⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 08:30 PM
காலை6.00 முதல்12.00மணிவரை
மாலை4.00 முதல்8.30.மணிவரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 06:00 AM to 08:00 AM IST
2. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை : 04:00 PM to 06:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): வேதபுரீஸ்வரர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பாலகுாம்பிகை
ஸ்தல விருட்சம் (Sacred Tree): பனை மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருவண்ணாமலை
தாலுகா (Taluk): செய்யார்
தொலைபேசி (Phone): 04182224998
முகவரி (Address):
கிழக்கு மாட வீதி, திருவத்திபுரம், செய்யாறு, 604407
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில், திருவத்திபுரம், செய்யாறு - 604407 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வேதபுரீஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Arni (25 km), Kanchipuram (30 km), Arcot (35 km), Vellore (49 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : திருஞானசம்பந்தர்
பூத்தேர்ந்து ஆயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 1.54.2
உள்வேர் போல நொடிமை யினார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 1.54.3
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4
குழையார் காதீர்1 கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே. 1.54.5
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரே2யுமை நேடியே. 1.54.9
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே. 1.54.10
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. 1.54.11
அருணாகிரிநாதர் திருப்புகழ்
தவர்வாள் தோமர சூலம் தரியாக் காதியர் சூரும்
தணியாச் சாகர மேழும் கிரியேழும்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்
தரிகூத் தாடிய மாவும் - தனைகாவல்
துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட் டாளொரு தேனும்
துணையாய்த் தாழ்வற வாழும் பெரியோனே
துணையாய்க் காவல் செய்வாயென் றுணராப் பாவிகள்பாலும்
தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் படி வேதம்
படியாய்ப் பாதகர் பாயன்றியுடாப் பேதைகள் கேசம்
பரிகோப் பாளிகள் யாரும் - கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறும் திருவாக் காலொளி சேர்வெண்
திருநீற் றாலம ராடும் சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி ஆரம் கொழியாக் கோமளம் வீசும்
திருவோத் தூர்தனில் மேவும் - பெருமாளே
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : பனை மரம்
விமானம் வகை : 3 நிலை சுகந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சேரன், சோழன், பல்லவர், விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருஞானசம்பந்தர்
பூத்தேர்ந்து ஆயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே. 1.54.2
உள்வேர் போல நொடிமை யினார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 1.54.3
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4
குழையார் காதீர்1 கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயருள் நல்குமே. 1.54.5
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6
தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7
என்றா னிம்மலை யென்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரே2யுமை நேடியே. 1.54.9
கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே. 1.54.10
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. 1.54.11
அருணாகிரிநாதர் திருப்புகழ்
தவர்வாள் தோமர சூலம் தரியாக் காதியர் சூரும்
தணியாச் சாகர மேழும் கிரியேழும்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்
தரிகூத் தாடிய மாவும் - தனைகாவல்
துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட் டாளொரு தேனும்
துணையாய்த் தாழ்வற வாழும் பெரியோனே
துணையாய்க் காவல் செய்வாயென் றுணராப் பாவிகள்பாலும்
தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் படி வேதம்
படியாய்ப் பாதகர் பாயன்றியுடாப் பேதைகள் கேசம்
பரிகோப் பாளிகள் யாரும் - கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறும் திருவாக் காலொளி சேர்வெண்
திருநீற் றாலம ராடும் சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி ஆரம் கொழியாக் கோமளம் வீசும்
திருவோத் தூர்தனில் மேவும் - பெருமாளே
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
நாகலிங்க அபிஷேகம் :- திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு கேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். தோட்டீரே துத்தி ஐந்துலை நாகத்தை ஆட்டீரே, அடியார் வினை ஓட்டீரே என்று இசைத்தார் சம்பந்தர். எனவே இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நாகலிங்கமானது கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன் மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானைகள், அதன் மேல் 11 சர்ப்பங்கள், அதன் மேல் லிங்கம் அதன் மேல் 11 சர்ப்பத்தலைகள் உள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் இராகு காலத்தில் பூஜை செய்து வழிப்பட்டால் நாக தோஷம் நீங்கும்.
பரிகாரம்
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் நாகலிங்கபூஜை மிகவும் விசேஷமாக நடைபெறும் நாகதோஷத்திற்கு சிறந்த பரிகார பூஜை ஆகும்
வரலாற்று சிறப்பு
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தேவாரத்தலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் விஷேசம் ரத சப்தமி அன்று சுவாமி மீது சூரிய ஓளி படுவது சிறப்பாகும்.திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு கேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். தோட்டீரே துத்தி ஐந்துலை நாகத்தை ஆட்டீரே, அடியார் வினை ஓட்டீரே என்று இசைத்தார் சம்பந்தர். எனவே இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். சீர்காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. சமணர் பலர் தம் கைகளிலிருந்த குண்டிகையைத் தகர்தெறிந்து நீறு பூசி சைவராயினர்.
தல விருட்சம்
திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. இப்பனையின் கனிகளை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர்.
கட்டட சிறப்பு
பல்லவர் காலந்தொட்டே பரம்பொருள் சிவனார், சேய்நதியின் செழுமைக் கரையில் எழுந்தருளியிருந்தார் என்பதைத் தேவாரப்பாட்டால் அறிகின்றோம். ஆயினும், பல்லவர் காலத்தில் பிரகாரங்கள் ஏதுமின்றி இருந்த சிவாலயம், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் முதல் இரு உட்பிரகாரங்களைப் பெற்றது. விசயநகர வேந்தர்கள் மூன்றாம் பிரகாரத்தையும், இராஜகோபுரத்தையும் கட்டுவித்தனர், இவர்கள் மட்டுமின்றித் தெலுங்குச் சோடர்களும், காடவராயரும், பாண்டியரும், சம்புவராயரும் இந்த பிராகரங்களில் கூடுதலான சிற்பப் பணிகள் செய்து மண்டபங்கள் கட்டுவித்து ஆலயத்தை வேலும் மெறுகேற்றி விரிவுபடுத்தினர்.
கருவறை, அரைநாழி மண்டபம் - இரண்டாம் சிம்மவர்மன் பல்லவர் காலம்(450-500)
பஞ்சபூதத்தலங்கள் பராந்தக சோழன் (907 955)
அம்பாள் சந்நதி முன் மண்டபம் முதலியன இராராசசோழன் மாறவர்மன் (985 -1014)
சுற்று வழி மண்டபம் இணைந்த முன் மண்டபம் விக்கிரம சோழன் ( 1118 1135)
கல்யாண மண்டபம் சம்புவராயர்கள் (1268 1310)
இராஜகோப்புரமும், புறமதிற்சுவர், இரண்டாம் நிலைக்கோபுரம் கிருஷ்ணதேவராய்- (1509 -1529)
நூற்றுக்கால் மண்டபம் திருமலை நாயக்கர் ( 1623 1659)
பிரார்த்தனை
பனை மரம் :- திருஞானசம்பந்தர் திருவோத்தூரை அடைந்து இறைவனை வணங்கிய போது அடியார் ஒருவர் வந்து அழுது கொண்டே வணங்கினார். தாம் கோயில் வழிபாட்டிற்காக வளர்த்த பனைகளெல்லாம் காயாவாய் நின்றன. சமணர்கள் நீர் வைத்த பனைகள் காய்க்குமோ? என்று ஏளனஞ் செய்கின்றனர் என்றார். சீர்காழிவள்ளல் கோயில் புகுந்து. பூத்தேர்ந்தாயன எனும் பதிகத்தைத் தொடங்கி திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனையீன் குலை ஓத்தூர் என்ற பாடலைப்பாடி முடித்தார். அப்பனைகள் எல்லாம் குலை தள்ளின. சமணர் பலர் தம் கைகளிலிருந்த குண்டிகையைத் தகர்தெறிந்து நீறு பூசி சைவராயினர். இப்பனையின் கனிகளை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
கல்யாணகோடி தீர்த்தம் : கல்யாணகோடி தீர்த்த குளம்
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் அருகில் மற்றும் நடராஜர் சன்னதி அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொருத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது




