அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம், நன்னிலம் வட்டம் - 610107
🙏 Available Pooja Services
- 🪔 ஆயுஸ் ஹோமம் – ₹10000
- 🪔 அபிஷேகம் – ₹1000
- 🪔 மோட்ச தீபம் – ₹300
☀️ Best Time for Pilgrimage
Nov to Feb
Cooler (22°C - 30°C)
Ideal for NRI travelers used to AC environments.
Major Festival
Annual Brahmotsavam
Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் மந்திரம் : க்ரீங்கர பீஜ மித்யுக்தம் ஸ்வாஹசக்திரத: பரம் வினியோகம் வேண்டும் பொருள் இவற்றை ஜபிக்குமுன் சொல்லிக் கொள் வேண்டியது : ஓம் நமோ பகவதே மந்திரம் ச சிவாய ச தத பரம்: வாஞ்சய நாதாய ச ததோ மேதாம் ப்ரக்ஞாம ததைவய ப்ரியம் மேத்ய ப்ரயச்சேதி. சொன்னால் முக்தி பெறலாம் தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லைகளர் காஞ்சி கழக்குன்றம் மறைக்காடு அருணை காளத்தி வாஞ்சியம் என முத்தி வரும். ஸ்நான ஸ்துதி ஆசீன பைரவம் துர்காம் அபயங்கர ண்முகெள வாசுதேவஞ்ச வாஞ்சேசம் மங்களாம்பிகா ரணாம் யஹம். இறைவனின் ஆற்றல் தொண்டுகளின் பலன்கள் ஸ்கந்தபுராணம் கீழ்க்கண்டவாறு போற்றுகிறது. 1.இத்தலத்தில் யார் ஒருவர் ஏழை எளியவர்களுக்கு அமுது படைக்கிறாரோ அவர் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார். 2. பால், தயிர், நெய், தேன், பழங்கள், தேங்காய் இவைகளோடு அணிகலம்கொண்டு...
சிறந்த துதிப் பாடலோடு ஸ்ரீ மங்களாம்பிகையும்,வாஞ்சிநாதரையும் வழிபடுபவர் சிறந்த அரசனாகி சிவ சாயுஞ்யம் அடைகிறார். 3.இத்திருக்கோயிலுக்கு, பிரகாரம், மண்டபம், கோபுரங்கள் கட்டி வைப்பவர் அனைவராலும் வணங்கத்தக்க அரசனாகிறார். 4.இத்திருக்கோயிலுக்கு தேர் திருப்பணி செய்து கோமுரசு, மத்தாளம் துணைக் கருவிகளோடு தேர்த்திருவிழா செய்பவர் சிறந்த போகங்கள் அனுபவித்து தேவரும் கந்தர்வரும், பகலும் இரவும் துதிக்க நூறு கற்ப கோடிகாலம் தனது மனித உருவத்தோடு இறைவனுக்கு முன் வசிப்பார். 5. திருவாஞ்சியத்தில் எவர் வசந்த விழா செய்கிறாரோ அவர் சிறந்த விமானம் ஏறி சிவ சன்னதியில் வசிக்கிறார் 6. குப்த கங்கை திருக்குளத்தினை தூர்வாரி சுத்தம் செய்து தீர்த்தத்தினை சுத்தம் செய்வதால் தனது குடி, குலத்துடன் சிவலோகம் அடைந்து சத்திய வித்திலும், அபய வித்திலும் எவ்வளவு புண்ணியமோ அவ்வளவு புண்ணியத்தை அடைவார். அமைவிடம் திருவாஞ்சியம் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்து. கும்பகோணத்திலிருந்து 31 கி.மீ தொலைவில் நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், இரயில் மார்க்கமாக திருவாரூரை அடுத்துள்ள நன்னிலம் (சன்னாநல்லூர்) இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் திருவாஞ்சியம் அமைந்துள்ளது. திருக்கோயில் சிறப்புகள் இறைவன்: ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி (ஈஸ்வரர் சுயம்புலிங்கம்) இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை (மருவார்குழலி) தல விருட்ஷம்: சந்தன மரம் தீர்த்தம்: குப்தகங்கை, எம தீர்த்தம் விசேஷ மூர்த்திகள்: ஸ்ரீ எமதர்மராஜா, சித்ரகுப்தர், ஸ்ரீ யோக பைரவர்( அமர்ந்த திருக்கோலம்) ஸ்ரீ மகா லெட்சுமி, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ ராகு, கேது பாடல்: நாயன்மார்கள் நால்வரால் பாடல் பெற்றது. (அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், கோவை சிவராம பிள்ளை ஆகியோர் பாடியுள்ளனர்) காலம்: நான்கு யுகங்களிலும் சிறப்பு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. விஷேசநாட்கள்: கார்த்திகை ஞாயிறு (10 நாட்கள் பிரம்மோற்சவம்), கார்த்திகை சோமவாரம்,ஆருத்ரா தரிசனம் மாசி மகம் (10 நாட்கள் பிரம்மோற்சவம், மாசி மகம் 2ம் நாள் பரணி நட்சத்திரத்தில் வெள்ளி எமதர்மராஜா வாகனத்தில் ஸ்ரீ வாஞ்சிநாதர் தீர்த்தவாரி வீதியுலா) நவராத்திரி ,ஸ்கந்த சஷ்டி, ஆடிபூரம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் கல்வெட்டு செய்திகள் சமயக்குறவர் திருநாவுக்கரசர் தம் திருக்குறுந்தொகையில் திருவாஞ்சிய திருத்தலத்தை பற்றிப் பாடுகையில் புற்றியில் ஆடவரோடு புனல்மதி தெற்று செஞ்சடை தேவர் பிரான்பதி சுற்றுமாடங்கள் சூழ்ந்திருவாஞ்சிய ஆலயம் பற்றிப் பாடுவார்க்குப் பாவமில்லையே என அருளிப்பாடியிருக்கிறார்.பிற்காலச் சோழர் காலத்தில் இராஜராஜன் திருவாஞ்சியநாதர் ஆலயத்திற்கு கொடைகள் பல கொடுத்துள்ளதனையும், இராசகேசரிவர்மன் செய்த ஏராளமான தானங்களையும் கல்வெட்டுகள் விவரிக்கின்றன. திருவாஞ்சியம் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இருபத்தியேழு கல்வெட்டுகளில் 17 கல்வெட்டுகள் மட்டுமே படியெடுக்கப்பட்டுள்ளன.அதில் 4 இராசராசர் காலத்தவை. முதலாம் குலோத்துங்கன் தட்சிணாமூர்த்தி சன்னதியில் தூண் எழுப்பியதாக ஓர் கல்வெட்டு விளம்புகிறது. முதலாம் இராசாதிராசர் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயத்தில் கர்ப்பக்கிரகத்தில் ஐந்து விளக்குகட்கு பொருள் வழங்கியதாக கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றது. சடையவர்மன் சுந்தரபாண்டியன், வாஞ்சிநாதர் ஆலயத்திற்கு நிலதானம் வழங்கியது, கர்ப்ப கிரக முன் மண்டப தெற்கு மேடை அடிப்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் மேற்படி கல்வெட்டுச் செய்திகள் அறியப்படுகின்றன.கி.பி. 946-ல் பதவியேற்ற மூன்றாம் இராசசிம்மன் மகன் வீரபாண்டியன் திருவாஞ்சியம் ஆலய கருவறை சுவரை அமைக்க பேருதவி புரிந்ததனை ஒரு கல்வெட்டுச் செய்தி புலப்படுத்துகிறது. காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய இராசராசன் கல்வெட்டு 11,13,14,18, ஆம் நூற்றாண்டு கலவெட்டுகள் திருவாஞ்சியத்தில் உள்ளன. கடல் சூழ்ந்த எனும் மெய்க்கீர்த்தியிலிருந்து இதனை கண்டு அறியலாம். சோழர் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராசராசர் காலத்தில் இவ்வூர் சிறப்பு பெற்றிருந்தது அறிய முடிகிறது. கி.பி. 1018-ல் பட்டத்துக்கு வந்த முதலாம் இராசாதிராசர் ஆட்சி நன்னிலம் வட்டம் முழுவதும் பரவியிருந்தது என திருவாரூர், திருவாஞ்சியமக் கல்வெட்டுகள் உரைக்கின்றன. கி.பி.1178-ல் சோழர் மூன்றாம் குலோத்துங்கன் திருவாஞ்சியம் உள்பட பல்வேறு கோயில்களை சீரமைப்பு செய்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கி.பி.1530-ல் தஞ்சை நாயக்கராக பொறுப்பேற்ற அச்சுதநாயகனுக்கு பின்வந்த செல்லப்பநாயக்கர் திருவாஞ்சிய தேவரடியார்கட்கு வரி வருமானம் வழங்க மல்லப்ப நாயக்கர் என்ற அமைச்சர் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாக கல்வெட்டு செய்தி கூறுகின்றது. இவற்றால் திருவாஞ்சியம் பழங்காலம் முதலே ஓர் சிறப்பு மிக்க ஸ்தலமாக திகழ்ந்தது என அறியலாம். கோயில் அமைப்பு ஸ்ரீ வாஞ்சியத்தில் நான்கு வீதிகளுடன் கிழக்கு திசையை நோக்கி 110 அடி உயர ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. இறைவனை வணங்கி ராஜகோபுரத்தில் நுழைந்தால் கங்கை பிரகாரத்தில் வடபுறம் 999 அம்சங்களுடன் குப்த கங்கை உள்ளது. குப்த கங்கையில் நீராடி ஸ்ரீ கங்கைக்கரை விநாயகரை வழிப்பட்டு, தென்புறத்தில் அக்னி மூலையில் ஸ்ரீ எமதர்மராஜா சித்திரகுப்தர் அமர்ந்த கோலத்தில் தென்திசையை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலய இரண்டாம் கோபுர நுழைவாயிலில் இடது புறம் அபயங்கர விக்னேஸ்வரரும், வலது புறம் பால முருகனும், ஆலய இரண்டாம் பிரகாரத்தில் இடது புறம் நட்டுவன் விநாயகர், வலது புறம் அருள்மிகு மங்களாம்பிகையையும் அருள்பாலிக்கின்றனர். (இடது புறம் மடப்பள்ளியும், வலது புறம் பள்ளியறையும் அமையப்பெற்றள்ளது.) இரண்டாம் கட்டில் கொடி மரம்,பலிபீடம் நந்திகேஸ்வரர் அலங்கார மண்டபம் அமைந்துள்ளது. மூன்றாம் ஆலய கோபுர வாயிலில் இரட்டை விநாயகர் (ம) அதிகார நந்தி, மூன்றாம் கட்டில் நர்த்தன மண்டபத்தில் ஒரு நந்தியும், மகா மண்டபத்தில் துவாராபாலகர்கள் அமையப்பெற்று, கருவறையில் உலகமெல்லாம் இரட்சித்து எம்பெருமான் ஸ்ரீ வாஞ்சிநாதர் அருள்பாலிக்கின்றார். அருள்மிகு வாஞ்சிநாதரின் வலது புறமாக சோமஸ்கந்தர் சந்நிதியும், முகப்பில் வெண்ணெய் விநாயகர் அருள்பாலிக்கின்றார். உட்பிரகாரத்தில் தென்திசையை நோக்கி தெக்ஷிணாமூர்த்தி, கிழக்கு நோக்கி காசி விஸ்வநாதர் சந்நியும் திருமாலப்பத்தியில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்களுடன், உமாமகேஸ்வரர் காட்சியளிக்கிறார். மேற்கு உள் பிரகார நிருதி மூலையில் சந்திரமெளலீஸ்வரர் (ம) கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாட்சி சொக்கநாதர், வள்ளி தெய்வானையுடன் ஷண்முகர், மகாலக்ஷ்மியும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். வடக்கு உட் பிரகாரத்தில் தென்திசை நோக்கி ஸ்ரீ சனீஸ்வரரும், பஞ்சலிங்கங்களும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். உள் வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும், கிழக்கு நோக்கி மகிஷாசுரமர்த்தினி மற்றும் சூரியன், சந்திரன் யோகநிலையில் பைரவர், இராகு கேது சந்நிதியும் தெற்கு நோக்கி ஆடல் அரங்குடன் கம்பீரமான நடராஜர் பெருமான் அருள்பாலிக்கின்றனர். இரண்டாம் சுற்றுப் பிரகாரத்தில் யாகசாலையும் அதனை வலம் வந்தால்,மங்கள நாயகி சந்நிதியையும் அடையாலாம். மேற்கு கங்கை பிரகாரத்தில் (வெளிப்பிரகாரம்) கருவருத்தான் சந்நிதி அமைந்துள்ளது. 3 கோபுரம், 3 கட்டு சுற்றுச்சுவர்களுடன் சுமார் 5.73 ஏக்கர் செண்ட் நிலப்பரப்பில் இத்தலம் அமையப்பெற்றுள்ளது. கட்டக் கலை திராவிட கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இவ்வாலயம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட சுத்த கட்டிடக்கலையைச் சார்ந்ததாகும்.1120 அடி நீளம், 640அடி அகலம், 20 அடி உயரம் கொண்ட பெரிய வெளி மதில்கள், 558 அடி நீளம், 320 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட உள் மதில் சுவர், மூன்று கோபுரம் மூன்று பிரகாரங்களுடன் அமைந்து ஸ்தூல சூட்சும காரணம் எனும் மூவகை சரீரங்களை விளக்கும் கோயில்களுள் ஒன்றாகும். மேல் கோபுரம் எண்கோண விமான அமைப்பும் ஐந்து தளங்களும் கொண்டதாகும்.அர்த்தமண்டபம் 38 29 அளவில் 10 தூண்களுடன் அமைந்து பாதபந்த வகையைச் சேர்ந்ததாகும். கோயிலின் முதல் திருச்சுற்றில் 63 நாயன்மார், சுப்ரமணியர், மகாலெட்சுமி, சனீஸ்வரர், அஷ்டலிங்கங்கட்கு துணை கோட்டங்களும் இரண்டாம் திருச்சுற்றில் 109 அடி நீளம், 27 அடி அகலம் திறந்த வெளி மண்டபமும்,மூன்றாம் திருச்சுற்றில் 440 நீளம், 168 அடி நீளம் கொண்ட குப்தகங்கை எனப்படும் திருக்குளமும் எமதர்மராஜனுக்கு ஏகதள விமானத்துடன் கூடிய தனி சந்நிதியும் அமைந்துள்ளது. இராஜகோபுரம் 110 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடன் ஐம்பொறி தத்துவத்தை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ள பிற்கால சோழர் கட்டடக்கலைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சிற்பக் கலை ஸ்ரீ வாஞ்சிநாதர் லிங்க வடிவில் சுயம்பாக காட்சியளிக்கிறார். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கி.பி.பத்தாம் நூற்றாண்டு, பாலசுப்ரமணியர் 15,16-ம் நூற்றாண்டு, அஷ்டபுஜ துர்க்கையை பதிமூன்றாம் நூற்றாண்டு (குலோத்துங்கன் காலம் நுளம்ப நாட்டு) சிற்பகலையைச் சார்ந்ததாகும். உலோகத்திருமேனிகளில் ஆடல் வல்லான் ஸ்ரீ நடராஜர் 108 சுவாலைகளுடன் 51 புள்ளிகளில் திருவாட்சியுடன் பஞ்ச உலோக திருமேனியாகும். ஸ்தல சிறப்பு 1. ஸ்ரீயை வாஞ்சித்து (மகாலெட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. 2.மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் தலை சிறந்தது. 3.பிரமன், திருமால், சூரிய பகவான், தேவர்கள் சிவனருள் பெற்ற தலம். 4.பிரளய காலத்திலும் அழிவற்றது. 5.காசியைவிட பன்மடங்கு மேம்பட்டது. 6.எமதர்மராஜா சித்ரகுப்தருக்கு தனி சந்நிதி உள்ளது. எமதர்மராஜாவே சுவாமிக்கு வாகனமாக உள்ளார். 7.எமபயம், பைரவ உபாதை நீக்கும் தலம். 8.ராகு. கேது கிரக பரிகார பிரார்த்தனை தலம். 9.கங்காதேவி 999 கலைகளுடன் இங்குள்ள திருக்குளத்தில் ரகசியமாக உறையும் தலம். 10.ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரை மலர்கள் அர்ச்சித்தால் எல்லாவித தோஷங்களிலிருந்து விடுபடலாம். 11.நால்வர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், முத்துசாமி தீட்சிதர், கோவை சிவராம பிள்ளை ஆகியோர்கள் பாடப்பெற்ற தலம். மூர்த்திகள் சிறப்பு வாஞ்சிநாதர்: அகிலமெல்லாம் உணர்ந்தோதற்கரிய எம்பெருமான் இங்கு சுயம்புலிங்கமாக அமைந்துள்ளார்.சந்தன மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் கந்தாரண்யம் என வழங்கப்படும். இந்த ஸ்ரீ கந்தாரண்யத்தில் சிவராஜதானியில் உலகின் நன்மைக்காக ஏழு பாதாள உலகிலிருந்தும் தானே தோன்றியதாக இருக்கும் இச்சிவலிங்கம் பிரளய காலத்தில் தேயு வடிவமாயும், கிருதயுகத்தில் இரத்தினமயமாகவும், திரேதாயுகத்தில் பொன் மயமாயும், துவாபரயுகத்தில் வெள்ளிமயமாகவும், கலியுகத்தில் கல்மயமாகவும் காட்சி தருவதாக சாம்போபுராணம் திருவாஞ்சிய லிங்கமகிமை வருணனை (14ம் அத்தியாயம்) உரைக்கின்றது. மங்களாம்பிகை: திருவாஞ்சியத்து இறைவனுடன் சகஜ சக்தியாக விளங்குபவள், அழகு தமிழில் மருவார்குழலி என அழைக்கப்படும் பெருமைமிகு அம்பிகையாகவும் திகழ்கிறாள்.மருவார்குழலே திருவாஞ்சை வாழ்வே வருக வருகவே என பிள்ளைத்தமிழ் பாடுகிறது. சகல பாக்கியங்களையும் தருவதால் பாக்யாப்தநாயகி எனவும் மங்களங்களை செய்வதால் மங்களாம்பிகை எனவும் கைலாயித்திலிருந்து ஈஸ்வரனுடன் சேர்ந்து திருவாஞ்சியம் வந்ததால் கெளரீ எனவும் தானே விரும்பி இத்திருத்தலத்தில் விஸ்வேச்வரருடன் வாழ வந்ததால் வாழ வந்த நாயகி எனவும் (பாக்கியவாக் பிரதப கல்யாணி) கல்யாணி எனவும் பல பெயர்களால் துதிக்கப்பட்டு அனைத்து மங்களங்களையும் வழங்கி சிறப்புடன் விளங்குகிறார். மாலையில் அம்பிகைக்கு வெண்பட்டு உடுத்தி சரஸ்வதியின் அம்சமாக கலைவாணியாகவும் துதிக்கின்றனர். இதுவரை வணங்கினால் கல்வியும், செல்வமும், புகழும் மேம்படும் என்பது திண்ணம் - சாம்போபுராணம். ராகு, கேது : மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு, கேது இரு அசுரர்கள் அமிர்தம் பருகியதால் தேவ அந்தஸ்து பெற்றனர்.இரண்டு கிரகங்களுக்கும் தனித்தனி மூர்த்தியாக இணைந்து வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.இரு கிரக பரிகாரங்களையும் இங்கே செய்யலாம். இந்த அமைப்பு சண்ட ராகு என வழங்கப்படுகிறது. ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி: துர்க்கை திருவாஞ்சியத்தில் அஷ்டபுஜங்களுடன் மகிஷாசுரமர்த்தினியாக காட்சி அளிக்கின்றனர். இவருக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிட்டும் என்பதும், 21 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது எய்துவதும் சிறப்பு ஆகும். தீர்த்தம்: இப்பொழுது ஸ்ரீ வாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற பெயருடன் விளங்கும் இதே தீர்த்தம் கலியுகத் தொடக்கத்தில் முனி தீர்த்தம் என்றும், துவாபர யுகத்தில் பராசர தீர்த்தம் என்றும், திரேதா யுகத்தில் அத்ரி தீர்த்தம் என்றும், கிருத யுகத் தொடக்கத்தில் சிவபெருமானின் விருப்பத்தால் அவரது சூலத்திலிருந்து தோன்றி, அன்னை பார்வதி இதன் கீழ்க்கரையில் தங்கி வாழ்ந்ததால் தூய புண்ணிய புஷ்கரணி தீர்த்தம் என்றும் யுகம் யுகமாகப் புகழ் பெற்றது. இந்தப் புண்ணிய புஷ்கரணியில் நீராடி, ஜோதி லிங்கமான ஸ்ரீ வாஞ்சிநாதரையும், மகாலெட்சுமி மகாவிஷ்ணுவையும் வணங்கி தம்பதியர்க்கும் பிணக்கம் நீங்கிச் சுமுகமும் செழிப்பும் வளரும் என புராணங்கள் உரைக்கின்றன. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளின் சிறப்பு பிரம்மனின் மகன் தட்சன் தன் மகள் தாட்சாயணியைச் சிவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க மறுத்த பின்னும், சிவன் தாட்சாயணி திருமணம் நடந்தது. அதனால் கோபம் கொண்ட தட்சன் சிவனை அழைக்காமல் வேள்விக்கு ஏற்பாடு செய்தான். தட்சன் அவிஸை சிவனுக்குத் தரவில்லை. ஆனால் பிரம்மா அவிஸை சிவனின் நந்திக்குக் கொடுத்துவிட்டதால் கோபம் கொண்ட தட்சன் மேருவின் வடக்கே புதிய வேள்வி ஒன்றைத் தொடங்கி, சிவனைத் தவிர மற்ற அனைத்துத் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விட்டுக்க அனைவருக்கும் வந்தனர் சிவபெருமானைத் தவிர அவிர்ப்பாகத்திற்குரிய சிவனில்லாமல் வேள்வி நடப்பது தவறு என்று தந்தைக்குச் சுட்டிக்காட்ட, சிவன் தடுத்தும் வந்த தாட்சாயணியை அவமதித்தான் தட்சன். கோபம் கொண்ட தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் தட்சனும் விரைவில் அழிந்து போகச் சாபம் கொடுத்து யாகத் தீயில் விழுந்து மாண்டாள். அப்போது மயிர்ச் கூச்செரியும் ஆங்காரத்துடன், ஆங்கார சக்தி வெளிப்பட்டது. தாட்சாயணி உயிர் துறந்ததை அறிந்த சிவன் கடுங்கோபம் கொண்டு பெரும் பலம் கொண்ட வீர பத்திரனை அனுப்பி யாகத்தை அழித்து காரணமானவர்கத் தண்டிக்கச் சொன்னார். வீரபத்திரனும் தன் கணங்கள் சூழ யாகசாலை அடைந்து, அனைத்தையும் அழித்தார். அனைவரையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்தார். இந்திரன், சந்திரன், விஷ்ணு, எமன், அக்னி, வாயு, குபேரன், வருணன் என்று அனைவரையும் வதம் செய்தார். சூரியனின் கன்னத்தில் அறைய சூரியனின் பற்களேல்லாம் கீழே கொட்டின. கண்கள் பெயர்ந்தன. இறுதியில் மகா விஷ்ணுவின் வேண்டுதல் பேரில் கோபம் குறைந்தார் வீரபத்திரர். அது சமயம் அங்கு தோன்றிய சிவன், தவறு செய்தவர்க மன்னித்து உயிர்ப்பித்தார். பற்கள் இழந்த சூரியனின் பாவம் தீர ஸ்ரீ வாஞ்சியத்தில் நீராடி, கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் தூய்மை வரும். சிவத் துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார். அவ்வாறே ஸ்ரீ வாஞ்சியம் வந்து முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடிக் கார்த்திகை மாதம் முழுவதும் தவம் செய்து இறைவனை வணங்கினார். இதனால் மகிழந்த சிவன் அவர் முன் தோன்றி, பாவம் நீக்கி, பழைய ஒளியைத் தந்தார். அத்தோடு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களில் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்றும் அருள்புரிந்தார். பைரவர் சிவ ஆலயங்களின் பாதுகாவலர் பைரவர். இவர் சிவபெருமானின் அம்சங்களில் ஒருவர்.கார்த்திகை மாதம் தேய் பிறை அஷ்டமி அன்று இரவு இவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறுது. பைரவர் என்று சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். பைரவர் தோற்றம் : பைரவர் நிர்வாண சொரூபம் கொண்டவர். இவருக்கு மூன்று கண்கள் உண்டு. இவர் காதில் குண்டலமும், தலையில் மாலையும்,கடகம், சூலம், உடுக்கை, கபாலம், கோரப்பல் ஆகிய வடிவத்துடனும், சர்ப்ப ஆபரணத்தை அணிந்து நாய் வாகனத்தில் மீது அமர்ந்து அருள்பாலிப்பார். யோக பைரவர் : திருவாஞ்சியத் திருத்தலத்தில் பைரவர் தனது கோலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் யோக பைரவராக மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சி அளிக்கின்றார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். யோக பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்: நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்து நிவர்த்தி பெறலாம். மனநிம்மதி கிடைக்கும் இது உறுதி. இத்தலத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் : மார்கழி மாத திருவாதிரை தினத்தில் ஸ்ரீ நடராஜர் பெருமான் வீதியுலாக் காட்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் குப்த கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மாதம் மக உற்சவம் குடந்தையில் நடைபெறும் மகாமக வைபவம் போன்று மிகச் சிறப்பாக இவ்வாலயத்திலும் நடத்தப் பெற்று வருகிறது.அன்றைய தினம் இத்தலத்தின் தீர்த்தமான குப்த கங்கையில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி நினைத்ததெல்லாம் அடைந்து சுகவாழ்வு பெறலாம். திருவாஞ்சிய மகாத்மீயம் குப்த கங்கையில் ஆசீன பைரவர் துர்காம் அபயங்கர ஷண்முகெள, வாசுதேவஞ்ச வாஞ்சேசம் மங்களாம்பிகா பிரணாம் யஹம் ஸ்நானத்துதியை சொல்லி நீராடி இறைவனை துதித்தால் கிடைக்கும் பலன்கள். காலை: நாற்கடல் சூழ்ந்த பூமிதானம் செய்த பலன் மதியம்: ஆயிரம் கோடி காறாம் பசு தானம் செய்த பலன் மாலை: கோடி பசு தானம் செய்த பலன் இரவு: அசுவமேத யாகம் செய்த பலன் மூர்த்தி, தல, தீர்த்த மகிமை மூர்த்தி : மூர்த்தி (சுயம்புலிங்கம்) பூ கைலாயமாகவும், காசியிலும் 1000 பங்கு பெருமையுடனும் பெயர் சொன்னால் முக்தி வரும் பெருமையுடனும் மூர்த்தி திகழ்கின்றது. ஸ்தலம் : காவேரியின் தென்பால் உள்ள தலங்களுள் 70வது தலம் என திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்து. சந்தன மணம் நிறைந்தது. சோழர் காலத்தில் இராஜ கம்பீர சதுர்வேதி மங்களம் என அழைக்கப்பட்டது. தீர்த்தம் : கங்காதேவி 999 அம்சங்களுடன் இரகசியமாக உறையும் பெருமை கொண்ட தீர்த்தம். இத்தீர்த்தம் குப்தகங்கை புண்ய புஷ்கரணி, பராசர தீர்த்தம், முனி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. தலம், மூர்த்தி, தீர்த்தம் அனைத்திலும் சிறந்தது விளங்கும் திருவாஞ்சியத்தில் ஒரு கணம் வசித்தாலும்,நினைத்தாலும், சொன்னாலும் பாவம் நீக்கி முக்தியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இதற்கு ஈடினை வேறில்லை என்றே புராணங்கள் உரைக்கின்றன. புராணங்களில் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்கந்த புராணம் தீர்த்த மகிமை கிருதாயுகத்தில் மிக தூய புஷ்கரணியென்றும், திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் எனவும், துவாபரயுக்ததில் பராசர தீர்த்தம் எனவும் கலியுகத்தில் முனி தீர்த்தம் எனவும் போற்றப்படும் தீர்த்தம் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள குப்த கங்கை தீர்த்தமாகும். துவாபரயுகத்தில் தெரியாமல் தவறிழைத்து அசுரனாகி மூன்று யுகம் அரக்கனாக வாழும் தண்டனை பெற்றவன் வீரதனு. இவ்வசுரன் பராசர முனிவரை வணங்கி வேண்ட பராசர முனிவர் திருவாஞ்சியத்தில் வந்து புண்ணிய தீர்த்தத்தை தெளித்து விமோசனம் தந்தருளினார். பிரம்மராஷ்ஸனை பாவம் நீங்கச் செய்ததால் இஃது அது முதல் பராசர தீர்த்தம் என வழங்க ஈசன் அருள்பாலிக்கிறார். திரேதாயுகத்தில் பிள்ளையின்றி வாடிய அத்திரி முனிவர் நாரதரின் உபதேசத்தால் திருவாஞ்சியம் வந்து திருக்குளத்தில் நீராடி ஆயிரம் வருடம் தவம் செய்ய ஈசன் மனமிரங்கி காட்சிதந்து பிள்ளையாக தாத்தத்ரேயனை அருளிய திரேதாயுகத்தில் இத்தீர்த்தம் அத்திரி தீர்த்தம் என வழங்க அருள்பாலித்தார். கிருதாயுகத்தில் விஷ்ணுவிடம் கோபித்து மகாலக்ஷ்மி மறைந்துவிட இலக்குமியின்றி வாடிய கண்ணபிரான் பல காலம் திருவாஞ்சியத்தில் பூஜை செய்ய அனைத்து தேவர்களும் ஈசனை, துதிக்க சிவபெருமான் இலக்குமியை கோபம் தீர்த்து கண்ணணுடன் சேர்ந்து வைத்தார். இதனால் இத்திருத்தலம் திருவிழைந்ததென்று பொருள்படும் திருவாஞ்சியம் என்றாயிற்று. கண்ணனும் இலக்குமியும் நீராடி திருக்குளம் கிருதயுகத்தில் மிகத்தூய புண்ணிய புஷ்கரணியென வழங்கலாயிற்று. கெளதம் முனிவரின் மனைவியாகிய அகலிகையை இந்திரன் ஆசை கொண்டு புணர்ந்து பின் பூனை வடிவம் கொண்டு செல்ல அதனை கண்ட கெளதமர் யார் என ஞானத்தால் அறிந்து அகலிகையை கல்லாக சபித்தார். இந்திரனை உடலெங்கும் பெண்குறிளாக மாற சபித்தார். உடலெங்கும் பெண் குறியாக சபிக்கப்பட்ட இந்திரன் திருவாஞ்சியம் வந்து தேவ வருடத்தில் ஆயிரம் வருடம் உபவாசம் இருந்து தவம் செய்து வாஞ்சீசர் அருள்பெற்று உயந்தான். அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிக்க வல்ல தீர்த்தமாதலின் மிகத் தூயதான புண்ணிய புஷ்கரணியென்று பெயர் பெற்றது. ஒரு முனிவரின் மனைவி பிராண பெண் ஒருத்திக்கு தீவினை வசத்தால் அதிதி உபசாரம் செய்யத் தவறியதால் அதிதி சாபத்தால் வெண்குட்டம் பற்றியது. முனிவரும் மனைவியும் திருவாஞ்சியம் வந்து ஈசனை வணங்கி வழிபட்டு தீர்த்தமாடி நலமாயினர். வாஞ்சீசர், புண்ணிய புஷ்கரணி குஷ்டம் நீக்குவதும்,சாபம் நீக்குவதுமாக இருக்க அருள்பாலித்தார். மாசி மாதம் மக நக்ஷத்திரத்தின் போது நீராடி சிறந்த 63 தீர்த்தங்களை ஜாபாலி தூதருக்குரைக்கிறார். இவற்றுள் புண்ணிய புஷ்கரணி இரவும் பகலும் மகிழ்வுடன் அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மைபடுத்துவேன் என உறுமுவதாய் உரைக்கிறார். பாவம்நீங்கவும் பிறவிப் பந்தம் அழியவும் வெற்றி உண்டாகவும் இங்கே நீராடி வழிபடலாம் என்கிறார் ஜாபாலி. ஸ்ரீ வாஞ்சியம் மகிஷாசுரமர்த்தினி (துர்கை) லவணாசுரனின் மகன் மகிடாசூரன் உலகம் முழுவதும் வருந்தி வருகையில் தேவதேவர்களும் திருவாஞ்சியம் வந்து எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ துர்கையை துதித்து வணங்க துர்கையும் வீறு கொண்டெழுந்து மகிடாசுரனுடன் ஆயிரம் ஆண்டு போர் புரிந்து முடிவில் அவன் கொம்பை பற்றி இழுத்து காலால் உதைத்து பாதாளத்தில் அழுத்தி அவன் தலைமீது நின்று அருள்பாலித்தார். இவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் : திருஷ்டி, தோஷம், வைப்பு,பில்லி, சூனியம், பயம் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியார் சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்தால் மகப்பேறு கிட்டும். அமாவாசை தினத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த சொத்துக்களையும், பொருளும் திரும்ப கிடைக்கும். மேலும், 108 தாமரை புஷ்பங்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும் ஒருசிறப்பு ஆகும். முக்தி தரும் ஸ்ரீ வாஞ்சியம் திருவாஞ்சியம் திருவாஞ்சியேசர் விமானத்திற்கு சுற்று வட்டம் கிருதயுகத்தில் இரண்டு யோசனை தூரமும் திரேதாயுகத்தில் அதில் பாதியும், துவாபரயுகத்தில் அதிலும் பாதியும் கலியுகத்தல் ஐந்து குரோசமும் (ஐந்து நாழி வழி) ஆகும்.அதில் வசிக்கும் மக்கள் முக்தியடைவது நிச்சயம். இச்சிவாலயத்தில் எவன் ஒரு கணம் உறைகிறானோ அவன் கணங்களுக்கு அதிபதியாகிறான். நீர் விழா, வசந்த விழா செய்பவன் சிவ சன்னதியில் வசிக்கிறான். தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜை செய்பவன் சிவனோடு வசிக்கிறான். பிரகாரம், மண்டபங்கள், கோபுரங்கள் கட்டுபவன் சிவாயுஞ்யம் அடைகிறான். குடை சாமரம் விசிறி வாத்திய முழக்கங்களுடன் திருத்தேர் விழா செய்ச்பவன், செய்விப்பவன் சிறந்த மங்கையருடன் கூடி தேவர் துதிக்க நூறு கற்பகோடி காலம் உடலுடன் தேவனுக்கு முன் வசிப்பான். தீர்த்தக் குளத்தை சுத்திகரிப்பவன் தேவ ஆண்டில் ஆயிரமாண்டு மோட்சத்தில் வசிக்கிறான். படிகட்டுபவன் சிவகாயுஜ்யம் அடைவான். பாசி நீக்குபவன் தனது கோடி குலத்துடன் சிவலோகம் அடைவான். வஸ்திரம் மலர் இவற்றால் மந்திரமின்றி பூசிப்பவன் கூட கோடி குலத்தை உயர்த்துவான். கழுவாயற்ற பாவங்களும் வாஞ்சீஸ்வரரை தரிசித்தாலும், முனி தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி முக்தியுண்டாகும். அரை கணம் இங்கு வசித்தாலும் ஊர்வசியை சேருவான். எவள் வீட்டில் இப்புராணம் எழுதப்படுகிறதோ அவள் வீட்டில் இலக்குமி செல்வம் நோயின்மையை மேன்மேலும் வளர்க்கிறாள். இதனை படிப்பவனும், கேட்பவனும் மூவகை இன்பங்களை துய்த்து முக்தியடைகிறான். -ஸ்கந்தபுராணம் சனத்குமாரஸம்ஹிதை 58-ம் அத்தியாயம். பிரமாண்ட புராணம் ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் மந்திரம் : க்ரீங்கர பீஜ மித்யுக்தம் ஸ்வாஹசக்திரத: பரம் வினியோகம் வேண்டும் பொருள் இவற்றை ஜபிக்கமுன் சொல்லிக் கொள்ள வேண்டியது ஓம் நமோ பகவதே மந்திரம் ச சிவாய ச தத பரம் வாஞ்சய நாதாய ச ததோ மேதாம் ப்ரக்ஞாம ததைவய ப்ரியம் மேத்ய ப்ரயச்சேதி. பகவானையும் வாஞ்சியத் தலைவனாயுமுள்ள சிவபிரானுக்கு வந்தனம்.எனக்கு அறிவும் மேன்மையிற்றோன்றுமறிவும் விரும்பும் பொருளும் ஆகிய இவற்றை இப்பொழுது கொடுக்க வேண்டும். இதனை பதினாராயிரம் முறை ஜபித்தால் இலக்குமி இவனை பார்ப்பாள் லட்சம் ஜபித்தால் கவிகள் தலைவனாவான் 10 லட்சம் ஜபித்தால் துறக்கம் கிட்டும் என பல வகை பலன்களுண்டு. கலியுகத்தில் இதற்கு சமான மந்திரமில்லை என்பது விஷ்ணுவின் வாக்கு. - பிரமாண்ட புராணம். நினைத்தால் முக்தி : அகஸ்திய முனிவர், பிரளய காலத்திலும் அழிவற்றது, பஞ்சமா பாதகங்களை தீர்க்க வல்ல தீர்த்தம் உடையது. மகா காசியிலும் சிறந்த க்ஷேத்திரம், பூ கைலாயம் என பலவாறாக திருவாஞ்சியம் மேன்மையை உரைக்கிறார். ஒரு கணம் இதனை நினைப்பவனும் சிவபதம் அடைகிறான் என்று இதன் பெருமையை விளக்குகிறார். மங்கள நாயகி : திருவாஞ்சிய அம்பிகை பாக்கியவாக் பிரதாப கல்யாணி கெளரி பெயர்களால் புகழடைந்து விளங்குகிறாள். பாக்கியவாக் பிரதாப கல்யாணி என்பது வாழ வந்த நாயகி என பொருள் தமிழில் மருவார் குழலம்மை என்ற பெயருண்டு. காசியிலும் மேன்மை : திருவாஞ்சியத்தின் பெருமைகளை ஈசன் பார்வதிக்கு உரைக்கையில் சதாசிவர் இடபமேல் ஏற்றி உலகு வலம் வந்து காசி, காஞ்சி, காளத்தி முதலான அனைத்து தலங்கயும் காட்டியபின் காசி முதலான அறுபத்தாறு கோடி தலங்களுக்கிடையில் உயர்ந்தது திருவாஞ்சித் தலம் எனவும் தீர்த்தங்களுக்குள் மிக உயர்ந்தது புண்ணிய புட்கரணி எனவும் விளங்க இங்கு வசிக்க அம்பிகை திருவுளம் கொண்டனர். அதனால் தானே விரும்பி வாழ வந்த நாயகியாக விளங்குகிறார். மாசி மாதம் சுக்ல பக்ஷம் மகத்தில் வாஞ்சீசர் உமையோடு தோன்றினார். சதாசிவர் தனது அம்சத்தை காட்டிலும் வாழவந்த நாயகியுடன் திருவாஞ்சியம் புகுந்த அளவில் ஆற்றலுடையவராயும் அறம், பொருள், இன்பம், வீடு பேற்றை அளிப்பவராயுமிருக்கிறார். காசி குருஷோத்திரத்தை விட இங்கு பூஜிப்பவர்கள் 100 மடங்கு அதிக பயனடைகின்றனர் என்கிறது புராணம். ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள திவ்ய தீர்த்தங்கள் : கிழக்கில் 1. பிரம்ம தீர்த்தம். அக்னி திக்கில் 2. நாரத தீர்த்தம். தெற்கில் 3. விஸ்வாமித்ர தீர்த்தம் நிருதிதிக்கில் 4. ஸர்வ தீர்த்தம். 5. பாரத்வாஜ தீர்த்தம். மேற்கே 6. வேண்டுவதையளிக்கும் சேஷ தீர்த்தம் 7. 3 நாழி வழி தூரத்தில் நாரயண தீர்த்தம். வாயு திக்கில் 8. ராம தீர்த்தம். ஈசான்ய திக்கில் 9. இந்திரா தீர்த்தம் கோயிலுக்குள் - . 10.ஆனந்தக் தீர்த்தம் இத்தீர்த்தங்க பார்த்தாலே பிரம்மஹத்திகள் எல்லாம் ஓடிவிடும். திருவாஞ்சிய திருத்தலம் கிருதயுகத்தில் தங்கமாயும் திரேதாயுகத்தில் வெள்ளி மயமாகவும் துவாபரயுகத்தில் தாமிரமயமாகவும் கலியுகத்தில் கலிதோஷத்தால் மண்மயமாகவும் விளங்குகிறது. காசியில் மரித்தவருக்கு ஒரு கணமேனும் பைரவவாதனையுண்டு. ஆனால் இங்கோ பைரவர் யோகநிலையில் வீற்றிருப்பதனாலும் சிவபெருமான் நேரில் ஆட்கொள்வதாலும் பைரவ உபாதை கிடையாது. ஆகையால் காசியிலும் மேலான தலமாக இது விளங்குகிறது. அந்தணர் கொலை பாவம் முதல் அனைத்து பாவங்களும் நீங்க நீராடினாலே போதும். சாம்போப புராணம் வசிஷ்ட மகரஷி மற்ற முனிவர்கட்கு சொன்னதாவது. முனி தீர்த்தம் என பெயர் பெற்ற புண்ணிய புஷ்கரணியில் பிரம்மஹத்தி பிடித்தவர்கள் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினால் மாத்திரம் தூய்மை அடைகின்றனர். திங்கள்கிழமை நீராடுபவன் ஸாலோக்ய மடைகிறான். கார்த்திகை மாதம் : இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நீராடுபவர் கள்குடி பாவத்திலிருந்து விடுபடுகிறான். இரண்டாம் திங்களன்று நீராடுபவன் சிவனின் சாரூப்யத்தை அடைகிறான். கார்த்திகை மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை நீராடுபவன் பொன் அபகரித்தல் / கொள்ளை பாவங்களிலிருந்து விடுபடுகிறான். மூன்றாம் திங்கன்று நீராடுபவன் சிவனின் சாமீப்யத்தை அடைகிறான். கார்த்திகை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நீராடுபவன் குரு மனைவியை கற்பழித்த பாவத்தினின்று (கற்பழிப்பு, பிறன்மனை விழைதல் பாவம் எனில் அதனினும் கொடிது குரு மனைவியை கற்பழித்தல்) நான்காம் திங்கன்று நீராடுபவன் சிவனின் சாயுஜ்யம் அடைகிறான். கார்த்திகை மாதங்களில் வரும் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமை நீராடுபவன் சம்சர்க்க பாவத்திலிருந்து விடுபடுவான். 5 -ம் திங்களன்று நீராடுபவன் நான்குவித புருஷார்த்தங்களை அடைகிறான் . சாம்ப முனிவர் இந்த பிரம்மஹத்தி நீங்குதல் சரீரத்தை படிப்பவனும் கேட்பவனும் இந்த பாவங்களிலிருந்து விடுபட்டு இம்மை மறுமை பயனடைகிறான் என உரைத்தார். கார்த்திகை முதல் ஞாயிறு : ஐந்தக்னிபுரன் என்ற ஊரில் பாரிபத்ரன் எனும் அந்தணன் மகன் விஸ்வபத்திரன். செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளை துஷ்டனால் வளர்ந்து வேசிப்பற்று மிகுந்து தண்டித்த தந்தையை கொன்று பிரம்மஹத்தியால் பீடிக்கப்பட்டு வருந்துங்கால் வசிட்டர் வாக்கின்படி இங்கு வந்து முனி தீர்த்தத்தில் நீராடி பிரம்மஹத்தி நீங்கப் பெற்றான். கார்த்திகை 2.ஆம் ஞாயிறு : கங்கைக் கரையில் மிருத்யுஞ்சய நகரில் வசித்த பாஷ்களன் என்ற அந்தணனுக்கும் போகநாதா என்ற அவனின் மனைவிக்கும் பிறந்த ஐந்து மக்களின் மூத்தவன் துயுமணி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினான். ஒழுக்கத்தில் சிறந்த இவ்வந்தணன் ஷேத்ராடனம் செய்கையில் ஒரு நாள் சுரம் வந்து அவஸ்தைபட்டான். சுரமயக்கத்தில் ஒரு வீட்டில் நீர் கேட்க தாதி பெண் கள்ளை கொடுத்து விட குடித்து உடல் சரியாகிவிட்டது. உடல் சரியானதும் நாற்றத்தால் இது கள் என அறிந்து இழிசெயல் புரிந்தோம் என மனம் வருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள துணிகையில் சிவனை வேண்ட சிவன் பிரத்யட்சமாகி கார்த்திகை மாதம் 2ம் ஞாயிறன்று திருவாஞ்சியத்திலுள்ள முனி தீர்த்தத்தில் நீராட பாவங்கழிந்து தூய்மையடைவாய் என்று அருளினார். அங்ஙனமே அவனும் இங்கு வந்து நீராடி தூய்மையுற்று மேன்மையடைந்தான். குப்த கங்கை: கலியுகத்தில் கங்கை நதியானவள் ஈசனை வணங்கி கலியுகத்தில் அனைத்து பாவிகளும் தத்தம் பாவங்க கங்கையிடத்தே கழுவுவதால் மகா பாவங்களை சுமந்து வருந்துவதாகவும். அப்பாவங்களே போக புவியில் நல்லதொரு தீர்த்தம் உரைக்க வேண்டும் என வேண்டி ஈசனும் திருவாஞ்சிய பெருமையை கூறி அங்கே ஈசனின் காலத்தால் உண்டுபண்ணப்பட்ட தீர்த்தத்தில் ஆராயிரம் கோடி தீர்த்தங்கள் சேர்ந்துள்தனையும் அங்கே நீராடினால் அனைத்து பாவங்களும் நொடியில் போய்விடும் என உரைத்து இனி அங்கேயே வசிக்கவும் கூறினார். புண்ணியத்தால் காசியிலும் நூறூபங்கு மேலாக உள்ள இத்தலம் கங்கை வசிப்பதால் காசியிலும் ஆயிரம் பங்கு மேலாக விளங்கட்டும் என அருள்பாலித்தார். இந்த குப்த கங்கை என்ற பெயரை அறிந்தாலே பாவம் அற்றவராகிவிடுவார் எனவும் அருளியார். கார்த்திகை 3 ஆம் ஞாயிறு : வங்க தேசத்தில் மாகதம் எனும் கிராமத்தில் வசித்து வந்த சிறந்த அந்தணன் ககோளன். இவன் மழையில் இடிந்து கடந்த ஒரு வீட்டு சுவற்றில் புகையல் ஒன்று கண்டு அதனை எடுத்து தானதர்மங்கள் செய்துவர, ஆங்கே வந்த துருவாச முனிவரை விருந்துக்கழைக்க நீ திருடிப்பெற்ற பொருளில் உணவுண்ண மாட்டேன் என அவர் வேறு வீட்டிற்கு சென்றார். தான தர்மங்களிலும், கல்வி கேள்வியிலும் சிறந்து விளங்கிய இவ்வந்தணன் துன்பம் தாங்காது உயிர்விட துணிந்து தீ வளர்ந்து தேவர்க துதிக்க ஆகாய வானவர் அசரீரியாக திருவாஞ்சிய புண்ணியபுட்கரணி கார்த்திகை 3ம் ஞாயிறு பெருமை ஞாயிறு பெருமை விக்க உடன் சேர்ந்து கார்த்திகை நீராடி இறைவனை வணங்கி நீங்கப் பெற்றுய்ந்தான். கார்த்திகை 4 ஆம் ஞாயிறு: வங்க தேசத்தில் சந்திரிகை என்னும் பட்டணத்தில் யக்ஞபக்தன் குமுதவதி ஆகியோருக்கு பிறந்தவன் துர்போதன் அவன் பிறந்ததும் தந்தை இறந்துவிட்டான். பின்னர் பஞ்சம் ஏற்பட்டு பிரத்யாகை சென்று வசிக்குங்கால் காம மயக்கத்தில் தாயை பெண்டாண்டு தெளிந்தபின் மனம் வருத்தி அவிமுக்தம் என்ற திருத்தலம் சென்று மணிகர்ணிகை என்னும் தீர்த்தத்தில் நீராடி மூன்று வருடம் விச்வேச்வரரை துதிக்க மனம் மகிழ்ந்த சிவன் பிரசன்னமாகி திருவாஞ்சிய பெருடையையும் குப்த கங்கை மகிமையையும் கூறி இங்கே நீராட உன் பாவம் நீங்கும் என அருள அவனும் திருவாஞ்சியம் வந்து குப்த கங்கையில் நீராடி தன் பாவம் நீங்கப் பெற்று பல காலம் இங்கு வசித்து பின் சிவபதம் அடைந்தான். கார்த்திகை 5 ஆம் ஞாயிறு : நர்மதைக்கரையில் ஸ்தபகம் என்ற ஊரில் வசித்த காலஜித் என்பவன் மகன் காலஜித் தவத்தால் சிறந்த இவன் மூவுலகம் சென்று வரும் ஆற்றல் கொண்டவன். தூய வாழ்க்கை வாழ்ந்த இவன் மக்கள் நால்வர். பிள்ளைகளிடத்து பற்று கொண்ட காலஜித் அவர்கள் தீவழி செல்வதனை கண்டிக்காமல் விட அதனால் ஸம்ஸார்க்கம் என்ப பாவம் அவனை சேர்ந்தது (தீயவருடன் சேர்ந்தால் வரும் பாவம்) அதனால் அவன் தவ வலி குன்றி மூவுலகு செல்லும் ஆற்றல் நீங்கியது. அப்போது ஆகாசவாணி அவனுக்கு அசரீரியாக உரைத்தவண்ணம் வசிட்டரை வணங்கி திருவதம் பெருமைகள் கேட்டு அங்கு வந்து கார்த்திகை 5- ஆம் ஞாயிறு நீராடி இறைவனை வணங்கிப் பாவத்திலிருந்து விடுபட்டு பல காலம் அங்கே தங்கி அநேக போகங்கள் அனுபவித்து பின் முக்தியடைந்தான். வீராக்கன்: வீர நக்தஞ்சன் என்னும் அரக்கன் முனிவர்க கொன்று திண்பவன், இவன் ஸ்ரீ கந்தாரண்யம் (ஸ்ரீவாஞ்சியம்) வருகையில் விதி வசத்தில் அகத்திய முனிவர் அங்கே வருகை தந்தார். அரக்கன் அவரை உண்ண எண்ணி கையால் பிடிக்க அவர் வேடிக்கையாய் இடது காலால் உதைக்க அவன் அந்த அந்த அடியால் குப்த கங்கையில் விழுந்தான். முனியின் பாத சம்பந்தத்தாலும் குப்த தீர்த்த மகிமையாலும் முக்தனானான். அவன் பெயரில் விங்கும் ஊர்தான் வீராக்கன். குப்த கங்கையில் தெரியாமல் நீராடினும் பாவங்கள் தொகையும் என்பது ஈசன் அருள். திருவாஞ்சியம் வந்து அன்னதானம் செய்பவர் சிவனுடைய அருள் பெறுகிறார் என்பது சாம்பர் வாக்கு. அனைத்து பாவங்க போக்கும் திருத்தலமாக ஸ்ரீ கந்தாரணங்யமும் ஸ்ரீ கந்தாரண் யேஸ்வரராக வாஞ்சிநாதரும் விங்குகின்றனர் சுயம்பு லிங்கங்கன மேரு மந்திர, கைலாச, காசி, ஸ்ரீ சைலம் முதலிய சித்தியளிக்கும் தலங்களுக்கு முன்பே ஸ்ரீ கந்தாரண்ய ஷேத்திரத்தில் தோன்றிய லிங்கம் ஸ்ரீ வாங்சிநாதர். மிகப்பெரும் நற்பலன்க கொடுக்க வல்லது இச்சுயம்புலிங்கம். இங்குள் நடராஜரை ஒருவன் தரிசித்தால் பிறவிக்கடனிலிருந்து முக்தியடைகிறான். காகபுஜங்கன் எனும் கொடி வேடன் இங்கு வந்த அந்தணனின் சோற்று மூட்டையை பறித்து செல்கையில் அந்தணனின் பசியால் மயங்கி விழ வேடன் சோற்று மூட்டையை அந்தணனுக்கு தந்து பசியாற்றினான். மிக கெடிய பாவங்கள் பல காலம் செய்தவாயினும் இந்த அன்னதான பலனால் ஏழு தீவுகட்கு தலைவனானான். தாய் தந்தையரை துன்புறுத்திய ஹம்சன் என்பவன் பல கொடுஞ் செயல்க செயங்து வருகையில் விதி வசத்தால் சிவ அந்தணருக்கு குற்றேவல் செய்ய மூட்டை சுமந்து வந்து மகாசங்கராந்தியில் குப்த கங்கையில் நீராடினான். இன்னும் பல கொடுமைகள் செய்யினும் அவன் இறக்கையில் மகர சங்கராந்தியில் நீராடிய பலனால் சிவலோகம் அடைந்தான். இங்கு ஒரு அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் பிதுர்க்கள் 1ஞி வருட கலம் ப்ரீதியடைகின்றனர். 2 அமாவாசை தர்ப்பணம் செய்தால் 1ஞிஞி வருடமும் மூன்று அமாவாசை செய்தால் ஒரு யுகமும், நான்கு முறை செய்தால் நஷத்திரமுள்வரையிலும் மகிழ்கின்றனர். இத்தலத்தில் பூதானம், கே தானம், வஸ்திர தானம், நீர்தானம், பால், மோர், தயிர் போன்ற ஒவ்வொரு தானத்திலும் ஆயிரம் வருடம் தேவலோகத்தில் வசிப்பது போன்ற பல நன்மைகள் அடையப் பெறுவார்கள். பிரய காலத்திலும் அழிவற்றது : பிரய காலத்தில் அனைத்து லோகங்களும் நீரில் அழிந்திருக்க முழுகாத இடம் ஏதும் உண்டா என பார்வதி வினவுந்திருக்க பரமசிவம் திருவாஞ்சியத்தை காட்டி அருளினார். இதனால் மகிழ்ந்த பார்வதி பரமசிவனுடன் இங்கு ஞானசக்தியாகி வாழ வந்த நாயகியாய் மேதான்றி உறைகிறாள். நாரதர் இங்கு சரஸ்வதியை பிரதிஷ்டை செய்து பூஜித்த தனது வேண்டுகோளை பூர்த்தி செய்து கொண்டார். அவர் உற்பத்தி பண்ணியதே நாரத தீர்த்தம். ஸ்ரீ யமதர்மராஜா உயிர்களை வருத்திய பாவத்தால் கலங்கி இங்கே யமகுண்டம் என்றும் தீர்த்தம் அமைத்து நீராடி ஸ்ரீ வாஞ்சியரை வணங்கி வழிபட்டு ஷேத்ரபாலகனானார். கலி நீங்குதல் மிக புத்திமானான ஸர்வர் என்னும் முனி துவாபரயுகத்தில் மிகச் சிறந்த தர்ம பற்றுள்ளவனாய் மனைவியுடன் சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்தார். கலி அனைவரையும் பற்றுங்கால் இம்முனிவர் அசரீரி வாக்கால் ஞானமடைந்தது திருவாஞ்சியம். வருங்கால் கலி அவரை தொடர்ந்து வந்து பிடிக்க ஸ்ரீ வாஞ்சிநாதர் காக்க வேண்டும் என இறைஞ்சினார். சரண்யனான விச்வேச்வரன் பக்கத்திலிருந்த அபராதஸதர் கடாஷத்தால் ஏவப்பட்ட ஷேத்ரபாலகர் (எமன்) கோயிலுக்கு வெளியே ஓடிவந்து சுற்று முற்றும் பார்த்து இரண்டு மைல் தூரத்தில் வரும் கலியை கண்டு ஹீங்காரம் செய்ய கலி ஸ்தம்பித்துவிட்டார். அப்போது கலி அவரை துதித்து இனி நான் இங்கு மங்களத்தையே செய்வேன். திருவாஞ்சியத்திற்கு ஐந்து குரோசம் தூரம் வரை கலி பீடை இருக்காது. இங்கிருந்து மேற்கே குராசர்த்திரமுடைய இடத்தில் நான் வசித்து ஆண்டுக்கொருமுறை இங்கே நீராடி ஆண்டு முழுவதுமுள் பாவத்திலிருந்து விடுபடுவேன் என வணங்கி துதித்து விடுபட்டார். அது முதல் இந்த தீர்த்தத்தில் கலி பீடை கிடையாது. இந்த அந்தணனும் இங்கே தீர்த்தமுண்டாக்கி வழிபட்டு முக்தியடைந்தார். அதவே ஸர்வ தீர்த்தமாகும். இந்திரன் தனது சாபவிமோசனத்திற்காக வாஞ்சீசர் அருளல் இங்கு ஈசான்ய திக்கில் இந்திர தீர்த்தம் அமைத்து வழிபட்டு சாபம் நீங்கினான். அயன் மகன் தக்கன் வேள்வி செய்யுங்கால் சிவனுக்கு அவிஸ் அளிக்காது விட்டான். கேள்விக்கு வந்த பார்வதி (தாட்சாயணி) யையும் அவமதிக்க பார்வதி வெகுண்டு மறைய அங்கே சிவன் வெளிப்பட்டு வீரபத்ரரை வரவழைத்து வேள்வியை அழித்து அனைத்து தலையை எடுத்துவிட்டு ஆட்டின் தலையை வைத்து அனைத்து தேவர்களையும் மீண்டும் உயிர்பிக்க அனைவரும் சிவனை வணங்கினர். இந்த யுத்தத்தில் சூரியன் தக்கன் பக்கம் நின்றதால் அறிவற்றவனானான். வீரப்பத்திரரால் பல்லுடைக்கப்பட்ட சூரியனுக்கு திருவாஞ்சியம் வந்து நீராட சிவன் உத்திரவளிக்கவும் சூரியன் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் தினந்தோறும் நீராட சிவன் மகிழ்ந்து அவன் பாவம் நீங்க அருள் செய்தார். அதுமுதல் சூரியன் மிக்க ஒளியுடைவராய் விளங்க, கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை புகழும் மிக சிறந்து விளங்கியது. ஒவ்வொரு கார்த்திகை ஞாயிறும் நீராட அனைத்து பாவங்களும் நீங்கி ஒருவர் மேலும் சிறந்து விளங்குவது சிவபெருமான் அருளாகும். ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர் கார்த்தவீர்யனை கொன்று பின் 21 தலைமுறை அரசர்களை கொன்று அப்பாவம் நீங்க திருவாஞ்சியம் வந்து ராமதீர்த்தம் அமைத்து வழிபட்டு பலனடைந்தார். தேவதீர்த்தம் பிரமாண்ட புராணத்தில் ஸ்ரீ பூவைகுண்ட வரதராஜ ஷேத்திரத்தின் மகிமைகள் வர்ணிக்கையில் சக்கர தீர்த்தம் வீரக தீர்த்தம் ராம தீர்த்தம் தேவா தீர்த்தம் எனும் தீர்த்தங்கள் புகழப்படுகின்றன் பஞ்சமேட்வரன் என்னும் அசுரர் சிவபெருமானிடம் வரன் வாங்கியவன். இவன் தரும் துன்பம் பொறுக்காது தேவர்கள் உண்டு பண்ணியதே தே தீர்த்தம். பைரவர் : பைரவர் ஒருமுறை சிவபெருமானின் மனதுக்கு பிரியமான ஸ்ரீவாஞ்சிய ஷேத்திரமடைந்து அங்கு பொன்வண்டின் உருவத்தில் ஆயிரம் வருடம் கடுந்தவம் செய்து சிவனை சரணடைய இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என வாஞ்சீசர் அருளினார். தலபுராண மகிமை ஸ்ரீ வாஞ்சீசர் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாங்சிய திருத்தல மகிமையையும் இத்தலத்தை விரும்பி வாழ வந்த நாயகியாகவும், பாக்யாபத் நாயகியாகவும் விளங்கும் மருவார் குழலம்மை பெருமைகளையும் விளக்கும் இந்த தல புராணத்தினை வைத்திருப்பவரும், படிப்பவரும், கேட்பவரும் பலப்பல நன்மைகளுடன் இம்மை மறுமை இரண்டும் அடைவதாக ஸ்கந்தபுராணம் கூறுகிறது. சமயக்குரவர்களில் நால்வர் என வழங்கும் திருநாவுக்கரசர், சுந்தர், திருஞானசம்பந்தர் மாணிக்கவாசர் ஆகிய நால்வரால் பாடப் பெற்ற தலங்கள் சிலவேயாம். அவற்றுள் சிறந்து விளங்கும் திருத்தல்ங்களில் ஒன்று ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.
தல வரலாறு
மூர்த்திஸ்தலம் தீர்த்தம் மூன்றும் தலை சிறந்தது. எமதர்மராஜாவுக்கு தனி சன்னதி உள்ளது. சுவாமிக்கு எமதர்மராஜா வானமாக உள்ளார். ராகு கேது ஒரே மூர்த்தியாக உள்ளார். அப்பர்சுந்தரர்மாணிக்கவாசகர்அருணகிரிநாதர் மற்றும் நால்வரால் பாடப்பெற்ற ஸ்தலம். இந்து மதத்தின் கடவுள்களுக்காக தென்னிந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. ஆனால் யமாவிற்கு எதுவும் இல்லை - மரணத்தின் கடவுள். இருப்பினும், திருவாரூர் மாவட்டத்தில் முடிகொண்டன் மற்றும் புட்டார் நதிகளுக்கு இடையில் அமைந்திருக்கும் ஸ்ரீவஞ்சியம் என்ற கிராமத்தில் தினசரி வழிபாட்டில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கோயிலின் புனிதத்தன்மை பிரம்மந்தம், ஸ்கந்தம், சம்போபன் மற்றும் அக்னேய புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆறு இடங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வாரணாசிக்கு சமமானவை என்று கூறப்படுகிறது திருவெங்காடு, திருவையாரு, சயவனம், மயூரம்,...
காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆறு இடங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வாரணாசிக்கு சமமானவை என்று கூறப்படுகிறது திருவெங்காடு, திருவையாரு, சயவனம், மயூரம், திருவிதைமருதுர் மற்றும் ஸ்ரீவஞ்சியம். இவற்றில்... ஸ்ரீவஞ்சியம் காசி வாரணாசி ஐ விட ஒன்று - பதினாறாவது புனிதமானது. இந்த இடத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆறு இடங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வாரணாசிக்கு சமமானவை என்று கூறப்படுகிறது திருவெங்காடு, திருவையாரு, சயவனம், மயூரம்,...
காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆறு இடங்கள் மிகவும் புனிதமானவை மற்றும் வாரணாசிக்கு சமமானவை என்று கூறப்படுகிறது திருவெங்காடு, திருவையாரு, சயவனம், மயூரம், திருவிதைமருதுர் மற்றும் ஸ்ரீவஞ்சியம். இவற்றில்... ஸ்ரீவஞ்சியம் காசி வாரணாசி ஐ விட ஒன்று - பதினாறாவது புனிதமானது. இந்த இடத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Trichy (TRZ)
💡 Trichy is the most convenient entry point with 20+ direct flights weekly from KL and Singapore.
From Trichy (TRZ)
95 km
From Chennai (MAA)
245 km
Regional Transit Tips:
- 🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Trichy (TRZ). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
- 🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Trichy (TRZ) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
- 📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
பூஜை சேவைகள்
🪔
அபிஷேகம்
₹1000
approx. 16.0 SGD / 54.0 MYR
🪔
ஆயுஸ் ஹோமம்
₹10000
approx. 160.0 SGD / 540.0 MYR
🪔
மோட்ச தீபம்
₹300
approx. 4.8 SGD / 16.2 MYR
📅 2023 Gallery
திருக்கோயில் புகைப்படம் கார்த்திகை தீர்த்தவாரி