Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
கருவறை கிழக்கு நோக்கியதாயினும் வடக்கு வாசலே பொதுமக்களின் பயன்பாட்டிற்குள்ளதாய் இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கிழக்கு வாசல் வழி பக்தர்கள் சென்றதைப் பற்றிகன்னியாகுமரி களவு மாலை நூல் கூறும். இதன் பிறகு சில காரணங்களால் இந்தக்கதவு நிரந்தரமாய் அடைக்கப்பட்டு விட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வெளிப்பிரகாரம், முகமண்டபம், நவராத்திரி மண்டபம், தியான மண்டபம், உள் பிரகாரம், கருவறையைச் சுற்றிய சிறு பிரகாரம், அர்த்த மண்டபம், கருவறை என அமைந்தது. கோயில் செவ்வக வடிவினது. செப்புக்கொடிமரம், திராவிட வகை விமானம், பரிவார கோயில்கள், சிறு பிரகாரம் என அமைந்தது.. கோயிலின் முன்மண்டபத்தில் மேலே கஜலெட்சுமி உருவம், இம்மண்டபத்தின் மேற்கே கொலு மண்டபம் எனப்படும் நவராத்திரி மண்டபமும் கிழக்கில் பயணிகள் உட்கார்ந்து இளைப்பாறசிறுமண்டபமும் உள்ளன. இந்த முன் மண்டபத்தின் முன்பகுதியில் பக்தர்கள் கோயில் குறித்த விபரங்களைக் கேட்கும் தகவல் மையம் அறை உள்ளது. எட்டு தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தில் இரண்டு யாளித்தூண்கள்...உள்ளன. இந்த மண்டபம் 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இம்மண்டபத்தின் மேற்கில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா கொலு வைக்கும் நிகழ்வு நடக்கும். இம்மண்டபத்தின் மேற்கே 4 சிறு தூண்கள் கொண்ட ஊஞ்சல் மேடை உள்ளது. இவ்வூஞ்சலில் அம்மனது விழாப்படிமத்தை வைத்து ஆட்டுவது உண்டு. இக்கொலுமண்டபத்தில் புராண இதிகாச எண்ணெய்ச்சாய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அண்மைக்காலத்தவை. முகமண்டபத்தில் கிழக்கில் நீண்டு கிடக்கும் பக்கவாட்டு மண்டபம் ஒரு காலத்தில் பயணிகள் தங்குமிடமாக இருந்தது. இதற்கேற்ற திண்ணை உண்டு. முன்மண்டபத்தை அடுத்து இருக்கும் முகமண்டபத்தின் வடக்கே தெற்கு நோக்கி காலபைரவர் இருக்கிறார். இந்த மண்டபத்தை மணிமண்டபம் என்கின்றனர். மண்டபத்தின் மேற்கூரை ஜன்னல் வழி கருவறை விமானத்தைத் தரிசிக்கலாம். இதையடுத்து வடக்குப் பிரகாரம், இப்பிரகாரத்தில் திருக்கிணறு உள்ளது. இக்கிணற்றிற்கு கருவறையில் இருந்து அடிவரை இறங்கிச்செல்ல சுரங்கப்பாதை உண்டு. வடக்குப்பிரகாரத்தில் ஒரு தூணில் உள்ள ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரியவராக இருக்கிறார். கிழக்குப்பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம் உள்ளன. செம்பு போர்த்தப்பட்ட இக்கொடிமரம் 19 ஆம் நூற்றாண்டினது.. இந்த பிரகாரத்தில் அர்த்த மண்டபத்திற்கு நுழையும் வாசலில் இருதுவாரபாலகிகள் உள்ளனர். இடது துவார பாலகி ஒரு கையில் கதை ஏந்தி உள்ளாள். வலது கை விஷ்மயா வலதுபுறம் இருக்கும் துவாரபாலகியின் இடதுகையில்கதை வலது கை சூசி உறஸ்தமாய் உள்ளது. தெற்கு பிரகாரத்தின் தென்புறம் நீண்ட திண்ணை. இதன் வடபுறம் மடப்பள்ளி. இம்மண்டபத்தின் மேற்கு ஓரத்தில் தியான மண்டபம். இது அமைதியான சூழ்நிலையுடன் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்றதாய் அமைந்தது. கிழக்குப்பிரகாரத்தில் கோயில் மணி இருப்பதால் இது மணி மண்டபம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. எட்டு தூண்கள் கொண்ட இந்த மண்டபத்தின் மேல் விதானம் வேலைப்பாடுடையது. கிழக்குப்பிரகாரம் பலிபீடம் கொடிமரத்தைக் கடந்து அர்த்த மண்டபம் உள்ளது. எட்டு தூண்கள். எல்லாம் பளப்பளப்பான செம்புத்தகடு வேயப்பட்டது. இம்மண்டபத்தின் தென்மேற்கேதியாக சவுந்தரி சன்னதி உள்ளது. இம்மண்டப வடக்கில் வாசல் உண்டு. அர்த்த மண்டபத்தின் தெற்குவாசல் வழி உட்பிரகாரம் செல்லலாம். இது மூன்றாம் பிரகாரம். மிகச் சிறியது. இங்கு கன்னி வினாயகர் சன்னதி உண்டு. கருவறையும் அர்த்தமண்டபமும் தரைமட்டத்தை விட உயர்ந்தவை. கருவறை அந்தராளம் என்னும் பகுதியினை உடையது. இந்த மண்டபச்சுவர்களில் முழுக்க பழந்தமிழ் வட்டெழுத்துக் கல் வெட்டுகள் உள்ளன. கருவறை அதிஷ்டானம், விமானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டி, வேதிகை என முறைப்படி அமைந்தது பழைய கட்டுமானம். கருவறையின் மேலும் பரிவார தெய்வங்கள் இருக்கும் மண்டபங்களின் மேலும் விமானம் உண்டு. குமரியின் விமானம் திராவிடம். - 2013 குடமுழுக்கின்போது புதுப்பிக்கப்பட்டது. விமானத்தின் நான்கு புறங்களிலும் தேவி உருவங்கள். சங்கு, சக்கரம், அபய வரத உறஸ்தம், சங்கு, சக்கரம் கொடி அக்னி ஏந்தி, பாசம், கமண்டலம், வரத முத்திரை. விமானம் கிழக்கே கன்னியாகுமரி அம்மனின் சிற்பம் உள்ளது.
தல வரலாறு
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பற்றிய தலபுராணம் சமஸ்கிருதம், தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளது. சம்ஸ்கிருத மூலத்தின் அடிப்படையில் சங்கர நாவலர் என்பவர் தமிழ் தலபுராணத்தை எழுதியிருக்கிறார். இது சுசீந்திரம் தலபுராணத்தைப் பின்பற்றியது. இந்நூலில் ஒரு இடத்தில சூதரிடம் அருளிச் செய்த சிவபுராணம் பத்தினுள் ஒன்றாகிய காந்தம் என்னும் புராணத்தில் இருந்து சுசீந்திரம் புராணம் கூறினீர், என முனிவர்கள் கூறியதாக வருகிறது. சுசீந்திரம் தலபுராணம் 1857ல் இயற்றப்பட்டு 1895ல் அச்சில் வந்தது. எனவே கன்னியாகுமரி தமிழ் தலபுராணம் 1857க்குப் பின் இயற்றப்பட்டது எனக் கருதலாம். கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில... கன்னியாகுமரி தலபுராணத்தில் கன்னி பகவதி தோன்றியது, தாணுமாலயனை மணம் செய்ய தடை வந்தது, அகத்தியர் இமயமலையைச் சமன் செய்யத் தென்குமரிக்கு வந்தது என புராணக்கதைகளும் வட்டாரரீதியான சில கதைகளும்...உள்ளன. கன்னியாகுமரி தலபுராணம் சூதர்கள் கூறுவதைப் போன்ற அமைப்புடையது. முனிவர்களும் சூதர்களிடம் ஒற்றையால் காலில் உள்ள ஒருபெரு விரலை ஊன்றி மற்றையோர் காண முழந்தாள் மடக்க நீர் குறங்கில் வைத்து பற்றிரு கரமும் கூப்பிப் பரந்தவிழ் சடையினோடும் சற்று முன் நின்று தவம் செய்வர் அனேக கோடி எனக் கதையை ஆரம்பிக்கிறார். நாவலன் தீவு அரசன் ஆக்கினேந்திரன். இவனது ஒன்பது மக்களில் பரதன் ஆண்ட இடம் பரத கண்டம். இவனுக்கு எட்டு ஆண் மக்கள், ஒரு புதல்வி. அவள் தென்குமரி தென் துறையில் இருந்தாள். இராமன் இலங்கை செல்லும் முன் அவளிடம் ஆசி பெற்றுச் சென்றான். அப்போது அவன் ஆதிசேது எனக் கன்னியாகுமரியை அழைத்தான். இந்திரன் தன் பாவம் தீர குமரியிலும் தவம் செய்தான். இமையமலையில் சிவன், பார்வதி திருமணம் நடந்த போது இமையம் உயர்ந்தது. இதைச் சமன் செய்ய அகத்தியர் தென்குமரிக்கு வந்து கன்னிகுமரியை வணங்கி விட்டு பொதிகை மலை சென்றார். அசுரர்களின் அரசன் பாணாசுரன். அவன் தேவர்களுக்கும் பூவுலக மக்களுக்கும் பெருந்துன்பம் செய்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டுமே முடியும் என்றார் திருமால். தேவர்கள் சக்தியை வேண்டினர். சக்தி அசுரனை அழிக்க கன்னியாகுமரியில் வந்து தவம் செய்தாள். கன்னியாக இருந்த அவளைத் திருமணம் செய்ய தாணுமாலயன் வந்தார். கன்னி, மணம் செய்தால் பாணாசுரனை வதைக்க முடியாது என்பதால் அந்த திருமணத்தைத் தடை செய்ய நாரதரைத் தூண்டினார் திருமால். நாரதர் தாணுமாலயனிடம் கன்னி பகவதியைச் சூரிய உதயத்திற்கு முன்பு மணம் செய்வது உகந்தது. இல்லையென்றால் மணம் நிகழாது என்றார். சிவனும் அதற்கு இசைந்தார். சிவன் மணநாளில் சூரியோதத்திற்கு முன்பு புறப்பட்டு வந்தபோது நாரதர் வழுக்கம்பாறை கிராமத்தில் இருந்து சேவல் போல் கூவினார். தாணுமாலயன், விடிந்து விட்டது என்று திரும்பி விட்டார். இதனால் பகவதி கன்னியாக இருந்தாள். இதன் பிறகு பாணாசுரன் கன்னிகுமரியின் அழகை கேள்வியுற்று அவளை அடைய வந்தான். தேவி இது தான் தருணம் என நினைத்து வாளை வீசினாள். பாணாசுரனைக் கொன்றாள். அசுரர்களின் கொடுமையைப் பொறுக்க முடியாத தேவர்கள் காசி விஸ்வநாதரை அணுகினர். அவர் இரண்டு பெண்களைப் படைத்தார். ஒருத்தி கொல்கத்தாவில் காளியாக அமர்ந்தாள். இன்னொருத்தி கன்னியாகுமரியில் இருந்தாள். இப்படியொரு கதை தலபுராணத்தில் வழங்குகிறது. பகவதி நிலைபெற்ற இத்தலத்த்தில் சக்கர தீர்த்தம், கணேச தீர்த்தம், தாணு தீர்த்தம், பீம தீர்த்தம், பிதுர் தீர்த்தம், மாத்ரு தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் பெயரிலும் தீர்த்தங்கள் உள்ளன. இந்திரன் தன் பாவம் தீர நீராடிய பாபநாச தீர்த்தம் இங்கே உள்ளது. சூதாடிய தர்மரின் கையில் நெருப்பை வைப்பேன் என்று சொன்னதால் சாபம் பெற்ற பீமன் விமோசனம் பெற கன்னியாகுமரிக்கு வந்து நீராடினான். அவன் நீராடிய இடம் பீம தீர்த்தம் ஆயிற்று. பரசுராமன் இங்கே வந்து கணேசனைப் பூஜித்தார். அந்த இடம் கணேச தீர்த்தம் ஆயிற்று. இப்படியாக இங்கு பாபவிமோசனம் பெற்றவர் பலர்.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)321 km
From Chennai (MAA)614 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.