⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:30 PM
04:00 PM to 08:30 PM
செவ்வாய் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விளா பூஜை : 06:00 AM to 06:00 AM IST
2. சிறுகால சந்தி பூஜை : 07:00 AM to 07:00 AM IST
3. காலசந்தி பூஜை : 09:00 AM to 09:00 AM IST
4. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:00 PM IST
5. சாயரட்சை பூஜை : 06:00 PM to 06:00 PM IST
6. இராக்கால பூஜை : 08:00 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): வேலாயுதசாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): ஈரோடு
தாலுகா (Taluk): ஈரோடு
தொலைபேசி (Phone): 04242430114
முகவரி (Address):
Thindal, 638012
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், Thindal - 638012 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வேலாயுதசாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 15th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Erode (9 km), Tiruppur (46 km), Namakkal (59 km), Karur (62 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 15th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர்
பாரம்பரிய கோயிலா : No
தல சிறப்பு (Thiruthala Special):
பிரார்த்தனை
திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் மூந்நூறு. சிவபெருமானின் ஸ்த்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் மற்றும் ஈஷானம் என்னும் ஐந்து முகங்களும் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸ்ம்ஹாரம், திரோபாவம், அனுக்கிரகம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்னும் ஐந்தொழில்களையும் பஞ்சபூதங்களுக்கு அடிப்படையாய் பிரம்மமாய் நின்று உயிர்கள் நிலைபெற நடத்தி வருகின்றது. இத்துடன் அதோமுகம் என்ற ஆறாவது முகம் உள்நோக்கி நின்று இவற்றிற்கு ஆதாரமாய் இருந்து வருகின்றது. முகம் ஒன்றிற்கு 50 என இந்த ஆறு முகங்கள் கொண்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியத்திற்கு 300 பீஜமந்திரங்களால் (செந்நிற) மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தல் திரிசதை அர்ச்சனை எனப்படும். மேற்படி அர்ச்சனை இத்திருக்கோயிலில் பிரதி வாரம் செவ்வாய் கிழமைகளில் காலை 10.30 மணி, மதியம் 12.30 மணி, மற்றும் மாலை 5.30 மணி ஸ்ரீ சத்ரூ சம்ஹார சிவசுப்ரமணிய திரிசதீ அர்ச்சனை நடைபெற்று வருகின்றது. பாவமனைத்தும் போக்கும் மகா சக்தி வாய்ந்த இந்த அர்ச்சனை திருமணத்தடை, குழந்தை பாக்கியம் பெற, செவ்வாய் தோஷம், எதிரிகளால் தொல்லை, தொழில் முன்னேற்றம், காரியத் தடங்கல், தீராத நோய்கள் மற்றும் இதர கெடுதலான நிகழ்வுகளை வாழ்வினில் நீக்கி சகல சக்திகளையும் தரும் இந்த பூஜையில் கலந்து கொண்டு நற்பலன் பெற வேண்டுகிறோம்.
பிரார்த்தனை
மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியன்று மாலை 5.30 மணிக்கு இத்திருக்கோயிலில் பால்குடம் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதையொட்டி கீழேயுள்ள அரசமர விநாயகர் திருக்கோயிலில் பால் குடங்களை மந்தரித்து மலையை சுற்றி கிரிவலம் செய்து வேலாயுதசுவாமிக்கு சிறப்பாக பால் அபிஷேகம் நடைபெறுகிறது. மேற்படி பால்குடம் அபிஷேகத்தில் பங்கெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அந்த மாத சஷ்டி தினத்திற்கு முன்பு திருக்கோயில் அலுவலகத்தில் பால்குடம் கட்டணச்சீட்டு வாங்கி பங்குகொள்ளலாம்.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 500 லிட்டர் அளவு கொண்டு மலைமேல் பகுதியில் அமைந்துள்ளது
முடி காணிக்கை வசதி : திருக்கோயில் அடிவாரத்தில் முடிகாணிக்கை மண்டபம் ஒன்று உள்ளது. சேவார்த்திகளுக்கு இலவசமாக முடி காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை மண்டபத்தில் அருகில் குளியலறை வசதியும் உள்ளது.
நூலக வசதி : திருக்கோயில் அடிவாரத்தில் ஆன்மிக நூலகம் ஒன்று உள்ளது. மேற்படி நூலகத்தில் சுமார் 500 புத்தகங்களுக்கு மேல் உள்ளது. தினசரி நாளிதழ் மற்றும் சமய புத்தகங்கள் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் மற்றும் சேவார்த்திகள் படித்துப்பயன்பெறலாம்.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 500 லிட்டர் அளவு கொண்டு மலைமேல் பகுதியில் அமைந்துள்ளது
வாகன நிறுத்தம் : திருக்கோயில் அடிவார நுழைவாயில் அருகில் சுமாா் 42000 சதுர அடி பரப்பில் வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயில் அடிவார நுழைவாயில் முன்பு இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது
தங்கத் தேர் : தங்கரதம் புறப்பாடு கட்டணம் ரூ.1500.00
புறப்பாடு நேரம் - இரவு 7.00 மணி
அன்றைய தினம் மாலை 4 மணி வரை தங்கதோ் புறப்பாட்டு சேவைக்கு கட்டணம் செலுத்தலாம்.
கழிவறை வசதி : அடிவாரத்தில் கழிவறை ஆண்கள் - 3 மற்றும் பெண்கள் - 3
மலைமேல் பகுதியில் கழிவறை ஆண்கள் - 2 மற்றும் பெண்கள் - 2
குளியல் அறை வசதி : அடிவாரத்தில் குழியலறை ஆண்கள் - 1 மற்றும் பெண்கள் - 1
மலைமேல் பகுதியில் குழியலறை ஆண்கள் - 1 மற்றும் பெண்கள் - 1
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : உபய காணிக்கை செலுத்தி விரும்பும் அன்பர்கள் இத்திருக்கோயில் சேமிப்பு கணக்கு எண்ணிற்கு காசோலையை செயல் அலுவலர், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல் என்ற பெயரில் வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி கணக்கு விபரம்
கணக்கு எண். 25670100000199
வங்கி : பாங்க் ஆப் பரோடா
கிளை: திண்டல்
IFSC code: BARB0THINDA (Fifth letter is zero)
அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அன்னதான திட்டம் இத்திருக்கோயிலில் 15.09.2002 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சிகால பூஜை முடிந்தவுடன் நண்பகல் 12.00 மணிக்கு சேவார்த்திகளுக்கு அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ரூ.25000/- செலுத்தி வாழ்நாள் முழுமையும் தாங்கள் விரும்பும் ஒருநாளில் அன்னதானமிட்டு நிரந்திர கட்டளைதாரராகலாம். தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் அன்னதானம் வழங்கிடலாம். நாளொன்றுக்கு அன்னதானமிட ரூ.2500/- அலுவலகத்தில் செலுத்தி விரும்பும் நாளில் அன்னதானமிடலாம். மேற்படி அன்னதான திட்ட நன்கொடைகளுக்கு 80ஜி வரி விலக்கு உள்ளது.



