⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:30 PM
03:30 PM to 07:30 PM
சிறப்பு நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் பூஜைகள் மற்றும் தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது மார்கழி மாதம் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்து நண்பகல் 12.00 மணிக்கு நடை சாற்றப்பட்டு மீண்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறந்து இரவு 7.00 மணிக்கு நடை சாற்றப்பட்டும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை : 06:00 AM to 06:10 AM IST
2. பொங்கல் பூஜா : 07:35 AM to 07:45 AM IST
3. உச்சிக்கால பூஜை : 12:30 PM to 12:35 PM IST
4. உஷக்கால பூஜை : 12:30 PM to 12:35 PM IST
5. சாயரட்சை பூஜை : 05:00 PM to 05:10 PM IST
6. நித்ய அனுஷ்டானம் : 06:00 PM to 06:15 PM IST
7. திருவாராதனம் (இரவு பூஜை) (--) : 07:50 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): பரமசாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஸ்ரீ தேவி, பூமா தேவி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): சந்தன மரம்
ஆகமம் (Tradition): வைகாணசம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): மதுரை
தாலுகா (Taluk): மேலூர்
தொலைபேசி (Phone): 97870-64414
முகவரி (Address):
Melur Road, அழகர்கோயில், 625301
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், மேலூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் - 625301 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பரமசாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 6th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madurai (14 km), Dindigul (39 km), Virudhunagar (62 km), Aruppukkotai (63 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : ஆண்டாள்
ஸ்தல விருட்சம் : சந்தன மரம்
விமானம் வகை : சந்திரவிமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
நிறுவனத்தின் பெயர் : முதியோர் இல்லங்கள்
தல சிறப்பு (Thiruthala Special):
பிரசாதம்
அழகர்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தோசை மிகவும் பிரசித்தி பெற்றதாகும், வேறு எந்த திருக்கோயிலிலும் இது போன்ற பிரசாதம் கிடைக்கப் பெறாது.
பிரசாதம்
இத்திருக்கோயிலின் காவல் தெய்வமாக பதினொட்டாம்படி கருப்பணசாமி உள்ளார். இந்த பதினொட்டாம்படி கருப்பணசாமி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல மக்களுக்கு குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் இருந்து அருள்புரிந்து வருகிறார். பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கத்திலிலிருந்து வருகிறது.
பிரார்த்தனை
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும், இது தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும். இத்திருக்கோயிலானது சுமார் 92 ஏக்கர் பரப்பளவில் வானலாவிய மதிற்சுவர்களுடன் கூடிய பெரிய கோட்டைக்குள் அமைந்திருப்பது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். மேலும் இச்சேத்திரம் நரசிம்ம சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 3000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது.
இக்கோயிலின் வட்டவடிவக் கருவறைமேல் உள்ள வட்டவடிவ விமானத்தைக் காணலாம். இவ்விமானத்துக்குச் சோமசந்த விமானம் என்பது பெயர். சோமனை (சந்திரனை)ப் போல வட்ட வடிவிலிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.
நம்மாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஆறு ஆழ்வார்களால் 128 பாசுரங்களால் மங்களாசாசணம் செய்யப்பட்டுள்ளது.
மகா விஷ்ணுவுடன் திருமணம் நடைபெற வேண்டி ஆண்டாள் அவர்களால் அக்கார அடிசில் நைவேத்தியம் செய்வதாக வேண்டிகொண்டார்.
மேற்படி வேண்டுதலை ஆண்டாள் நிறைவேற்றதாதால் பகவான் இராமானுஜரால் மார்கழி 27ம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கூடாரை வெல்லும் உற்சவம் என்றழைக்கப்படுகிறது.
சித்திரை திருவிழா என்பது அருள்மிகு கள்ளழகர் வைகைக்கு எழுந்தருளும் சமயம் குதிரை வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாற்றிக்கொண்டு செல்வது வழக்கம்.
உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தின் போது 140 மணி நேரம் 70 கி.மீ சுவாமி திருக்கோயிலுக்கு வெளியே சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்,
இதர வகை
அருள்மிகு இராக்காயியம்மன் திருக்கோயில் அழகர்மலையில் அருள்மிகு முருகன் திருக்கோயிலுக்கு மேலே அமைந்துள்ளது. தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தில், திருமால் விஸ்வரூபம் எடுத்த விண்ணையும், மண்ணையும் அளக்கும் போது திருமாலின் கால், விண்ணுலகம் சென்ற போது அங்கு, பிரம்ம தேவரால் பாத பூஜை ஆகாய கங்கை என்னும் புனித நீரால் செய்யப்படும் போது, திருமாலின் காலில் உள்ள நூபுரம் எனும் கால் சிலம்பின் மேல், மேற்படி தீர்த்தம் பட்டு, அது பூமிக்கு வந்த இடமே மேற்படி அழகர்மலையின் மேல் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தின் காவல் தெய்வமாக அருள்மிகு இராக்காயியம்மன் இருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நூபுரகங்கை தீர்த்தமானது சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களால், புனித தீர்த்தமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீர்த்தமானது மருத்துவ குணம் கொண்டுள்ளதாகவும் போற்றப்படுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
மூலவாவி : மூலவாவி திருக்குளம் திருக்கோயில் கிழக்கு பகுதி கோட்டை சுவரின் மூலையில் அமைந்துள்ளது.
நாராயண வாவி : நாராயண வாவி திருக்குளம் அழகர்மலை மலைப்பாதையில் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
பொய்கைகரைபட்டி தெப்பம் : தெப்ப திருவிழா மாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று நடைபெற்று வருகிறது.
பவித்ரபுஷ்கரணி : திருக்கோயில் முன்புறம் அமைந்துள்ளது
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
மஹா விஷ்ணு கருடன் : சிற்பம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது.
கருடன் : இத்திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தசாவதாரக்காட்சிகள் சிற்பங்களாக அமையப்பட்டுள்ளன.
மோகினி அவதாரம் : இத்திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தசாவதாரக்காட்சிகள் சிற்பங்களாக அமையப்பட்டுள்ளன
ஆஞ்சநேயர் : இத்திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தசாவதாரக்காட்சிகள் சிற்பங்களாக அமையப்பட்டுள்ளன.
நரசிம்ம அவதாரம் : இத்திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தசாவதாரக்காட்சிகள் சிற்பங்களாக அமையப்பட்டுள்ளன
வசந்த மண்டபம் : தென்திசையிலுள்ள ஆடிவீதியில் கோயில் இராஜகோபுர மதிலில் ஒரு வாசல் உள்ளது. இவ்வாசலின் வழியே தெற்குநோக்கி இறங்கினால் இக்கோயில் வசந்தமண்டபத்தை அடையலாம். வசந்த மண்டபத்தின் நடுவில் நீராழிமண்டபம் போல் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்தத்திருவிழா நாட்களில் இறைவன் நாள்தோறும் எழுந்தருளுவார். இவ்வசந்த மண்டபத்தின் மேற்கூரை முழுவதும் நாயக்கராட்சிக்கால ஓவியங்கள் காணப்படுகின்றன இவ்வோவியங்கள் இராமாயணக் கதைகளைச் சித்திரிக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அக்காட்சி நாயக்கர் காலத் தமிழ் எழுத்தில் ஓரிரண்டு வரிகளில் விளக்கப்பட்டுள்ளது.
சுந்தரபாண்டியன் மண்டபம் : தொண்டைமான் கோபுர வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால். வலபுறத்தில் உயரமாக அமைக்கப்பட்ட ஒரு மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால் இம்மண்டபத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினானென்றும் இதற்குப் பொன்மேய்ந்த பெருமாள் மண்டபம் என்பது பெயர் என்றும் தெரிய வருகின்றது
இசைத்தூண்கள் : தொண்டைமான் கோபுர வாசலிலிருந்து நேராகச் சென்றால் கொடிக் கம்பத்தையடுத்துள்ள ஆரியன் மண்டபத்தையடையலாம். இம்மண்டபமும் மிக உயரமானதே. சிற்பத்திறன் மிகுந்த இருயாளிகள் இம்மண்டபத்தின் தூண்களில் உள்ளன. உயரமாக இருப்பதனால் இதற்குப் படியேற்ற மண்டபம் என்றும் பெயர் வழங்கப்படுகிறது.
வாமன அவதாரம் : சிற்பம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது.
கிருஷ்ண அவதாரம் : சிற்பம் திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் இடது பக்கத்தில் அமைந்துள்ளது.
வராக அவதாரம் : திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
அஞ்சல் வழி பிரசாதம் : சுவாமி போட்டோ -1
நூபுர கங்கை தீர்த்தம்-100கிராம்
மஞ்சள் பிரசாதம் -10கிராம்
சந்தனம் பிரசாதம் -10கிராம்
விபூதி பிரசாதம் - 10கிராம்
தங்குமிட வசதி : இத்திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது. இதில் 28 ஓய்வறைகளும், 2 பெரிய மண்டபங்களும், 3 சிறிய மண்டபங்களும், 4 கட்டணமில்லா மண்டபங்களும் உள்ளது
துலாபாரம் வசதி : பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பொருள்களை எடைக்கு எடை துலாபார காணிக்கையாக செலுத்தலாம். கோவிலுக்குள் பேஷ்கார் அலுவலகம் அருகில் துலாபார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் 5 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது
நூலக வசதி : இத்திருக்கோயிலில் சமய நூல் நிலையம் உள்ளது. திருக்கோயில் வரலாறு, வைணவ புத்தகங்கள் இங்கு உள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக அலுவலக நேரங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தம் : திருக்கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன நிறுத்தம் பொருள்கள் பாதுகாக்கும் அறைக்கு அருகிலும்,
நான்கு சக்கர வாகன நிறுத்தம் திருத்தேர் கொட்டகை அருகிலும் உள்ளது
பூங்கா : மலை பாதைக்கு செல்லும் வழியில் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா செயல்பட்டு வருகிறது
மின்கல ஊர்தி : இத்திருக்கோயில் பேருந்து நிலையத்திற்கு அருகில் (இரணியன் கோட்டை) இருந்து திருக்கோயில் முதன்மை நுழைவு வாயில் வரை மின்கல ஊர்திகள் இலவசமாக இயக்கப்படுகின்றன. இதனால் ஏராளமான பக்தர்கள் (குறிப்பாக முதியோர்கள் மற்றும் குழந்தைகள்) பயனடைகின்றனர்.
சக்கர நாற்காலி : மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்திற்குள் சக்கரநாற்காலி சேவை வழங்கப்படுகிறது.
கோயில் பேருந்து வசதி : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சோலைமலை மண்டபம் அருள்மிகு முருகன் திருக்கோயில் மற்றும் நூபுரகங்கை சென்று வருவதற்கு அருள்மிகு முருகன் திருக்கோயில் வரை திருக்கோவில் நிர்வாகத்தின் மூலமாக நான்கு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக ரூ.10/- மட்டும் நபர் ஒருவருக்கு சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கழிவறை வசதி : திருக்கோயில் வளாகத்தில் 5 இடங்களில் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது
பள்ளி அருகில்
பேருந்து நிலையம்
பதினெட்டாம்படி எதிர்புறம்
மலைச்சாலை நுழைவு வாயில்
முடிகாணிக்கை மண்டபம் பின்புறம்
முடி காணிக்கை வசதி : முடி காணிக்கை மண்டபம் 18ம்படி கருப்பணசாமி சன்னதி எதிர்புறம் சுமார் 3146சதுர அடியில் அளவில் அமைந்துள்ளது. திருக்கோயிலால் நியமனம் செய்யப்பட ஐந்து நாவிதர்களால் சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையானது பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதலுதவி மருத்துவ மையம் : இத்திருக்கோயில் வளாகத்தில் பக்தர் தங்கும் விடுதி அருகில் முதலுதவி மருத்துவ மையம் காலை 5.30மணி முதல் இரவு 9.30மணி வரை இலவசமாக செயல்பட்டு வருகிறது.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : இத்திருக்கோயிலில் பக்தர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக பொருட்கள் பாதுகாப்பு அறை ஒன்று இலவசமாக பேருந்து நிலையம் (இரணியன் கோட்டை) அருகில் அமைக்கப்பட்டுள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கட்டணமில்லா காலணி பாதுகாப்பு மையம்
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பொது நிதி
அன்னதானம் : தினசரி நண்பகல் 12.00 மணியளவில்நடைபெறுகிறது. தினசரி திருக்கோயிலுக்கு வருகை தரும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.35,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ஆன்லைனிலும் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80(ஜி)-ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு




