← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703

Arulmigu Dhenupureeswarar Temple, Patteswaram, Patteeswaram - 612703

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: கும்பகோணம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
ஆடி வெள்ளிக் கிழமைகளில் அதிகாலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை : 09:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை : 12:30 PM to 01:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 07:30 PM to 08:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): தேனுபுரீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): ஞானாம்பிகை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வன்னி மரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): கும்பகோணம்

தொலைபேசி (Phone): 04352445227

முகவரி (Address):

சன்னதி தெரு, பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம், 612703

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kumbakonam (8 km), Thanjavur (26 km), Mannargudi (33 km), Mayiladuthurai (43 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : பாடல் மறை சூடல் மதி பல் வலையோர் பாகம்மதில்
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : வன்னி மரம்
விமானம் வகை : மூன்று நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பாடல் மறை சூடல் மதி பல் வலையோர் பாகம்மதில்

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
வெற்றி வேண்டுவோர் வழிபடவேண்டிய தெய்வம் அருள்மிகு துர்க்காம்பிகை அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கும் இவ் அன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லெட்சுமி எனவும் அழைப்பர். நவசத்தி நாயகி, நவரத்ன நாயகி, நவக்கிரஹ நாயகி, நவயோக நாயகி நவராத்திரி நாயகி, நவக்கோடி நாயகி எனவும் போற்றப்படுபவள். இராகுக்கு அதிதேவதையாவாள். அருள்மிகு துர்க்காம்பிகை மற்ற தலங்களில் உள்ளவாறு இல்லாமல் இத்தலத்தில் சாந்த சொரூபினியாய் எடுத்து வைக்கும் திருவடிகளைக் கொண்டு காட்சியளிக்கிறாள். இவ் அன்னை மகிடன் தலை மேல் (எருமை) தலை நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்கரூபமாய் எட்டு திருக்கரங்களுடனும் முக்கண்களுடனும் காதுகளில் குண்டலங்களுடனும் அருள்பாலிக்கிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பான சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். இத்துர்க்காம்பிகையின் சிம்ம வாகனமோ இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. இது சாந்த சொரூபத்தைக் குறிக்கும். இவ் அன்னை தனது அபயகரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், ஊன்றிய திருக்கரத்தில் (ஊருஹஸ்தத்தில்) கிளியைத் தாங்கி அபயகரத்துடன் காட்சியளிக்கிறாள். சோழ மாமன்னர்கள் விஜயலாயன் தொடங்கி மூன்றாம் இராஜேந்திர சோழன் வரை ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை. சோழமன்னர்களின் அரண்மனையின் வடக்குவாயில் தெய்வமாக அருள்பாலித்தவள். வெற்றி வாகை சூடப் போர்களம் புகும்முன்னரும் வெற்றி வாகை சூடியப்பின்னரும் போற்றி வழிப்பட்டனர். துர்க்கை வழிபாடு துர்க்கையை ஒவ்வொருநாளும் இராகுகால நேரங்களில் இராகுபகவான் வழிபட வருவதாக ஐதீகம். இராகு கால நேரத்தில் இராகுவை வணங்குவதை விட இராகுக்கு அதிதேவதையான அருள்தரும் துர்க்காம்பிகையை வழிபடுவது சாலச்சிறந்தது. எலுமிச்சப்பழ மாலை, செவ்வரளி மாலை, புடவை, குங்குமம் சாற்றி வழிபடுவது சிறப்பு.
வரலாற்று சிறப்பு
கோடை காலத்தில் சிவபெருமானை வழிபட வந்த திருஞனசம்பந்தர் நடந்துவரும் அழகைக் காண நந்தி விலகி இருக்க கட்டளை இட்ட தலம். தேவலோக பசுவான காமதேனுவின் மகள் பட்டி ஈஸ்வரனை வழிபட்ட தலம். எனவே இவ்வூர் பட்டீஸ்வரம் என பெயர் பெற்றது.
தல விருட்சம்
தல விருட்சம் - வன்னி மரம் சிறப்பு விளக்கம் - ஞானவாவி குளக்கரையில் தல விருட்சம் வன்னிமரம் உள்ளது. நாகதோஷம், சர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் போக்குவதற்காக நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. திருமணமாகாதவர்கள் மஞ்சள் சாத்தி தீபம் ஏற்றுவதும், மஞ்சள் கட்டிய நூலினை மரத்தில் சுற்றுவதும், குழந்தை பேறில்லாதோர் தொட்டில் கட்டுவதுமாக தொன்றுதொட்டு செய்து வருகின்றனர்.
இதர வகை
தினந்தோறும் மாலை 7.00 மணியளவில் தங்கரத புறப்பாடு நடைபெறும். ரூ. 2,000/- கட்டணம் செலுத்தி அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதர வகை
விரும்பியதைக் கொடுக்கும் அருள்மிகு பைரவர் சோழ அரண்மனையின் தெற்குவாயில் தெய்வம் பைரவர் ஆவார். தசன், விஷ்ணு, பிரம்மாதிகளுக்கு சிவாக்ஞையால் சிக்ஷிக்த்து அனுக்கிரகத்தை சிவனின் வடிவமே பைரவர். இவருக்கு வேத உருவமாகிய நாய் வாகனம் இவருடைய திருநாமத்தில், அமைந்த ப.ர.வ (படைத்தல், ரக்ஷித்தல், வதைத்தல்) படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் உணர்த்தும். சோழ மாமன்னர்களால் போற்றி வழிபடபட்டவர். பைரவர் வழிபாடு இவருக்கு தேய்பிறை அஷ்டமிதோறும் (பைரவாஷ்டமி) சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வடைமாலை சாத்தி, தயிர் பள்ளயம் இட்டு சிறப்புப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. நோயுற்றோர் கடன் சுமையில் அழுந்துவோர், துஷ்ட கிரகப்பிடியில் அகப்பட்டோர், குற்றம் சுமத்தப்பட்டோர் பைரவரை பூஜித்தால் நலம் பயக்கும். சிறப்புகள் நவக்கிரஹ தோஷங்கள் நீங்க செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை. குழந்தை பேறு கிட்ட 6 தேய்பிறை அஷ்டமிகளால் சிவப்பு நிற பூக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை. வறுமை நீங்க - சகஸ்ரநாம அர்ச்சனையோடு 11 வைரவத் தீபங்கள் ஏற்றி வழிபடுதல். சனி தோஷம் நீங்க 9 சனிக்கிழமைகள் செந்நீற மலர்களால் அர்ச்சனை செய்து 4 வைரவத் தீபங்கள் ஏற்றி வழிபடுதல். திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுதல் தீராத நோய்கள் தீர வைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்து அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால் பிணிகள் நீங்கும். செல்வம் செழிக்க - வளர்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசினை அலுவலகம் அல்லது பணப்பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.
இதர வகை
முதல் பிரகாரத்திலுள்ள கிணறு, இராமன் தன் வில்லின் முனையால் தேற்றுவித்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. இதனை கருட தீர்த்தம், இராமர் தீர்த்தம் என்பர்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

ஞானவாவி : திருக்குளத்தின் விவரம் - இத்திருக்குளம் திருக்கோயிலின் உள்கோபுர வாயிலுக்கு வெளியே ஆக்ஞா கணபதி சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. இதனை ஞானபுஷ்கரணி, ஞானவாபி, ஞானசரஸ் என்று அழைக்கப்படுகிறது. திருக்குளம் இருபுறமும் எவர்சில்வர் கம்பிவலை பதித்த கதவு அமைத்து பாதுகாக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. திருக்குளத்தின் சிறப்பு - வைகாசிபூரணை நாளில் நீராடினால் மிகவும் புண்ணியமுண்டாகும். திருமுலைப்பால், திருவாதிரை ஆகிய நிகழ்வுகளின்போது தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தெப்ப குளம் : இத்திருக்கோயிலின் முன்கோபுர வாயிலுக்கு கிழக்கில் உள்ளது.
காயத்ரி குளம் : திருக்குளத்தின் விவரம் - இது திருக்கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது. திருக்குளத்தின் சிறப்பு - விசுவாமித்திரர் தன் உடம்பை திரியாக்கி இக்குளத்தினை அகலாக்கி எரியூட்டி தவம் செய்தார். இத்தவத்திற்கு பெருமான் இறங்கி வந்து பிரம்மரிஷி என்ற பட்டம் அளித்தார். இத்தீர்த்தங்களில் நீராடிப் பெருமானை வழிபடுவோர் வேண்டும் ஞானம் பெறுவர்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

ராமர் லஷ்மணர் சீதா : ராமர் லஷ்மணர் சீதா
பாம்பு பின்னல் : யாழிகளால் தூண்களில் பிணைக்கப்பட்ட பாம்புகளின் சிற்பங்கள்
மங்கை நல்லாள் : -
யாழிகள் : அம்மன் சன்னதி மகா மண்டப தூண்களில் உள்ள யாழிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரிஷப குஞ்சரம் : ரிஷப குஞ்சரம்
இருவர் உருண்டோடும் சாகச கலை : இருவர் உருண்டோடும் சாகச கலை
பசு வழிபாடு : பசு சேயார் நினைந்து சிவலிங்கத்தின் மீது பால்சொரிந்து வழிபடுதல்
கிளி மொழி பேசும் பைங்கிளி : கிளியுடன், கிளி மொழி பேசும் பைங்கிளி
சுழலும் கல் வளையம் : சுழலும் கல் வளையம்
முத்துப்பந்தல் : முத்துப்பந்தல்
திருஞானசம்பந்தர் : திருஞானசம்பந்தர்

🛠️ வசதிகள் (Facilities)

கழிவறை வசதி : ஆண்கள் கழிவறை - 3, பெண்கள் கழிவறை -3
சக்கர நாற்காலி : மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலி வசதி உள்ளது
குளியல் அறை வசதி : ஆண்கள் குளியலறை - 1 பெண்கள் குளியலறை - 1
கழிவறை வசதி : மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கழிவறை வசதி உள்ளது.
நூலக வசதி : திருக்கோயில் உட்புறம் அமைந்துள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : காலணிகள் வைக்கும் இடம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (ஆர்.ஓ) துர்க்கை சன்னதி அருகில் உள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 15.08.2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 100 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.35/- செலவிடப்படும். இந்த மதிய உணவில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீருடன்சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12 மணியளவில் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இணையதளத்தில் (018013 ) இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக அன்னதான நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வாரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், பட்டீச்சுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.