Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
அருள்மிகு புத்துமாரியம்மன் தலவரலாறு இரேணுகா என்பவர் ளாமதக்கினி முனிவரின் மனைவி ஆவர். இரேணுகா ஒருமுறை நீர் கொண்டு வரசென்ற போது நீரில் ஒரு கந்தர்வன் நிழலைக்கண்டு மயங்கியதால், தன் கணவனாகிய ளாமதக்கினி முனிவரால் வெறுக்கப்பட்டு, தன் மகனாகிய பரசுராமனால் தலைவேறு உடல்வேறும் துணிக்கப்பட்டாள். பின் மகனாகிய பரசுராமன் தன் தந்தையாகிய ளாமதக்கிளி முனிவரை வேண்டி தாயாராகிய துண்டிக்கப்பபட்ட ரேணுகையை உயிருடன் எழுப்பினான். அப்போது ரேணுகாவின் தலை வேறு ஒரு உடலில் பொருத்தப்பட்டதால், நிலைகெட்ட அவளை, கணவராகிய ளாமக்கினி முனிவர் கிராமப்புறங்களில் சென்று கிராம தெய்வமாகி அவர்களுக்குண்டான நோயைப் போக்கி வழிபாடு பெறுக என்று ஏவியதாக ஒரு கதை கூறுகிறது. இப்போது மாரியம்மன் கோயிலிலேயே தலையை மட்டும் உருவமாக வைத்து வழிபடுகின்ற தெய்வம் இவளே என்றும், கூறுவர். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி நகர் (ம) வட்டத்தில், அமைந்துள்ள அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில் விருத்தாசம் கடலூர் செல்லும் பாதையில் இடையில் குறிஞ்சிப்பாடி என்னும் நகரின்...கிழக்குப்புறத்தில் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது. இத்திருக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. நான்கு புறமும் உயரமான சுற்றுமதில்களால் ஆனது. வெளிப்பிற நுழை வாயிலின்மேல் குடகரையில் மத்தியில் சுதை வேலைப்பாட்டு அம்மனும், அம்மனுக்கு வலதுபுறம், இடதுபுறமும் சுதை வேலைப்பாட்டுடன் கூடிய விநாயகரும் கம்பீரமாகக்காட்சி அளித்து வருகின்ற பக்தர்களை வரவேற்கின்றன. கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கிவரும் தலவிருட்சமாகிய வேம்பு மரம் காட்சியளிக்கின்றது. வேம்பு மரத்தின் கீழே வேம்பாயி அம்மன் என்ற பெயரில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கையின் பிரதிஷ்டை உள்ளது. உள்ளே வருகின்ற பக்தர்கள் முதலில் இந்த வேம்பாயி அம்மனை கற்பூரம் ஏற்றியும், அகல்விளக்கு ஏற்றியும் வழிபாடுசெய்து விட்டு வலம் வந்து பின்னர் மூலஸ்தானத்தி நோக்கிச் செல்வர். மூலஸ்தானத்திற்கு முன் உள்ள மகா மண்டபத்தில் மூலஸ்தானத்தின் வலதுபுறம் விநாயகர் சன்னதியும், இடது புறம் தண்டபாணி சன்னதியும் காட்சியளிக்கின்றது. மூலஸ்தானத்தின் அர்த்தமண்டபத்தில் சண்டிகை, முண்டிகை, என்ற துவார சக்திகல் சுதை வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கின்றது. கர்ப்பகிகிரகத்தில் சுதை வேலைப்பாட்டுடன் கூடிய மாரி அம்மன் புற்றின்மீது அமர்ந்து, உடுக்கை, சூலம், கத்தி, கபாளம் ஏந்திய நான்கு கரங்களுடன் கம்பீரமாக சிரித்த முகத்தோடு காட்சியளிக்கின்றாள். அம்பாளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு கம்பீரம், அவ்வளவு அழகு ஐந்து தலை நாகம் அம்பாளுக்கு குடை பிடிப்பதுபோல அமைந்திருப்பது இன்னும் சிறப்பாகும். அம்பாளின் காலடியில் ரேணுகா சிலாவிக்கிரமாக கழுத்துமாரியம்மன் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றாள். நிலை அம்பாளின் இடபுறம் உள்ள புற்றின்கண் ஒரு துவாரம் உள்ளது. துவாரத்தின் வழியாக அம்பாள் நாகமாக வந்து பக்தர்கள் வைக்கின்ற பால், முட்டை, போன்றவற்றை அருந்தி செல்வதும் தினசரி நடைபெறும் ஒரு சிறப்பான வழிபாடாகும். மூலஸ்தானத்தின் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள் நின்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு, தென்புற வாயில் வழியாக வெளியே வந்து கோயிலை வலம் வரலாம். வலம் வருகையில் சுற்றுமதிலும் உட்புறம், வடக்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி வாகனமண்டபமும் அதனை அடுத்து செயல் அலுவலர் நிர்வாக அலுவலகமும் உள்ளது. அதனை அடுத்து அம்பாள் உற்சவர் அறை உள்ளது. உற்சவ அறையில் அம்பாள், உற்சவ மூர்த்தியாக அழகாக காட்சியளிக்கின்றாள். உற்சவ விநாயகர் மற்றும் அஸ்திரதேவரும் காட்சியளிக்கின்றார். கோயில் ஈசானிய மூலையில் யாகசாலை உள்ளது. மகாமண்டபத்தின் வெளிப்புறம் கொடிக்கம்பம், செப்புத்த தகட்டால் ஆனது கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. கம்பத்தின் அடியில் உள்ள பலீபீடத்தில் மேற்புறம் அம்மனை நோக்கி கல்சிலையினால் ஆனசிம்ம உருவமும், கொடி கம்பத்தின் முன் செம்பினால் ஆன திரிசூலமும் காட்சியளிக்கின்றது. மேற்படித்திருக்கோயிலுக்கு சுமார் 100 அடி துரத்தில் தாமரைக்குளம் என்று அழைக்கப்படும் தீர்த்தகக்குளம் ஒன்று உள்ளது. இத்திருக்குளத்தின் வடபுறம் அரசு வேம்பு மரத்தின் கீழ் விநாயகர் பிரதிஷ்டை கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தைமாதம் நடைபெறும் சாக்கை விழா(கூழ்வார்த்தம்) மற்றும் ஆடிப்பெருவிழாவாகிய செடல் விழாவிலும் இத்திருக்குளத்திலிருந்து சக்திகரகம் புறப்பட்டு திருக்கோயில் அடைந்த பிறகுத்தான் விழா ஆரம்பிப்பதும், கொடியேற்றுவதும் வழக்கம் ஆடி செடல் விழாவின்போது, செடல் தினத்தன்று பக்தர்கள் இத்திருக்குளத்தில் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து செடல் போடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இத்திருக்கோயிலில் நிர்வாகத்தின் கீழ் இரண்டு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இத்திருக்கோயிலிலி ஆடிமாதம் 10 நாட்கள் செடல் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. 10 நாள் விழாவில் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆடி செடல் விழாவாக ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவன்றி இத்திருக்கோயிலில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், மார்கழியில் திருப்பட்சியும் சிறப்பாக நடந்து வருகின்றது. தை மாதம் நான்காவது வெள்ளியில் சாக்கை விழாவும், மாசிமாதம் முதல் வெள்ளியில் திருவிளக்கு பூஜையும் வைகாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அக்கினி நட்சத்திரத்தில் பானக பூஜை விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)131 km
From Chennai (MAA)171 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.