அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், நாச்சியார்கோயில், Nachiyarkoil - 612602

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், நாச்சியார்கோயில், Nachiyarkoil - 612602

🙏 Available Pooja Services

  • 🪔 7 வார அர்ச்சனை – ₹700

☀️ Best Time for Pilgrimage

Nov to Feb Cooler (22°C - 30°C)

Ideal for NRI travelers used to AC environments.

Major Festival Annual Brahmotsavam

Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.

கோயில் பற்றி

இத்திருக்கோயில் மிகவும் பழமையானதும், 108 திவ்ய திருத்தலங்களில் 20 வது திவ்ய ஸ்தலமாகவும் திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலாகவும் உள்ளது. இங்கு ஆண்டில் இரண்டு முறை நிகழ்ந்து வரும் கல்கருட சேவை உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ஆரிடம், பௌராணிகம், ஸ்வயம் வியக்கதம், திவ்யதேசம் என்கிற நால்வகை சிறப்பும் உடைய இத்திருத்தலத்தை சுகந்தகிரிஷேத்திரம் என்றும் சுகந்த வனம் என்றும் சித்தி ஷேத்திரம் என்றும் துவாதசாஷர ஷேத்திரம் என்றும் பஞ்சவியூகத்தலம் என்றும் பஷிராஜன் ஷேத்திரம் என்றும் மணிமாடக்கோயில் என்றும் புராணங்களும் வரலாறும் போற்றுகின்றன.

Temple History

தல வரலாறு

நாச்சியார் கோயில் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒரு பாடல் பெற்ற வைணவத் திருக்கோயில் ஆகும்.108 வைணவ திவ்யதேசங்களில் 20 வது திவ்யதேசமாகவும் 40 சோழ நாட்டு திருப்பதிகளில் 14 வது திருப்பதியாகவும் முக்திதரும் 12 திருத்தலங்களில் 11 வது திருத்தலமாகவும் இத்திருக்கோயில் பெரும் புகழ் பெற்று விளங்கிவருகிறது.
தல அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே இத்திருத்தலம் அமைந்துள்ளது.
தலப்பெயர்கள் :
திருநறையூர், நாச்சியார்கோயில் , மணிமாடக்கோயில்
பெருமாள் திரு நாமம் :
மூலவர்
ஸ்ரீனிவாசன், நறையூர் நம்பி, சுகந்தவன நாதன் ,வியூக வாசுதேவன் மணிமாடக்கோயில் மணாளன், வடிவழகிய நம்பி
உற்சவர்
ஸ்ரீனிவாசன், இடர்கெடுத்த திருவாளன்
தாயார் திரு நாமம்
மூலவர்...
வஞ்சுளவல்லி, நாச்சியார் ,நம்பிக்கை நாச்சியார்
உற்சவர் தாயார் மூலவருக்கு உரிய திரு நாமங்களே இவருக்கும்.
கல்கருடன்
திருக்கோயிலின் கருவறைக்கு கீழே மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ள சன்னதியில் கல்கருட பகவான் பிரார்த்தனை மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார்,
🌐

NRI & Diaspora Traveler's Guide

Recommended Hub: Trichy (TRZ)

💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.

From Trichy (TRZ) 82 km
From Chennai (MAA) 244 km

Regional Transit Tips:

  • 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
  • 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
  • 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.

பூஜை சேவைகள்

🪔

7 வார அர்ச்சனை

₹700

approx. 11.2 SGD / 37.8 MYR