06:00 AM to 01:00 PM 04:00 PM to 09:00 PM மாதாந்திர கிருத்திகை நாட்கள் மற்றும் இதர முக்கிய திருவிழா நாட்களில் திருக்கோயில் காலை முதல் இரவு அர்த்தசாமபூஜை வரை சன்னதி திறந்திருக்கும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (நிர்மால்ய அலங்காரம்) : 06:00 AM to 07:00 AM IST 2. காலசந்தி பூஜை (திருவாபரண அலங்காரம்) : 09:00 AM to 09:30 AM IST 3. உச்சிக்கால பூஜை (திருவாபரண அலங்காரம்) : 12:00 PM to 12:30 PM IST 4. சாயரட்சை பூஜை (திருவாபரண அலங்காரம்) : 05:00 PM to 06:00 PM IST 5. இரண்டாம்கால பூஜை (சாயரட்சை அலங்காரம்) : 07:00 PM to 07:30 PM IST 6. அர்த்தஜாம பூஜை (ஏகாந்த அலங்காரம்) : 09:00 PM to 09:30 PM IST
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் - 612302 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுவாமிநாதசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 2nd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
✨
விசேஷ பூஜை விவரங்கள் (Special Pooja Details)இந்த ஆலயத்திற்கான பிரத்யேக வழிபாடுகள் மற்றும் சேவைகளைக் காணுங்கள்.
* கும்பகோணம் வட்டார முக்கிய பேருந்து வழித்தடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காரண ஆகமம் பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள் புலவ அருளாளர் : நக்கீரர் ஸ்தல விருட்சம் : நெல்லி மரம் விமானம் வகை : ஆனந்த விமானம் கருவறை வடிவம் : தூங்கானை வடிவம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 2nd நூற்றாண்டு பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இத்தலம் நான்காம்படை வீடாகும் . நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப்பெற்ற ஸ்தலமாகும் . ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்த தலமாகும் . அறுபது தமிழ் வருட தேவதைகள் அறுபது படிகளாக அமையப்பெற்றது. ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் திருப்படி திருவிழா நடைபெறும் சிறப்புமிக்க தலமாகும். வரலாற்று சிறப்பு திருப்படி பூஜை தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்தச் சுவாமிமலை உள்ளது. குன்றுதோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க இம்மலைமீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும். இக்கோயிலின் மேல்தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் 18 படிக்கட்டுகள் எப்படிப் புனிதமாகக் கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்தத் தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியைப் பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம். ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினங்களின் போதும் இந்தப் படிகளுக்கு வஸ்திரம் சாத்தி தேங்காய் பழம் வைத்துப் பாடல்பாடி பூஜை செய்வார்கள். இதற்குத் திருப்படி பூஜை என்று பெயர். இது இத்தலத்தின் விஷேசம் ஆகும். பிரார்த்தனை நேர்த்திகடன் மொட்டை போடுதல், சுவாமிக்குச் சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திக் கடனாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் திருசதை அர்ச்சனை செய்கிறார்கள். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காகப் பொருள் தருவது வழக்கமாக உள்ளது. இதர வகை திருவிழா திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள். இத்திருவிழாவே இத்திருத்தலத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும். இத்திருவிழாவின்போது இலட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சித்திரை பிரம்மோற்சவம் 10 நாட்கள், வைகாசி விசாகம் பெருவிழா, ஆவணி பவித்ரோற்சவம் 10 நாட்கள், புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், கந்தசஷ்டி பெருவிழா 10 நாட்கள் மார்கழி திருவாதிரை திருநாள், தைப்பூச திருவிழா 10 நாட்கள், பங்குனி உத்திரம் வள்ளி திருக்கல்யாணம் திருவிழா 10 நாட்கள் இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். இவை தவிர மாதாந்திர கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட விஷேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய், வியாழக்கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
நேத்ர புஷ்கரணி : இத்திருக்குளம் திருக்கோயிலின் கிழக்கே அமைந்துள்ளது. இத்திருக்குளத்தில் ஆடி கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
🛠️ வசதிகள் (Facilities)
தங்கத் தேர் : இத்திருக்கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனைக்காக தங்கதேர் உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2000/- தங்குமிட வசதி : இத்திருக்கோயிலின் மேற்கு வாயிலில் வெளிபுறத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 16 அறைகள் புதியதாக கட்டப்பட்டு திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு குறைந்த வாடகையில் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணம் விபரம்:
அ. அறை எண்.4 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.1500/-
ஆ. அறை எண்கள். 1,2,3,7,8,9,10,11,12,15 மற்றும் 16 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.1000/-
இ. அறை எண்கள் 5,6,13 மற்றும் 14 - கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.750/-
ஒரு அறையில் 4 நபர்கள் மட்டும் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல் தங்கும் ஒவ்வொரு நபருக்கும் நாள் 1க்கு ரூ.100/- வசூலிக்கப்படும். சக்கர நாற்காலி : முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலி தேவையெனில் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். வாகன நிறுத்தம் : வாகன நிறுத்தும் இடம் சுவாமிமலை, தெற்கு வீதியில் சேவார்த்திகள் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ளது. கார் மற்றும் பேருந்துகள் நிறுத்துவதற்கு இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நூலக வசதி : திருக்கோயில் தொடர்பான புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. முடி காணிக்கை வசதி : எட்டாம் திருநாள் தோப்பில் முடிகாணிக்கை மண்டபம் அமைந்துள்ளது. திருக்கோயில் டிக்கெட் கவுண்டரில் விலையில்லா முடிகாணிக்கைசீட்டு பெற்றுக்கொண்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தலாம். துலாபாரம் வசதி : பக்தர்கள் நேர்த்தி கடன் செய்யும் துலாபாரம் உக்கிரான அறையில் அமைந்துள்ளது. துலாபாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் துலாபார காணிக்கையினை செலுத்திய பின்னர் உரிய இரசீது வழங்கப்படுகிறது. திருமணம் நடத்துதல் : 1.முதல் திருமணம் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று
2.பிறந்த தேதிக்கு ஆதாரமாக பள்ளி மாற்று சான்றிதழ் நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்)
3.அனுமதி பெற்ற வழக்கறிஞர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்ட வாக்குமூலம் உரிய படிவத்தில்.
4.ஆதார் அட்டை நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்)
5.குடும்ப அட்டை நகல் (உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெறப்படவேண்டும்)
6.பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விண்ணப்பம்.
7.மணமகன் மற்றும் மணமகளின் புகைப்படங்கள் (2 செட்)
8.திருமணப்பத்திரிக்கை.
9.இரண்டாவது திருமணமாக இருந்தால் அதற்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று.
10.இரண்டாவது திருமணமாக இருந்தால் முதல் மனைவி அல்லது கணவரின் விவாகரத்து / இறப்பு சான்று.
கட்டண விபரம்
1.திருமண கட்டணம் ரூ.2500/-
திருமண மண்டபம் தொடர்பான விபரம் தனியே அளிக்கப்பட்டுள்ளது. கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலில் 2 திருமண மண்டபங்கள் உள்ளன.
மண்டப எண்.1
திருக்கோயிலின் தெற்கு கோபுர வாசலை அடுத்து இடதுபுறமாக அமைந்துள்ளது. இதில் 200 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. நாள் ஒன்றிற்கான வாடகை ரூ.15000/- மட்டும்.
மண்டப எண்.3
திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. இதில் 100 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. நாள் ஒன்றிற்கான வாடகை ரூ.10000/- மட்டும். குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலின் கீழ்பிரகாரத்தில் தென்கிழக்கில் உள்ள திருமடைப்பள்ளிக்கு அருகில் ஒன்றும், திருக்கோயிலின் கீழ்பிரகாரத்தில் கிழக்குவாசலில் வலதுபுறம் ஒன்றும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயிலின் தெற்கு இராஜகோபுரத்திற்கு முன்புறம் இலவச காலணி பாதுகாப்பகம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் அறை : தாய்பாலூட்டும் அறை திருக்கோயிலின் தெற்கு இராஜகோபுரம் வாசல் உட்புறம் திருமண மண்டபம் எண்.2ல் அமைந்துள்ளது. கழிவறை வசதி : கோயில் மேற்கு பக்க நுழைவு பகுதியில், வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில், இலவச பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை வசதிகள் உள்ளன. .
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : அன்னதானம் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது . வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் மற்றும் மாதாந்திர கிருத்திகை தினத்திலும் அன்னதானத்துடன் வடை மற்றும் பாயசம் சேர்த்து வழங்கப்படுகிறது .
அன்னதானம் செய்ய விரும்புவோர் ....
1.அன்னதானம் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு வழங்கிட ரூ.3500/-
2.நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.85000/- (வருடத்திற்கு ஒருமுறை தாங்கள்
குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்)
3.அன்னதானம் வங்கி கணக்கு எண். 021701000016194
:
:
: 0000217
4. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாக திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் .
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.