← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு அலமேலு மங்கை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில், Melapalayam, Chennimalai - 638051

Arulmigu Alamelumangai Sametha Adhi Narayana Perumal Temple, Melapalayam, Chennimalai - 638051

மாவட்டம்: ஈரோடு • தாலுகா: பெருந்துறை

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
தினசரி நடைதிறக்கும் நேரம் காலை 5.00-12.00மணி வரை நடை சாத்தப்பட்டு சாயங்காலம் 5.00 மணி நடை திறக்கப்பட்டு முதல் இரவு 8.00 மணிக்கு நடை சாத்தப்படும். தனூர் மாத பூஜை நேரம் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. பள்ளியறை பூஜை : 06:00 AM to 08:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஆதி நாராயணப் பெருமாள்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): ஈரோடு

தாலுகா (Taluk): பெருந்துறை

தொலைபேசி (Phone): 04294250223

முகவரி (Address):

ஊத்துக்குளி ரோடு, Melapalayam, Chennimalai, 638051

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அலமேலு மங்கை சமேத ஆதி நாராயணப் பெருமாள் திருக்கோயில், Melapalayam, Chennimalai - 638051 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஆதி நாராயணப் பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Erode (25 km), Tiruppur (31 km), Dharapuram (46 km), Karur (60 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

விமானம் வகை : திராவிடம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

வரலாற்று சிறப்பு
ஆதி நாராயணப் பெருமாள் கோயிலில் முன் மண்டப முகப்பில் பெருமாளை நோக்கி வணங்கும் நிலையில் கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அனுமனுச் சிறிய திருவடி என்றும், கருடனைப் பெரிய திருவடி என்று கூறுவது வைணவ மரபு, வணக்கத்திற்குரிய கருடனைக் கருடாழ்வார் என்பர். காசிப முனிவருக்கு விந்தை என்ற அவர் மனைவிக்கும் மகனாகப் பிறந்தவர் கருடன். கருடன் தேவருலகம் சென்று அவர்களுடன் போராடி அமிர்தம் கொண்டு வந்தார். அமிர்தத்தோடு தர்பைப் புல்லையும் உலகுக்குக் கொண்டு வந்தார். அமிர்தத்தோடு வந்ததால் தர்ப்பை புனிதமும், தூய்மையும் அடைந்தது என்பர். ரிக் வேதம் கருடனைச் சூரியன் படைத்தார் என்று கூறுகிறது. இவர் பறவைகட்கெல்லாம் தலைவர் என்ற பொருளில் புள்ளரசு என்று கூறுவர். திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் புள்ளரசு ஏறம் கள்வர் என்ற தொடர் வருகிறது. தேவர்கள் பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுத்தபோது திருமால் வேண்டிக் கொள்ள மந்திரமலையை ஏந்தி நின்றவர் கருடன், இராம-இராவணண் போரில் இலட்சுமணன் நாகபாசத்ததால் கட்டுண்டு கிடந்த போது வந்து காப்பாற்றியவர் கருடன், வைகுண்டத்திலிருந்து கிரீடாசலம் என்னும் மலையைக் கொண்டு வந்து பூமியில் நிறுவியவர் கருடன், அதுவே இன்றைய திருப்பதி மலையாகும்.
தல விருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் மாவலிங்கமரம்
இதர வகை
ஆழ்வார்கள் சன்னதி தெற்கு பிரகாரத்தில் வடக்கு நோக்கிப் பன்னிரு ஆழ்வார்களும் வரிசையாக எழுந்தருளியுள்ளனர். ஆழ்வார் என்றால் பக்தியில் ஆழ்ந்தவர்கள். மக்களைத் தம் திருப்பாசுரங்கள் மூலம் பக்தியில் ஆழ்த்துபவர்கள் என்பது பொருள். அடியார்களை ஆண்டு கொள்ளும் ஆண்டவனுக்கும் ஆழ்வார் என்ற பெயர் உண்டு. பரமேசுவர விண்ணகர ஆழ்வார் குலோத்துங்க விண்ணகர ஆழ்வார் என்பன கல்வெட்டுத் தொடர்கள். ஆழ்வார்கள் பன்னிருவர் என்ற வரையறை வகுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருளியவை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனப் பெயர் பெற்றது. ஆழ்வார்களையொத்த பிற அருளாளர்களும் ஆழ்வார் எனப்பட்டனர். கூரத்தாழ்வார், நாதமுனியாழ்வார் என அவர்கள் அழைக்கப்பட்டனர். பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை கணேசாழ்வார் என்று அழைப்பர். இங்கு கணேசாழ்வாரும் பால முருகனும் உள்ளனர்.
இதர வகை
விசுவ சேனர் சன்னதி முன் மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் வடபுறம் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் விசுவசேனர் எழுந்தருளியுள்ளார். இவரை சேனை முதலியார், சேனாபதி ஆழ்வார் என்றும் அழைப்பர். இவரே திருமாள் ஆலயங்களுக்கு உரிய அதிகாரியாவார். கோயில் நிர்வாகம் இவருடையதே. அர்ச்சகர்கள் வழிபாட்டைத் தொடங்குமுன் விசுவசேனரைச் சென்று பார்த்த பின்னரே வழிபாட்டைத் தொடங்குவார். அவருடைய அனுமதி பெறுவதாக ஐதீகம். அதேபோல் வழிபாடு முடிந்து விசுவசேனரைப் பார்த்தே அர்ச்சகர்கள் ஆலயத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்பதே வைணவ மரபாகும். திருமால் ஆலயங்களுக்குக் கொடுக்கும் கொடைகள் விசுவசேனர் பெயரிலேயே கொடுக்கப்படும். சிவாலயங்களில் சண்டிகேசுவரர் போலப் பெருமாள் கோயில்கட்கு விசுவசேனர். விசுவசேனர் தோற்றத்திற்குப் புராண வரலாறு ஒன்று கூறப்படுகிறது. ஒருமுறை துருவாசர் செய்த தருமத்தைக் கெடுக்க இந்திரன் குந்தளை என்ற தேவப் பெண்ணை அனுப்பினார். வந்த குந்தளையை வேடப் பெண்ணாகுமாறு துருவாசர் சபித்தார். அவள் பாப விமோசனம் வேண்ட நற்குணம் உடைய மகன் உன் வயிற்றில் பிறக்கும் போது நீ மீண்டும் தெய்வமகள் ஆவாய் என்றனர். வீரவாகு என்னும் வேடனுக்கு சுவற்கலை என்னும் பெயருடைய பெண்ணாகப் பிறந்த குந்தளை பத்திரன் என்பவனை மணந்தாள். ஒருநாள் நர்மதையில் நீராடி மரநிழலில் இருந்தபோது வருணன் அனுக்கிரகத்தால் விசுவசேனர் சுவற்கலைக்குப் பிறந்தார். காசியபரிடம் கல்வி கற்றுத் தவ வலிமையால் சேனை முதலியார் ஆயினர்.
இதர வகை
தொண்டரடிப் பொடியாழ்வார் திருமண்டங்குடி என்னும் ஊரில் ஒரு புரச்சூட வைணவருக்கு பிரபவ வருடம் மார்கழி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி செவ்வாய்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் வனமாலை அம்சமாக அவதாரம் செய்தார். விப்நாராயணன் என்று பெயரிட்டனர். சுற்றறிந்து திருவரங்கத்தில் திருமாலைத் திருப்பணி செய்து வந்தார். எதிலும் பற்றற்றவராக இருந்தார். ஒருநாள் பிராட்டியார் பெருமாளிடம் பெண்ணையும் ஆணாக நினைக்கும் இவரிடம் மாயை என்ன செய்யும் என்றார். இதைக் காட்டுகிறேன் என்ற பெருமாள் ஒரு தேவகன்னியை அனுப்பி இவரை மயக்கச் செய்தார். மயங்காத இவரிடம் தேவகன்னிகை தங்கி அவளும் தேவகைங்கரியம் செய்து வந்தாள். ஒருநாள் நல்ல மழை பெய்து தேவ கன்னிகை நனைந்தாள். தன் பர்ணசாலையில் தங்க தேவகன்னியை அழைத்தார். இருவரும் விருப்புடன் கூடினார். தேவ கன்னிகை பிரியவே பிரிவுத்துயர் தாங்காமல் துயருற்றார். இந்நிலையில் பிராட்டியாருக்குப் பெருமாள் ஆழ்வாரைக் காட்டவே இதிலிருந்து மீள அருள் செய்யப் பிராட்டியார் வேண்டிக் கொண்டார். திருக்கோயில் பொன்வட்டிலைப் பெருமாள் தேவ கன்னிகை வீட்டில் இட்டார். கோயில் பரிசாரகர் தேடித் தேவ கன்னிகை வீட்டில் கண்டுபிடிக்கவே அவன் இப்பொன் வட்டிலை விப்ர நாராயணர் எனக்குக் கொடுத்தார் என்றாள். பெருமாள் தான்தான் பொன்வட்டிலைத் தேவகன்னிகை வீட்டில் இட்டேன் என்றார். (விப்ரநாராயணர்) பெண்ணாசை அகன்றார். ஆழ்வார் இந்நிகழ்ச்சிக்குப் பெரிதும் வருந்தி பாகவத தீர்த்தம் கொண்டு பெருமாளைத் தொழுது வணங்கினார். பெருமாள் ஆழ்வாரைத் தொண்டரடிப்பொடி என அழைத்து அருள்பாலித்தார். ஆழ்வாரும் திருநாடு அலங்கரித்தார். இவர் இயற்றியவை திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகியவை.
இதர வகை
திருப்பாணாழ்வார் உறையூர் துர்மதி வருடம் கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்சம் துவிதியை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் நெற்கதிரில் ஸ்ரீவத்ச அம்சமாக இவர் அவதாரம் செய்தார். பிள்ளையில்லாத பஞ்சமர் தம்பதிகள் எடுத்து வளர்த்தனர். பசும்பாலுண்டு வளர்ந்தார். வளர்ந்த இடம் நோக்கிப் பாணன் என்று அழைக்கப்பட்டார். பஞ்சமர் வீட்டுப்பிள்ளை என்று கருதப்பட்டதால் திருவரங்கம் கோயிலுக்கு உட்செல்ல இயலாமையால் காவிரிக் கரையிலிருந்தவாறே பெரிய பெருமாளைத் திருப்பாடல்கள் மூலம் பாடிப் பரவிச் சேவித்து வந்தார். பெருமாள் மனமகிழ்ந்து இவரைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கோயிலுக்கு வருமாறு லோகசாரங்க முனிவருக்குக் கட்டளையிட்டார். இச்செய்தியை கோயில் அனந்தக்கொத்துக்கு அறிவித்து அவர்கள் அனுமதியுடன் ஆழ்வாரைத் தோளில் சுமந்து கொண்டு சென்று லோகசாரங்க முனிவர் பெருமாள் முன்னிலையில் இறக்கி விட்டார். ஆழ்வார் பெருமாளைக் கண்ணாரக் கண்டு உளம் மகிழ்ந்து பெருமாள் திருமேனியுடன் ஐக்கியமானார்.
இதர வகை
திருமங்கையாழ்வார் திருவாலி நகரத்தில் நீலன் என்னும் சேனாபதிக்கு மகனாக நள வருடம் கார்த்திகை மாதம் பௌர்ணமி வியாழக்கிழமை கிருத்திகை நட்சத்திரத்தன்று வில் அம்சமாக அவதாரம் செய்தார் சோழருக்கு உட்பட்ட குறுநில மன்னராக இருந்தார். அமைச்சர்களுடன் குமுதவல்லி என்னும் பெண்ணை மணத்தற்பொருட்டுக் கேட்டார். வைணவத் திரு இலச்சினை இல்லாததால் அவள் திருமணம் செய்ய மறுக்கவே திருநறையூர் நம்பியிடம் இலச்சினை பெற்றுக் குமுதவல்லியை மணம் செய்து கொண்டார். பகைவர்களை வென்று பரகாலன் என்ற பெயர் பெற்றார். சோழன் பகுதிப் பணம் செலுத்தாததால் சிறையில் அடைத்தான். அரசரிடம் காஞ்சி அத்திகிரிப் பெருமான் காஞ்சிபுரம் வரத் திருவாய் மலர்ந்தருளினார். அரசனிடம் காஞ்சி வந்தால் பகுதிப்பணம் தருகிறேன் என்றார். காஞ்சி சென்று அத்திகிரிப் பெருமாளை சேவித்து வேகவதியாற்றில் புதைந்திருந்த பொற்குவியலை எடுத்துப் பகுதிப் பணம் செலுத்தி விடுகிறேன் என்றார். காஞ்சி சென்று அத்திகிரிப் பெருமாளைச் சேவித்து வேகவதியாற்றில் புதைந்திருந்த பொற்குவியிலை எடுத்துப் பகுதிப் பணம் செலுத்தி மீதிச் செல்வத்துடன் திருவாலி நகர் வந்தார். இதை அறிந்த சோழன் ஆழ்வார் பெருமையை உணர்ந்து பகுதிப் பணத்தைத் திரும்ப கொடுத்து மன்னிக்குமாறு வேண்டினான். அடியார்க்கு அளிக்கப் பொருள் இல்லாமையால் பிறர் பொருளைப் பறித்துத் தானம் செய்தார்.
இதர வகை
திருமழிசையாழ்வார் திருமழிசை என்ற ஊரில் தவம் செய்த பிறகு முனிவரின் தவத்தைக் கெடுக்க இந்திரனால் அனுப்பப்பட்ட தேவகன்னிகையால் சித்தாத்திரி வருடம் தை மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை கூடிய ஞாயிற்றுக் கிழமை மக நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக அவதாரம் செய்தார். பிறகு முனிவரால் பிரப்பஞ் செடி நிழலில் வளர்க்கப்பட்டார். ஒருநாள் இவர் அழுத போது உலக மாதாவாகிய திருமகள் தன் முலைப்பாலைக் கறந்து வள்ளத்து ஏந்தி அருந்தச் சென்று மறைந்தார். திருமழிசையை அடுத்த காட்டில் வாழ்ந்த திருவாளன் என்னும் வேடன் தனக்கு மகப்பேறு இல்லாமையால் இவரை எடுத்து வளர்த்தான். வேடர் குலப் பெண் பாலூட்ட வளர்ந்தனர். எட்டாவது வயதில் வேடர்சேரியை விட்டகன்றார். பிற மதக் கொள்கைகளை மறுத்து வாழ்ந்தார். முதல் ஆழ்வார் மூவருடன் சேர்ந்து திருவல்லிக்கேணிப் பெருமாளை தரிசித்தார். இவர் காஞ்சியில் இருக்கையில் இவர் சிந்திய பாலை உண்டதனால் பிறந்த கணிகண்ணன் என்பவர் பெருமாள் கோயிலில் ஊழியம் செய்த வயதான பெண்ணை இளமையுடையவர் ஆக்கினார். பல்லவ மன்னன் தன்னையும், இளமையாக்குமாறு வேண்ட கணிகண்ணன் மறுத்ததால் நாட்டை விட்டுப் போகுமாறு கட்டளையிட்டான். ஆழ்வாரிடம் கூறிவிட்டு கணிகண்ணன் ஊர் விட்டு அகன்றார். ஆழ்வார். பெருமாளும் நீங்கவே அரசன் இருவரையும் அழைத்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
இதர வகை
Anjaneya Anjaneyar rises to the north of the mandapam south in front of the Melappalayam Adinarayana Perumal temple. Punjikastal, the daughter of Varun, was born as a curse by the curse and was named Anjana. She was married to Kesari, an angel. The celestial child born of gas is named Anjaneyan (son of Anjane). During the growing season, one day the sun will not be considered fruit. Indra became known as Hanuman because of the rupture of his aneurysm with the breaking of the Anu (Cheek). As a gas maindan, the Lord Gods came to boast that they had not been destroyed by prammastra and devastra. Seeking Sita and introducing him as Raman`s messenger, Sita brought Sirenjeevittam and Sutamani and told Rama that he saw Sita and saw Sita. Raman was once used as a vehicle for battle. When Lakshmana etc. got upset, Sanjeevi came up with the hill and made it clear. After the victory, Raman came to Kashi to perform pooja and brought the lingam. Once the face of the monkey, Narasingham, Garuda, Varakam and the horse, Panchamukha fought with the anus. Lord Rama is blessed with the throne of Pattabhishekam. He is Varun in appearance and is very strong due to gas contact. Worship him and give him strength. He waits for eternal celibacy.
இதர வகை
பொய்கையாழ்வார் இவர் பாஞ்சசன்னியம் என்னும் விஷ்ணுவின் சங்கு அம்சமாகக் காஞ்சிபுரத்தில் சொன்னவண்ணம் செய்தார் சன்னதியை அடுத்துள்ள தடாகத்தில் (பொய்கை) பொற்றாமரையில் சித்தாத்தரி வருடம் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் அட்டமிதிதி திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அவதாரம் செய்தார். ஒருமுறை இவர் திருக்குருகூறுக்குச் சென்று பெருமாளைச் சேவித்து மழைநாள் இரவில் ஒரு பாகவதர் வீட்டுச் சிறிய இடத்தில் தங்கியிருக்க இதேபோல் பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் அங்கே வந்தனர். அந்த இடம் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம், மூவரும் நின்று உரையாடியபோது அவர்களுக்கு இடையில் நெருக்கமாகப் பெருமாள் இருப்பதை உணர்ந்த மூவரும் பெருமாளைப் பாடினார். இவர் முதல் திருவந்தாதி அருளினார்.
இதர வகை
பேயாழ்வார். இவர் மயிலாப்பூரில் கேசவப் பெருமாள் சன்னதியை அடுத்துள்ள பொய்கையில் அல்லி மலரில் சித்தாத்திரி வருடம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சம் தசமிதிதி சதய நட்சத்திரம் வியாழக்கிழமை அவதாரம் செய்தார். மூன்று ஆழ்வார்களும் நெருக்குண்ட போது திருமாலை ஞானக் கண்ணால் கண்டு திருக்கண்டேன் என்ற மூன்றாம் திருவந்தாதியை அருள் செய்தார். இவர் விஷ்ணுவின் வாள் அம்சமாக பிறந்தவர்.
இதர வகை
பெரியாழ்வார் கருடனின் அம்சமான இவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் வைணவரின் மகனாக குரோதன வருடம் ஆனி மாதம் சுக்கிலபட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் ஞாயிற்றுக் கிழமை அவதாரம் செய்தார். நந்தவனம் அமைத்து திருமாலுக்குத் திருமாலை சாத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் தல யாத்திரை சென்று வந்தவன் பொற்கிழி கட்டியிருந்தான். பிற மதத்தார் அதை அறுத்தால் தம் மதத்தை நாட்ட வேண்டும் என்று கூறினான். பெரியாழ்வார் அதை அறுத்து விசிட்டாத்வைதம் நிறுவினார். அரசன் பணிந்து வணங்கினான். இவர் பட்டர்பிரான், விஷ்ணு சித்தன் என்று பெயர் பெற்றார். துளசி வனத்தில் ஆண்டாளைக் குழந்தையாகக் கண்டெடுத்து வளர்த்தார். கோதை என பெயரிட்டனர். பெரியாழ்வார் பெருமாளுக்கு தொடுத்த மாலைகளை ஆண்டாள் தான் சூடி அழகானவற்றை அனுப்பினாள். கோதை அணிந்து தந்த மாலை பெருமாளுக்கு ஆகாது என்று கடிந்து வேறு மாலை தொடுத்துக் கொண்டு சென்றார். பெருமாள் கோதை சூட்டிக் கொடுத்த மாலையே மிகத் தூய்மையானதென்றும் அதுவே தனக்கு விருப்பம் என கூறினார். கோதை விரும்பியபடி அழகிய மணவாளப் பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
இதர வகை
நம்மாழ்வார் இவர் சேனை முதலியார் அம்சமாக தாமிரபரணி நதிக்கரைத் திருக்குருகூரில் வேளாளராகிய காரி மாறப்பிரான்-உடையநங்கை தம்பதியினருக்கு பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமியன்று விசாக நட்சத்திரம் வெள்ளிக்கிழமை திருக்குறுங்குடி உறையூர் நம்பி அருளால் அவதாரம் செய்தார். தாய்ப்பால் உண்ணாமல் அழாமல் வளர்ந்த இவருக்கு இம்மாறுதலால் மாறன் என்று பெயரிட்டார் பொலிந்து நின்ற பிரான் சன்னதிக்கு எடுத்துச் சென்றனர். தவழ்ந்து சென்று பெருமாளிடம் வடபுறம் இருந்த புளியமரத்தடியில் பத்மாசனம் இட்டமர்ந்து 16 ஆண்டுகள் யோகத்தில் ஆழ்ந்தார். பகவான் அருளால் ஆதிசேடனே அங்கு புளியமர வடிவாக இருந்தார். என்பர். சிலநாள் கழித்து சேனை முதலியார் அங்கு எழுந்தருளி பஞ்ச சமஸ்காரம் முதலியன செய்து அருளிச் சென்றார். இவர் சடம் எனும் வாயுவைக் கோபித்தவர் ஆகையால் சடகோபன் என்று பெயரிட்டனர். புளிய மரத்தின் கீழிலிருந்து மதுரகவியாழ்வார் பொருட்டு நான்கு வேதங்களின் சாரமாகத் தமிழில் அருளிச் செய்து பெருமாளால் மகிழமாலை சூட்டப் பெற்றார். அதனால் வகுளாபரணர் என்றும், தம் பாசுரங்களால் பிற மதங்களைத் தாழச் செய்தலினால் பராங்குசன் என்று பெயர் பெற்றுத் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவரை வேதம் தமிழ் செய்த மாறன் என்று அழைப்பர். தலைமையும், பெருமையும் கருதி இவர் நம் ஆழ்வார் என அழைக்கப்பட்டார். இவர் அருளிச் செய்தவை திருவிருத்தம் (100 திரு ஆசிரியம் (7), பெரியதிருவந்தாதி(87) திருவாய்மொழி(1102) ஆகியவைகளாகும். இவர் வழியில் தான் இராமனுஜ சித்தாந்தம் தோன்றிது. இவரை வைஷ்ணவ குலபதி என்று அழைப்பர். வைஷ்ணவ மரபில் அடைமொழி இல்லாமல் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வாரைக் குறிக்கும்.
இதர வகை
மதுரகவியாழ்வார் இவர் திருக்கோளூரில் ஒரு அந்தணருக்கு மகனாக ஈசுவர வருடம் சித்திரை மாதம் சுக்கிலபட்சம் சதுர்த்தசி திதி சித்திரை நட்சத்திரம் வெள்ளிக்கிழமை குமுதமலர் அம்சமாக அவதாரம் செய்தார். இவர் திவ்ய தேச யாத்திரையாக அயோத்தி சென்று சேவித்தார். ஒரு இரவு திருக்கோளூர்ப் பெருமாளை அவர் இருக்கும் திசை நோக்கிச் சேவித்தார். அப்போது பேரொளி தோன்றியது. அதன் வழியாகச் சென்று நம்மாழ்வாரை தரிசித்தார். நான்கு வேதங்களின் சாரமாக நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருஆசிரியம், பெரியதிருவந்தாதி ஆகியவைகளை ஏட்டில் எழுதினார். மதுரகவியாழ்வாரும், கண்ணினுள் சிறுத்தாம்பு இயற்றினார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரிக்கவே அவரைத் தெய்வமாக எண்ணிப் பிரதிட்டை செய்து ஐம்பது ஆண்டுகள் ஆராதனை செய்து திருக்கோளூரில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.
இதர வகை
இலட்சுமி நரசிம்மர் சன்னதி மேற்குப் பிரகாரத்தில் இலட்சுமி நரசிம்மர் உள்ளார். நரசிங்க மூர்த்தி இரணியகசிபுவைக் கொன்ற விஷ்ணுவின் அவதாரம், சிங்கத்தலையும் மனித உடலும் கொண்ட திருஉரு, தம்மைத் துதித்த பிரகலாதன் பொருட்டுத் தூணில் இவ்வடிவில் தோன்றி தேவர்களைத் துன்புறுத்திய இரணியகசிபுவைக் கொன்றார். மனிதராலும், விலங்காலும் மரணம் வராதிருக்க வரம் பெற்ற இரணியகசிபுவைக் கொல்ல திருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தார். இரணியகசிபுவைக் கொன்ற பின்னரும் நரசிங்கமூர்த்தியின் கோபம் அடங்காமல் இருந்தது. தேவர்கள் அஞ்சி இலட்சுமியை வேண்டினார். இலட்சுமி நரசிங்கமூர்த்தியிடம் வந்தடையவே அவர் கோபம் நீங்கிச் சாந்தமானார். அவ்வடிவமே லட்சுமி நரசிம்மர் ஆவார். இக்கோலத்தில் உள்ள லட்சுமியைக் கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் மடிமேல்வல்லித்தாயார் என்று கூறும்.
இதர வகை
குலசேகர ஆழ்வார் இவர் திருவஞ்சைக்களம் என்னும் கொல்லி நகரத்தில் திடவிரதன் என்றும் சேர மரபு அரசருக்குத் திருமகனாகப் பவ வருடம் மாசி மாதம் சுக்கில பட்சம் துவாதசி திதி வெள்ளிக்கிழமை புனர்வசு நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். ஒருமுறை இராமாயண கதாகாலட்சேபம் கேட்டிருந்தார். கதை நிகழ்வில் இருடிகள் பெருமானைச் சரணாகதி செய்யும் தருணத்தில் பெருமாள் உயிரைத் துறக்கினும் செய்த சபதத்தைத் துறவேன் என்று கூறியதைக் கேட்டார். இராக்கதர் பதினாயிரம் பேர், பெருமாள் ஒருவராக இருப்பதைக் கண்டு படையோடு நான் பெருமாளுக்கு துணையாகச் செல்வேன் என ஆவேசமுற்று எழுந்தார். பிறகு ஆழ்வார் தன் மகனுக்குப் பட்டம் கட்டி விட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டார். திருவரங்கம், காஞ்சிபுரம், திருமலை முதலிய இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். முகுந்தமாலை, பெருமாள் திருமொழி முதலிய பிரபந்தங்களை அருளிச் செய்தார். மன்னார்கோயிலில் பெருமாளைத் தரிசித்து நிற்கையில் பெருமாள் எண்ணப்படி ஆழ்வார் திருநாடு அலங்கரித்தார்.
இதர வகை
ஹயக்ரீவர் சன்னதி மேற்குப் பிரகாரத்தில் ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. இவர் குதிரை முகம் உடைய திருமால் அவதாரம் ஆவார். ஒரு காலத்தில் திருமால் அசுரரோடு போரிட்ட சோர்வால் அம்பை ஊன்றி உறக்கத்தை மேற்கொண்டார். யாகம் செய்ய விரும்பிய தேவர்கள் திருமாலின் உறக்கம் கண்டு காத்திருந்தனர். இந்திரன் செல் உருவம் கொண்டு அம்பை அறுக்கவே திருமாலின் தலை அறுந்து லவணக் கடலில் விழுந்து மூழ்கி விட்டது. முன்பு ஹயக்ரீவன் என்னும் குதிரை முக அசுரன் பார்வதியை நோக்கித் தவமிருந்தான். சாகாவரம் கேட்டான். உன்னை ஒத்த ஒருவனால்தான் உனக்கு மரணம் என்று பார்வதி வரம் அளித்தார். பார்வதி ஹயக்ரீவன் அழியும் காலம் வந்துவிட்டது என்ற தேவர்களிடம் கூறினார். தலை அறுந்த திருமாலுக்குப் பிரம்மாவால் ஒரு குதிரை முகம் பொருத்தப்பட்டது. குதிரை முகம் உடைய (ஹயக்ரீவர் வடிவம்) திருமால் குதிரை முகம் உடைய அர்ச்சனை ஹயக்ரீவனை அழித்தார். குதிரைமுகம் உடைய திருமாலுக்கு ஹயக்ரீவர் என்று பெயர் ஏற்பட்டது.
இதர வகை
முதல் ஆழ்வார்கள் மூவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார் மூவர் என்பர். இவர்கள் மூவரும் அடுத்தடுத்துத் தோன்றி ஒரே சம காலத்தில் வாழ்ந்தவர்கள்.
இதர வகை
தசாவதாரம் முன் மண்டபத்தில் முகப்பிலும் இருபுறமும் தசாவதாரக்காட்சிகள் அழகிய பெரிய வடிவில் உள்ளன. விஷ்ணு மூர்த்தியின் அவதாரங்கள் பலவாயினும் தலைமையான பத்து அவதாரங்களைத் தொகுத்துக் தசாவதாரம் என்று கூறுவது மரபு. சோமுகாசூரன் வேதங்களைத் திருடிக் கடலுள் வைக்க மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டுப் பிரம்மனுக்குக் கொடுத்தவர் பாற்கடல் கடைகையில் மந்திரமலை நிற்கக் கூர்மாவதாரம் எடுத்துத் தன் முதுகைத் தந்தவர். இரணியாட்சன் பூமியைச் சுருட்டிச் செல்ல வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்று தன் கொம்பால்மீட்டு முன்புபோல் பூமியை நிறுத்தியவர். நரசிம்ம அவதாரம் எடுத்துப் பிரகலாதன் பொருட்டு இரணியணைக் கொன்று பிரகலாதனைக் காத்தவர். வாமனாவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்துப் பெற்று உலகமெல்லாம் ஈரடி மண்ணால் அளந்து ஓரடிக்கு இடம் இல்லாததால் மகாபலி தலையில் அடி வைத்து பாதாளத்தில் அழுத்தித் தேவர் பயன் போக்கியவர். கிருஷ்ணாவதாரம் எடுத்துக் கம்சன் முதலிய தீயவர்களை அழித்து பகவத்கீதை அருளியவர் (கல்கி அவதாரம் எதிர்காலத்தில்) இத்திருக்கோயிலின் தென்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் மேடை மீது மேற்கு நோக்கி திருப்பதி வெங்கடாசலபதி சுதை வடிவில் கம்பீரமான வடிவில் சகல ஐசுவரிய ஆபரணங்களோடு திவ்யமாக எழுந்தருளியுள்ளார்.
இதர வகை
தன்வந்திரி சன்னதி மேற்குப் பிரகாரத்தில் தன்வந்திரி சன்னதி உள்ளது. இவர் விஷ்ணுவின் அம்சமான தேவ வைத்தியர். பாற்கடல் கடையும்போது தோன்றியவர், பின் கடல் அழியும்போது ஆயுர்வேதம் (ஆயுர்வேதம் என்று கூறப்படும்) வெளிப்படுத்த வேண்டி தீர்க்கதன்மன் மகனாகப் பிறந்து பரத்வாசரிடம் ஆயுர்வேதம் கற்று அதன் எட்டு வகையாகப் பிரித்துத் தம் மாணாக்கர்கட்கு உபதேசித்தார். ஒரு கையில் கமண்டலமும், ஒரு கையில் கதாயுதமும் உடையவர். இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்பர். நோய் நீங்க இவரை வணங்கிச் சுகம் பெறலாம்.
இதர வகை
சக்கரத்தாழ்வார் தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிச் சக்கரத்தாழ்வார் உள்ளார். காத்தற் கடவுளாகிய திருமாலின் பல்வேறு பெயர்களில் பஞ்சாயுதன் என்பதும் ஒன்று. அதாவது ஐந்து ஆயுதங்களைப் பெற்றவர் என்பது அதன் பொருள். அவை சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கு என்பன. இவை முறையே சுதர்சனம், சார்ங்கம், நாந்தகம், கௌமோதகி, பாஞ்சசன்னியம் என்ற சிறப்புப் பெயர்களையும் பெறும். ஐந்து ஆயுதங்களில் முதன்மையானதும், பெருமை மிக்கதும் சுதர்சனம் என்ற பெயருடைய சக்கர ஆயுதம் ஆகும். அதனால் திருமாலுக்கு சக்கராயுதன், சக்கரபாணி என்ற பெயர்கள் உண்டு. இவ்வாறு சிறப்புமிக்க திருமாள் ஆயுதமான சக்கரத்தாழ்வார் சென்னிமலை ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீசுதர்சன யோக நரசிம்மருடன் எழுந்தருளியுள்ளார். சுதர்சன சக்கரம் ஆயிரம் முகங்களை உடையது. மிகவும் உறுதியும் கீர்த்தியும் மிக்கது.
இதர வகை
பூதத்தாழ்வார் இவர் விஷ்ணுவின் கதாம்சமாக (தண்டாயுதம்) மாமல்லபுரம் நந்தவனத்தில் உள்ள குருக்கத்தி மலரில் சித்தாத்திரி வருடம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சம் நவமி திதி அவிட்ட நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர். பெருமாளை நூறு பாடல்களால் பாடிப் பரவினார். இவர் அருளியவை இரண்டாம் திருவந்தாதி.
இதர வகை
ஆண்டாள் சன்னதி வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி ஆண்டாள் சன்னதி உள்ளது. பெரியாழ்வார் கொத்தி வளர்த்த நந்தவனத்தில் துளசியின் அடியில் நள வருடம் ஆடிமாதம் சுக்கில பட்சம் சதுர்த்தி திதி செவ்வாய்க் கிழமை பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் கோதை பூமிப்பிராட்டி முதலிய மூவருள் ஒருவரே எனக் கண்டு சூடிக் கொடுத்தாள் என பெயரிட்டார். கோதைக்குத் திருமண வயது வந்தது. மணமகன் பற்றிக் கேட்டுக் கோதை மனிதம் எனில் வாழேன் மணிவண்ணன் அல்லது என்று கூறினார். பெரியாழ்வார் திவ்ய தேசங்களையும் அங்கு எழுந்தருளியுள்ள இறை மூர்த்தங்களையும் வரிசையாகச் சொல்லிக் கொண்டு வந்தார். திருவரங்கம்-திருவரங்கன் திருநாமம் உச்சரிக்கப்படும் போது கோதை நாணமும் வெட்கமும் அடைந்தாள். கோதையைத் திருமணக் கோலத்தோடு நம்மிடம் அழைத்து வருக என பெரியாழ்வாருக்கும், இச்செய்தியை கோயில் நிர்வாகிகளுக்கும் திருவரங்கன் அறிவித்தார். ஒருநாள் திருமணக்கோலத்தோடு சென்ற கோதையை அர்ச்சகர்கள் திருவரங்கன் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். கோதை திருவரங்களோடு ஐக்கியமானாள். கோவை சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற பெயர் பெற்றார். பெருமாளால் ஆட்கொள்ளப்பட்ட காரணத்தால் ஆண்டாள் என்றும் கோதை என்றும் பெயர் பெற்றார். ஆடிப்பூரத்தன்று அவர் அவதாரம் செய்ததால் விண்ணகரங்களில் சிறப்பாக ஆண்டாள் திருநட்சத்திர விழா என்றும் திருஆடிப்பூர விழா நடப்பது வழக்கம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் மார்கழியில் நடப்பது உண்டு. ஆண்டாள் சன்னதி முன் துளசிமடம் உள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இத்திருக்கோயிலில் உள்ளது.