அருள்மிகு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை - 600107

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை - 600107

🙏 Available Pooja Services

  • 🪔 அபிஷேகம் – ₹1050

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத்திற்கு கீழே கால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக் கிறது. சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப்...

Temple History

தல வரலாறு

அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது, வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்திருக்கோயில் விளங்கி வருகிறது. சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு குறுங்காலீஸ்வரர் என்ற பெயர் உண்டானது. குசலவம் என்றால் குள்ளம் என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Chennai (MAA)

💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.

From Trichy (TRZ) 303 km
From Chennai (MAA) 9 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

அபிஷேகம்

₹1050

approx. 16.8 SGD / 56.7 MYR