Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
காஞ்சி மாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞானவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த அர்ச்சுனன் முதலியோர் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோவில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும் மன்னரது காலத்தில் கட்டுவிக்கப்பட்டது. மிகவும் புராதனமான நிலையில் காணப்பட்ட இத்திருக்கோயில் 1936 மற்றும் 1937-ம் ஆண்டுகளில் ஊர் பொது மக்களால் ஜூர்னோத்தாரணம் (புதியதாக) அமைக்கப்பட்டது. திருப்பணி விபரம் தேவக்கோட்டை மகியுவனம் ஸ்தபதிகளால் புதியதாகக் கட்டப்பட்டு,...மகாமண்டபம், ராஜகோபுரம் மற்றும் திருமதில்கள் கட்டப்பட்டன. இத்திருக்கோயிலின் மகாமண்டபத்துhண்களில் உள்ள அரிய சிற்பங்கள் , இதன் தொன்மையை நமக்குத் தெளிவாகக் காட்டும். கற்பனைக்குச் சாட்சி உயிர்கொண்ட சிலைகள் என்பது தெளிவாகும் வண்ணம் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. கவின்மிகு கலைவண்ணம் இத்திருக்கோயில் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகள் மிக்க கோயிலாகும். சுவாமி சன்னதியின், மகா மண்டப மேற்கூரையில் நவக்கிரக ராசிகளின் கல்வெட்டு , சண்முகர் சன்னதியின் மகா மண்டபத்தின் மேற்கூரையில் கற்சங்கிலி தொங்குவது போன்ற அமைப்பு, விசாலாட்சி அம்மன் சன்னதியில் மகா மண்டபத்தின் மேற்கூரையில் கற்சங்கிலி தொங்குவது போன்ற அமைப்பு , தாமரைப் பூவின் வடிவம் ஆகியவை வியக்கத் தக்க சிற்ப வேலைப்பாடுகளாகும். இத்திருக்கோயிலின் அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அதாவது சோமாஸ்கந்த ரூபாலாயம் என்னும் அமைப்பின் அடிப்படையில் இவ்வாலாயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாதெனின் , முதலில் சுவாமி சன்னதி , நடுவில் சுப்பிரமணியர் சன்னதி , முடிவில் அம்பாள் சன்னதி என்ற அமைப்பே ஆகும். இதனை அடுத்து உட்புறம் கண்ணாடியிலான திருப்பள்ளியறை மிகவும் பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுக்கள் இயங்க, அண்டங்கள் இயங்குகின்றன. அண்டங்கள் இயங்க ஆண்டவனும் நடன மூர்த்தியாயிருக்க வேண்டுமில்லையா ? அதனாலேயே நடராஜர் விக்கிரகம் நடனமாடும் ரூபமாக அமைக்கப்பட்டுள்ள இடமே கனகசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனமாடுகிறார். நாம் ஆனந்தமடைய , ஆனந்த மூர்த்தியை வணங்குதல் வேண்டும். அவர் ஆனந்த நடனம் புரிவதால் எப்போதும் ஆனந்தத்ததோடு விளங்குகிறார் என்பது தெளிவாகுகிறது. இறைவனது இந்த ஆனந்த நடனம், கடவுளது ஸ்ருஷ்டி, ஸ்திதி. ஸம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் ஆகிய ஐந்தொழில்களை, அதாவது ஆக்கல், அளித்தல், அழித்தல். மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நன்கு விளக்குகிறது. ```` தோற்றம் துடியதினில் தோயும் நிதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊன்று மலர்பத்தே உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்பத்தே நாடு`` என்னும் திருப்பாட்டால் இதனை நன்கு விளக்கும். பிறையினையும் , கங்கையையும் ஜடாமுடியினிடத்தே தரித்து, பாம்பினை மாலையாக உடையவராய்த் திருநீறு அணிந்து, சக்தியை ஒரு பாகத்தில் அமர்த்தி ரிஷபவாகன ஆரூடராயிருப்பதே பரமேஸ்வரனின் திருமேனியாகும். இக்கோயியின்கண் சிறப்பான முன்மண்டபம் ஆருத்ரா மண்டபம் அமையப் பெற்றுள்ளது மற்றும் பிரகாரத்தில் கணபதி. நந்தி தேவர், சூரியன் , சந்திரன் , சைவக்சமயக்குரவர்கள் (நால்வர்) அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் சிலைகளும், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, தனியே சனீஸ்வரபகவான், நவக்கிரகங்கள், கங்காதேவி (கிணற்றுடன்) துவாரபாலகர்கள் மற்றும் துவாரபாலகிகள், பைரவர் சன்னதி ஆகியவை உள்ளன. பிரதோஷ ரிஷபதேவர், பலிபீடம், பள்ளியறை மூர்த்தி ஆகியவை ஐம்பொன் சிலைகளாகும். மேலும் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர் ஆகியவைகளின் செப்புத் திருமேனிகள் ஐம்பொன்னால் ஆனது. தனியே தண்டாயுதபாணி சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. சிற்ப சிறப்புகள் சூரிய ஒளியானது லிங்கத் திருமேனியின் மேல் தட்சிணாயன உத்திராயன புண்ணிய காலத்தில் விழும்படி சிற்ப சாஸ்திர அமைப்பின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கணபதி , சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், பிச்சாண்டவர், கலைவாணி, இந்திரன் நான்கு எருதுகளும் ஒரே தலை கஜசம்ஹார மூர்த்தி, ரிஷிகள், கந்தவர்கள், லிங்கத்திற்கு பசு பால் சொரியும் காட்சி, மகிஷாசுரமர்த்தினி, ஊர்த்துவ தாண்டவம், சுப்பிரமணியர், சந்திரசேகரர், நடனமானது லிங்கத்திற்கு இந்திரன் வழிபாடு, லீலா கிருஷ்ண வடிவம் , நடராஜர் மற்றும் பல குறிப்பிடத்தக்கவை ஒரேக் கல்லால் ஆன பிரதான நந்தி தேவர் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதாவது நந்தி தர்ம சொரூபம். இது சமயம், விகாரகம் , சந்தோஷம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் நான்கு கால்களாகக் கொண்டிருக்கிறது.நந்தியின் மீது பரமேஸ்வரன் ஆரோகணிப்பது, இந்நான்கு வகை, ஆத்ம குணங்களையும் கொண்ட உயிர்களிடத்து மாத்திரஅம, ஆத்ம குணங்களையும் கொண்ட உயிர்களிடத்து மாத்திரஅம , இறைவன் எழுந்தருளி வீற்றிருந்து அருள் செய்வான் என்னும் தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே ஆகும் பூஜை மற்றும் உற்சவ விபரங்கள் இத்திருக்கோயிலில் வருடத்திருவிழாவாக, வைகாசித் தேர்திருவிழாவும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பானதாயும் , சனீஸ்வரனுக்கு தனியே சந்நிதி உள்ளபடியால் சனிப்ரீதி, நவக்கிரக ப்ரீதிகள் சிறப்பாக செய்விக்கப்படுகிறது. மேலும் கிருத்திகை, சஷ்டி ,சுக்கிலபட்ச பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சங்கட சதுர்த்தி, ராகு கால பூஜை (துர்க்கை), தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை (வியாழன்), ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, சோமவார கிருத்திகை ஆகியவை மாதாந்திர உற்சவ பூஜைகளாகும். சோமாரவாரக் கிழமைகளில் 108 வெண்வலம்புரி சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படும் வருட உற்சவங்களாக, சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசனம் (மார்கழி). சமயச்சாரிகளின் குருபூஜை, திருமஞ்சனம் மற்றும் நடராஜர் அபிஷேகங்கள் (ஆனி), ஆடி வெள்ளி ஊஞ்சல் சேவை (பூரம் உற்சவம்), ஆவணி பிட்டுத் திருவிழா, நவராத்திரி உற்சவம் (புரட்டாசி), கந்த சஷ்டி (சூரசம்ஹாரம்) (ஐப்பசி), கார்த்திகை தீபம் (கார்த்திகை), தைப்பூசம் (தை), மாசி சிவராத்திரி (மாசி), பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்களாகும். வைகாசி விசாகத்தன்று சுவாமி திருவீதியுலா மற்றும் திருத்தேர் முதலியன நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் பக்தர்களுக்குத் திருநீறும், குங்குமமும் வில்வ இலையும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
தல வரலாறு
காஞ்சி மகாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞாதவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த பாண்டவர்கள் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோயில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும் மன்னரது காலத்தில் கட்டுவிக்கப்பட்டது. மிகவும்... காஞ்சி மகாநதி நொய்யலின் தென் பாகத்தில் உள்ள, இப்போது தாராபுரம் என வழங்கப் பெறும் விராடபுரத்தில், முன்பு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞாதவாசம்) வாழ்ந்து வந்தார்கள் . அப்போது இதை...அறிந்த கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் , விராடனுக்குரிய பசுக்களைக் கவர்ந்து சென்றான். இதை அறிந்த பாண்டவர்கள் திருப்போர் புரிந்து பசுக்களைக் மீட்டுத் திரும்பினார்கள். அது முதல் இவ்வூருக்கு திருப்பூர் எனப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவ்வூர் வந்தவரை வாழவைக்கும் சிறப்பு பெற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக இங்கு நடுநாயகமாக வீற்றிருக்கும் ஈஸ்வரன் கோயில் என்று மக்களால் பக்தி சிரத்தையோடு அழைக்கப்படும் ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி ஆலயம் ஆகும். இவ்வாலயம் , குலோத்துங்கன் செங்கண்ணன் என்னும் மன்னரது காலத்தில் கட்டுவிக்கப்பட்டது. மிகவும் புராதனமான நிலையில் காணப்பட்ட இத்திருக்கோயில் 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் ஊர் பொது மக்களால் புதுப்பித்து (புதியதாக) அமைக்கப்பட்டது. திருப்பணி விபரம் தேவக்கோட்டை மகியுவனம் ஸ்தபதிகளால் புதியதாகக் கட்டப்பட்டு, மகாமண்டபம், ராஜகோபுரம் மற்றும் திருமதில்கள் கட்டப்பட்டன. இத்திருக்கோயிலின் மகா மண்டபத்தூண்களில் உள்ள அரிய சிற்பங்கள் , இதன் தொன்மையை நமக்குத் தெளிவாகக் காட்டும். கற்பனைக்குச் சாட்சி உயிர்கொண்ட சிலைகள் என்பது தெளிவாகும் வண்ணம் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் சிறப்பான கவின்மிகு கலைவண்ண சிற்ப வேலைப்பாடுகள் மிக்க கோயிலாகும். சுவாமி சன்னதியின், மகா மண்டப மேற்கூரையில் நவக்கிரக ராசிகளின் கல்வெட்டு , சண்முகர் சன்னதியின் மகா மண்டபத்தின் மேற்கூரையில் கற்சங்கிலி தொங்குவது போன்ற அமைப்பு, விசாலாட்சி அம்மன் சன்னதியில் மகா மண்டபத்தின் மேற்கூரையில் கற்சங்கிலி தொங்குவது போன்ற அமைப்பு , விசாலாட்சியம்மன் சன்னதியில் மகா மண்டபத்தின் மேற்கூரையில் தாமரைப் பூவின் வடிவம் ஆகியவை வியக்கத் தக்க சிற்ப வேலைப்பாடுகளாகும். இத்திருக்கோயிலின் அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அதாவது சோமாஸ்கந்த ரூபாலாயம் என்னும் அமைப்பின் அடிப்படையில் இவ்வாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாதெனின் , முதலில் சுவாமி சன்னதி , நடுவில் சுப்பிரமணியர் சன்னதி , முடிவில் அம்பாள் சன்னதி என்ற அமைப்பே ஆகும். இதனை அடுத்து உட்புறம் கண்ணாடியிலான திருப்பள்ளியறை மிகவும் பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுக்கள் இயங்க, அண்டங்கள் இயங்குகின்றன. அண்டங்கள் இயங்க ஆண்டவனும் நடன மூர்த்தியாயிருக்க வேண்டுமில்லையா ? அதனாலேயே நடராஜர் விக்கிரகம் நடனமாடும் ரூபமாக அமைக்கப்பட்டுள்ள இடமே கனகசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனமாடுகிறார். நாம் ஆனந்தமடைய , ஆனந்த மூர்த்தியை வணங்குதல் வேண்டும். அவர் ஆனந்த நடனம் புரிவதால் எப்போதும் ஆனந்தத்தோடு விளங்குகிறார் என்பது தெளிவாகிறது. இறைவனது இந்த ஆனந்த நடனம், கடவுளது ஸ்ருஷ்டி, ஸ்திதி. ஸம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் ஆகிய ஐந்தொழில்களை, அதாவது ஆக்கல், அளித்தல், அழித்தல். மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நன்கு விளக்குகிறது. தோற்றம் துடியதினில் தோயும் திதி அமைப்பில் சாற்றிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு என்னும் சைவ சித்தாந்த திருப்பாட்டால் இதனை நன்கு விளக்கும். பிறையினையும் , கங்கையையும் ஜடாமுடியினிடத்தே தரித்து, பாம்பினை மாலையாக உடையவராய்த் திருநீறு அணிந்து, சக்தியை ஒரு பாகத்தில் அமர்த்தி ரிஷபவாகன ஆரூடராயிருப்பதே பரமேஸ்வரனின் திருமேனியாகும். இக்கோயிலின்கண் சிறப்பான முன்மண்டபம் ஆருத்ரா மண்டபம் அமையப் பெற்றுள்ளது மற்றும் பிரகாரத்தில் கணபதி. நந்தி தேவர், சூரியன் , சந்திரன் , சைவ சமய குரவர்கள் (நால்வர்) சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகளும், தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, தனியே சனீஸ்வர பகவான், நவக்கிரகங்கள், கங்காதேவி (கிணற்றுடன்) துவாரபாலகர்கள் மற்றும் துவாரபாலகிகள், பைரவர் சன்னதி ஆகியவை உள்ளன. பிரதோஷ ரிஷபதேவர், பலிபீடம், பள்ளியறை மூர்த்தி ஆகியவை ஐம்பொன் சிலைகளாகும். மேலும் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர் ஆகியவைகளின் செப்புத் திருமேனிகள் ஐம்பொன்னால் ஆனது. தனியே தண்டாயுதபாணி சன்னதியும் இக்கோயிலில் உள்ளது. சிற்ப சிறப்புகள் : சூரிய ஒளியானது லிங்கத் திருமேனியின் மேல் தட்சிணாயன உத்திராயன புண்ணிய காலத்தில் விழும்படி சிற்ப சாஸ்திர அமைப்பின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கணபதி , சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், பிச்சாண்டவர், கலைவாணி, இந்திரன், நான்கு எருதுகளும் ஒரே தலை கஜசம்ஹார மூர்த்தி, ரிஷிகள், கந்தவர்கள், லிங்கத்திற்கு பசு பால் சொரியும் காட்சி, மகிஷாசுரமர்த்தினி, ஊர்த்துவ தாண்டவம், சுப்பிரமணியர், சந்திரசேகரர், நடனமானது லிங்கத்திற்கு இந்திரன் வழிபாடு, லீலா கிருஷ்ண வடிவம் , நடராஜர் மற்றும் பல குறிப்பிடத்தக்கவை ஒரே கல்லால் ஆன பிரதான நந்தி , தேவர் சிலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதாவது நந்தி தர்ம சொரூபம். இது சமயம், விகாரகம் , சந்தோஷம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் நான்கு கால்களாகக் கொண்டிருக்கிறது. நந்தியின் மீது பரமேஸ்வரன் ஆரோகணிப்பது, இந்நான்கு வகை, ஆத்ம குணங்களையும் கொண்ட உயிர்களிடத்து மாத்திரமா ? ஆத்ம குணங்களையும் கொண்ட உயிர்களிடத்து மாத்திரமா ? இறைவன் எழுந்தருளி வீற்றிருந்து அருள் செய்வான் என்னும் தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே ஆகும். பூஜை மற்றும் உற்சவ விபரங்கள் இத்திருக்கோயிலில் வருடத் திருவிழாவாக, வைகாசி விசாகத் தேர்திருவிழாவும், மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பானதாயும் , சனீஸ்வரனுக்கு தனியே சன்னதி உள்ளபடியால் சனிப்ரீதி, நவக்கிரக ப்ரீதிகள் சிறப்பாக செய்விக்கப்படுகிறது. மேலும் கிருத்திகை, சஷ்டி ,சுக்கிலபட்ச பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சங்கடஹரா சதுர்த்தி, ராகு கால பூஜை (துர்க்கை), தட்சிணாமூர்த்தி சிறப்பு பூஜை (வியாழன்), ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, சோமவார கிருத்திகை ஆகியவை மாதாந்திர உற்சவ பூஜைகளாகும். சோமவாரக் கிழமைகளில் 108 வெண்வலம்புரி சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் செய்யப்படும். வருட உற்சவங்களாக, சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசனம் (மார்கழி). சமயச்சாரியர்களின் குருபூஜை, திருமஞ்சனம் மற்றும் நடராஜர் அபிஷேகங்கள் (ஆனி), ஆடி வெள்ளி ஊஞ்சல் சேவை (பூரம் உற்சவம்), ஆவணி பிட்டுத் திருவிழா, நவராத்திரி உற்சவம் (புரட்டாசி), கந்த சஷ்டி (சூரசம்ஹாரம்) (ஐப்பசி), கார்த்திகை தீபம் (கார்த்திகை), தைப்பூசம் (தை), மாசி சிவராத்திரி (மாசி), பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்களாகும். வைகாசி விசாகத்தன்று சுவாமி திருவீதியுலா மற்றும் திருத்தேர் முதலியன நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் பக்தர்களுக்குத் திருநீறும், குங்குமமும், வில்வ இலையும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)153 km
From Chennai (MAA)372 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.