49 சென்ட் நன்செய் நிலங்களும் 2960 ஏக்கர் 81 செண்டு புன்செய் நிலங்களும் உள்ளன. திருநெல்வேலி, கஸ்பா, தென்பத்து, பாட்டப்பத்து, கண்டியப்பேரி, அருகன்குளம் சேந்திமங்கலம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, பல்லிக்கோட்டை, தென்குளம், அபிஷேகப்பட்டி, மேகமுடையார்குளம், மணிமூர்த்தீஸ்வரம், பிரான்சேரி, தெய்வேந்திரபேரி, சேரன்மகாதேவி, தென்திருப்புவனம் சுப்பிரமணியபுரம், மாரமங்கலம், செட்டிக் குறிச்சி, திருப்பணிகரிசல்குளம், திருப்பணி நெடுங்குளம், திருப்பணி நல்லாண்டார்குளம் பூவாணி மேலும் சில கிராமங்களில் நிலங்களும், சுமார் 228 கடைகளும் மற்றும் காலி மனைகளும் உள்ளன. அன்னதானம் திட்டம் இத்திருக்கோயிலில் தமிழக முதல்வர் அவர்கள் அன்னதான திட்டம் 23.03.2002ல் தொடங்கி தினமும் 100 நபர்களுக்கு கூட்டு அல்லது பொறியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சட்டமன்ற அறிவிப்பு எண்.2ன்படி, ஆண்டுக்கு 21 நாட்கள் முக்கிய திருவிழாக்காலங்களில் 500 நபர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)253 km
From Chennai (MAA)546 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில், திருநெல்வேலி நகர் திருக்கோயில் வெளித்தோற்றம்
ஐப்பசி திருக்கல்யாணம் நான்காம் திருநாள்நிகழ்வு .
சூரசம்கார நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 18.11.2023 அன்று சூரசம்கார நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழா .
திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 19.11.2023 அன்று திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 19.11.2023 அன்று திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 19.11.2023 அன்று திருக்கல்யாண வைபோக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 20.11.2023 அன்று கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது
கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 20.11.2023 அன்று கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது
கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் 20.11.2023 அன்று கார்த்திகை மாதம் முதல் சோமவார நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஐப்பசி திருக்கல்யாணம் ஒன்றாம் திருநாள்நிகழ்வு .
ஐப்பசி திருக்கல்யாணம் கொடியேற்றம் நிகழ்வு 2023 ஆம் ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் நாளது ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் 29.10.2023 ஞாயிற்நுக்கிழமையன்று காலை 7.20 மணிக்கு மேல் 08.30 மணிக்குள்ளாக ஸ்ரீ காந்திமதி அம்மன் சன்னதியில் வைத்து நடைபெற்றது 29.10.2023 முதல் 12.11.2023 வரை முடிய நடைபெறுதல்
ஐப்பசி திருக்கல்யாணம் இரண்டாம் நாள் திருநாள்நிகழ்வு .