அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், Thittai - 613003

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், Thittai - 613003

🙏 Available Pooja Services

  • 🪔 கட்டளை அர்ச்சனை சீட்டு – ₹600

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்காளம்பிகை எனப் போற்றப்படுகிறாள். மேலும் விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது. நவகிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி, பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர். தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித்திட்டை எனப்படும் திட்டை திருத்தலம். இங்கு வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை...

Temple History

தல வரலாறு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகத்தில் மகாப்ரளயம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பிரளயம் உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அத்தகைய தருணத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரனின் திருவருளால் ஊழிப்பெருவெள்ளத்தின் மத்தியில் சுமார் பத்து மைல்கள் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதி மட்டும் நிலைத்திருத்தது.
அம்மேட்டுப்பகுதியில் கோடி சூரியன் ஒரே சமயத்தில் உதயமானது போல் ஜோதிமயமான சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்திலிருந்து காட்சி தந்த சிவபெருமான் வேத வேதாந்த சாஸ்திர அறிவை அனைத்து உலகங்களுக்கும் தந்தருளினார். இறைவன் சுயம்புவாக அந்த மேட்டுப் பகுதியில் தோன்றியதால் ஸ்வயம்பூதேஸ்வர் தான்தோன்றீஸ்வரர் எனப் பூஜிக்கப்பட்டார்.
முதன் முதலில் வசிஷ்ட மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து இறைவனைப் பூஜித்து பிரம்மஞானிகளில் முதன்மைப் பெற்றவராக விளங்கினார்.
வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன்...
வசிஷ்ட மகரிஷிக்கு அருள்புரிந்த காரணத்தினால் இத்திருத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 51 km
From Chennai (MAA) 263 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

கட்டளை அர்ச்சனை சீட்டு

₹600

approx. 9.6 SGD / 32.4 MYR