Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
திருக்கோயில்கள் நிறைந்த தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் என்கின்ற ஊர், பஞ்சஷேத்திர தலங்களில் (ஸ்ரீரங்கம், ஆவணியாபுரம், காஞ்சிபுரம், சோளிங்கர், திருப்பதி) ஒன்றாகும். தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீநரசிம்மர், அரங்கநாதர், வரதராஜப்பெருமாள், வெங்கடேசப்பெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர் ஆகிய அனைவரும் ஒருங்கே எழுந்தருளியிருப்பதால் இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு பஞ்ச திருப்பதிகளுக்கும் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் நரசிம்மர், இலட்சுமி, கருடன், மலையின் பாறை கூட சிங்க முகத்தில் காட்சி தருகின்றன. இதன் காரணமாகவே இத்தலம் ஆவணியாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. ஆவணியாபுரத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலை சிம்மாசல பர்வதம் என்று பெயர். இம்மலையின் உருவ அமைப்பு ஒரு சிங்கம், கிழக்கு முகமாக பார்த்துக்கொண்டு வடக்கு தெற்காக படுத்திருப்பது போன்று அமைந்துள்ளது. ஆவணி என்பதற்கு சிங்கம் என்ற பொருளும் உள்ளது. அதனால் இதற்கு சிம்மாசல பர்வதம் என்ற பெயர் வழங்கி வருகிறது....இம்மலையின் மேற்கே சுமார் 01 கி.மீ தூரத்தில் செய்யாறு என்னும் ஆறு (பாஹு நதி) வடக்கு நோக்கி ஓடுகிறது. இவ்வாற்றின் கீழ் பாகத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். சிம்மாசல பருவத மலையில் இரு பிரிவுகளில் கீழ் மலையில் இலட்சுமிநரசிம்மர், உச்சியில் வெங்கடேசப்பெருமாள் மற்றும் நான்கு திவ்யதேச ஆலயங்களின் வடிவங்கள் கொண்ட சன்னதிகள் அமைந்துள்ளன. தற்போது 190 படிகட்டுகள் கொண்டு எளிதாக ஏறும் வகையில் அமைந்துள்ளது. முதல்நிலை 60 படிகள் ஏறியதும், பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளது. உள்ளே சென்றதும், இரண்டு கருடாழ்வார்கள் இலட்சுமிநரசிம்மரை வணங்கி நிற்க, அவர்களில் ஒருவர் சிங்க முகம் கொண்டு அபூர்வ வடிவில் காட்சி தருகிறார். கருவறையின் வெளியே வலதுபுறம் ஐந்து நரசிம்ம வடிவங்கள், அதன் மேல்புறம் இரு நாக வடிவில் சிலைகள், அலர்மேல்மங்கை தாயார் சன்னதி, கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவர் மூன்று கண்களுடன் காட்சி தருகின்றார். வெங்கடேசப்பெருமாள்: மலை உச்சி செல்ல 130 படிகள் அமைந்துள்ளது. உச்சியில் வெங்கடேசப்பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியின் வலதுபுறம் முறையே சோளிங்கர் யோகநரசிம்மர், அமிர்தவல்லி தாயார், திருவரங்கம் அரங்கநாதர், அரங்கநாயகி தாயார், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார் என மூன்று சன்னதிகள் கிழக்கு முகமாய் ஒருங்கே அமைந்துள்ளன.
தல வரலாறு
திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் திருத்தலம். நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால், தட்சிண அஹோபிலம் என்று போற்றப்படும் திருத்தலம். பிருகு மகரிஷியின் பிரார்த்தனைக்கு இரங்கி, ஐந்து திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலங் களில் பெருமாள் திருக்காட்சி அருளிய அற்புதத் தலம்... இத்தனை மகிமைகளுக்கும் உரிய தலம் ஆவணி நாராயணபுரம். தற்போது ஆவணியாபுரம் என்று வழங்கப்படுகிறது. பிரமாண்ட புராணம் பலவாறாக புகழ்ந்து பேசும் இந்தத் தலத்தைத் தரிசிப்போமா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியி லிருந்து ஆரணி செல் லும் சாலையில் அமைந்திருக் கிறது ஆவணியாபுரம். மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார வளைவில், சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அங்கிருந்து மலைக்குச் செல்லும் படிகள்... திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியி லிருந்து ஆரணி செல் லும் சாலையில் அமைந்திருக் கிறது ஆவணியாபுரம். மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார வளைவில், சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச்...சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அங்கிருந்து மலைக்குச் செல்லும் படிகள் தொடங்குகின்றன. 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தரிசிக்கலாம். மலையின் இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் மடியில் மகாலட்சுமி தாயாரை இருத்திய படி காட்சி தருகிறார் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். மெல்லிய வெளிச்சத்தில் நாம் என்னதான் முயன்றும் நரசிம்மரின் திருமுக தரிசனம் நமக்குக் கிடைக்கவில்லை. திருமண் காப்பு மட்டும்தான் காட்சி தருகிறது. அவருடைய மடியில் அமர்ந்திருக் கும் லட்சுமி பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். தாயாரின் திருமுகம் சிம்ம முகமாக இருந்தாலும், கண்களில் அன்பும் கருணையும் பளிச்சிடுகின்றன. தாயார் சிம்மமுகம் ஏற்றது ஏன் ஸ்ரீநரசிம்மரின் திருமுக தரிசனம் குறித்தும், தாயாரின் திருமுகம் சிம்ம முகத்துடன் காட்சி தருவதற்கும் காரணமான ஒரு புராண நிகழ்ச்சியைத் தெரிவித்தார் கோயில் அர்ச்சகர். நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்தபிறகு, தட்சிணப் பகுதியில் இந்த மலையில், இதோ இந்தக் குகையில்தான் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றினார் பெருமாள். அவரே இப்போது மூலவராக உள்ளார். புராண காலத்தில் இந்தத் தலத்தில் ஸ்ரீநரசிம்மர் உக்கிரமாக இருந்தார். அவரின் சினத்தைக் குளிர்விக்க பிரம்மா இங்கே யாகம் செய்தார். அப்போது, யாகத் தீயால் பெருமாளின் திருமுகம் பின்னமானது. இதனால் பதறிப்போன திருமகள், நரசிம்மரின் திருமுகத்தை தான் ஏற்று ஸ்வாமியின் மடியில் அமர்ந்து அருள் செய்யத் தொடங்கினாள். பெருமாளுக்காக அவரின் முதல் அடியாரான கருடாழ்வாரும் சிம்ம முகம் தாங்கி சேவை புரிந்தார் என்றார். மூலவருக்கு முன்பு இடப் புறத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக ஒரு நரசிம்ம மூர்த்தியும், அவருக்கு முன்பாக சிம்ம முக பிராட்டியை மடியில் இருத்தியபடி அமர்ந்த நிலையில் ஒரு நரசிம்மரும் காட்சி அருள்கின்றனர். கருவறையில் மூன்று நரசிம்ம மூர்த்திகளை மனம் குளிர தரிசித்தபடி கருவறையிலிருந்து வெளியில் வந்தோம். மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு கருடாழ்வார் வழக்கமான திருவடிவத்துடன் காட்சி தருகிறார் கருவறையை வலம் வரும்போது , தனிச் சந்நிதியில் அலர்மேல் மங்கை தாயாரை தரிசிக்கலாம். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்காட்சி தருகின்றனர். அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம். அடுத்துள்ள சந்நிதியில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் சுதர்சன மூர்த்தி ஆகியோரின் உற்சவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். கருவறை வெளிச்சுற்றில் கருவறையை ஒட்டிய சிறிய பாதையில் சென்றால், வசிஷ்ட மகரிஷி பாறையில் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். அருகில் இயற்கையாக அமைந்திருந்த சிறிய குகையில் படுக்கை போன்ற அமைப்பு ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். கலி காலத்தில் தேவர்கள் அனைவரும் வெப்பாலை மரங்களாக உருமாறி இன்றும் இந்த மலையில் நின்று வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசமெங்கும் முக்தி வேண்டி சுற்றித் திரிந்த பிருகு முனிவர் இங்கு வந்து தவமிருந்து வேண்டினார். அப்போது நரசிம்ம மூர்த்தி அவருக்குக் காட்சியளித்து முக்தி அளிக்க விழைந்தார். முக்திக்கு முன்னர் திருமாலின் ஐந்து வடிவங் களைத் தரிசிக்க விரும்பிய பிருகு முனிவருக்கு அருள் செய்ய, மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மரா கவும், மலையின் மீது யோக நரசிம்மராகவும், நின்ற நெடிய ஸ்ரீநிவாஸ பெருமாளாகவும், சயனக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், அழகே வடிவான ஸ்ரீவரதராஜராகவும் காட்சியளித்தார் இறைவன். இதனால் இந்த ஆலயம் பஞ்சக்ஷேத்திர ஆலயமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் விமானம் - புண்ணியகோடி விமானம் தீர்த்தம் - ஆனந்த புஷ்கரணி. ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், சோளிங்கர் ஆகிய ஐந்து தலங்களையும் தரிசித்த புண்ணியம், இந்த ஆவணியாபுரம் தலத்துக்கு வந்து தரிசித்தால் கிடைக்கும். மலையின் மத்தியபாகத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்தான் பிருகு முனிவருக்கு அஹோபில திவ்ய தேச திருக்காட்சி அருளியவர், அவருக்கு முன்னால் உற்சவராக இரு நரசிம்மர்கள், பின்னர் தனிச் சந்நிதியில் ஐந்து நரசிம்மர்கள், மலையின் மீது யோக நரசிம்மர் என இங்கு ஒன்பது நரசிம்மர்களை சேவிக்கலாம் என்பதும் சிறப்பு என்று சிலிர்ப்புடன் கூறினார்.முப்பது படிகள் ஏறி ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்த மகிழ்ச்சியுடன் அடுத்துள்ள 60 படிகளைக் கடந்து உச்சியை அடைந்தோம். முதலில் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச் சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆகியோர் தனித் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். மேலும் அமிர்த வல்லித் தாயாரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்.இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள 27 கிராமங் களுக்கும் நரசிம்மரே காவல் தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். விளையாத வயலைக்கூட விளையவைக்கும் பெருமாள் என்பதால், இவரை வணங்கிய பிறகே, இங்குள்ள மக்கள் வேளாண் மையைத் தொடங்குகிறார்கள். அதன் பலனாக நல்ல விளைச்சல் ஏற்படுவதாக மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ற பலனும் கிடைக்கவே செய்கிறது. விளைந்து வந்த தானியத்தில் சிறு பகுதியை கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். இந்தக் கோயிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவி சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஸ்வாமியின் திருவருளால் பிள்ளை வரம் பெற்றவர்கள், தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்திருந்த தெய்வத் திருச்சந்நிதிகளை தரிசித்துவிட்டு, சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தோம். மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைத்திருந்ததை நம்மால் அனுபவபூர்வமாக உணர முடிந்தது. நீங்களும் ஒருமுறை, அழகும் புராதனப் புகழும் கொண்ட ஆவணியாபுரம் நவ நரசிம்மர் ஆலயத்துக்கு சென்று நம்பிக்கையுடன் தரிசித்து வாருங்கள் சகல தீமைகளும் விலகி மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கை நிச்சயம் அமையும்.பெருமாள் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தலம் ஆவணிநாராயணபுரம் தலச்சிறப்பு ஐந்து திவ்ய தேச தலங்களை தரிசித்த புண்ணியம், நவ நரசிம்மர்களின் தரிசனம். சிறப்பு வழிபாடுகள் சுவாதி நட்சத்திர தரிசனம், குழந்தைப் பேறு வேண்டி துலாபார வழிபாடு ஆகியன இங்கே விசேஷம். திருவிழாக்கள் திருப்பதியைப் போலவே சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களில் பிரம்மோற்சவம் வைகாசி மாதம் நரசிம்ம ஜயந்தி ஆடிப் பூரம் கிருஷ்ண ஜயந்தி திருக்கார்த்திகை வைகுண்ட ஏகாதசி மாசி மகம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன. எப்படிச் செல்வது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - ஆரணி சாலையில், வந்தவாசியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலுள்ளது ஆவணியாபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது நவ நரசிம்மர் ஆலயம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)215 km
From Chennai (MAA)96 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.