⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்து விளங்கும் ஒரு கோயில். இங்கு பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து அருள் பெற திருக்கோயில் காலை 6.00 மணிக்கு வழிபாடு தொடங்கி நாள் முழுவதும் திறந்திருந்து இரவு 8.45 மணிக்கு நடை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுகூலம் செய்யப்பட்டுள்ளது. இறைவன் ஓய்வின்றி நாள் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து வாழ்விக்கிறார். (விழா காலங்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது)
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. விஸ்வரூப பூஜை (அதிகாலையில் பள்ளியறை சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி செய்து, அதன்பின் நைவேத்யம் செய்து அதன்பிறகு மூலவருக்கு தீபாராதனை செய்யப்படும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) : 05:45 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) : 08:00 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) : 12:00 PM to 01:00 PM IST
4. சாயரட்சை பூஜை (பூஜை காலங்களில் திருவுருவங்களுக்கு புனித நீராட்டி, அலங்காரம், திருவமுதூட்டல் போன்ற சடங்குகள் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) : 05:00 PM to 06:00 PM IST
5. அர்த்தஜாம பூஜை (மூலவருக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் திருவமுதூட்டல் நடைபெறும். (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது) (விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுதலுக்குட்பட்டது)) : 06:00 PM to 06:15 PM IST
6. பள்ளியறை பூஜை (அர்த்தஜாம பூஜைக்கு பின் பக்தர்கள், மூலவர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் பள்ளியறை உற்சவர் பல்லக்கில் வைத்து சேவையாற்றப்படும். பின்னர் பள்ளியறையில் திருவமுதூட்டல் மற்றும் ஊஞ்சல் சேவைக்குப்பின் திருக்கோயில் திருநடை சாற்றப்படும். (திருவிழாவின் போது பூஜை நேரங்கள் மாற்றப்படும்)) : 08:45 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு சுப்ரமணிய சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வன்னி மரம்
ஆகமம் (Tradition): குமர தன்ரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருவள்ளூர்
தாலுகா (Taluk): திருத்தணி
தொலைபேசி (Phone): 044-27885247
முகவரி (Address):
சன்னதி தெரு, மலைக்கோயில், திருத்தணி, 631209
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 9th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Arakkonam (15 km), Arcot (35 km), Kanchipuram (41 km), Vellore (54 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : திருப்புகழ்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்(று) அறிவோம்யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக் கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொறுப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண்டு எனத்துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடுசூரர்
சினத்தையும் உடற்சங் கரித்தமலை முற்று(ம்)
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் கதித்தென்
திருத்தணி இருக்கும் பெருமாளே.
ஆகமம் : குமர தன்ரம்
பாடல் பெற்றது : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : வன்னி மரம்
விமானம் வகை : தங்க விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 9th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : திருப்புகழ்
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்(று) அறிவோம்யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக் கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொறுப்பையும் இடிக்கும்
நிறை புகழ் உரைக்கும் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண்டு எனத்துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் கொடுசூரர்
சினத்தையும் உடற்சங் கரித்தமலை முற்று(ம்)
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் கதித்தென்
திருத்தணி இருக்கும் பெருமாளே.
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
சுப்பிரமணியர் - திருத்தணிகை முருகன் ஞானசக்திதரர் என்னும் நிலையிலேயே எழுந்தருளி விளங்குகிறார். தணிகை முருகனின் வலத் திருக்கரத்தில் மூவிதழ்ச் சக்தியாகிய ஞானவேல் அமைந்திருக்கின்றது. அவர்தம் தொடையில் இடக்கரம் படிந்துள்ளது. முருகன் மயில் இன்றித் தனித்த நிலையில் நின்றிருக்கும் அழகிய சிறந்த திருவுருவம்.
சந்தனம் அரைக்கும் கல் - முருகனுக்குப் பயன்படுத்தப் பெறுகின்ற சந்தனக் கலவை அரைப்பதற்கு வேண்டிய அற்புதமான பெரிய சந்தனக்கல் ஒன்றுள்ளது. இக்கல் தெய்வானைக்குச் சீதனமாக தேவேந்திரன் கொடுத்தது எனப் புராணம் கூறுகிறது. இச்சந்தனம் திருபாத சந்தனம் என்னும் அருட்பிரசாதமாக பக்தர்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
ஐராவதம் - இந்திரனுக்குரிய வாகனமான ஐராவதம் என்னும் யானை, தெய்வானையம்மையின் திருமணத்தின்போது சீதனப் பொருளாக இந்திரனால் கொடுக்கப்பெற்ற ஐராவதம் தற்பொழுது கொடிமரம் அருகில் இந்திரலோகத்தைப் பார்த்தவாறு உள்ளது.
ஆடிக்கிருத்திகை - சிறப்பு மலர்க்காவடி பிரார்த்தனை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும்.
படித்திருவிழா - திருப்புகழ் திருப்படித் திருவிழா ஓராண்டைக் குறிக்கும் வகையில் 365 திருப்படிகளுக்கு டிசம்பர் 31 - ஜனவரி 1 ஆகிய தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொண்டாடி மகிழும் திருவிழாவாகும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
சரவண பொய்கை : இத்திருக்கோயிலின் திருக்குளம் மலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்குளம் குமார தீர்த்தம் மற்றும் சரவணப் பொய்கை என அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம் சதுர வடிவில் கருங்கற்களால் ஆன படிக்கட்டுகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தில் ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கும் நீரின் நடுவில், கற்களால் வடிவமைக்கப்பட்ட நீராழி மண்டபம் அமைந்துள்ளது. ஆடிக்கிருத்திகையின் போது மூன்று தினங்கள் தெப்போற்சவம் திருவிழா நடைபெறும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி : இரண்டாம் திருச்சுற்றில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்களும் விமானத்தின் நிலைகளில் சுதைச் சிற்பங்களும் இக்கோயிலில் அழகுற அமைந்துள்ளன. உலோகத் திருமேனி இத்திருக்கோயில் வழிபாட்டில் உள்ள உற்சவர் திருமேனி மயிலுடன் முருகன் வள்ளி, தெய்வானையுடனும், ஆறுமுகன் வள்ளி, தெய்வானையுடனும் திருமேனிகளாக உள்ளன. இவ்வுலோகத் திருமேனிகள் விஜயநகர காலத்தைச்சார்ந்தது.
🛠️ வசதிகள் (Facilities)
தகவல் மையம் : திருக்கோயில் தொடர்பான விவரங்கள் அனைத்தும் பெறலாம்.
தொடர்புக்கு - 8122189612
தங்குமிட வசதி : தணிகை இல்லம்
குளிர் சாதன குடில்கள் (34) : ரூ. 1500.00 ஒன்றுக்கு
சாதாரண குடில்கள் (5) : ரூ. 800.00 ஒன்றுக்கு
அறைகள் (48) : ரூ. 400.00 ஒன்றுக்கு
கார்த்திகேயன் இல்லம்
குளிர் சாதன குடில்கள் (24) : ரூ. 1500.00 ஒன்றுக்கு
சாதாரண குடில்கள் (28) : ரூ. 800.00 ஒன்றுக்கு
அறைகள் (59) : ரூ. 400.00 ஒன்றுக்கு
சரவண பொய்கை
அறைகள் (39) : ரூ.400.00 ஒன்றுக்கு.
மக்கள் தொடர்பு அலுவலர் கைபேசி எண் - 8122189614
தங்கத் தேர் : பக்தர்கள் தங்களது பிரார்த்தனையின் பேரில் இரவு 7.30 மணியளவில் தங்கத்தேர் இழுக்கும் சேவைக்கு மாதாந்திர கிருத்திகை மற்றும் சிறப்பு விசேஷ நாட்களை தவிர இதர நாட்களில் ரூ. 3500/- செலுத்தி தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். மேற்படி தங்கத்தேர் சேவைக்கு நேரடியாகவோ இணையதளத்தின் வழியாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். (இச்சேவை மாறுதலுக்குட்பட்டது)
துலாபாரம் வசதி : பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மலைக்கோயில் கொடிமரம் அருகில் துலாபாரம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலக வசதி : இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த இல்லம், இத்திருக்கோயில் பராமரிப்பில் உள்ளது. மேற்படி, அழகிய கட்டிடத்தைப் பராமரித்து ஒரு நூலகத்தை நடத்தி வருகிறது. நூலகத்தில் சுமார் 3885 புத்தகங்கள் உள்ளன. சமய நூல்கள், டாக்டர் ராதாகிருஷ்ணனின் தத்துவ நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் நூலகத்தில் உள்ளன. தின நாளிதழ்களும் மேற்படி நூலகத்திற்கு வரப்பெறுகிறது.
வாகன நிறுத்தம் : மலைக்கோயில் படாசெட்டி குளம் அருகில் சுமார் 400 வாகனங்கள் நிறுத்துவதற்கும், மலைக்கோயில் ஆர். சி. சி. மண்டபம் எதிரில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இட வசதி உள்ளது. மலைப்பாதை முகப்பிலேயே
1) பேருந்துக்கு ரூ. 100/-, 2) நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 50/-, 3) மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 30/-, 4) இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10/- என அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான கீழ்க்காணும் திருமண மண்டபங்களின் பொறுப்பாளர்களை நேரில் அணுகி முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
1.வள்ளி திருமண மண்டபம் 1 நாள் வாடகை ரூ. 15,000/-
2.தணிகேசன் திருமண மண்டபம் 1 நாள் வாடகை ரூ. 18,000/-
3.சண்முகர் திருமண மண்டபம் 1 நாள் வாடகை ரூ. 9,000/
முடி காணிக்கை வசதி : மலைக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது நேர்த்திகடன் செலுத்துவதற்காக இத்திருக்கோயில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் தலைமுடி நிலையங்கள் அமைக்கப்பட்டு 05.09.2021 முதல் கட்டணமில்லா சிகை நீக்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : கீழ்க்காணும் விவரப்படி கட்டணமில்லா கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1. மலைக்கோயில் தேர்வீதி - ஆண்கள் - 15 எண்ணிக்கை, பெண்கள் - 15 எண்ணிக்கை,
2. மலைக்கோயில் நவீன தலைமுடி நிலையம் - ஆண்கள் - 2 எண்ணிக்கை, பெண்கள் - 2 எண்ணிக்கை,
3. மலைக்கோயில் படிவழியில் உள்ள தலைமுடி நிலையம் - ஆண்கள் - 2 எண்ணிக்கை, பெண்கள் - 2 எண்ணிக்கை,
4. மலைக்கோயில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆண்கள் 3 எண்ணிக்கை, பெண்கள் 3 எண்ணிக்கை
5. தணிகை இல்லம் அருகில், மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் நாகவேடு சத்திரம் - ஆண்கள் - 3 எண்ணிக்கை, பெண்கள் - 2 எண்ணிக்கை
6. தணிகை இல்ல வளாகத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் ஆண்கள் 4 எண்ணிக்கை, பெண்கள் 4 எண்ணிக்கை
குளியல் அறை வசதி : கீழ்க்காணும் விவரப்படி கட்டணமில்லா குளியலறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1. மலைக்கோயில் தேர்வீதி - ஆண்கள் - 5 எண்ணிக்கை, பெண்கள் - 5 எண்ணிக்கை,
2. மலைக்கோயில் நவீன தலைமுடி நிலையம் - ஆண்கள் - 4 எண்ணிக்கை, பெண்கள் - 4 எண்ணிக்கை,
3. மலைக்கோயில் படிவழியில் உள்ள தலைமுடி நிலையம் - ஆண்கள் - 3 எண்ணிக்கை, பெண்கள் - 3 எண்ணிக்கை,
4. தணிகை இல்லம் அருகில், மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் நாகவேடு சத்திரம் - ஆண்கள் - 4 எண்ணிக்கை, பெண்கள் - 4 எண்ணிக்கை
பொருட்கள் பாதுகாக்கும் அறை : திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்க மலைக்கோயில் மற்றும் தணிகை இல்ல குடில்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பெட்டக வசதி காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படுகிறது.
இந்த வசதிக்கு ரூ. 5/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கோயில் பேருந்து வசதி : திருக்கோயிலில் பயணியர் பேருந்து தணிகை இல்ல வளாகத்தில் இருந்து மலைப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு இயக்கப்படுகிறது.
பேருந்து : இரண்டு.
நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படுகிறது.
மலைக்கோயில் போக வர : ரூ.20.00 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தெக்கலூர் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் மலைக்கோயில், குடில்கள் மற்றும் அன்னதானம் ஆகிய இடங்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கும் வகையில் மலைக்கோயிலில் ஆர். சி. சி. மண்டபம் முகப்பு வாயில் அருகில் காலணிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை : 1) மருத்துவ மையம் - தேவையான மருந்துகளுடன் இயங்குகிறது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் காலை 6.00 முதல் இரவு 8.45 மணி வரை சேவை புரிகின்றனர்.
2) சித்த மருத்துவமனை - தேவையான சித்த மருந்துகளுடன் இயங்குகிறது. சித்த மருத்துவர் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை சேவை புரிகின்றார்.
கருணை இல்லம் : இத்திருக்கோயிலில் ஆதரவற்ற மாணவ, மாணவியர் ஆகியோருக்கு கருணை இல்லம் தனித்தனியே நடத்தப்படுகிறன. இக்கருணை இல்லத்தில் இருப்பிடம், உடை, கல்விக்கான கட்டணம் ஆகியன திருக்கோயில் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மின்கல ஊர்தி : மலைக்கோயிலுக்கான பேட்டரி வாகன சேவை, மலைக்கோயில் வாகன நிறுத்தம் முதல் திருக்கோயில் முகப்பு வரை இலவசமாக இயக்கப்படுகிறது.
🙏 சேவைகள் (Services)
Temple Services : 1. இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்ற அரசு அறிவிப்பின்படி கட்டணமில்லா சேவை 05.09.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நாள் ஒன்றுக்கு சராசரியாக 900 பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.
தரிசனம் முன்பதிவு : இறைவனுக்கு சேவை செய்ய பக்தர்களுக்கு இரண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவரவர் விருப்பப்பட்ட மற்றும் அவர்களால் இயன்ற அளவுக்கு பக்தர்களால் செய்யப்படும் இலவச சேவைகள் உள்ளன. இவ்வகையான சேவையில், பக்தர்கள் காணிக்கையாக பொருளாகவோ, பணமாகவோ அவர்கள் விருப்பப்படி இக்கோயிலில் நடைபெறும் பல நிகழ்வுகளுக்கு குறிப்பாக, பூஜை, அன்னதானம் மற்றும் பல திருப்பணிகளுக்கும் காணிக்கை செலுத்தியும் ஊழியம் செய்தும் இறைவனுக்கு சேவையாற்றலாம். இது தவிர சில ஆர்ஜித (விலை கொடுத்து வாங்கும்) சேவைகளும், கட்டண சேவைகளும் கூட இக்கோயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பின்வரும் ஆர்ஜித சேவையில் கட்டணம் செலுத்தி பங்கேற்று இறைவனுக்கு தொண்டு ஆற்றும் சேவையை செய்யலாம். பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் உண்டியில் காணிக்கை செலுத்தி இறைவனுக்கு தொண்டு செய்து கோயில் நிர்வாகத்திற்கு உதவலாம்.
1.பஞ்சாமிர்த அபிஷேக சேவை - ரூ. 2000/-
2.தங்க கவசம் - ரூ. 1000/-
3.சகஸ்ரநாம அர்ச்சனை (1000 நாமவளி அர்ச்சனை) - ரூ. 750/-
4.சந்தனக்காப்பு - ரூ. 10000/-
5.விபூதி, பன்னீர், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகத்திற்கு - ரூ. 200/-
6.தங்கத்தேர் - ரூ. 3500/-
7.வெள்ளித்தேர் - ரூ. 8000/-
8.வெள்ளி மயில் வாகனம் - ரூ. 8000/-
9.கேடய உற்சவம் - ரூ. 1500/-
10.கல்யாண உற்சவம் - ரூ. 4000/-
11.சிறப்பு அர்ச்சனை கார்த்திகை நட்சத்திரம் தோறும் - ஓராண்டுக்கு ரூ. 500/-
12.அன்னதானம் நான் ஒன்றுக்கு - ரூ. 50000/-,
13. ஒருநாள் அன்னதான நிரந்தர கட்டளை முதலீடு - ரூ.10,00,000/-
பக்தர்கள் மேல் உள்ள எல்லா சேவைகளிலும் கட்டணம் செலுத்தி இறையருள் பெறலாம்.
தேர் முன்பதிவு : 1. தங்கத் தேர் - ரூ. 3,500/-
2. வெள்ளித் தேர் - ரூ. 8,000/-
3. இதர வாகனங்கள் - ரூ. 8,000/-
4. கேடய உற்சவம் - ரூ. 1,500/-
பிரசாதம் சேவை : இத்திருக்கோயிலின் மலைக்கோயிலில் 23.04.2022-ம் தேதி முதல் நாள் முழுவதும் இலவச பிரசாதம் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பிரசாத வகைகள் - 1. வெண்பொங்கல், 2. தயிர்சாதம், 3. சர்க்கரை பொங்கல், 4. புளியோதரை, 5. கேசரி மற்றும் 6. தேங்காய் சாதம்.
நாள்முழுவதும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தில் பங்களிக்க நன்கொடைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு நாள் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 25,000/- மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தில் பங்களிப்பதற்காக ரூ.5,00,000/- ஒரு முறை செலுத்த வேண்டும்.
அன்னதானம் : இத்திருக்கோயிலின் மலைக்கோயிலில் 16.09.2021-ம் தேதி முதல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் 1க்கு 1600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவிழா நாட்களில் தினசரி சுமார் 2000 பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர்.
இந்த அன்னதான திட்டத்தில் பங்களிக்க நன்கொடைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு நாள் அன்னதானத்திற்கு ரூ 51,500/- மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் அன்னதானத்திற்கு பங்களிப்பதற்காக ரூ 10,00,000/- ஒரு முறை செலுத்த வேண்டும்.
குறிப்பு - அன்னதானத் திட்டத்திற்கான நன்கொடைக்கு வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் வருமானவரி விலக்கு உண்டு.
அன்னதான பொறுப்பாளர்.
பெயர் : திரு. கி.சோழன்
தொடர்பு எண் : 8122189613










