அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், போரூர், சென்னை - 600116
🙏 Available Pooja Services
- 🪔 அம்பாள் சந்தனகாப்பு – ₹2000
- 🪔 அர்ச்சனை – ₹5
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில், 19, ஈஸ்வரன் கோயில் தெரு,போரூர், சென்னை -116 என்ற முகவரியில் அமைந்துள்ளது. அருள்மிகு இராமநாதீஸ்வரர் திருக்கோயில் நுழைவு வாயிலில் ஐந்து தளங்கள் கொண்ட திராவிட பாணியிலான இராஜகோபுரம் ஒன்பது கலசங்கள் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் தூங்கானைமாடம் (கஜபிரஸ்தம்) அமைப்பில் அமைந்த விமானத்தில் இராமநாதீஸ்வரர், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையின் மேலே மூன்று தளங்களுடன் வேசர சிகரம் கொண்ட விமானம் உள்ளது. அர்த்த மண்டபம் முன்பாக இருபது தூண்கள் கொண்ட மகா மண்டபம் உள்ளது மேலும் மகாமண்டபம் மற்றும் ராஜகோபுரம் இடையே கருவறைக்கு எதிரில் நந்தி, பலிபீடம் மற்றும் கொடி மரம் அமைந்துள்ளது. அருள்மிகு இராமநாதீஸ்வரர் சன்னதியின் தேவ கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இராமநாதீஸ்வரர் சன்னதியின் தென்மேற்கில் சந்தான விஜய...
தல வரலாறு
சென்னை மாநகரத்தில் போரூர் எனும் பெயர் பெற்ற சேத்திரத்தில், இராமபிரான் ஒரு மண்டலம் தவம் இருந்து அருள்பெற்றதால் இங்கு உள்ள சிவ பெருமான் இராமநாதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இராமபிரான் ஒரு கணம் மஹாவிஷ்ணுவாக மாறி சிவனை கட்டித் தழுவியதால் அமிர்தலிங்கமாக மாறி காட்சி கொடுத்ததாகவும் இராமபிரான் போருக்கு சென்று சீதையை மீட்டு வர ஆசி வழங்கி அனுப்பியதாலும் இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் (இராமபிரானுக்கு குரு) ஆதி இராமேஸ்வரர், உத்தர இராமேஸ்வரர் என சிறப்பு பெயர்கள் பெற்று தொண்டை மண்டலத்தில் அமைந்ததுள்ள நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக இருந்துவருகிறது. மேலும் இவ்வாலயத்தில் மஹா விஷ்ணுவின் பிரசாதமான தீர்த்தம், ஜடாரி சேவை வழங்கப்பட்டு வருகிறது.NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)
297 km
From Chennai (MAA)
4 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
அம்பாள் சந்தனகாப்பு
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR
அர்ச்சனை
₹5
approx. 0.08 SGD / 0.27 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் நுழைவு வாயில் திருக்கோயில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது
மூலவர் சன்னதி மூலவர் சன்னதி
சிவகாம சுந்தரி அம்மன் சன்னதி சிவகாம சுந்தரி அம்மன் சன்னதி
முருகர் சன்னதி முருகர் சன்னதி
விநாயகர் சன்னதி விநாயகர் சன்னதி