← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நகர் - 627006

Arulmigu Nellaiyappar Arultharum Kanthimathiamman Temple, Tirunelveli - 627006

மாவட்டம்: திருநெல்வேலி • தாலுகா: திருநெல்வேலி

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:30 AM to 12:30 PM
04:00 PM to 09:05 PM
காலை நடை திறத்திருக்கும் நேரம் ஐந்து முப்பது மணி முதல் பன்னிரெண்டு முப்பது மணி வரை மாலை நடை திறத்திருக்கும் நேரம் நான்கு மணி முதல் இரவு ஒன்பது ஐந்து மணி வரை.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. திருவனந்தல் பூஜை : 05:30 AM to 06:00 AM IST
2. விளா பூஜை : 07:00 AM to 07:30 AM IST
3. சிறுகால சந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
4. காலசந்தி பூஜை (சிறப்பு அலங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST
5. உச்சிக்கால பூஜை (சாதாரண அலங்காரம்) : 12:00 PM to 12:30 PM IST
6. சாயரட்சை பூஜை (சிறப்பு அலங்காரம்) : 05:30 PM to 06:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை (சாதாரண அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST
8. பள்ளியறை பூஜை (சிறப்பு அலங்காரம்) : 09:00 PM to 09:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): நெல்லையப்பர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): காந்திமதி

ஸ்தல விருட்சம் (Sacred Tree): மூங்கில்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருநெல்வேலி

தாலுகா (Taluk): திருநெல்வேலி

தொலைபேசி (Phone): 0462-2339910

முகவரி (Address):

கீழ ரத வீதி, திருநெல்வேலி நகர், 627006

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி நகர் - 627006 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு நெல்லையப்பர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tirunelveli (5 km), Ambasamudram (23 km), Nanguneri (28 km), Tenkasi (45 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 1 என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச் சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 2 பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும் நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக் கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ் செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3 காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும் பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந் தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 4 ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங் கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள் தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 5 வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர் பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர் வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 6 அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 7 முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார் கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 8 பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார் சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத் திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 9 துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும் அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங் கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத் திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 10 பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித் திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப் பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே. 11
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : மூங்கில்
விமானம் வகை : திராவிடன்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : மருந்தவை மந்திரம் மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 1 என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச் சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து தென்றல்வந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 2 பொறிகிளர் அரவமும் போழிள மதியமுங் கங்கையென்னும் நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக் கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ் செறிபொழில் தழுவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 3 காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும் பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியந் தீண்டிவந் துலவிய திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 4 ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங் கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனின்நல் லைந்துகந் தாடுவர் பாடுவர் அருமறைகள் தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 5 வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர் பொடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்கரவர் வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 6 அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 7 முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகள்தோள் நெரிதரவே உந்திமா மலரடி யொருவிரல் உகிர்நுதி யாலடர்த்தார் கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 8 பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார் சங்கநான் மறையவர் நிறைதர அரிவையர் ஆடல்பேணத் திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 9 துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும் அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் அண்ணலார்தாங் கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத் திவருறு மதிதவழ் திருநெல்வே லியுறை செல்வர்தாமே. 10 பெருந்தண்மா மலர்மிசை அயனவன் அனையவர் பேணுகல்வித் திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர்தம்மைப் பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவினையே. 11

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் `திருநெல்வேலிப் பதிகம்` பாடியிருப்பதால் அதற்கு முன்பே `திருநெல்வேலி` என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாக உள்ளது
வரலாற்று சிறப்பு
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது., சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.
வரலாற்று சிறப்பு
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபத்திலும், அம்பாள் சந்நிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. சிறிய தூண்களைத் தட்டி வெவ்வேறு இசைச் சுரங்களை எழுப்ப முடியும்.
தல விருட்சம்
இத்திருக்கோவிலில் மூங்கில் மரம் ஸ்தல விருட்சமாக உள்ளது
கட்டட சிறப்பு
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள் இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில்தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன. தாமிர அம்பலம் மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

கருஉருமாறி தெப்பம் : சட்டமன்ற அறிவிப்பு எண்.90, அம்மன்சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் உள்ள கருஉருமாறி தீர்த்தக்குளம் திரும்ப கட்டும் பணிக்கு மதிப்பீடு தொகை ரூ.151.5 இலட்சம் உபயதாரர் நிதி மூலம் செய்வதற்கு அரசாணை நிலை எண்.229 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (அநி5-1) துறை படி நிர்வாக அனுமதி நாள்.16.09.2022 மற்றும் தொழில் நுட்ப அங்கீகாரம் வரப்பெற்றுள்ளது. மேற்படி உபயதாரரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணி துவங்கப்படவுள்ளது.
சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிற வெளி தெப்பக்குளம் : சந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிற வெளி தெப்பக்குளம்
பொற்றாமரை குளம் உள தெப்பம் : பொற்றாமரை குளம் உளதெப்பம் (சந்திரபுஷ்கரணி)

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

அல்லி அர்ஜுனன் : இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் வெளிப்பிரகாரத்தில் அமையப்பெற்றுள்ளது.
பகடை ராஜா : இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.
மன்மதன் : இச்சிற்பமானது ஸ்ரீ ஆறுமுக நயினார் சந்நதியின் உள்பிரகாரத்தில் முகப்பில் அமையப் பெற்றுள்ளது.
சுவாமி சன்னதி நுழைவாயில் சிற்பங்கள் : இச்சிற்பமானது சுவாமி சந்நதி நுழைவு வாயில் மேற்புறத்தில் அமையப்பெற்றுள்ளது
கர்ணன் : இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.
வீரபத்திரர் : இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.
மர சிற்பங்கள் : இச்சிற்பமானது அம்பாள் சந்நதி நுழைவு வாயில் மேற்புறத்தில் அமையப்பெற்றுள்ளது.
பவளக்கொடி : இச்சிற்பமானது சோமவார மண்டபம் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.
அர்ஜுனன் : இச்சிற்பமானது சுவாமி சந்நதியின் முகப்பில் அமையப்பெற்றுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுவாமி சன்னதியின் வெளிப்பிரகாரமான மூன்றாம் பிரகாரத்ததில் 1000 லிட்டர் சுத்திகரிப்பு தண்ணீர் அமைந்துள்ளது, அம்பாள் சன்னதியில் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் அம்பாள் சன்னதியில் 1000 லிட்டர் சுத்திகரிப்பு தண்ணீர் அமைந்துள்ளது மற்றும் அன்னதான உணவு அருந்தும் இடத்தில் வெளிப்புறம் அமைந்துள்ளது
சக்கர நாற்காலி : அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் கோவில் அலுவலகத்தின் முன்பு
கருணை இல்லம் : சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத்தில் 19 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் குழந்தைகள் படிப்பதற்கான வசதியறை சமையலறை கவுன்சிலிங் அறை நூலகம் பார்வையாளர் அறை உணவு அறை கழிவறை குளியலறை போன்ற வசதிகள் உள்ளன
நூலக வசதி : நூலகம்
திருமணம் நடத்துதல் : ஆறுமுக நயினார் சன்னதியில் வைத்து திருமணம் நடத்தப்படுகிறது
மரத் தேர் : 5 தேர்கள் உள்ளன . 1.விநாயகர் தேர் . 2.சுப்பிரமணியர் தேர் 3.சுவாமி தேர் . 4. அம்பாள் தேர் 5.சண்டிகேஸ்வரர் தேர்

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் தமிழக முதல்வர் அவர்கள் அன்னதான திட்டம் 23.03.2002-இல் தொடங்கி தினமும் 100 நபர்களுக்கு கூட்டு அல்லது பொறியல், சாம்பார், ரசம், மோர், ஊறுகாயுடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சட்டமன்ற அறிவிப்பு எண்.2-இன்படி, ஆண்டுக்கு 21 நாட்கள் முக்கிய திருவிழாக்காலங்களில் 500 நபர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வ.எண்திருவிழா நாட்கள் 1.ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் 2.ஆனிப்பெருந்திருவிழா 4 ஆம் நாள் 3.ஆனிப்பெருந்திருவிழா 8 ஆம் நாள் 4.ஆனித்தேர் திருவிழா 5.ஆடிப்பூரம் 4 ஆம் திருநாள் 6.புரட்டாசி முதல் சனிக்கிழமை 7.புரட்டாசி கடைசி சனிக்கிழமை 8.ஐப்பசி திருவிழா தபசு காட்சி 9.ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா 10.திருக்கார்த்திகை 11.ஆங்கிலப்புத்தாண்டு 12.தைப்பூசம் 4 ஆம் நாள் (நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா) 13.தைப்பூசம் 11 ஆம் நாள் (வெளித்தெப்பத் திருவிழா) 14.தைப் பொங்கல்) 15.தை அமாவாசை 16.மாசி அப்பர் தெப்பம் 17.மாசி சிவராத்திரி 18.பங்குனி 4 ஆம் நாள் (வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல்) 19.பங்குனி உத்திரம் 20.தமிழ் வருடப்பிறப்பு 21.வருஷாபிஷேகம் இதர நாட்களில் வழக்கம் போல் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது
தேர் முன்பதிவு : இத்திருக்கோவிலில் தங்கரதம் , தங்கபாவடை சேவைகள் செயல்பட்டு வருகிறது