← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001

Arulmigu Sugavanesuwarar Temple, Mettu Agraharam, Salem - 636001

மாவட்டம்: சேலம் • தாலுகா: சேலம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 12:00 PM
03:30 PM to 09:00 PM
காலை 6.00 முதல் பகல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டு வருகிறது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:30 AM to 07:30 AM IST
2. காலசந்தி பூஜை : 09:00 AM to 09:30 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:45 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:30 PM IST
5. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சுகவனேசுவரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): சுவர்ணாம்பிகை


ஸ்தல விருட்சம் (Sacred Tree): பாதிரிமரம்

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): சேலம்

தாலுகா (Taluk): சேலம்

தொலைபேசி (Phone): 04272450954

முகவரி (Address):

சன்னதி தெரு,செரி ரோடு, மேட்டு அக்ரஹாரம், சேலம், 636001

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், சேலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமி திருக்கோயில், மேட்டு அக்ரஹாரம், சேலம் - 636001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுகவனேசுவரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 10th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Salem (4 km), Yercaud (17 km), Mettur Dam (42 km), Namakkal (50 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : திருப்புகழ்
ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : பாதிரிமரம்
விமானம் வகை : ஏக தள விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 10th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன், பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருப்புகழ்

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
இத்திருக்கோயிலின் உபசன்னதி சுகவனசுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்
வரலாற்று சிறப்பு
அருள்மிகு சுகவன நடராஜர் சன்னதியில் நடராஜ பெருமானுக்கு வலது புற சன்னதி நுழைவு பகுதியில் பரதநாட்டியத்தை தோற்றுவித்த பதஞ்சலி முனிவரின் புடைப்பு சிற்பம் உள்ளது. சேலம் மாவட்ட திருக்கோயில்களில்களில் வேறு எத்திருக்கோயிலிலும் இச்சிற்பம் இல்லை.
கட்டட சிறப்பு
திருக்கோயிலில் நவக்கிரக சன்னதிக்கு மேற்புறம் உள்ள செம்பு தகட்டில் இரு பல்லிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நமது உடம்பில் பல்லி விழுவதால் ஏற்படும் அசுப பலன்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக பல்லி உருவத்தினை வழிபடுவது சிறப்பு
கட்டட சிறப்பு
தவளைகள் வசிக்காத அமண்டுக தீர்த்தம் திருக்கோயில் அபிசேகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

திருக்குளம் : திருக்கோயில் வளாகத்திற்குள் உள்ள திருக்குளத்தில் ஊற்று நீர் சுரந்து வருகிறது. இக்குளத்தை சுற்றிலும் முறையாக சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, படிக்கட்டுகள், நீர் வழிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

தட்சிணாமூர்த்தி : கல்லாலமரம் தட்சிணாமூர்த்தி மற்றும் சனகாதி முனிவர்கள் கல் சிற்பம்
ஜேஸ்டா தேவீ : தனது மகன்களுடன் கூடிய ஜேஸ்டா தேவீ கல் சிற்பம்
பனம் பழங்கள் : 3 பனம் பழங்கள் சிற்பம் வலம்புரி விநாயகர் சன்னதியில் உள்ளது
மன்மதன் : மன்மதன் அம்பு விடுதல் சிற்பம் 16 கால் மண்டபத்தில் உள்ளது
அண்ணாமலையார் : அண்ணாமலையார் சிற்பம் சுவாமி சன்னதி பின்புறம் கோஷ்டத்தில் உள்ளது
திருவாவினன்குடி : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதியில் திருவாவினன்குடி சிற்பம் உள்ளது
திருப்பரங்குன்றம் : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதிகோஷ்டத்தில் உள்ளது
பழமுதிர்சோலை : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
திருவேரகம் : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
திருத்தணிகை : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
திருச்செந்தில் : அருள்மிகு சுகவனசுப்ரமணியர் சன்னதி கோஷ்டத்தில் உள்ளது
காமதேனு : விளக்கு தூணில் உள்ளது
மீன் : கிழக்கு ராஜகோபுரத்தின் அருகில் தரையில் மீன் சிற்பம் உள்ளது
கங்காள மூர்த்தி : கங்காள மூர்த்தி சிற்பம் மேற்கு ராஜகோபுரத்தின் அருகில் உள்ளது
நடன கணபதி : 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் அதில் நடன கணபதி சிற்பம்

🛠️ வசதிகள் (Facilities)

காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : பக்தர்கள் பயன்பாட்டிற்கென திருக்கோயில் வளாகத்திற்குள் திருக்கோயில் அலுவலகம் அருகில் இலவச பாதணி பாதுகாப்பகம் உள்ளது
குளியல் அறை வசதி : பக்தர்களின் பயன்பாட்டிற்கென ஆண்கள் கழிவறை-3 குளியலறை-1 மற்றும் பெண்கள் கழிவறை-3 குளியலறை-1 ஆகியவை உள்ளது.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் பைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பதற்காக பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளது.
கருணை இல்லம் : இத்திருக்கோயிலில் 5 வயது முதல் 10 வயது வரையிலான ஆதரவற்ற சிறுவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு உணவு, உடை , தங்குமிடம் மற்றும் கல்வி செலவுகள் அனைத்தும் திருக்கோயில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியுடன் கூடிய நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது,
திருமணம் நடத்துதல் : இத்திருக்கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு மணமகளின் வயது 21-ம்,மணமகளின் வயது - 18 ம் பூர்த்தி அடைந்தும், மணமக்களுக்கு முதல் திருமணம் என இணையதளம் வழியாக சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டும். இதற்கு பதிவு கட்டணமாக ரூ,1000/- பெறப்படுகிறது. மேலும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் பதிவு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் சிறிய அளவிலான திருமண மண்டபம் உள்ளது. இதற்கு கட்டணம் ரூ.2000/- ஆகும்.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் எளிதில் செய்திடும் வகையில் சக்கர நாற்காலி வசதி மற்றும் சாய்வுதளம் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கைபேசி எண்,96774 45785 ( திரு.கா.ராஜா, இரவு காவலர்)
தங்கத் தேர் : திருக்கோயிலில் 1 தங்க ரதம் உள்ளது. பக்தர்கள் வேண்டுதலின் பேரில், ரூ.2000/- கட்டணம் செலுத்தி, தங்களது பிறந்தநாள், திருமண நாள் போன்ற பிராத்தனைகளுக்கு ஏற்ப தங்கரத உலா நடைபெறுகிறது

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : நன்கொடை இ-வசதி உள்ளது
அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினசரி 75 நபர்களுக்கும்,உபகோயில் அருள்மிகு காசிவிசுவநாதா் திருக்கோயிலில் 50 நபர்களுக்கும் மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
உழவாரப் பணிகள் : திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மை செய்தல்
தரிசனம் முன்பதிவு : சிறப்பு நுழைவு கட்டணம் -ரூ .10/-
தேர் முன்பதிவு : .இத்திருக்கோயிலில் தங்கரதம் உலா வசதி உள்ளது. இதில் பக்தர்கள் கட்டணமாக ரூ.2000/-ம் செலுத்தி தங்களது திருமணநாள் , பிறந்த நாள் மற்றும் தங்களது வேண்டுதல்கள் / சேவைகளை பன்டுத்திக்கொள்ளலாம் .
நன்கொடையாளர் பதிவு : பொது நன்கொடை,திருப்பணி நன்கொடை,குறிப்பிட்ட உபயவரவு ஆகியவைக்காக