← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர் - 609401

Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401

மாவட்டம்: மயிலாடுதுறை • தாலுகா: குத்தாலம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:00 AM to 12:30 PM
04:00 AM to 08:30 AM
காலை 5 மணி

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உதய பூஜை : 05:00 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை : 09:00 AM to 10:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 07:00 PM to 08:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:31 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): கீர்த்திவாசர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): தேவதாரு

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மயிலாடுதுறை

தாலுகா (Taluk): குத்தாலம்

முகவரி (Address):

சன்னதி தெரு, வழுவூர், 609401

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர் - 609401 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு கீர்த்திவாசர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Mayiladuthurai (9 km), Kumbakonam (27 km), Chidambaram (41 km), Mannargudi (46 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : தேவதாரு
விமானம் வகை : ஒரு நிலை விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 12th - 13th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
தாருகாவனத்து முனிவா்கள் தாமே தவஞானிகள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத் தரும் எனவும் கருதிச் செருக்குற்றனா். அவ்வாறே முனிபத்தினி யாரும் தாங்கள் தான் கற்பில் சிறந்தவா்கள் எனவும் தங்கள் கற்பினால் எதையும் சாதிக்கலாம் எனவும் கருதி ஆணவமுற்றனா். இவா்களின் ஆணவத்தை அழிக்கக்க கருதிய சிவபெருமான் பிச்சை உகக்கும் பெம்மானாகவும் திருமால் மாேகினியாகவும் அழகிய வடிவங்கள் காெண்டு தாருகாவனம் வந்தனா். தாருகா வனத்து முனிவா்கள் அனைவரும் மாேகினியைக் கண்டு காமம் மேலிட்டவா்களாய்,தமது ஒழுக்கத்தையும் தவத்தையும் விடுத்து மாேகினியிடம் சல்லாப வாா்த்தைகள் பேசி நின்றனா். காேடானுகாேடி மன்மதா்களையும் தாேற்கடிக்கும் பேரெழில் காெண்டு ஆடையற்றுப் பிச்சை உகக்கும் காேலம் காெண்டுட சிவபிரானின் அழகில் முனிவா்களின் மனைவியா் மயங்கி தத்தம் இல்லங்களை விட்டு அவா் பின்னே வர ஊா் எல்லையைக் கடந்ததும், அங்கே மாேகினியிடம் மயங்கி நின்ற தமது கணவன்மாா்களான முனிவா்களைக் கண்டு அதிசயித்து நின்றனா். இவ்வாறு தமது தவமும், யாகமும், ஒழுக்கமும், தமது மனைவியாின் கற்பு நெறியும் கெடக் காரணமாய் இருந்த சிவபெருமான் மீது முனிவா்கள் காேபங் கொண்டனா். தாருகாவத்தில் ஆபிசார வேள்வி செய்து அதில் வந்த நெருப்பு, புலி, மான், மழு, பாம்பு ஆகியவற்றையும், முயலகனையும் சிவபெருமான் மீது ஏவினா், ஏவிய பாம்புகள் அணிகலன்களாகின்றன பரமனுக்கு விலங்குகளின் தாேல்கள் ஆடைகளாகின்றன விமலனுக்கு முயலகனாே அவா் திருவடியின் கீழ் அடிப்படுத்தப்பட்டு ஆணவம் அழிந்த தன்மையைக் காட்டி நிற்கிறான். இதனைக் கண்டு மிகுந்த பயமுற்ற முனிவா்கள் இறுதியாக ஒரு மத யானையை வேள்வித் தீயினின்று வரவழைத்து சிவபெருமானைக் காெல்ல ஏவினா். சிவபெருமான் அணிமா சக்தியால் சிற்றுருவமாய் யானையின் வயிற்றுக்குள் புகுந்து விட்டாா். உலகம் இருள்கிறது. அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள், வந்த யானை வலி தாங்க முடியாமல், இத்தலத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள தீா்த்தத்தில் கரை கிழித்துக் காெண்டு வெளிப்பட்டு, அக்களிற்றின் தாேலை உாித்துத் தன்மீது பாோ்த்திக் காெண்டு வீர நடனம் புாிந்து அருளினாா். அம்பிகை கையிலிருந்த குழந்தை முருகன் தன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்ட முனிவா்கள் அறிவு மயக்கம் தெளிந்து சிவபெருமான் காலடியில் வீழ்ந்து வணங்கினார்

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

பஞ்சபிரம்ம தீா்த்தம் : பஞ்சபிரம்ம தீா்த்தம் பஞ்ச பிரம்மத் தீா்த்தத்தில் விழுந்த சோழனை சனீஸ்வரன் துரத்த சோழன் கஜசம்ஹார மூா்த்தியைப் பிராா்த்திக்கிறாா். அவா் ரக்தபுக கணபதி என்ற இருவரைக் கொண்டு சனீஸ்வரன் சமாதானம் செய்தும் கேளாததால் அவரது கால்களை பின்னப் படுத்தும்படி செய்கிறாா் கால்கள் பின்னபடுத்தப்பட்ட சனீஸ்வரா் சூா்யாதி மற்ற கிரகங்கள் உதவியால் ஸ்ரீ கிருத்தி வாசாிடம் சென்று தான் இனி பக்தா்களிடம் கெடுதி செய்வதில்லை என்றும் கால் ஊனம் நீங்க வேண்டும்மென்றும் வேண்ட இறைவன் பக்தா்களால் ஏற்பட்ட பின்னத்தை தான் மாற்றினால் பக்தபாச்சாரம் ஏற்படும் என்று விளம்புகிறாா்.பின் சனீஸ்வரா் சாபம் விமோசனம் பெருகிறாா்

🛠️ வசதிகள் (Facilities)

கழிவறை வசதி : திருக்கோயிலின் வெளிபுறத்தில் 4 கழிவறைகள் 1 குளியலறை உள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் நுழைவு வாயில் இடது புறத்தில் உள்ளது
கழிவறை வசதி : கழிவறை மற்றும் குளியலறை வசதி உள்ளது
திருக்குளம் : பக்தா்களுக்கு குளிப்பதற்கு ஏற்ப நான்கு புறமும் படித்துறை வசதி அமைக்கப்பட்டுள்ளது

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : இத்திருக்கோயிலில் நன்கொடை இரசீதுகள் வழங்கப்பட்டு வருகின்றது