← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் - 612204

Arulmigu Venkatachalapathi Swamy Temple, Oppiliappan Koil, Thirunageswaram - 612204

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: கும்பகோணம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
நடை திறப்பு நேரம் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (மலர்கள்) : 05:40 AM to 06:00 AM IST
2. திருவனந்தல் பூஜை (மலர்கள்) : 07:00 AM to 07:30 AM IST
3. திருவாராதனம் பூஜை (மலர்) : 08:00 AM to 08:15 AM IST
4. உச்சிக்கால பூஜை (மலர்கள்) : 12:00 PM to 12:15 PM IST
5. சாயரட்சை பூஜை (மலர்கள்) : 07:30 PM to 08:00 PM IST
6. திருவாராதனம் (இரவு பூஜை) (மலர்கள்) : 08:00 PM to 08:15 PM IST
7. அர்த்தஜாம பூஜை (மலர்கள்) : 09:00 PM to 09:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு பூமிதேவி


ஸ்தல விருட்சம் (Sacred Tree): துளசி

ஆகமம் (Tradition): வைகாணசம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): கும்பகோணம்

தொலைபேசி (Phone): 0435-2463385

முகவரி (Address):

மெயின் ரோடு, ஒப்பிலியப்பன்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம், 612204

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம் வட்டம் - 612204 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kumbakonam (2 km), Mayiladuthurai (33 km), Mannargudi (34 km), Thanjavur (36 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : பொய்கையாழ்வார்
ஸ்தல விருட்சம் : துளசி
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர் துளசி வனத்தில் வசித்து வந்தார். அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும் நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துழாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள் லட்சுமியை நோக்கி தேவி நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு, தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன் என்றார். அதன்படி லட்சுமிதேவி சிறு குழந்தையாக பூமிதேவியாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். சில ஆண்டுகள் சென்றதும் பூமிதேவி பருவ மங்கையாகத் திகழ்ந்தாள். எல்லா வகையிலும் ஒத்த மணமகனை தேடி நின்றார். இந்நிலையில் திருமால் முதியவராக தோன்றி பூமிதேவியை திருமணம் செய்து தர மார்க்கண்டேயரை வேண்ட, என் மகள் சிறுமியாதலால் உணவிலும், காய்கறிகளிலும் உப்பு சேர்க்கக் கூட தெரியாது என்றும், முதியவரான உங்களை மணம் செய்ய மறுக்கிறாள் என்று மார்க்கண்டேயர் கூறி செய்வதறியாது தியானத்தில் எம்பெருமானை வேண்டினார். கண் விழித்ததும் அலங்கார திருமேனியுடன் எம்பெருமான் காட்சியளித்து உமக்கு வேண்டிய வரங்களை கேள் என்று கூற, மார்க்கண்டேயர் மூன்று வரங்களை கேட்டார். (1) என் புதல்வி பூமிதேவியை மணந்து இத்தலத்திலேயே உறைய வேண்டும். (2) எல்லா நன்மைகளையும் அளிக்க வல்ல இத்தலம் என் பெயரால் அழைக்க வேண்டும். (3) உப்பு இல்லாமல் இங்கு சமைக்கப்படும் உன் தளிகைகள் அடியார்க்கு சுவையுடையதாக இருக்க வேண்டும். திருமாலும் இவ்வரங்களை அளித்து அடியார்களுக்கும் அருள்பாலித்து வருகிறார். மேலும் மகாவிஷ்ணு விண்ணுலகில் இருந்து இத்தலத்தை விரும்பி இங்கு வந்து தோன்றியதால் இத்தலம் திருவிண்ணகரம் என்றும், பூமிதேவி துளசிவனத்தில் அவதரித்ததால் துளசிவனம் என்றும், மார்க்கண்டேயர் தவம் இருந்து ஸ்ரீபூமிதேவியை மகளாக பெற்று திருமாலுக்கு கன்னிகாதானம் செய்து வைத்ததால் மார்க்கண்டேயர் கோயில் எனவும் போற்றப்படுகிறது.
வரலாற்று சிறப்பு
ஒவ்வொரு மாதம் வருகின்ற சிரவணத் திருநாட்களில் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் வருகை தந்து பெருமாளின் அவதார நட்சத்திர நன்னாளில் பெருமாளைச் சேவித்து பகல் 11.00 மணியளவில் மூலவருக்கு சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இத்தீப சுடரில் பெருமாள் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். தீபம் ஏந்தியோர் அருள்வாக்கு சொல்லும் வழக்கமும் உண்டு. சிரவண விரதம்: இந்நாளில் நீராடி விரதம் இருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்த பின்னர் அதனை உண்டு விரதம் முடிப்பதே சிரவண விரதமாகும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் தங்கள் வீடுகளிலும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். திருக்கோயிலுக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

பகலிராப் பொய்கை : இத்திருக்கோயிலின் உட்புறத்தில் திருக்குளம் ஒன்று உள்ளது. அதற்கு பகலிராப் பொய்கை என்று பெயர். மற்ற தலத்து பொய்கைகளிற்போலன்றி இதில் காலவரையின்றி பகலும், இரவும் நீராடலாம் ஆதலின் இப்பெயர் பெற்றது. இந்த புஷ்கரிணி தற்போது திருக்கோயில் திறந்திருக்கும் போது மட்டும் நீராட அனுமதிக்கப்படுகின்றது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாத சிரவணத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

மணிகம் : துவாரபாலகர் மணிகம்
மஹாபலம் : துவாரபாலகர் மஹாபலம்

🛠️ வசதிகள் (Facilities)

தங்குமிட வசதி : ஒப்பிலியப்பன்கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் 25 நபர்கள் தங்கும் வகையில் மூன்று அறைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு நபர் 1க்கு ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முடி காணிக்கை வசதி : இத்திருக்கோயிலில் முடி காணிக்கை செலுத்துமிடம் திருக்கோயிலின் மதிற்சுவரினை ஒட்டி தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பின்படி முடி காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் சுடுநீர் வசதியுடன் கூடிய குளியலறையும் உள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயிலில் இலவச மிதியடி பாதுகாப்பகம் ஒன்று திருக்கோயிலுக்கு வெளியில் ராஜகோபுரத்தின் வலதுபுறம் உள்ளது.
கழிவறை வசதி : இத்திருக்கோயிலில் திருக்குளத்தின் வடக்கு பகுதியில் ஆண்களுக்கு மூன்று கழிவறைகள், பெண்களுக்கு மூன்று கழிவறைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயில் உட்புறத்தில் நுழைவு வாயிலில் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக 4 சக்கர நாற்காலிகள் உள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலக தொலைபேசி எண் 04352463385 திருக்கேோயில் பணியாளர்கள் ஆர். ராஜாராமன் 9244809974 எம். ரவிச்சந்திரன் 9655859899
துலாபாரம் வசதி : குருவாயூரைப் போன்று ஒரு துலாபாரம் இத்திருக்கோயிலில் திருக்கோயில் உட்புறம் வாகன மண்டபத்தின் அருகில் உள்ளது. தமிழக வைணவ தலங்களுள் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும். உப்பு தவிர அனைத்து பொருட்களும் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன. திருக்கோயிலில் உரிய பொருட்களை பெற்று கொள்ளலாம்.
தங்குமிட வசதி : பக்தர்கள் தங்கும் விடுதி ஒன்று சன்னதி தெருவில் உள்ளது. இந்த தங்கும் விடுதியில் 4 சாதா அறைகள் 4 குளிர்சாதன அறைகள் மற்றும் 4 பொது அறைகள் அனைத்து வசதிகளுடன் உள்ளது. சாதா அறைகள் 1க்கு நாள் 1க்கு - ரூ.500/- (இரண்டு நபர்களுக்கு) குளிர்சாதன வசதி அறைகள் 1க்கு நாள் 1க்கு - ரூ.1,000/- (இரண்டு நபர்களுக்கு) பொது அறை நபர் 1க்கு ரூ.50/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய விரும்புவோர் 15 நாட்களுக்கு முன்னதாகத் தேதியை உறுதி செய்து கொண்டு பின் உரிய பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் மையம் : இத்திருக்கோயிலில் ஆன்மீக புத்தக நிலையம் திருக்கோயில் நுழைவு வாயிலில் இடதுபுறம் உள்ளது. மேற்படி புத்தக நிலையத்தில் சுவாமி படங்கள், தலவரலாறு, வெள்ளி டாலர், அன்பு அறம் அறிவுடைமை புத்தகம் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அர்ச்சனை சீட்டுகள், இலவச முடி சீட்டுகள், கோடிதீபம் சீட்டுகள், பிரசாதம் விற்பனை சீட்டுகள் மற்றும் இதர சீட்டுகள் திருக்கோயில் உட்புறம் வாகன மண்டபம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையத்தில் வழங்கப்படுகிறது.
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் தங்கரதம் ஒன்று திருகுளத்தின் மேற்கு பகுதியில் ஆர்.சி.சி. மண்டபத்தில் பாதுகாப்பாக உள்ளது. சேவார்த்திகள் ரூ.2000/- கட்டணம் செலுத்தி தங்கரத உலாவினை நடத்தி தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி செல்கின்றனர்.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் திருக்கோயில் உட்புறத்தில் இரண்டு இடங்களில் அதிநவீன சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : அன்னதானம் திங்கள் முதல் வியாழன் வரை 100 நபர்களுக்கும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வடை பாயசத்துடன் 150 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒருநாள் நன்கொடையாக ரூ.3500/- திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாகவோ இணையதளம் மூலமாகவோ செலுத்தி தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு.