Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
இராமநாதபுரம் சமஸ்தானத்தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில் சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர். சேது வளநாட்டின்தலைநகரான ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 15 கி.மீ., தூரத்தில் திருஉத்தரகோசமங்கை தலம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகிஅம்பாளுடன் அருள் பாலிக்கும்மங்களநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானதாகவும், தொன்மை யானதாகவும்அமைந்துள்ளது. வேத ஆகமத்தைஉமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணியதலம் என்பதால் திருஎனும் தெய்வ அடைமொழியுடன்இத்தலம்திருஉத்தரகோசமங்கை என பெயர் பெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில்ஒன்றாகியவலைவீசிய லீலை நடந்த இடமானபரதவர்கள் நிறைந்த கடற்பகுதி( ஏர்வாடி )திருஉத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், அம்பிகையை பரதவர் (மீனவர்) மகளாகபிறக்கச் செய்து, பின் அவளுக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள் 60 ஆயிரம் பேருக்கும் ஞானோபதேசம் செய்து, அம்பிகையோடு மதுரை சேர்ந்ததாக புராணம் கூறுகிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம், அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புறபுகழப்பட்டுள்ளது. அவர் தன்...முற்பிறவில் இங்கு அவதரித்து , சிவபெருமான் கட்டளைப்படிவேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து , அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து, இங்கு வந்து மன்னும்உத்தரகோசமங்கைக்கரசே என திருவாசகத்தால்பாடியிருப்பது இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும். சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும் போதுபாடப்படும்திருப்பொன்னூஞ்சல் பாடல், மாணிக்கவாசகரால்இக்கோயிலில்பாடப்பட்டதாகும்.இதில் உள்ளஒன்பதுபாடல்களிலும் திருஉத்தரகோசமங்கைக்கு அரசே என்று தான் பாடப்பட்டுள்ளது. இதில்இருந்துஏதேனும் ஒருபாடலைதான் அனைத்து சிவாலயங்களிலும் பள்ளியறை பூஜையில்பாடப்படுகிறது.அருணகிரியாரும்இத்தலத்தை பற்றி பாடல்களை பாடியுள்ளார். பாண்டித்தலங்கள்பதினான்கும் தோன்றும் முன்பே, ஓர் இலந்தை மரத் தின் அடியில் சுயம்புவாய்தோன்றியவரே, மங்களநாதர் ஆவார். மண் முந்தியோ, மங்கை முந்தியோ என்று தொன்று தொட்டு வழக்கத்திலிருந்து, மண்ணிலும்முந்தியதுமங்கை என்னும் திருஉத்தரகோசமங்கை தலம் என்பதை அறியலாம். இத்தலத்திற்குதென் கைலாயம் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. தொன்மையான இக் கோயிலில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் (தல விருட்சம்) உள்ளது.தலமரம் இலந்தை. இலவந்திகை என்னும் சொல்லேமருவி இலந்தை எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால இலவந்திகைப்பள்ளி இக்காலஉத்தரகோசமங்கைஎனக் கருதுகின்றனர். இவ்வூர்சிவனுக்குவழிபாட்டுக்குஉரியதல்லாமல் போன தாழம்பூவும்சாத்தப்படுகிறது. மண்டோதரிஇவ்வூர்இறைவனை வழிபட்டு இராவணனைக்கணவனாகப்பெற்றதாக ஒரு கதை உண்டு.ஆலயத்தின்வடக்கில்ஐந்தரைஅடி உயர மரகதநடராஜருக்குதனிக்கோயில் ஒன்று உள்ளது. நடராஜப்பெருமாள்சிதம்பரத்தில்அம்பலத்தில்ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில்அறையில்ஆடியதாகவும் வரலாறு. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் இருக்கும் மரகதநடராஜரை, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் நடக்கும் அபிஷேகத்தின்போது, பச்சை வடிவாய் மரகதமேனியனாய்தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்குகாணக் கிடைக்காத காட்சியாகும். இந்த கோயிலின் உள்ள நடராஜர் சிலை, நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால்ஆனதால், இத்தலம்ரத்தினசபை என்றும், சிதம்பரத்தில் ஆடும் முன் இங்கு ஆடி காட்சி கொடுத்ததால்ஆதிசிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவலிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் உள்ள ஸ்படிக மற்றும் மரகதலிங்கத்திற்கு தினம் தினம் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்விருலிங்கங்களும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் உச்சிகாலபூஜையின்போது, இந்த லிங்கங்களைநடராஜர்சன்னதிமுன்மண்டபத்திலுள்ள ஒரு பீடத்தில் வைத்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் இந்த லிங்கங்களைநடராஜர்சன்னதி படியில் வைக்கின்றனர். நடராஜருக்கு தினசரி அபிஷேகம் இல்லாததால், அவரது பிரதிநிதியாக இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் மூலம் நடராஜருக்கே அபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். ஆருத்ராதரிசனத்தன்றுநடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒருநாள் மட்டும் அன்னாபிஷேகம் நடப்பதில்லை. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக்கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப்பந்தைநகர்த்த முடியும்.பழமையான வழிபாடான சூரியன் சந்திரன் வழிபாடுதான்இன்றளவும் இங்கு கடைபிடிக்கப்படுகிறது
தல வரலாறு
பாண்டிய நாட்டில் உள்ள தலம். மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் இலவந்திகைப் பள்ளி என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது. உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம்... உத்தரம் - உபதேசம் கோசம் - ரகசியம் மங்கை - பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான்...போற்றப்படுகிறார். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருவுத்தரகோசமங்கை ்ரீமங்களநாயகி சமேத ்ரீமங்களநாத சுவாமி (சைத் ரோத்ஸவ) திருக்கல்யாண வரலாறு இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு - ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம். இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : - ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும் என்று வானொலியாக அருள் செய்தார். மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌயே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி யார் பெற்றதோ இது என்று வினவினான். வண்டோதரி, யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள் என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் - இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் - குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார். மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள். இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார். மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார். இதனால் பெருமானுக்குக் காட்சி கொடுத்த நாயகன் என்ற பெயரும் வழங்கலாயிற்று. ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் - அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது. இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு. அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌயில் பிரம்ம தீர்த்தமும் சற்றுத் தள்ளி மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது. திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. கீர்த்தித் திருவகவலில் உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும் என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் - ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு காட்சி கொடுத்த நாயகன் என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, மகேந்திரம் என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி. தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார். சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது. நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார். இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌக் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.) நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் - உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Madurai (IXM)
💡 Madurai Airport is ideal for southern temples, offering excellent connectivity via Colombo or Chennai.
From Trichy (TRZ)161 km
From Chennai (MAA)438 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Madurai (IXM). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Madurai (IXM) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.