← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620002

Arulmigu Thayumanaswamy Temple, Rock Fort, Thiruchirappalli - 620002

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி • தாலுகா: திருச்சிராப்பள்ளி(கிழக்கு)

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

உச்சிப்பிள்ளையார் சன்னதி காலை 6.00 மணி முதல் இரவு 8.00 நடை திறக்கப்பட்டிருக்கும். சுவாமி , அம்பாள் சன்னதி காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி மாணிக்க விநாயகர் சன்னதி காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை : 08:30 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:00 PM to 06:00 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 06:00 PM to 06:15 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 07:30 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): தாயுமான சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): மட்டுவார் குழலம்மை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வில்வம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): திருச்சிராப்பள்ளி(கிழக்கு)

தொலைபேசி (Phone): 04312704621

முகவரி (Address):

என்.எஸ்.பி ரோடு, திருச்சிராப்பள்ளி, 620002

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சிராப்பள்ளி(கிழக்கு) பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620002 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு தாயுமான சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (7 km), Thanjavur (51 km), Perambalur (51 km), Pudukkottai (53 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : 1.நன்றுடையானைத் தீயதில்லானை (சம்பந்தர் ) 2. மட்டுவார் குழலாவொடு மால்விட (திருநாவுக்கரசர் ) 3.நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த ( மாணிக்கவாசகர் )
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
ஸ்தல விருட்சம் : வில்வம்
விமானம் வகை : கஜமுக விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : 1.நன்றுடையானைத் தீயதில்லானை (சம்பந்தர் ) 2. மட்டுவார் குழலாவொடு மால்விட (திருநாவுக்கரசர் ) 3.நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த ( மாணிக்கவாசகர் )

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
தாயான ஈசன் :- திருக்கோயிலில் இறைவனே தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்ததால் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும். திரிசிராமலையில் தனகுப்தன் தனது மனைவி இரத்தினாவதியுடன் வாழ்ந்து வந்தான். தனகுப்தனுடன் இனிய இல்லறம் நடத்திவந்த இரத்தினாவதி ஒவ்வொரு நாளும் திரிசிராமலையில் உறையும் செவ்வந்திநாதரை வழிபட்டு தாயாகும் பேறு அடைந்தாள். பேறுகாலம் முதிரவே பிரசவம் பார்க்க வரும்படி தன் தாய்க்குத் தெரிவித்தாள். தாயும் மகளுக்கு பிரசவத்திற்கு வேண்டிய மருந்து மற்றும் எண்ணெய் போன்ற பொருள்களுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு திரிசிராமலை வரும் வழியில் காவிரியில் நீர்ப்பெருக்கு காரணமாக தாய் வரவு வடகரையிலேயே தடைப்பட்டது. கருவுயிர்க்கும் நேரம் நெருங்கியும் தாய் வரவில்லை என்பதால் தாம் வழிபட்ட செவ்வந்தி நாதரிடம் வேண்டினாள். அப்போது செவ்வந்தி நாதரே தாய்வேடம் தரித்து நிறைபேற்றுடன் தவித்து கொண்டு இருந்த இரத்தினாவதிக்கு தக்க மருத்துவம் பார்த்து தாயையும், பிறந்த ஆண்மகவையும் ஏழு தினங்கள் தக்கவாறு கவனித்துக் கொண்டார். காவிரி நீர்பெருக்கு வடிந்து உண்மையான தாய் வந்தாள். இரு தாயாருள் உண்மையானதாய் யார்எனத் திகைத்தாள். தாயாக வந்த இறைவர் மறைந்து வானில் மட்டுவார் குழலம்மையுடன் இடபவாகனராக தோன்றினார். அன்று முதல் திரிசிராமலை செவ்வந்திநாதருக்கு தாயுமானவர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இது சித்திரைப் பெருந்திருவிழாவில் இன்றும் செட்டிப்பெண் மருத்துவம் எனக் கொண்டாடப்படுகிறது. சிறப்பு கர்ப்பிணி பெண்கள் தாயுமான சுவாமியை நினைத்து பக்தியுடன் சுகப்பிரசவ சுலோகம் தினமும் மூன்று முறை சொல்லி நமஸ்காரம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். சுகப்பிரசவம் ஆனோர் பிறந்த குழந்தையோடு வந்து பால் மற்றும் வாழைத்தாரை சுவாமிக்கு அர்பணம் செய்து வழிபட்டு செல்வதை நாள்தோறும் இத்திருதலத்தில் காணலாம். சுலோகம் ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின் சம்போ ஸீகப்ரசவக்ருத் பவமே தயாளோ ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே. விளக்கம் எம்பெருமானே நிறைமங்கலப் பொருளே மன்மதனை எரித்தவரே பிரமன் முதலிய தேவகணங்களின் தலைவரே என் உயிர் நாயகனே உமையொருபாகனே இளம் பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்தவரே தொடர்ந்துவரும் பாவங்களின் வேரை அழிப்பவரே ஒளிரும் மூவிலைச் சூலம் ஏந்தியவரே சிவபெருமானே அருட்கடலே சுகமான குழந்தைப் பேறு நிகழ அருள்புரிவாய் தாயுமான ஈசரே உன் திருக்கோயில் வந்து வழிபடுவேன் நின் திருவடிகளுக்குப் போற்றி போற்றி .

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

தெப்பம் : ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்திற்கு முதல்நாள் தெப்பஉற்சவம் நடக்கும். தெப்ப உற்சவம் அன்று மாலை 6-00மணிக்கு மேல் சுவாமி அம்பாள் புறப்பாடு செய்யப்பட்டு பிரம்ம தீர்த்தமாகிய சோமரோகணி என்ற தெப்பக்குளத்தில் தெப்போற்சவ வைபவம் நடக்கும். தெப்பத்தில் தேவார இன்னிசை கச்சேரி முழங்க பலவித மின் அலங்காரத்துடன் சுவாமி அம்பாள் 5-சுற்றுகள் உலாவரும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
சோமரோகணி என்கிற பிரம்மதீர்த்தம்:- : மலைக்கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ளது. பிரம்மதீர்த்தம் எனப்பெறும் கரிகால் பெருவளத்தான்டி வெட்டியதாகும். தெப்பக்குளம் என்று அழைக்கப்பெறுவது 16ஆம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசுவநாத நாயக்கர் குளத்தின் நடுவே அழகிய நீராழி மண்டபம் அமைத்துள்ளார். 1996 ம் ஆண்டு முழுவதும் தூய்மை செய்யப்பெற்று இரும்புச் சன்னல்கள் அமைக்கப்பெற்று உள்ளன. ஆண்டுதோறும் பங்குனித் திங்கள் உத்திரத்திற்கு முதல் நாள் தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்பெற்று வருகிறது. 23-06-1949 ஆம் ஆண்டு முதல் ஓர் ஒப்பந்தப்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பராமரிப்பில் இருந்து வருகிறது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

கங்காதரர் : திருச்சி, மலைக்கோட்டை திருக்கோயிலில் உள்ள மேல்குகையில் கங்காதரமூர்த்தி என்னும் சிவனின் பெரிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேற்படி சிற்பத்தின் மேல்புறம் இரண்டு தேவர்கள் சிற்பமும் , கீழ்பகுதியில் இரண்டு பக்தர்கள் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவன் தனது காலை அபஸ்மரபுருஷா என்னும் காலன் மேல் வைத்தவாறு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேற்படி, சிலையின் இருபுறமும் கிரந்த எழுத்துக்களால் மகேந்ததிரவர்ம பல்லவனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
செட்டிப்பெண் : செட்டிப்பெண்ணும் , அவளது தாயாரும் சிற்பம் சித்திரமண்டபத்தில் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் சிவபெருமான் தனது தீவிர பக்தையான இரத்தினாவதி என்னும் செட்டிப்பெண்ணுக்கு தாயார் உருவில் வந்து பிரசவம் பார்த்ததை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : அருள்மிகு மாணிக்க விநாயகர் சன்னதி அருகில் மற்றும் யானை மண்டபம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
கழிவறை வசதி : இலவச ஆண்கள் கழிப்பறை - 3 ( மேற்கத்திய கழிப்பறை - 1, இந்தியன் கழிப்பறை - 2) இலவச பெண்கள் கழிப்பறை - 3 ( மேற்கத்திய கழிப்பறை - 1, இந்தியன் கழிப்பறை - 2)
நூலக வசதி : பொதுமக்கள் நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வகையில் நாற்காலி மற்றும் மேசை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகள் மற்றும் பொதுமக்களுக்கு தினந்தோறும் பகல் 12-00 மணி அளவில் 200 நபர்களுக்கு டேபிள், சேரில் அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களிலும், முக்கிய தினங்களிலும் வடை, பாயாசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 80 ஜி .6162(6)//2002-2003 அன்னதானம் ஒரு நாள் உபய வரவு - ரூ. 7000/- அன்னதானம் ஒரு நாள் கட்டளை (நிரந்தர முதலீடு ) - ரூ. 1,15,000/-