⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:00 AM to 12:00 PM
04:00 AM to 08:00 AM
காலை 07.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 04.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு நடை சாத்தப்படும்.
வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 01.00 மணிக்கு நடை சாத்தப்படும், மீண்டும் 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணி நடை சாத்தப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. சாயரட்சை பூஜை : 06:00 AM to 07:00 AM IST
2. நித்ய அனுஷ்டானம் : 07:00 AM to 12:00 PM IST
3. அர்த்தஜாம பூஜை : 07:30 AM to 08:00 AM IST
4. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:30 AM IST
5. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 11:58 AM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): பிரம்மபுரீஸ்வரர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பிரம்மா சம்பத் கௌரி
ஸ்தல விருட்சம் (Sacred Tree): மகிழ மரம்
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி
தாலுகா (Taluk): மண்ணச்சநல்லூர்
தொலைபேசி (Phone): 0431-2909599
முகவரி (Address):
ஈஸ்வரன் கோயில் தெரு, மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் கிராமம், 621105
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் கிராமம் - 621105 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் பழமை வாய்ந்த காலம் பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruchirappalli (23 km), Perambalur (27 km), Thanjavur (51 km), Attur (64 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : மகிழ மரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : தெரியவில்லை
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : இழந்த பதவியையும் ஆற்றலையும் அருள்மிகு பிரம்மதேவர் திரும்பப் பெற்றத் திருத்தலம். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரும் குறைவின்றி வாழ, விதியையே திருத்தி எழுது என்று பிரம்மாவுக்கு சிவனார் அறிவுறுத்திய அந்த திருப்பிடவூர், திருக்கயிலாயத்துக்கு இணையான புண்ணியத்தலம்.
புறநானூறு
புறநானூற்றின் 395 வது பாடலில் திருப்பிடவூர் சாத்தனை புகழ்ந்து பாடப்பெற்றுள்ளது. சோழநாட்டு பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை பாட்டுடை தலைவனாக மதுரை நக்கீரரால் பாடப்பெற்ற சிறப்புடைய பழமை வாய்ந்த தலம்.
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக வருந்திப்,
புதல் தளவின் பூச்சூடி,
அரில் பறையாற் புள்ளோப்பி,
அவிழ் நெல்லின் அரியலா ருந்து
மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு,
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
வே யன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளிகடி யின்னே
கல் அள்ளற் புள்இரீஇ யுந்து
ஆங்கப், பலநல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என்உறவு இசைத்தலின்,
தீங்குரல்.கின் அரிக்குரல் தடாரியொடு,
ஆங்கு நின்ற எற்கண்டு
சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,
ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை
என்போல் போற்று என்றோனே அதற்கொண்டு,
அவன் மறவ லேனே, பிறர்உள்ள லேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனோடும் தாள் புகையினும்,
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்தி,
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்கு அமைந் தன்றால் வாழ்க, அவன் தாளே
வயலிலே உழும் உழவர்கள் காடுகளிலே பகடுகளை மேய விட்டுவிட்டுச், சூடான முயற்கறியும் வாளைமீனைப் பலவகையாகப் பக்குவப்படுத்திய கறிகளும் பழஞ்சோற்றுடன் உண்டு, தளவப்பூச் சூடிக்கொண்டு, அரிப்பறையால் புள்கடிந்து, நெல்லிலிருந்து வடிக்கப்பட்ட கள்ளினை அருந்தி மகிழ்வர் மனைக் கோழியின் குரலுக்குக் கானக்கோழி பதிற்குரல் எழுப்பும் நீர்க்கோழியும் கூப்பிடும், சிறு பெண்கள் கிளியோட்ட அதனால் நீர்ப்பறவைகள் கலைந்து பறக்கும். அத்தகைய நல்லபல விளை நிலங்களையும், களிறுகளையும் உடைய தித்தனின் உறந்தை நகர்க்குக் கிழக்கிலே உள்ளது பிடவூர். அது வள்ளன்மையுடைய வேண்மானுக்கு உரியது. அவ்வூரில் உள்ள, அறத்தால் புகழ்பெற்ற சாத்தனுக்கு வேண்டியவர் யாங்கள் முன்னொரு நாள், பெருமானே என மாலைப் போதில் தடாரி ஒலித்து அவன் வாயிலில் நின்றேன். என்னைக் கண்ட அவன் சிறிதும் காலம் தாழ்த்தாது, பேசவும் செய்யாது, மனைக்கண்ணுள்ள தன் மனைவியை அழைத்து, என்னைப்போலக் கருதி இவனைப் பேணுக என்றான். அத்தகைய அன்பிற் சிறந்தானை என்றும் மறவேன். பிறரை நினைக்கவும் செய்யேன். உலகமெங்கும் பசியால் வாடித் துயரம் அடைந்த காலத்தினும், கொக்குநகம் போன்ற சோறும், சூடான இறைச்சியும், அளவற்றுத்தந்து உதவுகின்ற அவன் வாழ்க எனச் சான்றோர் வாழ்த்துவர். உள்ளதும் இல்லதும் என்று ஏதும் பாராது, வரையாது வழங்குபவன் அவனே யாவன் அவன் திருவடிகள் வாழ்க
திருக்கயிலாய ஞான உலா
திருப்பிடவூர், திருப்படையூர், திருப்பட்டூர் என்றெல்லாம் சொல்லப்படுகிற இந்த புண்ணிய பூமியில் தான் திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் அரங்கேறியது. இந்த அரங்கேற்றத்தை சிவகட்டளைப்படி, சிரமேற்கொண்டு சிறப்புற நடத்தியவர்தான் மாசாத்தனார்.
இத்திருக்கோயில் காசிக்கு நிகரான திருக்கயிலாயத்துக்கு இணையான திருக்கோயிலாகும். வருடந்தோறும் விமரிசையாக திருக்கயிலாய ஞான உலா திருவிழா நடைபெறும். மேற்படி திருவிழாவில் அரங்கேற்ற அய்யனார் கோயிலில் இருந்து திருப்பட்டூர் வீதிகளில் ஓலைச்சுவடியுடன் அய்யனார் உடன் சுந்தரரும் சேரமான் நாயனாரும் உத்ஸவ மூர்த்திகளாக வலம் வந்து தரிசனம் தருவார்கள்.
தேவாரம்
அப்பர் பெருமானும் சுந்தரரும் வைப்புத் தலமாகப் பாடிய பெருமை கொண்டது. திருப்பிடவூர் என்கிற திருப்பட்டூர் திருத்தலம்.
திருநாவுக்கரசர், ஆறாம் திருமுறையில், ஏழாவது பதிகத்தின் ஆறாவது பாடல்
தெய்வப் புனற்கெடிலா வீரட்டமும்
செழுந்தண் பிடவூரும் சென்று நின்று
பல்லத் திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வந் திரையும் மணிச்சத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும்
கவ்வை வரிவண்டு பண்டே பாடும்
கழிப்பாலை தம்முடைய காப்புகளே
என்று இந்தத் தலத்தை சிலிர்த்தபடி விவரிக்கிறார். அதாவது, கெடிலம் நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் ஸ்ரீசைலம், பறியலூர் வீரட்டம், பாபநாசம், வாய்மூர், வலஞ்சுழி, வண்டுகள் பாடுகிற கழிப்பாலை ஆகியன சிவனார் உகந்து தங்கி அருள்பாலிக்கிற திருத்தலங்கள் என்று போற்றுகிறார்.
திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் 70 வது பதிகத்தில், இரண்டாவது பாடல்,
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்
ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீரட்டானமும்
கோட்டூர் குடமுழுக்கு கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாய நாதனையே காணலாமே
என்று திருப்பிடவூர் தலத்தையும் சேர்த்துச் சொல்கிறது. அதாவது, ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூர், தான்தோன்றிமாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், குறுக்கை வீரட்டம், குடமுக்கு, கோழம்பம், திருக்கழுக்குன்றம், கானப்பேரூர் ஆகிய தலங்களில் திருக்கயிலாய நாதனைத் தரிசிக்கலாம் என்கிறார் திருநாவுக்கரசர்.
ஏழாம் திருமுறையில், சுந்தரர் பெருமான் 95 வது பதிகத்தில், ஆறாவது பாடலில், அவருக்கு மிகப்பிடித்த, ஆரூர் எனப்படும் திருவாரூர் திருத்தலத்தைப் பாடுகிறார். அந்தப் பாடலில், திருப்பிடவூர் தலத்தையும் சொல்லி, வைப்புத் தலப் பெருமையை திருப்பிடவூருக்கு வழங்கி உள்ளார் சுந்தரர்.
அம்மானே ஆகம சீலர்க்கு அருள்நல்கும்
பெரும்மானே பேரருளாளன் பிடவூரன்
தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே .
அதாவது, அனைவருக்கும் தலைவனே. ஆகம ஒழுக்கத்தை உடையவர்க்கு, உன் திருவருளைத் தருகிற பெரியோனே. பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே. தெள்ளிய தமிழால் நூல்களை எழுதும் புலமை உடையவர்க்கு ஒப்பற்ற தலைவனே. திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளியுள்ள கடவுளே, உன்னை மறக்காமல் நினைக்கிற அடியவர்களை, அஞ்சேல் என்று சொல்லிக் காத்தருள்வாயாக என்கிறார் சுந்தரர்.
பெரியபுராணம்
சேக்கிழார் அடிகள் தன் திருத்தொண்டர் புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் தோழர் சேரமான் பெருமாள் கயிலையில் இசைத்த நூலாம் திருக்கயிலாய ஞான உலாவினை கேட்ட மாசாத்தனார் அதனை திருப்பிடவூரில் உலகோர் அறிய அறிவித்தார் என காட்டி தம் பெரியபுராண கடைசி பாடலாக வைத்து முடித்துள்ளார்.
பாடல்
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்
திருஉலாப் புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மா
சாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில்
வெளிப்பட பகர்ந்து எங்கும்
நார வேலைசூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே . (12.4280)
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
இத்திருக்கோயில் அருள்மிகு பிரம்மா தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று தனக்குள் செருக்குற்றார். அதனால், பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததோடு படைப்பாற்றலையும் நீக்கினார். தனது தவறை உணர்ந்த பிரம்மா இத்தலத்தில் 12 (துவாதச) சிவலிங்கங்களையும், தீர்த்த கிணற்றையும் உருவாக்கி வழிபட்டு தன் பழைய சக்திகளை மீண்டும் பெற்றதோடு, இத்தலத்தில் வழிபட வரும் பக்தர்களின் தலையெழுத்தை மங்கலகரமாக மாற்றும் வரத்தினையும் ஈசனிடமிருந்து பெற்று பிரம்மா அருள்புரிந்து வருகிறார்.
தொல்காப்பியம், புறநானூறு, தேவாரம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த திருத்தலம்.
கட்டுமான கலை சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோயிலாக அமையப்பெற்றுள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் விளங்குகிறது. பல்லவ மன்னன் முதலாம் ராஜசிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலைப் போல் இது கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை, கருவறையில் உள்ள தாராலிங்கம் (16 பட்டை) ஆகியவற்றின் நுட்பங்களையும் அழகியலையும் நோக்கும்போது திருப்பட்டூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முதலாம் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருத முடிகிறது. சிலர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.700-728) காலத்தியது என்று கருதுகின்றனர். மேலே சாந்தார வகை விமானம் கங்கை கொண்ட சோழபுர விமானம் போல உள்ளீடு இல்லாது உச்சி வரை செல்கிறது.
இத்திருக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரிய பகவான் தன் கதிர்களைக் கொண்டு சிவனாரின் சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்து வழிபடுவதாக ஐதீகம். அன்றைய நாளில் காலையில் 06.15 முதல் 06.45 மணி வரை சூரிய ஒளி மூலவர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் மீது விழும் அற்புத நிகழ்வை தரிசிக்கலாம்.
ஆடல்வல்லானான நம் சிவனாரின் திருநடனத்தை தரிசிக்கும். பேறு பெற்ற வியாக்ரபாதரும் பதஞ்சலியும் தவம் செய்த புண்ணிய தலம் இது.
இன்றைக்கு இருக்கின்ற அத்தனை யோக தியானங்களுக்கு எல்லாம் அடிப்படையே பதஞ்சலி முனிவர் அருளிய யோக சூத்திரம் ஆகும். அப்பேற்பட்ட ஞான முனி பதஞ்சலிக்கு இத்திருக்கோயிலில் பிரம்மா சந்நதிக்கு அடுத்த திருச்சுற்று பகுதியில் பதஞ்சலி சந்நதி அமைந்துள்ளது.
திருப்பிடவூர், திருப்படையூர் எனப்படும் திருப்பட்டூர் தலத்தில் மூவாயிரத்தொரு அந்தணர்கள் இருந்து சிவபூஜை செய்ததாக நம்பப்படுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
பகுள தீர்த்தம் : இத்திருக்கோயிலின் வெளிபுறத்தில் பகுள தீர்த்த குளம் ஒன்று உள்ளது
பிரம்ம தீர்த்தக்குளம் : இத்திருக்கோயிலின் உள்ளே பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
தாராலிங்கம் : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலின் நந்தவனத்து உட்புறத்தே தனிப்பெரும் கோயிலாக அமையப்பெற்றுள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பல்லவ மன்னன் முதலாம் ராஜசிம்மன் கட்டிய காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயிலை போல் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டட கலை மற்றும் சிற்பக்கலை கருவறையில் உள்ள தாராலிங்கம் (16 பட்டை) ஆகியவற்றின் நுட்பங்களையும் அழகியலையும் நோக்கும்போது திருப்பட்டூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முதலாம் இராஜசிம்மன் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதமுடிகிறது. சிலர் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.700-728) காலத்தியது என்று கருதுகின்றனர். மேலே சாந்தார வகை விமானம் கங்கை கொண்ட சோழபுர விமானம் போல உள்ளீடு இல்லாது உச்சி வரை செல்கிறது. திருக்கோயிலின் வெளிபுறம் மணற்கற்கலால் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் உள்ளே அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ளது மற்றும் திருக்கோயில் வெளியே வசந்த மண்டபம் முன்புறம் உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயிலுக்கு முன்புறம் ஒன்று உள்ளது
குளியல் அறை வசதி : ஆண்கள் கழிவறைகள் 6 மற்றும் பெண்கள் கழிவறைகள் 6 ஆக மொத்தம் 12 கழிவறைகள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.
குளியல் அறை வசதி : ஆண்கள் கழிவறைகள் 6 மற்றும் பெண்கள் கழிவறைகள் 6 ஆக மொத்தம் 12 கழிவறைகள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக உள்ளன.
சக்கர நாற்காலி : திருக்கோயிலின் நுழைவாயிலில் சக்கர நாற்காலி இரண்டு உள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : இத்திருக்கோயிலில் நன்கொடை / உபயம் தர விரும்பும் பக்தர்கள் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது
அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்பின்படி பிரதி வியாழன்தோறும் வடை பாயாசத்துடன் 500 நபர்களுக்கும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.



