⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:30 AM to 12:00 PM
04:00 AM to 09:00 PM
காலை 5 . 30 முதல் 12 .௦௦ மணிவரை
மாலை 4 .௦௦ முதல் 9 .௦௦ மணிவரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (நித்யபடி அலங்காரம்) : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (நித்யபடி அலங்காரம்) : 08:00 AM to 08:30 AM IST
3. இடைக்கால பூஜை (நித்யபடி அலங்காரம்) : 10:00 AM to 10:30 AM IST
4. திருக்காப்பு (நிறைவு) (நித்யபடி அலங்காரம்) : 10:00 AM to 10:30 AM IST
5. உச்சிக்கால பூஜை (நித்யபடி அலங்காரம்) : 12:00 PM IST
6. சாயரட்சை பூஜை (நித்யபடி அலங்காரம்) : 05:00 PM to 05:30 PM IST
7. திருக்காப்பு (திறப்பு) (நித்யபடி அலங்காரம்) : 07:00 PM to 07:30 PM IST
8. இராக்கால பூஜை (நித்யபடி அலங்காரம்) : 07:00 PM to 07:30 PM IST
9. அர்த்தஜாம பூஜை (நித்யபடி அலங்காரம்) : 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): கூடல் அழகர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மதுரவல்லி தாயார்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): கதலி (வாழை மரம்)
ஆகமம் (Tradition): வைகாணசம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): மதுரை
தாலுகா (Taluk): மதுரை தெற்கு
தொலைபேசி (Phone): 0452-2338542
முகவரி (Address):
கூடலழகர் பெருமாள் கோயில் தெரு, பெரியார் பேருந்து நிலையம் அருகில், மதுரை, 625001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கூடல் அழகர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madurai (7 km), Virudhunagar (41 km), Aruppukkotai (45 km), Dindigul (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : பேயாழ்வார்
ஸ்தல விருட்சம் : கதலி (வாழை மரம்)
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அவதார ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
இத்திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 47வதாக மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமாகும், இத்திருக்கோயில் மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளது, பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது, வைணவத்திற்கு இன்றியமையாதது நாலாயிர திவ்ய பிரபந்தம். பிரபந்தத்தின் மிக முக்கியமானது திருப்பல்லாண்டு, அப்பல்லாண்டு தொடங்கிய திருத்தலம் இக்கூடலழகர் திருக்கோயிலாகும், நவக்கிரக சன்னதி அமையப்பெற்ற வைணவ திருக்கோயிலாகும், மூன்று நிலைகளை (அமர்ந்த, நின்ற, கிடந்த) கொண்ட அஷ்டாங்க விமானம் அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
ஹேமபுஷ்கரணி : ஹேமபுஷ்கரணி தெப்பக்குளம் திருக்கோயிலுக்குள் கொடிமர மண்டபத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வருடந்தோரும் வைகாசி ப்ரம்மோற்சவம் மற்றும் மாசித் தெப்பத்திருவிழா காலங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது.
பெருமாள் தெப்பக்குளம் : திருகோயிலுக்கு சொந்தமான பெருமாள் தெப்பக்குளம் மதுரை டவுண்ஹால் ரோட்டில் இத்திருக்கோயிலிலிருந்து 0.5 கிலோமீட்டர் தொலைவில் மிக அருகில் அமைந்துள்ளது. இத்தெப்பத்தில் வருடந்தோரும் மாசி மகத்தன்று தெப்பஉற்சவம் நடைபெற்று வருகிறது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
நாயக்க மன்னர்கள் சிற்பங்கள் : இத்திருக்கோயிலின் கொடிமர மண்டபத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ள கல்தூண்களில் யாழி உருவ சிற்பங்களும், ஹேமபுஷ்கரணி நுழைவு வாயிலில் உள்ள கல்தூண்களில் வசவப்ப நாயக்கர் மற்றும் திம்மப்ப நாயக்கர் கற்சிற்பங்கள் உள்ளன.
சூர்ய ரதம் : இத்திருக்கோயில் சுவாமி அலங்காரம் செய்யும் வாகன மண்டபத்திற்கு அருகில் உள்ளது. சூர்ய பகவான் ரதத்தில் காட்சி அளிக்கும் வண்ணம் சூர்ய மண்டலத் தோற்றம் கற்சிற்ப வடிவில் கலைநயத்துடன் காணப்படுகிறது.
இசைத் தூண்கள் : அருள்மிகு மதுரவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டபத்தில் கல்லிலாலான இசைத்தூண்கள் அமைந்துள்ளது.
அஷ்டலெட்சுமி மற்றும் தசாவதாரம் சிற்பங்கள் : அருள்மிகு மதுரவல்லித் தாயார் சன்னதி சொக்கட்டாண் மண்டபத்தில் உள்ள தூண்களில் அஷ்டலெட்சுமி, கிருஷ்ணன் பிறப்பு, கிருஷ்ணரை வாசுதேவர் எடுத்துச் செல்லுதல், கம்சன் எட்டாவது குழந்தையை வதம் செய்ய காளிய தேவியாக உருமாறி வானத்தை நோக்கி பறந்த காட்சி, பூதனை வதம், சகடாசுரன் வதம் ஆகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன.
🛠️ வசதிகள் (Facilities)
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு, திருக்கோயிலின் முன்புறத்தில் உள்ள காலியிடத்தில் வாகன நிறுத்தகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் வகையிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வாகன வகை நிறுத்தக் கட்டணம் ரூபாயில்
1) இருசக்கர வாகனம் - ரூ.10/-
2) கார், வேன் - ரூ. 30/-
3) மினி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் - ரூ. 100/-
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலின் ராஜகோபுர நுழைவு வாயிலின் வடக்கு பகுதியில் இரண்டு சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மிக எளிதாக தரிசனம் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. சக்கர நாற்காலி இயக்கும் பணியாளர் பெயர் திரு.ரா.மாரிக்கண்ணன்
தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் 8667018791
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் நலன் கருதி, எதிர்த்திசை சவ்வூடுபரவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கென திருக்கோயிலின் உள்ளே 2 இடங்களில் எதிர்த்திசை சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாயார் சன்னதி சொக்கட்டான் மண்டபத்திலும், ஆண்டாள் சன்னதி வளாகத்திலும் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது,
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்திற்கு நன்கொடையாக நாள் ஒன்றுக்கு ரூ.3,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும். பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் 200 நபர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதி வாரம் சனிக்கிழமை அன்னதானத்திற்கு நன்கொடையாக நாள் ஒன்றுக்கு ரூ.12,500/- செலுத்தி பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்படும். நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி ) பெற இயலும்.



