⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 11:59 AM
04:00 PM to 08:00 PM
தாழக்கோயில் தரிசனம் நேரம்
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை
திருமைலை தரிசனம் நேரம்
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை
திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் தரிசனம் நேரம் மறுபடும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 10:30 AM to 11:00 AM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:30 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): செங்கல்பட்டு
தாலுகா (Taluk): திருக்கழுக்குன்றம்
தொலைபேசி (Phone): 044 27447139
முகவரி (Address):
சட்ராஸ் சாலை, திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், 603109
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம் - 603109 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Chingleput (11 km), Mahabalipuram (19 km), Kanchipuram (41 km), Madras (Chennai) (56 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நால்வர்
புலவ அருளாளர் : மாணிக்கவாசகர்
விமானம் வகை : ஏக தள விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
தல வரலாறு - இத்தலம் சிவ நெறியாளர்களுக்கு முதன்மையான புகழ்மிக்க பெரிய தலமாகும். சைவ சமய குரவர்கள் நால்வராலும் மற்றும் பட்டிணத்தார், அருணகிரிநாதர், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் அந்தகக் கவி வீரராகவ முதலியார், இராலிங்க அடிகளார் மற்றும் பல அருளாளர்களால் பாடல்பெற்ற தொண்டை நாட்டில் தேவாரம் பெற்ற முப்பத்திரண்டு சிவ தலங்களுள் முதன்மையான திருத்தலமாகும். நான்கு வேதங்கள் மலையுருவமாக இருந்தமையால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. இத்திக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் அதாவது கி.பி.610-640-ல் பல்லவ மன்னர்களில் புகழ்பெற்ற மகேந்திரவர்மப் பல்லவனால் கட்டப்பெற்றதாகும்.
கழுகு முனிவர்கள் வரலாறு - நான்காவது கலியுக கால துவக்கத்தில் பூடா, விதாதா எனும் இரு முனிவர்கள் இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தினை மெசிய இறைவன் அவர்கள் முன் தோனிற சாரூப பந்தத்தை அவர்களுக்குத் தந்து அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு சாயுச்சியத்தைத் தரும்படி வாதாடினார். இறைவன் வழங்கிய அருளை ஏற்க மறுத்த முனிவர்கள் மீது கோபம் கொண்டு அவர்களை கழுகு வடிவமாக மாற சபித்தார். முனிவர்கள் இருவரும் தமது தவற்றை உணர்ந்து தங்களை மன்னித்தருள இறைவனிடம் வேண்டினர். இணைவன் நீங்கள் காசிப முனிவரிடத்தில் இரு கழுகுகளாக பிறந்து திருக்கழுக்குன்றம் மலைமீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரரை தினமும் வழிபடுங்கள் கலியுக முடிவில் சுய உருவம் பெற்று முக்தி அடைவீர்கள் என சாப விமோசனத்திற்கு வழியும் கூறி அருளினார்.
திருமலை வலம் வரும் பெருமை - கொடிய நோய் உள்ளவர்களும், மருத்துவர்களால் கைவிடப்ட்டடவர்களும், திருமலையைச் சுற்றி ஒரு மண்டலத்திற்கு வலம் வந்தால், நோய்கள் தீர்ந்து விடுவது இன்றளவும் நடந்து வருகின்றது. அதே போன்று மகப்பேறு இல்லாதவர்களும் ஒரு மண்டலம் திருமலையை சுற்றி வலம் வந்தால், மகப்பேறு உண்டாகும் அவ்வாறு பிறந்தவர்தான் சுவாமியின் பெயரான வேதாசம் என பெயர் வைத்து பின் மறைமலையடிகளார் என மாற்றிக்கொண்ட அடிகளார் ஆகும், தற்போது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
அருள்மிகு திரிபுரசுந்தரி - திருமலையின் அடிவாரத்தில் தாழக்கோயில் என வழங்கப்பெறும் தலத்தில் எந்தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி தன்னை நாடி வேண்டுபவருக்கு வேண்டிய வரங்கள் வழங்கி அருள்பாலித்து வருகின்றார். அம்மன் அஷ்ட கந்த திருமேனியை கொண்டதால், ஆண்டில் மூன்று முறை மட்டுமே முழு அபிஷேகம் செய்யப்படுகிறது, மற்றைய தினங்களில் திருபாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
தீர்த்தம் - இத்தலத்தில் உள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மார்கண்டய என்கிற மகரிஷி எல்லா சிவ தலங்களை வழிபட்டு, திருக்கழுக்குன்றத்திலுள்ள சிவனை பூஜிக்க பாத்திரம் இல்லாததால், இறைவனை நோக்கி தவம் செய்ய புனித குளத்தில் புனித சங்கு ஒன்று தோன்றுகிறது. அதுமுதல் இத்தீர்த்தம் சங்கு தீர்த்தம் என்ற திருநாமத்தினால் அழைக்கப்படுகிறது. மேலும் இப்புனித குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கன்னி இராசியில் பிரவேசிக்கும் தினத்தன்று சங்கு தீர்த்த புஷ்கர மேளா - இலட்சதீபப்பெருவிழா நடைபெறும், இத்தலம் கன்னி இராசி பரிகார தலமாகும்.
திருக்கோயில் அமைவிடம் - திருக்கழுக்குன்றம் எனும் புனிதத்தலம் தமிழ்நாட்டில், செங்கல்பட்டிற்கு தென்கிழக்கே செங்கல்பட்டு- கல்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு- மாமல்லபுரம் நெடுங்சாலையில் 14-வது கி.மீ தொலைவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
பிரம்ம தீர்த்தம் (தேரடி குளம்) : திருக்கோயிலுக்குச் சொந்தமான குளமாகும்.
ரிஷப தீர்த்தம் : இத்திருக்குளத்தின் பெயர் ரிஷப (நந்தி) தீர்த்தமாகும். ஏனென்றால் குளத்தின் கரையில் ரிஷபம் வீற்றிருப்பதால், ரிஷப தீர்த்தம் என பெயர் பெற்றது. பிரம்மோற்சவத்தில் 10 நடராஜர் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.
சங்கு தீர்த்தம் : இத்தீர்த்த குளத்தின் பெயர் சங்கு தீர்த்தமாகும். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தீர்த்த குளத்தில் புனித சங்கு (தோன்றும்) பிறக்கும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
மனுநீதி சோழன் சிற்பம் : மனு நீதி சோழனின் நீதி செயலில் சிற்பம்
கழுகு சிவ லிங்கத்தை வணங்கும் சிற்பம் : கழுகு சிவ லிங்கத்தை வணங்கும் சிற்பம்
100 கால் மண்டபம் : கலைநயமிக்க சிற்ப தூண்களுடன் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள 100 கால் மண்டபம்
ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் : ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன்
சரபேஸ்வரர் சிற்பம் : மிகவும் அரிதாக உள்ள சரபேஸ்வரர் சிற்பம் (16 கால் மண்டபத்தில் உள்ளது)
முனிவர்கள் கழுகாக வணங்குதல் : சாபம் பெற்ற முனிவர்கள் கழுகாக வணங்குதல்
16 தூண் மண்டபம் : கலைநயமிக்க சிற்பங்களுடன் மேல் பகுதியில் மூலிகை ஓவியம் வரையப்பட்ட 16 கால் மண்டபம்
100 கால் மண்டபம் மேற்கூரை கூடும் காட்சி சிற்பம் : 100 கால் மண்டபம் மேற்கூரை கூடும் காட்சி சிற்பம்
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : -
கழிவறை வசதி : திருக்கோயில் வரும் பக்தர்களின் வசதியாக மூன்று கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது
சக்கர நாற்காலி : -
துலாபாரம் வசதி : துலாபாரம் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க அன்னதானம் நன்கொடை ரூ.2000/- ஆகும். கட்டளை அன்னதானம் நன்கொடை முதலீடு ரூ.50000/- மற்றும் அன்னதான நன்கொடைக்கு 80 ஜி - கீழ் வருமான வரிவிலக்கு உள்ளது.
நன்கொடை : இந்த நன்கொடையானது கோயிலுக்கு வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், கோயிலின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.



