← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019

Arulmigu Thiyagaraja Swamy Temple, Thiruvottiyur, Chennai - 600019

மாவட்டம்: சென்னை • தாலுகா: திருவொற்றியூர்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
04:00 PM to 08:30 PM
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.00 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். செவ்வாய்கிழமை, பிரதோஷம் தினங்களில் மாலை 3.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். பிரதிவாரம் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்து இருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. அர்த்தஜாம பூஜை : 06:30 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:30 AM to 12:30 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
5. பள்ளியறை பூஜை : 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): தியாகராஜசுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): வடிவுடை அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): அத்தி மரம்

ஆகமம் (Tradition): காரண காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சென்னை

தாலுகா (Taluk): திருவொற்றியூர்

தொலைபேசி (Phone): 04425733703

முகவரி (Address):

தேரடி சன்னதி தெரு,திருவொற்றியூர், திருவொற்றியூர், சென்னை, 600019

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600019 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு தியாகராஜசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 3rd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madras (Chennai) (11 km), Chingleput (60 km), Mahabalipuram (62 km), Arakkonam (64 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : சுந்தரர்
ஸ்தல விருட்சம் : அத்தி மரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 3rd நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

சுற்றுலா
மாணிக்க தியாகர் - இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. இவ்வ்ரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர், மன்னனுக்கு கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தை தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் “மாணிக்க தியாகர்” என்றும் அழைக்கப்படுகிறார். பெட்டி வடிவ லிங்கம் : வாசுகி எனும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய இறைவன் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். எனவே இவர் “படம்பக்க நாதர்” என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் உள்ளது. சுவாமி இங்கு தீண்டாத் திருமேனியாக காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அர்ச்சகர்கள் சுவாமியை தொட்டு பூஜை செய்வது இல்லை. இத்தலத்தில் மூலவர் படம்பக்க நாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருகிறார். கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும் இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பௌர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாற்றப்படும். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூபத்தினை தரிசித்த முடியும். இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனை பூஜைப்பதாக ஐதீகம்.
புராதனம்
நந்தி தேவருக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடி அருளியஸ்தலம். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல்பெற்றது. சுந்தரர் சங்கிலிநாச்சியாரைத் திருமணம் முடித்த ஸ்தலம். கலியமூர்த்திநாயனார், பட்டினத்தார் முக்தி பெற்றஸ்தலம். அருணகிரிநாதர், அருட்பிரகாசவள்ளலார், பட்டினத்தார், பாம்பன்சுவாமிகள் உட்பட 20 அருளாளர்களால் போற்றிப் பாடப் பெற்ற ஸ்தலம். சங்கீதமும் மூர்திகளால் கீர்த்தனைகள் இயற்றப்பட்ட ஸ்தலம். ஐயடிகள் காடவர்கோன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கலியமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் வழிபட்ட ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்கள் ஒரேவளாகத்தில் அமைந்துள்ளது. 27 நட்சத்திர லிங்கங்களுக்குத் தனித்தனி லிங்கங்கள் அமைந்துள்ளது. மூலவர்சுயம்புலிங்கம். கார்த்திகை பௌர்ணமி மற்றும் அதனை அடுத்து வரும் இருநாட்களும் மட்டுமே தைலஅபிஷேகம் நடைபெறும் அந்த மூன்று தினங்களில் மட்டுமே சுவாமியைப் பூரணமாகத் தரிசிக்க இயலும்.
வரலாற்று சிறப்பு
சிவன் சுயம்பு மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் எல்லாம் 2. மூலவர் - ஆதிபுரீஸ்வரர் - ஒற்றீஸ்வரர் அம்மன் - வடிவுடை அம்மன் - வட்டப்பாறை அம்மன் தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் - ஆதிஷேஷ தீர்த்தம் பூஜா ஆகமம் - காரணம் - காமிகம் இத்தலத்தில் சொர்ண பைரவர் நாய் வாகனம் இன்றி காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்கையின் காலுக்கு கீழே மகிஷாசுரன் இல்லை. இது 51 சக்தி பீடங்களில் இஷீ சக்தி பீடம் ஆகும். 274 சிவாலயங்களில் இது 253வது தேவார தலமாகும்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

பிரம்ம தீர்த்தம் : நல்ல நிலையில் உள்ளது
ஆதிசேஷ தீர்த்தம் : திருக்கோயிலுக்கு வெளியே வட கிழக்கில் ஒரு பிரம்மாண்டமான ஒரு பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இதில் மூழ்கி எழுந்து ஏழைகளுக்கும், சிவனடியார்களுக்கு தானமளித்தால் செய்த பாவங்கள் போகும். எண்ணியவை எல்லாம் எளிதில் கிடைக்கும். அயோத்தி மன்னன் மாந்தாதா இத்திருக்குளத்தில் நீராடி இழந்த இளமையை திரும்ப அடைந்தார்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

Egapatha Murthy : பிரம்மா விஷ்ணு, சிவன் எனும் மூவரும் ஒருவரே என உணர்த்தும் விதமாக ஒரே காலில் நிற்கும் மூர்த்தியின் வடிவம் உலகின் முதல்வர் முதன்மையானவராவர். இவர் அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம்.இவர் எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன, இவரிடமே முடிகின்றன.

🛠️ வசதிகள் (Facilities)

துலாபாரம் வசதி : அருள்மிகு வடிவுடை அம்மன் சன்னதியின் வெளியே துலா பாரம் அமைந்துள்ளது. கட்டணமில்லா துலாபாரத்தில் வெள்ளம், பழங்கள், சர்க்கரை, அரிசி மற்றும் தானியம் வகைகள் ஆகியவை துலாபாரம் வழியாக பெறப்படும்.
மின்கல ஊர்தி : திருக்கோயில் உட்புறம் மின்கல மகிழுந்து வசதி உள்ளது.
சக்கர நாற்காலி : மாற்று திறனாளிகளுக்கு மற்றும் வயது முதியோர்களுக்கு சக்கர நாற்கலி வசதி செய்யப்பட்டுள்ளது
நூலக வசதி : திருக்கோயில் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள நூலகத்தில் சுமார் 1100 புத்தகத்திற்கு மேல் உள்ளன. நூலகம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்து வைக்கபடுகிறது.குறிப்பாக ஆன்மிக புத்தகம், திருக்குறள் மற்றும் திருமறை புத்தகங்கள் உள்ளன. நூலகம் திறக்கும் நேரம் தினசரி காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நூலகத்தில் தினசரி செய்தித்தாள்களும் உள்ளன
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கட்டணம்மில்லா காலணி பாதுகாப்பு காலணி பாதுகாப்பில் நான்கு நபர்கள் பணிபுரிகிறார்கள் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரை விசேஷ நாட்களில் காலை முதல் இரவு நடைமுடும் வரை காலணி பாதுகாப்பு மையம் திறந்திருக்கும்.
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் அருள்மிகு வடிவுடை அம்மனுக்கு தங்கரத பவனி இரவு 7.00 மணி அளவில் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களில் ஒரு வாரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்து தங்கரத பவனி நடத்திக்கொள்ளலாம். ஐந்து நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இதற்கு கட்டணம் ரூ.2,500/-ஆகும்.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : அருள்மிகு வளர் காளி அம்மன் சன்னதி அருகில் , அருள்மிகு ஒற்றிஸ்வரர் சன்னதி வசந்த மண்டபம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விழா காலங்களில் அத்தியாவசியமான இடங்களில் தற்காலிக குடிநீர் வசதி செய்யப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு என தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது அன்னதானம் தயாரிக்கவும், அன்னதான பயன்பாட்டாளர்களுக்கும் இந்த குடிநீர் பயன்படுகிறது.

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : திருக்கோயிலின் வளர்ச்சிக்கு தங்களது உதவி பெரிதும் துணை புரிகிறது. தாங்கள் அளிக்கும் அன்னதான நன்கொடைக்கு முழுவதும் வருமான வரி விலக்கு உள்ளது. கீழ்க்கண்ட நன்கொடைகள் திருக்கோயிலுக்கு அளிக்கலாம். 1) பொது நன்கொடை 2) கோசலை நன்கொடை 3) திருப்பணி நன்கொடை 4) அன்னதான நன்கொடை
அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி 100-நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது அன்னதானம் 100 பேர் என்று (ஒரு நாளைக்கு) எனில் ரூ .3500/ -ஆகும். கட்டளை நிலையான வைப்பு தொகையினை ரூ .75000/ - முதலீடு செய்து அதில் இருந்து வட்டி தொகையினை கொண்டு வருடத்தில் ஒரு நாள் அன்னதானம் நடைபெறும் நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80 ) பெற இயலும். அன்னதான கணக்கு எண்.10306165474 80-திஐடி (இ) எண்.2(55)02-03 தேதி- 28.03.2008 12- திஐடி (இ) எண்.2 (1114) 07-08 தேதி- 25.01.2008