← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401

Arulmigu Bannari Mariamman Temple, Bannari - 638401

மாவட்டம்: ஈரோடு • தாலுகா: சத்தியமங்கலம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

இத்திருக்கோயில் தினமும் விடியற் காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நான்கு காலங்கள் பூஜை நடைபெற்று இரவு 9.00 மணிக்கு திருக்காப்பிடப்படுகிறது. இடையில் நடைசாற்றப்படுவதில்லை.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 05:30 AM to 06:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பண்ணாரி மாரியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): சத்தியமங்கலம்

தொலைபேசி (Phone): 04295243289

முகவரி (Address):

சத்தியமங்கலம், பண்ணாரி, 638401

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - 638401 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Udhagamandalam (48 km), Tiruppur (57 km), Coimbatore (63 km), Erode (72 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 18th - 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பிரசாதம்
இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு 23.04.2022 முதல் நாள்தோறும் அதிகாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.திருக்கோயிலின் வளாகத்தில் திருக்குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நன்கொடை செலுத்தி இத்திட்டத்தில் பங்குபெறலாம்.
பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் பண்ணாரியம்மன் சுயம்பு வடிவமாக அருள்பாலிக்கின்றாள். இத்திருக்கோயிலில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக அம்மன் தெற்குப்பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பசம்ஆகும். இத்திருக்கோயிலில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக திருக்கோயிலுக்கு மேற்குப்புறத்தில் பவானிசாகர் வனப் பகுதியில் குறிப்பிட்ட இடத்திலிருந்துவெட்டி எடுக்கப்படும் மண் சலித்து சுத்தம் செய்த திருமண் அம்மன் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனிக் குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
14.06.2022 முதல் பௌர்ணமி விளக்கு பூஜை துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்தன்றும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு புடவை மற்றும் ஜாக்கெட், பித்தளை காமாட்சியம்மன் விளக்கு, குங்குமச்சிமிழ்(எவர்சில்வர்), பூஜைப்பொருட்கள் உட்பட 22 பொருள்கள் ரூ.800- மதிப்பிலானது வழங்கப்படுகிறது. கலந்து கொள்ளும் நபர் ஒருவருக்கு ரூ.200-மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது.

🛠️ வசதிகள் (Facilities)

பாலூட்டும் தாய்மார்கள் அறை : திருக்கோயிலுக்குக் கைக்குழந்தைகளோடு வருகைதரும் அன்னயர்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலுட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பட்டில் உள்ளது
சக்கர நாற்காலி : முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 3 சக்கர நாற்காலிகள் உள்ளன. இவர்கள் நுழைவு வாயிலிருந்து சன்னதியை எளிதில் சென்றடையும் வகையில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது
மின்கல ஊர்தி : முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சுவாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று கடந்த 04.08.2022 முதல் பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
தங்குமிட வசதி : இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 32 தங்கும் அறைகள் நாள் 1க்கு வாடகை ரூ.250யிலும், 5 தங்கும் அறைகள் நாள் 1க்கு வாடகை ரூ.750யிலும் திருக்கோயிலுக்கு கிழக்குப்புறம் கட்டப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன.
கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலில் திருமணம் செய்யும் பக்தர்களுக்கு வசதியாக திருக்கோயிலுக்கு கிழக்குப்புறத்தில் ரூ.20,000- நாள் வாடகையில் திருமண மண்டபம் ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.
தங்கத் தேர் : அருள்மிகு பண்ணாரி மாரியம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது.தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6.00 மணிக்கு திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும்.பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.1000- செலுத்தி தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்ளலாம்.ஒரு கட்டணத்திற்கு ஐந்து நபர்கள் அனுமதிக்கப்படுவர்.பிரசாதமாக பித்தளை காமாட்சியம்மன் விளக்கு-1, எவர்சில்வர் டப்பா-1, பரிவட்டம், தேங்காய்-2, வாழைப்பழம்-12 மற்றும் சர்க்கரைப்பொங்கல் 0.500 கிராம் ஆகியவை வழங்கப்படுகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க திருக்கோயில் வளாகத்தில் மேற்குபுற நுழைவாயில் அருகே 250 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் திருக்கோயில் அலுவலகத்திற்கு வடபுறம் 500 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் என இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.அதன் மூலம் திருக்கோயில் சுற்றுசுவர்களில் நான்கு புறங்களிலும் நுழைவுவாயில்களுக்கு அருகே 15 முனைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது,
கழிவறை வசதி : இத்திருக்கோயிலுக்கு கிழக்குபுறம் அமைந்துள்ள நுழைவு வாயிலருகே கழிவறைகள் ஆண்களுக்கு 11 பெண்களுக்கு 11. தெப்பக்குளம் பகுதியில் ஆண்களுக்கு 6 பெண்களுக்கு 6 என மொத்தம் 34 கழிவறைகள் உள்ளது, திருக்கோயிலுக்கு தெற்குபகுதியில் திருவிழா கால பயன்பாட்டிற்கு மட்டும் கழிவறைகள் ஆண்களுக்கு 20 பெண்களுக்கு 40 என மொத்தம் 60 கழிவறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது, இது தவிர திருக்கோயில் வளாகத்தில் ஆண்களுக்கு குளியலறைகள் 12 மற்றும் பெண்களுக்கு குளியலறைகள் 12ம் பயன்பாட்டில் உள்ளது,
மருத்துவமனை : இத்திருக்கோயிலின் மேற்குபகுதியில் பவானிசாகர்-பண்ணாரி சாலையில் 02.12.2022 முதல் மருத்துவ மையம் துவங்கப்பட்டு அதிகாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட்டு வருகிறது,இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் மற்றும் இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் சுழற்சிமுறையில் பணிபுரிந்து வருகின்றனர்
நூலக வசதி : இத்திருக்கோயிலுக்கு கிழக்குபுறம் திருக்கோயில் நூலகம் செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது.
முடி காணிக்கை வசதி : இத்திருக்கோயிலுக்கு முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக 12 முடிநீக்கும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக முடி எடுக்கப்பட்டு வருகிறது, முடிகாணிக்கை மண்டபத்திற்கு அருகில் பக்தர்கள் குளிப்பதற்கு எதுவாக குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது, முடிகாணிக்கை செலுத்தும் குழந்தைகளுக்கு முடி காணிக்கை மண்டபத்தில் சுடுநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது,

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் மதியம் உச்சிகால பூஜை முடிவடைந்ததும் பகல் 12 மணிக்கு திருக்கோயிலுக்கு வெளியே சத்தியமங்கலம் சாலையில் கருணை இல்லம் அருகில் உள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் திட்டம் 23.02.2002 முதல்துவங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளதாலும், கர்நாடகா மாநிலமக்கள் அதிகளவில் வருகைபுரிவதாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை புரிவதாலும், திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஞாயிறு, திங்கள், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு 400 நபர்களுக்கும், செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய 4 நாட்களுக்கு 200 நபர்களுக்கும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் 1000 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.200 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ஆகும் செலவுத்தொகை ரூ.7,000 ஆகும். அன்னதான உண்டியல்வரவு, அன்னதான முதலீடுவட்டிவரவு மற்றும் அன்னதான நன்கொடைவரவு மூலம் அன்னதானத் திட்டம் செயல்பட்டுவருகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தாங்கள் விரும்பும் தொகையினை நன்கொடையாக வழங்கி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அன்னதானத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரிச்சட்டம் 80-ன் கீழ் வருமானவரி விலக்கு உண்டு.