Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கோவூர்

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கோவூர், கோவூர் - 600128 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

07:00 AM to 12:00 PM
04:30 PM to 09:00 PM
காலை சந்தி, உச்சி காலம், சாய ரிச்சை, அா்த ஐாமம்

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. விஸ்வரூப பூஜை (-) : 06:00 AM to 06:30 AM IST
2. காலசந்தி பூஜை (சாத அலங்காரம்) : 08:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை (சாத அலங்காரம்) : 11:30 AM to 12:00 PM IST
4. மாலை பூஜை (சாத அலங்காரம்) : 05:00 PM to 06:30 PM IST
5. அர்த்தஜாம பூஜை (சாத அலங்காரம்) : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு சுந்தரேஸ்வரா் சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு சௌந்தராம்பிகை அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): மகாவில்வம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): காஞ்சிபுரம்

தாலுகா (Taluk): குன்றத்தூர்

முகவரி (Address):

சன்னதி தெரு, கோவூர், கோவூர், 600128

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Brindavan

Hotel Brindavan

⭐ 4.0 (291 reviews)

📍 Mount Poonamalle High Road, iyyappanthangal

🚀 3.3 km away
View
Sathya Cafe

Sathya Cafe

⭐ 4.0 (787 reviews)

📍 Mount Poonamalle Road, Opposite Indian Overseas Bank, Iyyappanthangal

🚀 3.3 km away
View
Hotel Saravana Bhavan

Hotel Saravana Bhavan

⭐ 3.2 (32 reviews)

📍 Sumithra Nagar Layout, Poonamallee

🚀 4.9 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கோவூர், கோவூர் - 600128 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு சுந்தரேஸ்வரா் சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 12th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madras (Chennai) (18 km), Chingleput (37 km), Kanchipuram (45 km), Arakkonam (45 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : மகாவில்வம்
விமானம் வகை : கஜாப்ப்ருஷ்டம் விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 12th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரக தலங்களில் இத்திலம் புதன் கிரகத்துக்குரிய பரிகார தலமாக திகழ்கிறது. மேற்படி புதன்கிழமை அன்று சுவாமிக்கு தேன் அபிஷேகம் செய்தால் நரம்பு தளர்ச்சி, குழந்தை பாக்கியம், குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி ஆகிய பலன்கள் நடக்கும். சுற்றுலா கழகம் நடத்தும் நவக்கிரக சுற்றுலாவில் இத்தலம் சேர்க்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு
பசுவடிவமான பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் சிவலிங்க திருமேனியை காட்டிய இடமாதலால் திருமேனீஸ்வரம் என்று சிறப்பு பெற்றது இத்தலம். தெய்வதியாகராசர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னம் பாடி சிறப்பித்துள்ளார். பெரிய புராணம் எழுதுவதற்கு முன் உலகெலாம் என்ற அடியை சேக்கிழாருக்கு இறைவன் கோவூரில் அருளியதாக புராணம் கூறுகிறது.
வரலாற்று சிறப்பு
செந்தமிழ்நாட்டின் 1008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், சேக்கிழார் பெருமாள் மற்றும் தெய்வ தியாகராசரால் பாடல் பெற்றதுமான சிறப்பினை உடைய திருத்தலமாகும்.
தல விருட்சம்
கைலாயத்துக்கு ஒப்பான இத்தலத்தில் ஒன்பது பதினாறு என இலைகளை கொண்டு மகாவில்வம் தலவிருட்சமாக விளங்குகிறது. தோஷங்கள் எதுவானாலும் மகா வில்வத்தை கொண்டு பூஜிப்பதால் அவை நிவர்த்தியாவது கண்கூடு, மகாவில்வ பூஜை சர்வ தோஷ நிர்வத்தி என்பது பெரியோர் வாக்கு.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

ஐராவத தீா்த்தம் : இத்தலத்தின் கிழக்கு பகுதியில் ஐராவத தீா்த்தம் சிவ கங்கை என்ற சிறப்பு பெயா்களுடன் திருக்குளம் எழிலுற அமைந்துள்ளது. காட்டு யானையாக திாிந்த இந்திரனின் பட்டத்து யானையாக ஐராவதம் இத்திா்த்தத்தினை அகழ்ந்து, குளமாக்கி, நீராடி இத்தல இறைவனை வழிபட்டு, தனது பழைய நிலையை அடைந்ததை புராணம் கூறுகிறது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

பிரம்மா : நான்கு முகம் கொண்டவா்.
சண்டிகேஸ்வரா் : அற்தமண்டபத்தை நேக்கிய வன்னம் அமா்ந்திருப்பாா்.
கோஷ்டகணபதி : கற்பகிரக வெளிபிரகாரத்தில் உள்ள கோஷ்ய கணபதி.
இடதுபுற துவாரபாலகா் : சுந்தரேஸ்வரா் சுவாமிக்கு இடதுபுற காவலா்
லிங்கோத்பவா் : அற்தமணடபத்தின் பின்புறத்தில் உள்ளது.
மாணிக்கவாசகா் : நாயன்மாா்கள்
இடதுபுற நாகஸ்கந்தா் : ஐந்து தலை நாகதேவதை
வலதுபுற துவாரபாலா் : சுந்தரேஸ்வரா் சுவாமிக்கு வலது காவலா்
சித்தி விநாயகா் : மண்டபத்தின் வலது புற சித்தி விநாயகா்
சுப்ரமணியா் : அற்த மண்பத்தின் இடது புறம் உள்ளது.
சுந்தரா் : நாயன்மாா்கள்
திருஞானசம்பந்தா் : நாயன்மாா்கள்
வலதுபுற நாகஸ்காந்தா் : ஐந்து தலை நாகதேவதை
குட்டி விநாயகா் : -
அப்பா் : நாயன்மாா்கள்
காளிகாம்பாள் : விரப்பத்தா்யின் மனைவி
விரபத்தா் : காவலா்
வள்ளி : நின்றகோலம்
தெய்வயானை : நின்றகோலம்

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைதிட்டமான திருக்கோயிலில் அன்னதான திட்டம் கடந்த 2002 ம் ஆண்டில் இத்திருக்கோயிலில் நடைமுறைபடுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 25 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.