அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703
🙏 Available Pooja Services
- 🪔 தங்கரதம் – ₹2000
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கோயில் நகரமாம் கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலமாகும். நான்கு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இராஜ கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இரண்டாம் கோபுர வலப்புறம் ஆக்ஞா கணபதி சன்னதி உள்ளது. இரண்டாம் கோபுரத்தைக் கடந்து செல்லும் முன் அதிகார நந்திதேவரின் உத்தரவு பெற்று உள்ளே சென்றால் விலகிய நந்தியைக் காணலாம். கோயில் வாயிலில் உள்ள அலங்கார மண்டபம் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் உள்ளது. இம்மண்டபத்தில் காலசம்ஹாரர், அகோரவீரபத்திரர், வில்லேந்திய வேலவர், மன்மதன் முதலானோர், சம்ஹார வடிவிலும் பணிப்பெண்டீர், ஆடல்மகளீர் முதலான உருவங்கள் இம்மண்டபத்திற்கு அழகு சேர்க்கின்றன.உள்ளே சென்றால் பெரிய மண்டபம், பிச்சாடனர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் முதலான தெய்வத்திருமேனிகள் அனுக்கிரஹ முத்திரைக்காட்டி உள்ளன. திருஞானசம்பந்தருக்கு வெய்யிலில் வெப்பந்தணியஇறைவனால் முத்துப் பந்தல்அளிக்கப்பெற்றது. முத்துப் பந்தலின் நிழலில் வருவதைக் காண நந்தி தேவரை விலகியிருக்கும்படி கட்டளையிட்டார். அதன் அடையாளமாக...
தல வரலாறு
வரலாற்று நிகழ்வுகள்
பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகப் பழையாறை மாநகர் விளங்கியது. அரசலாற்றுக்கு தெற்கும், முடிகொண்டான் ஆற்றுக்கு வடக்கும், வளம்பொருந்திய இந்நகர் சுமார் 5 மைல் நீளமும், 3 மைல் அகலமும் உள்ள பெரிய நகராகும். இன்று இந்நகர் நாதன்கோவில், உடையாளூர், கீழப்பழையார், மேலப்பழையார், முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்திமுற்றம், சோழன்மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், திருமேற்றளிகை, கோபிநாத பெருமாள் கோயில், சுந்தரபெருமாள் கோயில், இராசராசேந்திரன்பேட்டை, தாராசுரம் எனப் பல சிற்றூர்களாகப் பிரிந்துள்ளன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளம்பொருந்திய இந்நகர் முதலாம் மகேந்திரவர்மனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. பிற்கால சோழர்கள், பல்லவர்களுக்கு திரைசெலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக இருந்தனர்.
இரண்டாம் நந்திவர்மன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறையில் ஓர் அரண்மனையும், நந்திபுர விண்ணகரம் என்னும்...
இரண்டாம் நந்திவர்மன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறையில் ஓர் அரண்மனையும், நந்திபுர விண்ணகரம் என்னும் திருமால் கோயிலையும் கட்டி இந்நகரை மாமல்லபுரம், காஞ்சி மாநகருக்கு இணையாகச் சிறந்த நகராக வைத்துக்...

NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
72 km
From Chennai (MAA)
247 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
தங்கரதம்
₹2000
approx. 32.0 SGD / 108.0 MYR