← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம் - 603406

Arulmigu Viyagarapureswrar Temple, Thirupulivanam - 603406

மாவட்டம்: காஞ்சிபுரம் • தாலுகா: உத்திரமேரூர்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

08:00 AM to 10:00 AM
05:30 PM to 07:00 PM
காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை (-) : 08:00 AM to 09:00 AM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): வியாக்ரபுரீஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): காஞ்சிபுரம்

தாலுகா (Taluk): உத்திரமேரூர்

முகவரி (Address):

சன்னதி தெரு, திருப்புலிவனம், 603406

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புலிவனம் - 603406 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Kanchipuram (19 km), Chingleput (27 km), Arakkonam (47 km), Arni (49 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : கஜாப்ப்ருஷ்டம் விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பல்லவர்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : -

தல சிறப்பு (Thiruthala Special):

கட்டட சிறப்பு
ஏழு நுழைவாயில்கள் - முக்திப்பேறு உயிர்களின் பிறப்பு என்பது ஏழுவகை. அவை தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்பதாகும். ஒவ்வொரு உயிரும், பிறவிதோறும் செய்யும் நல்வினை, தீவினைக்கேற்றவாறு பல்வேறு பிறவியெடுக்கிறது. முத்திப்பேறு என்பது வினைநீக்கம்பெற்றுப் பெருமானுடன் இரண்டறக் கலத்தலாகும். இத்தலத்துப் பெருமான் வீடுபேற்றை (முக்தி) அளிப்பதால், பிறவிப்பிணியை நீக்கும்வண்ணம் ஏழு நுழைவாயில்கள் உள்ள இத்திருக்கோயிலில், உயிர்களின் ஆறாவது பிறப்பான மானிடர்கள் ஆறு நுழைவாயில்களைக் கடந்துச் சென்றால், இறைவனை (வியாக்ரபுரீசர்) அருகிலிருந்து தரிசிக்கலாம். உயிர்கள் தளைகள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி தேவராகப் பிறப்பெய்தும்போது, ஏழாவது நுழைவாயிலைக் கடந்து சென்று இறைவனோடு கலந்து இறையின்பம் நுகரலாம்.
கட்டட சிறப்பு
ஏழு நுழைவாயில்கள் - முக்திப்பேறு உயிர்களின் பிறப்பு என்பது ஏழுவகை. அவை தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்பதாகும். ஒவ்வொரு உயிரும், பிறவிதோறும் செய்யும் நல்வினை, தீவினைக்கேற்றவாறு பல்வேறு பிறவியெடுக்கிறது. முத்திப்பேறு என்பது வினைநீக்கம்பெற்றுப் பெருமானுடன் இரண்டறக் கலத்தலாகும். இத்தலத்துப் பெருமான் வீடுபேற்றை (முக்தி) அளிப்பதால், பிறவிப்பிணியை நீக்கும்வண்ணம் ஏழு நுழைவாயில்கள் உள்ள இத்திருக்கோயிலில், உயிர்களின் ஆறாவது பிறப்பான மானிடர்கள் ஆறு நுழைவாயில்களைக் கடந்துச் சென்றால், இறைவனை (வியாக்ரபுரீசர்) அருகிலிருந்து தரிசிக்கலாம். உயிர்கள் தளைகள் (ஆணவம், கன்மம், மாயை) நீங்கி தேவராகப் பிறப்பெய்தும்போது, ஏழாவது நுழைவாயிலைக் கடந்து சென்று இறைவனோடு கலந்து இறையின்பம் நுகரலாம்.
கட்டட சிறப்பு
கருவறை அமைப்பு இத்திருக்கோயிலின் கருவறை கஜப்பிருஷ்டம் எனப்படும் தூங்காணை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. கருவறையில் வியாக்ரபுரீசர் சதுர வடிவ ஆவுடையார்மேல் மிக உயர்ந்த இலிங்கத் திருமேனி கொண்டு, கிழக்கு முகமாக எழந்தருளியுள்ளார். புலி இறைவனை வழிபடும்போது ஏற்பட்ட நகத்தடங்களை இன்றும் லிங்கத் திருமேனியில் காணலாம். இலிங்கத் திருமேனியில் குடுமி கொண்ட சதாசிவமூர்த்தி இத்தலத்தினைத் தவிர வேறெங்குமில்லை. கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் சுரங்கம் ஒன்று உள்ளது. போர்க்காலங்களிலும், பிற இடர்ப்பாடுகள் நேரிடும் போதும் திருக்கோயிலிலுள்ள உற்சவத் திருமேனிகளையும், விலை உயர்ந்த அணிவகைகளையும் இத்தகைய சுரங்கங்களில் வைத்து பாதுகாக்கும் வழக்கம் அக்காலத்தில் உண்டு. தவிர, போர்க்காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்பிச்செல்வதற்கும் மன்னர்கள் சுரங்கப் பாதையைப் பயன்படுத்துவதுண்டு. கலையழகு இத்திருக்கோயிலின் மூன்று நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும், அதற்கருகில் அழகிய படிகளைக் கொண்ட திருக்குளமும் உள்ளது. இதற்கருகில் காண்போரைக் கவரும் வண்ணம் அழகிய கற்சக்கரங்களுடன் கூடிய நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. மிகவும் பழுதடைந்துள்ள இம்மண்டபம் தற்போது செய்யப்பட்டு வரும் திருப்பணியில் புதுப்பிக்கப்படவுள்ளது. திருக்கோயில் மூன்றுநிலை இராஜகோபுரத்துள் நுழைந்தவுடன் முதலில் காட்சியளிப்பது 16 கால் மண்டபமாகும். இம்மண்டபத்தில் இத்திருக்கோயிலின் வரலாற்றை விவரிக்கும் வகையில் புலி இலிங்கபூசை செய்யும் சிற்பமும், வியாக்ரபாதர் இலிங்கபூசை செய்யும் சிற்பமும் அனைவரும் கண்டு வணங்கவேண்டிய ஒன்றாகும். நரசிம்மப்பெருமான் இரண்யாசுரனை வதைக்கும் சிற்பம், கங்காளர் சிற்பம், மகிஷாசுரமர்த்தினி சிற்பம், பஞ்சாக்னியின்மேல் காமாட்சியம்மை ஒற்றைக்காலில் தவம் செய்வது, கண்ணப்பநாயனார், உலகளந்தபெருமாள், மாகாளன் எனும் பாம்பு சிவனைப் பூசிப்பது மற்றும் அனுமன் ஆகிய சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அம்மண்டபத் தூண்களில் வடிக்கப்பட்டுக் காலவெள்ளத்தில் அவை சிதைந்துள்ளது. திருக்கோயிலினுள் முதல்பிராகாரத்தில் உள்ள ஒவ்வொரு உருளைவடிவத் தூண்களிலும் கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர், எறிபத்தர், மெய்ப்பொருள்நாயனார், இயற்பகையார், விறன்மிண்டர், திருநீலகண்டர், அரிவட்டாயர், அப்பூதி அடிகள், மானக்கஞ்சாறர், ஏனாதிநாதர், குங்குலியக்கலையர், அமர்நீதியார் 6 601 நாயன்மார்களின் பெயர்கள் ஒவ்வொன்றாகப் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நுழைவாயிலில் இருபுறங்களிலும் சுவற்றில் துர்க்கையும், பைரவரும் எழுந்தருளி இத்திருக்கோயிலைக் காத்து வருகின்றனர். வியாக்ரபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள திருச்சன்னிதியைச் சுற்றி கோஷ்டங்களில் வினாயகருக்குமேல் சிவகாமி அம்பாளுடன் நடராஜர் சிற்பமும், திருமாலுக்குமேல் தேவியருடன் பரமபதநாதன் வீற்றிருக்கும் சிற்பமும், துர்க்கைக்கு மேல் துர்க்கை மகிஷாசுரனுடன் போர்செய்வதுபோன்ற சிற்பமும் மிகவும் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுக் காண்போரை வியக்கவைக்கிறது. கோஷ்ட திருமாலுக்கு எதிரில் உள்ள தூணில் நின்ற நிலையில் உள்ள அனுக்ரக நரசிம்மப்பெருமான் திருக்கோலம் கண்டு வணங்குவோரது பயத்தைப் போக்குகிறது. கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் வலப்புறம் இரண்டு சிங்கங்கள் தங்களது தலைமேல், தளத்தினை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ள தூண்கள் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம். பல்லவ மன்னர்களின் இராஜகோபுர நுழைவாயிலிலிருந்து, ஒவ்வொரு நுழைவாயிலும் சற்று உயரமாக அமைந்து, இறுதியில் ஏழாவது நுழைவுவாயிலைக் கடந்தால் உயர்ந்த கருவறையில் மூலவர் எழுந்தருளி திருவருள் புரிந்து வருகின்றனர்.
பிரார்த்தனை
பிரார்த்தனைத் தலம் இத்திருக்கோயில் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள மகாதேவரை வணங்கியே புலியாக சாபம்பெற்ற மிருகண்டு முனிவர், பிறவிப்பிணி நீங்கி வீடுபேறு பெற்றார். பிறவிப்பிணியை நீக்கும் ஏழு நுழைவாயில்கள் (உயிர்களின் பிறப்புக்கள் ஏழு) அமையப்பெற்ற திருக்கோயில் இதுவாகும். இப்பெருமானைப் பூஜித்து வியாக்ரபாத முனிவர் உபமன்யுவை மகனாகப்பெற்றார். குலோத்துங்க சோழனும் இவ்விடத்து யாகஞ்செய்து, வியாக்ரபுரீசப் பெருமானை வணங்கிக் குழந்தைப்பேறு பெற்றான். இங்கு பதினெட்டு சோமவாரங்கள் வருகைதந்து, நெய்விளக்கேற்றி, அர்ச்சித்து வணங்குபவர்கள் குழந்தைப்பேற்றைப் பெறுவர். சிம்மராசியினர் பதினெட்டு குருவாரங்கள் நெய்விளக்கேற்றி, அர்ச்சித்து சிம்ம தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் ராஜயோகம் பெற்று எல்லாத் துறைகளிலும் ஏற்றமும் வழக்குகளில் வெற்றியும் பெறுவர். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அனுக்ரக நரசிம்மப் பெருமானை பிரதோஷ காலத்தில் வணங்கிவந்தால் வாழ்வில் மரணபயம் நீங்கி மகிழ்ச்சியுண்டாகும். பிரதோஷ வேளையன்று நந்திதேவரின் கொம்புகளுக் கிடையில் உயிர்கள் மகிழும் வண்ணம் பெருமான் திருநடனம் புரிகின்றனர். பிரதோஷ வேளையிலேதான், நரசிம்மப் பெருமாள் இரண்யனை வதம் செய்யத் தோன்றினார். ஆதலால் வைணவர் பிரதோஷ வேளையில் நரசிம்மப்பெருமாளைப் பூஜிப்பர். இத்தலத்தில் புலிவலப்பெருமானை வலம் வருவோர், நரசிம்மப் பெருமாளையும் சேர்ந்தே வலம்வரும் வண்ணம் இத்திருக்கோயில் அமைப்பு உள்ளது. தனிச்சிறப்பாகும் . பதினெட்டு சுக்கிரவாரங்கள் எலுமிச்சை விளக்கேற்றி அமிர்தகுஜாம்பாளை வணங்கினால் தீராத நோய்களும் தீர்ந்து சொர்ணமயமான தேகம் பெற்று நலமுடன் வாழ்வர்.
இதர வகை
சுயம்பு லிங்கம் திருப்புலிவனம் எனும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வியாக்ரபுரீசப் பெருமான் சுயம்புவாய்த் தோன்றினார்.
இதர வகை
ஆர்ஷித லிங்கம்-முனிவர்கள் வழிபட்ட லிங்கம் வியாக்ரபாத முனிவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள புலிவனப் பெருமானை வணங்கி சந்தானப் பேற்றைப் பெற்றனர். பிறகு முனிவர், அடியேனை சம்சார பந்தத்திலிருந்து விடுவித்தருள வேண்டும் எனப் பெருமானிடம் வேண்டி நின்றனர். அதன்படி அம்முனிவருக்குப் பெருமான், யோகத்தின் சிறப்பை உணர்த்தியருளி, ஆலமர் செல்வராக அருள் செய்தனர். பிறகு முனிவர் இவ்விடத்து முத்தீஸ்வரர் எனும் பெயரால் இலிங்கம் ஸ்தாபித்து வணங்கியிருந்து வீடுபேறடைந்தனர். இச்சன்னிதி வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. பல சித்தர்கள் இவ்விடத்து வணங்கியிருந்து விரும்பிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

புலிவல தீர்த்தம் : புலிவல தீர்த்தம்

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

கண்ணப்பர் : கண்ணப்பநாயனார் சிற்பம் கருங்கல் தூண்களில் உள்ளது.