⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:00 AM to 12:00 PM
04:00 PM to 09:00 PM
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் சனி மற்றும ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 1.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
விழா காலங்களில் நேரம் மாறுதலுக்குட்பட்டது
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை (தியாகராஜர் அலங்காரம்) : 06:00 AM to 06:15 AM IST
2. காலசந்தி பூஜை (தியாகராஜர் அலங்காரம்) : 08:30 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (தியாகராஜர் Alangaram) : 11:30 AM to 12:00 AM IST
4. சாயரட்சை பூஜை (தியாகராஜர் அலங்காரம்) : 06:00 PM to 06:30 PM IST
5. இரண்டாம்கால பூஜை (தியாகராஜர் அலங்காரம்) : 07:30 PM to 08:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை (தியாகராஜர் அலங்காரம்) : 08:45 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): வன்மீகநாதர்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): சோமகுலாம்பாள்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): சிவப்பு பாதிரி
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தி௫வாரூர்
தாலுகா (Taluk): தி௫வாரூர்
தொலைபேசி (Phone): 04366242343
முகவரி (Address):
கமலாலய குளம் எதிரில், திருவாரூர், திருவாரூர், 610003
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், தி௫வாரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு வன்மீகநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 3rd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mannargudi (21 km), Kumbakonam (32 km), Mayiladuthurai (37 km), Neyveli (39 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நால்வர்
புலவ அருளாளர் : மாணிக்கவாசகர்
ஸ்தல விருட்சம் : சிவப்பு பாதிரி
விமானம் வகை : கஜமுக விமானம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 3rd நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : இல்லை
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
தெப்பம்
இத்திருக்கோயிலின் திருக்குளத்தில் நீராடுவோருக்கு பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தர வல்லதும, தசரதன், அரிச்சந்திரன் போன்ற மன்னர்களும், ரிஷிகளும், சித்தர்களும், இந்திரன் போன்ற தேவர்களும் நீராடியதும், 64 தீர்த்தக் கட்டங்களைக் கொண்டதும் தியாகேசப்பெருமானே நீராடிய பெருமையுடையதும், சுந்தரமூர்த்தி நாயனார் மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகளை திருவாரூரில் மூழ்கி எடுத்ததுமாகிய ஆலயம் என்றழைக்கப்படும் கமலாலய திருக்குளம் ஆகும். இத்திருக்குளத்தில் தெப்ப விழா ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும்.
1.இத்தெப்பம் கட்டுமானம் 432 பேரல்களை கொண்டு செய்யப்படுகிறது.
2.தெப்ப கட்டுமானம் இரண்டு லேயர் உள்ளது- ஒரு லேயருக்கு 216 பேரல்கள்.
3.இரண்டு லேயர் அமைப்புகளையும் சேர்த்து தெப்பத்தின் உயரம் 7 அடி அகலம், 50 50 2500 ச.அடி
4.தெப்பவிழா 3 நாள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு மூன்று சுற்றுகள் நடைபெறும்.
5.தெப்பத்தில் இசைக் கச்சேரி நடத்தும் நபர்களுடன் சேர்த்து சுமார் 600 நபர்கள் கலந்து கொள்வது தெப்பத்தின் சிறப்பு.
வரலாற்று சிறப்பு
அருள்மிகு எழுந்து நிற்கும் நந்தி
எல்லாத்திருத்தலங்களிலும் சிவபெருமானின் முன்பு நந்தி அமர்ந்திருப்பார். ஆனால், தியாகேசப் பெருமானின் முன்பு இருக்கும் நந்தி எழுந்து நின்ற வண்ணமாகக் காட்சிதருகிறார். இதற்கு சொல்லப்படும் காரணம் பொருத்தமாகவே இருந்தது. சுந்தரருக்காகத் தூதுச் சென்ற பெருமான் அவசரத்தில் நந்திமேல் அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்தே சென்றார். இனி, பெருமானை நடக்கவிடக்கூடாது அவர் புறப்பட்டால் தாமும எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டும் என்தால் ஏழுந்து நின்ற வண்ணமாக இருக்கிறார்.
இதர சிறப்பு
தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகை அருளினார்.
இத் தலம் தொன்றுதொட்டுள்ளது. ஆண்டவன் எழுந்தருளப் பெற்றது, என்று புராணம் அறிவிக்கின்றது. அன்றியும், அப்பரடிகள் ஒருவனாய் உலகத்தே நின்ற நாளோ, என்ற திருத்தாண்டகத்து கோலமே நீ கொள்வதற்கு முன்னே பின்னே, நிலந்தரத்து நீண்டுருவம் ஆன நாளோ, என்பன போன்ற பல பகுதிகள் இறைவன் நம்மீது வைத்த கருணையினால் அருவுருவத் திருமேனிகள், உருவத் திருமேனிகள் கொண்டு எழுந்தருளிய முதல் இடம் இத் தலமே என்று அறிவிக்கின்றன.
வரலாற்று சிறப்பு
ஆழித்தேர் சிறப்பு
தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மைமிகு நகர்களுள் ஆரூர் தனிச் சிறப்பிடம் பெற்றது. தமிழகத் திருக்கோவில்களில் மிகத் தொன்மையானதும், தோன்றிய காலம் கூற முடியாத அளவு பெருமை பெற்றது என நாவுக்கரசரே வியந்துபாடும் சிறப்பும் இத்தலத்திற்குண்டு. சைவ சமயக் குரவர் மூவரின் 34 பதிகங்களும், மணிவாசகரின் அருந்தமிழ் பாடல்களும், சேரமான் பெருமானின் மும்மணிக்கோவையும், குமர குருபரரின் நான்மணி மாலையும், நாற்பது வடமொழி இலக்கியங்களையும், பல தெலுங்கு மராத்தி இலக்கியங்களையும் பெற்று திகழும் திருவாரூர் திருக்கோயில் தேரினை பற்றி அப்பர் பெருமான்
ஊழித் தீயன்னானை ஓங்கொலி மாப்பூண்டதோர்
ஆழித்தே வித்தகனை யான் கண்டதாருரே - எனப் போற்றி பாடியுள்ளார்.
மேலும், திருக்கோயிலின் பெருமை சேர்க்கும் அம்சங்களில் முதன்மையானது ஆழித்தேராகும். தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோயிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இதர திருக்கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது இவ்வாலய தேராகும்.
1.இத்தேர் 24 அடி நீளம், 1 அடி உயரம் கொண்ட இரண்டு இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டமும, 1 அடி அகலமும் உடைய நான்கு இரும்பு சக்கரங்களின் மேல், வர்ணிக்க இயலாத கலை பொக்கிஷமான சிற்பங்களுடன் தேர் அமைந்துள்ளது.
2.எண் கோண வடிவமாக அமைந்துள்ள இத்தேர் குறுக்கு வெட்டு தோற்றத்தில் 20 பட்டைகளாகக் காணப்படும்.
3.அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி, அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி. அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை 300 டன் ஆகும்.
4.தேரின் முன்புறம், தேரினை இழுத்து செல்வது போல் பாயும் அமைப்பில் உள்ள நான்கு பிரம்மாண்டமான 26 அடி நீளம், 11 அடி உயரம் உடைய குதிரைகள் தமிழர்களின் கலை நயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன.
5.இத்தேரினை நவீனமயமாக்கி திருச்சி பெல் நிறுவனம் ஹைட்ராலிக் பிரேக்கினை அமைத்துள்ளது.
6.தேரினை பக்தர்கள் இழுக்க பயன்படுத்தப்படும் வடத்தின் நீளம் 425 அடி, சுற்றளவு 21 அங்குலம் கொண்டது. இத்தகைய நான்கு வடங்களின் மொத்த எடை 4 டன்கள். இந்த வடங்கள் மலைப்பாம்பினை நினைவுகூறும்.
7.வர்ணிக்க இயலாத பல்வேறு பெருமைகளையுடைய இத்தேரின் பவனியை திருவாரூர் வாழ் பக்தர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஆவலோடு எதிர்நோக்குகின்றனர்.
8.பன்டையக் காலத்தில் இத்தேர் விழாவினை சமயக் குரவரர்களான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் முன்னின்று நடத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றது.
தல விருட்சம்
சிறப்பு விளக்கம் - இத்திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் சிவப்புபாதிரி மரம் தல விருட்சம் .
தலம் வகை விளக்கம் - திருவாரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற இத்திருக்கோயிலில் சிவப்பு பாதிரி மரம் அமைந்துள்ள தலமாக விளங்கி வருகிறது.
கட்டட சிறப்பு
கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த கோயில்களாகத் திகழ்ந்த பங்கோயில் எனும் ஆரூர் மூலட்டானமும், அரநெறியும் செங்கற்தளிகளாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். பின்னர் கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுகளில்தான் கருங்கற்தளிகாள இத்தருக்கோயில்கள் மாற்றம் பெற்றன. பூங்கோயில் எனும் புற்றிடங்கொண்ட ஈசரது திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனால் மாற்றம் பெற்ற கற்றளியாகும். பீடம், உப்பீடம், கோஷ்டம் மற்றும் பொதிகை விமான அமைப்பு ஆகியவை அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனின் கலைப்பாங்கில் திகழ்கின்றன. கருவறை, அர்த்தமண்டபத்துடன் மட்டும் திகழ்ந்த ஆதித்தனின் பணிக்குப் பின்னால் வந்த சோழப் பெருமன்னர்கள் முகமண்டபமும், மகாமண்டபங்களும் எடுத்து விரிவு செய்தனர்.
அரநெறியாம் திருக்கோயில் செங்கற்தளியாக இருந்ததை சோழப்பேர்ரசி செம்பியன்மாதேவியார் கற்றளியாக மாற்றியமைத்ததை முதலாம் இராசராசனின் கல்வெட்டு கூறுகின்றது. இப்பேரரசியார் கருவறை அர்த்த மண்டப்பகுதியை எடுத்த போதும், மகா மண்டபம் பின்னாளில் தான் எடுக்கப்பட்டது என்பதைக் கல்லெழுத்துக்கள் உறுதி செய்கின்றன. இத்திருக்கோயிலின் கருவறையின் கட்டிடப்பாங்கு செம்பியன் மாதேவியார் பாணி என கலை இயல் வல்லுநர்கள் கூறும் பாங்கில் (ஆதித்தன் கால கலை அம்சம் சற்று விரிவடைந்த நிலை) அமைந்துள்ளது. இவ்விரண்டு கருவறைப் பகுதிகளே இன்றுள்ள திருக்கோயிலின் தொன்மையான கட்டிடப் பகுதிகளாகும்.
புனித தீர்த்தம்
குளமே ஆலயமாக அமைந்தது கமலாலய திருக்குளம் ஆகும். சுந்தரர் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டுக் கமலாலயத்தில் (திருவாரூர்) எடுத்த அதிசயம் பெரியபுராணத்தில் காணப்படுகிறது. மேலும், திருக்கோயிலுக்கு வெளியே 64 தீர்த்தகட்டங்களை உடைய ஆலயமாக விளங்கக்கூடிய கமலாலயம் எனும் திருக்குளம் அமைந்துள்ளது. இத்திருக்குளத்தின் நடுவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
கமலாலயம் திருக்குளம் : குளமே ஆலயமாக அமைந்தது கமலாலய திருக்குளம் ஆகும். சுந்தரர் மணிமுத்தாற்றில் பொன்னை இட்டுக் கமலாலயத்தில் (திருவாரூர்) எடுத்த அதிசயம் பெரியபுராணத்தில் காணப்படுகிறது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
சிற்பங்கள் சிறப்பு : பல அரசர் காலத்துச் செய்யப்பெற்ற சிற்பத் திறன்களைக் காணலாம். இரண்டாம் பிராகாரம் வடக்குப் பக்கத்தில் விஸ்வகர்மேசம் என்ற ஒரு கோயில் உண்டு. அது சிற்பியின் (விஸ்வகர்மாவின்) சிற்பத்திற்கென்றே இயற்றப்பெற்றிருக்க வேண்டும. கொடுங்கைகளும் சிறு தூண்களும் நேர்த்தியான வேலைபாடுள்ளவை. தேர் காலின் கீழ் மனுவின் மைந்தன். மனுநீதி சோழன் பசுவிற்காக தன் மகனை தேர் காலில் இட்டு நீதி வழங்கிய ஊர்.
🛠️ வசதிகள் (Facilities)
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு மூன்றாம்பிரகாரத்தில் திருக்கோயிலுக்குப் தென்மேற்கு திசையில் ஆண், பெண் இருபாலருக்கும் 6 கழிவறை வசதி உள்ளது.
சக்கர நாற்காலி : திருக்கோயிலின் மூன்றாம்பிரகாரத்தில் அலுவலகம் எதிரிலும், கிழக்கு கோபுரம் வாயிலில் தட்டஞ்சுற்றி மண்டபத்திலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சக்கர நாற்காலி வசதி உள்ளது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளுக்கு போதுமான வசதி செய்யப்பட்டுள்ளது.
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பொது நன்கொடை, தேர் நன்கொடை
Temple Services : பால் அபிஷேகம் அமாவாசை அன்று ஒரு நாள் மட்டும்
அன்னதானம் : தினசரி 100 நபர்களுக்கு மதியம் 12.30 மணிக்கு திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 100 நபர்களுக்கு கட்டணமாக ரூ 3500/-ம்
வடைபாயாசத்துடன் அன்னதானம் வழங்க ரூ.4500/-ம் செலுத்தி பக்தர்கள் அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கலாம். அன்னதானக் கட்டளைக்காக ரூ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும் வட்டியினைக் கொண்டு திருமண நாள், பிறந்த நாள் மற்றும் தொழில் தொடங்கிய நாள் இவற்றில் ஏதேனும் ஒரு நன்னாளில் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதற்கு வருமானவரி விலக்கு (80ஜி) உண்டு. அன்னதானம் வங்கி கணக்கு எண்.448980513 வங்கி கிளை - இந்தியன் வங்கி, திருவாரூர். அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.









