Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், சென்னிமலை

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், சென்னிமலை - 638051 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
12:00 PM to 08:30 PM
தினசரி காலை 5.45 மணிக்கு கோபூஜை நடைபெற்ற பின்னர் காலை 6.00 மணிக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு பகல்வேளையில் நடை சாத்தப்படாமல் தங்குதடையின்றி இரவு 8,00 மணி வரை திறந்து வைக்கப்பட்டு 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வாரம் செவ்வாய்கிழமை நாட்களிலும், திருமணம் நடைபெறும் நாட்களிலும் அதிகாலை 4.45 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டு சன்னதி நடை காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விளா பூஜை : 06:40 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 07:40 AM to 08:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:40 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 04:40 PM to 05:00 PM IST
5. இராக்கால பூஜை : 06:40 PM to 07:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 07:40 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சுப்பிரமணியசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): திந்துருணி (எ) புளியமரம்

ஆகமம் (Tradition): காரண காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): பெருந்துறை

தொலைபேசி (Phone): 04294-250223

முகவரி (Address):

-, மலைக்கோயில், சென்னிமலை, 638051

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sri Kandha Bhavan

Sri Kandha Bhavan

⭐ 4.1 (9 reviews)

📍 Malai Adivaram Road, Chennimalai

🚀 0.2 km away
View
Cheran Hotel

Cheran Hotel

⭐ 3.6 (339 reviews)

📍 Kangeyam Road, Chennimalai

🚀 0.4 km away
View
Sri Sangeetha Restaurant

Sri Sangeetha Restaurant

⭐ 3.3 (383 reviews)

📍 NH 47, Toll Gate, Vijayamangalam

🚀 13.0 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், சென்னிமலை - 638051 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 10th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Erode (26 km), Tiruppur (31 km), Dharapuram (46 km), Karur (60 km)

🚌 பேருந்து வசதிகள் (பெருந்துறை Bus Timings)

தடம் (Route) நேரம்
CHENNIMALAI ➔ PERUNDURAI
Moffsuil Bus (TNSTC)
00:10
TIRUPPUR OLD BS ➔ PERUNDURAI
Moffusil Bus (TNSTC)
00:15
TIRUPPUR OLD BS ➔ PERUNDURAI
Moffusil Bus (TNSTC)
00:20
TIRUPPUR NEW BS ➔ PERUNDURAI
Moffusil Bus (TNSTC)
00:30
NAMAKKAL ➔ PERUNDURAI
Moffusil Bus (CBE)
00:40

* பெருந்துறை வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : தமிழ்
ஆகமம் : காரண காமிக ஆகமம்
பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
புலவ அருளாளர் : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : திந்துருணி (எ) புளியமரம்
விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 10th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : தமிழ்

தல சிறப்பு (Thiruthala Special):

சுற்றுலா
இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி பல இடங்களுக்கு சென்று வந்த சமயம் இம்மலையினை கண்டு தனது பரிவாரங்களுடன் மலைக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்தார். ஸ்ரீ அருணகிரிநாதரால் திருப்புகழில் சென்னிமலை முருகனை புகழ்ந்து 5 பாடல்கள் பாடி முருகப் பெருமானால் படிக்காசு பெற்றுள்ளார். காங்கேயம் மடவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலன்தேவ ராயன் சுவாமிகளால் ஸ்ரீ கந்தர் சஷ்டி கவத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என அழைத்து அவரது ஆணைப்படி இத்திருக்கோயிலில் ஐப்பசி மாதம் வளர்பிறை கந்தர் சஷ்டி அன்று அரங்கேற்றம் செய்துள்ளார். மூலவர் கருவறையினை சுற்றி நவக்கிரஹங்களில் 8 கிரகங்கள் அமைத்தும், மூலவர் முருகனை செவ்வாயாக பாவித்தும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும், குழந்தைபேறு வேண்டுவோர் வளர்பிறை சஷ்டி நாளில் விரதமிருந்து குழந்தைபேறு அடைவது கண்கூடு. இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இருவரும் தவக்கோலத்தில் வீற்றியுள்ளனர். முன்னொரு காலத்தில் தேவியர் இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என சகோதரிகளாக முருகனை மணம் புரிய வேண்டி தவமிருந்த சமயம் முருகப் பெருமான், தற்போது தாம் பாலகனாக உள்ளதால், பின்னொரு காலத்தில் வள்ளி, தெய்வானையாக அவதரித்து தம்மை மணமுடிப்பீர்கள் என அருளியதின்பேரில் இருவரும் தவக்கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருக்கின்றனர். தேவியர் இருவரின் சன்னதிக்கு பின்புறம் 18 சித்தர்களில் ஒருவரான பின்நாக்கு சித்தர் வாழ்ந்து முக்கியடைந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. இவர் நாக்கு பிளவுபட்டிருந்த காரணத்தால் பிண்ணாக்குச் சித்தர் என்றும், அடிக்கடி பொய் சொல்லும் நாக்கு புண் நாக்கு என்று கூறிக் கொண்டிருந்தமையால் புண்ணாக்குச் சித்தர் என்றும் பெயருக்குக் காரணம் கூறுவர். இவர் கன்னியின் வயிற்றில் அவதரித்தார் என்றும் கூறுவர். இவர் தவமிருந்த குகை ஒன்றும் உள்ளது. இக்குகை சென்னிமலையிலிருந்து பழனி வரை செல்வதாக ஐதீகம்.
புராதனம்
இத்திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் திந்துருணி (புளியமரம்) ஆகும். திருமணம் நடைபெற்ற புதுமணத் தம்பதியர்கள் புளிய மரத்தின் அடியில் பச்சரிசி மாவிடித்து வள்ளி, தெய்வானை அம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்மரத்தில் சந்தான கரணி என்னும் மூலிகை உள்ளதாக நம்பப்படுகிறது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

: ஒரு தலையுடன் நான்கு உடல்கள் கூடிய புள்ளி மான் சிற்பம் மகா மண்டபம் கல் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.
: இத்திருக்கோயில் சோபன மண்டப கல் தூணில் செங்கத்துறை பூசாரி சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது, இதனை கண்ட செங்கத்துறை பூசாரி கற்பூசாரி வந்து விட்டான் இனி இந்த உடற்பூசாரிக்கு வேலையில்லை என மலை அடிவாரத்தில் ஜீவ சமாதி அடைந்துவிட்டார்
: ஐந்து நிலை இராஜகோபுரத்தின் நுழைவு வாயில் மேற்பகுதியில் ஒரே கல்லினால் ஆன கல் சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்
: ஐந்து நிலை இராஜகோபுரத்தின் நுழைவு வாயில் விதானங்களில் நான்கு பெண் கற்சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்

🛠️ வசதிகள் (Facilities)

மரத் தேர் : ஸ்ரீ முருகப் பெருமான் வேங்கை மரமாக வந்து வள்ளியை மணம்புரிந்த சிறப்பும், மூலிகை குணம் மிக்க சிறப்பும், திருக்கோயில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் சிறப்பும் கொண்ட வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் உலா பக்தர்களால் ரூ.1000/- கட்டணம் செலுத்தி தினசரி உலா நடத்தி நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் நினைத்த காரியம் கைகூடும்.
நூலக வசதி : இத்திருக்கோயில் இராஜகோபுரத்தின் அருகில் உள்ள இளைப்பாறும் மண்டபத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேற்படி நுலகத்தில் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள் பக்தர்கள் வாசிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 2 சக்கர நாற்காலிகள் உள்ளன. இவர்கள் நுழைவு வாயிலிருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் பேருந்து வசதி : இத்திருக்கோயில் மலைக்கோயிலாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மலைக்கோயிலுக்கு எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்ய 40 இருக்கைகள் கொண்ட 2 பேருந்துகள் கடந்த 15.01.1985 முதல் பக்தர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்குச் சுத்தமான குடிநீர் (ஆர்.ஓ வாட்டர்) வழங்க திருக்கோயில் வளாகத்தில் மேற்குப்புற நுழைவாயில் அருகே 600 லிட்டர் உள்ள மின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலில் அதன் மூலம் திருக்கோயில் முன்பகுதி சுற்றுச் சுவரில் நுழைவுவாயில்களுக்கு அருகே 2 முனைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது.
கழிவறை வசதி : இத்திருக்கோயிலுக்குக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இடத்தில் ஆண்களுக்கு 7 கழிவறைகள், பெண்களுக்கு 7 கழிவறைகள் என கழிவறைகள் உள்ளன.
கோயில் பேருந்து வசதி : இத்திருக்கோயிலானது மலைக்கோயிலாகும். பக்தர்கள் எளிதில் செல்ல ஏதுவாக 1320திருப்படிகள் கொண்ட படிவழிபாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை வசதியும் உள்ளது. பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல திருக்கோயில் மூலம் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நபர் ஒன்றுக்கு கீழிருந்து மேலே செல்ல ரூ.10/-ம், மேலிருந்து கீழே செல்ல ரூ.10/-ம் பேருந்து கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
மரத் தேர் : மலைக்கோயிலில் சுமார் 11 அடி உயரத்தில் வேங்கை மரத்தேர் ஒன்று உள்ளது. தினசரி இரவு 7.00 மணிக்கும் செவ்வாய்கிழமை நாட்களில் இரவு 7.30 மணிக்கும் உட்பிரகாரத்தில் ஒருமுறை உலா நடத்தப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.1000/- வசூல் செய்யப்பட்டு வருகிறது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்கள் பயனடையும் வகையில் அன்னதானம் 15.08.2002 முதல் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தினசரி மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை முடிவுற்ற பின்னர் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு உணவருந்து டேபிள்,சேர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. சமையல் செய்வதற்கு எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நன்கொடை : திருக்கோயில் முன்பதிவு இ - சேவைகள் பொது நன்கொடை கட்டண சேவைகள் வேங்கைமரத் தேர் உலா கட்டணம்
Temple Services : அஷ்டோத்திர அர்ச்சனை -ரூ. 5.00 திரிசதை அர்ச்சனை -ரூ.50.00 நிவேத்ய தேங்காய்- ரூ.1.00 சிறப்பு அனுமதி (விசேட நாட்களில்) - ரூ.25.00 சிறப்பு அனுமதி -ரூ.50.00 சிறப்பு அனுமதி -ரூ.10.00 சிறப்பு அபிஷேகம் -ரூ. 50.00 சிரசுப்பூ-ரூ.25.00 வாகன பூஜை (இரு சக்கரம்) - ரூ.20.00 வாகன பூஜை (நான்கு சக்கரம்) -ரூ. 50.00 சகஸ்ரநாம அர்ச்சனை - ரூ. 25.00 பால் / தயிர் அபிஷேகம் (தனித்தனி) - ரூ. 25.00 விபூதி அலங்காரம்- ரூ. 25.00 திருமணம் - ரூ. 1000.00 வேங்கை மர ரதம் உலா - ரூ. 1000.00 காதுகுத்துதல் - ரூ. 50.00 திருமண புகைப்படம் எடுத்தல்- ரூ. 200.00 திருமண வீடியோ எடுத்தல்- ரூ. 500.00 ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை- ரூ. 300.00 திருமாங்கல்யம் மாற்றுத்தாலி மாற்றம்- ரூ. 300.00 ஸ்தல வரலாறு - ரூ. 20.00 திருமண விண்ணப்ப படிவம்- ரூ. 50.00 பேருந்து காணிக்கை- ரூ. 10.00 மோட்டார் சைக்கிள் - ரூ. 10.00 கார் நடை சீட்டு- ரூ. 20.00