← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625005

Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram - 625005

மாவட்டம்: மதுரை • தாலுகா: திருப்பரங்குன்றம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:30 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
நடை திறக்கும் நேரம் காலை : 05.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மாலை :04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. திருவனந்தல் பூஜை : 05:30 AM to 06:00 AM IST
2. விளா பூஜை : 07:00 AM to 07:30 AM IST
3. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
4. திருக்கால சந்தி பூஜை : 10:30 AM to 11:00 AM IST
5. உச்சிக்கால பூஜை : 12:30 PM to 01:00 PM IST
6. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 08:30 PM to 09:00 PM IST
8. பள்ளியறை பூஜை : 09:00 PM to 09:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சுப்பிரமணிய சுவாமி

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): தெய்வானை அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): கல்லத்தி

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): மதுரை

தாலுகா (Taluk): திருப்பரங்குன்றம்

தொலைபேசி (Phone): 04522482249

முகவரி (Address):

தொலைபேசி : 0452-2482248, 2482249, கைபேசி எண் : 6383216565 மதுரை, திருப்பரங்குன்றம், 625005

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625005 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Madurai (13 km), Virudhunagar (36 km), Aruppukkotai (42 km), Dindigul (54 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
ஸ்தல விருட்சம் : கல்லத்தி
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர், பல்லவர், பாண்டியன், பிற்கால சோழர்கள்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
திருமணஸ்தலம் : சுப்பிரமணிய சுவாமிகள் அமர்ந்த நிலையில் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். முருகனின் திருமணத்தலம் என்பதால் அனைத்து தெய்வங்களும் ஏகாந்தமாகக் காட்சியளிக்கின்றனர். இத்திருத்தலத்தின் கருவறையில் ஸ்ரீ சத்தியகிரிஸ்வரர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீகணபதி, ஸ்ரீபவளக்கனிவாய் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களும் அருகருகே அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறையில் நக்கீரர், சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரி, சித்தவித்யாதார், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகிய அனைத்துத் தெய்வங்களும் ஒருங்கிணைந்து காட்சியளிக்கின்றனர்.
Thirumana Sthalam
பாலாபிஷேகம் திருப்பரங்குன்றம் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு மட்டுமே செய்யப்படும்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

லட்சுமி தீர்த்தம் : கோயிலுக்குள் செல்லும் முன் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் கை, கால்களை அலம்பி சுத்தம் செய்து விட்டுச் செல்வர். இத்தீர்த்தத்தில் பரு, பத்து, தேமல் முதலிய சரும நோய் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்குவதற்காக உப்பு, மிளகு, வெல்லம் முதலியவற்றைப் பக்தர்கள் வாங்கிப் போடுவார்கள். மேலும் பக்தர்கள் மீனுக்குப் பொரியும் வாங்கிப் போடுவார்கள். இத்தீர்த்தம் தெய்வானைக்காக முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்று கூறுவர்.
தெப்பக்குளம் : இத்தீர்த்தம் குன்றின் அடிவாரத்திலிருந்து வடபகுதியில் நெடுஞ்சாலைக்கருகில் உள்ளது. இதனைச் சத்தியகூபம் என்றும் அழைப்பர். இத்தீர்த்தத்தில் தான் முருகப் பெருமானுக்குத் தை மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.
சரவணப் பொய்கை : சரவணப் பொய்கை கோயிலின் கிழக்கே அரை கிலோமீட்டர் தூரத்தில் சரவணப்பொய்கை அமைந்துள்ளது. இது சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. தென்புறம் மலையும், வடபுறம் நீண்ட படிக்கட்டுகளும் அமைந்து பொய்கைக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலும் இப்பொய்கையில் நீராடிவிட்டு மக்கள் வழிபாட்டிற்குச் செல்கின்றனர். இப்பொய்கை குன்றின் அடிவாரத்தின் கிழக்கே, முருகப் பெருமானின் திருக்கை வேலினால் உண்டாக்கப்பட்டதாகக் கூறுவர்.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

வராகி அம்மன் : திருவிளையாடல் புராணத்தில் 45 வது படலமான பன்றிக்கு முலைப்பால் கொடுத்த படலம். சுகலன் ,சுகலை இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு 12 குழந்தைகள். சுகபோக வாழ்வில் செழித்த இவர்கள் குருபகவானின் தவவாழ்வை கலைத்ததன் காரணமாக சாபத்திற்குள்ளாகினர். இதனால் பாண்டியமன்னனின் வேட்டைக்குப் பலியாயினர். இதன்காரணமாக பன்னிரு பன்றிக்குட்டிகளும் பாலில்லாமல் தவித்தன. அப்போது பன்றிக்குட்டிகளின் அழுகுரல் கேட்டு சிவபெருமானே தாய்பன்றியாக மாறி பன்றிக்குட்டிகளுக்கு முலைப்பால் கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. சிற்பிகள் கற்தூண்களில் அழகாக கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
தடாதகை பிராட்டியார், ஆலவாய் அண்ணல் : ஆலவாய் அண்ணல் தடாதகை பிராட்டியாரை பார்த்தவுடன் அம்மையின் மூன்றாம் தனம் மறைந்து திருமணப்பெண்ணாக மாறினார் என புராணங்கள் கூறுகின்றன.மூன்று தனங்களுடன் காட்சியளிக்கும் தடாதகைபிராட்டியார். மலையத்துவமன்னனின் மகள்.
இரதி மன்மதன் : இத்திருக்கோயிலில் யானை மகாலின் முன்புறம் உள்ள தூணில் உள்ளது.இவருக்கு மாறன் இரதிபதி,மலரம்புடையோன், மீன்கொடியுடையோன் என பலபெயர்கள் உள்ளது.கணவன் மனைவி பிரிந்துள்ளோர்கள்,புதிதாக திருமணபந்தத்தை தொடங்கவிருப்பவர்கள், என்றும் இரதிமன்மதன் போல் இணைபிரியாதிருக்க வேண்டி மஞ்சள் குங்குமம் சந்தனம் சாற்றி அகல்விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
நரசிம்ம அவதாரம் : விஷ்ணு பகவான் தன் பக்தனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார். சிங்கமுகமும் மனிதஉடலும் கொண்ட சிற்பம். வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.நரசிம்ம அவதார சிற்பம் திருக்கோயிலின் திருவாச்சி மண்டபத்தில் அமைந்துள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

தங்குமிட வசதி : 24 அறைகள் கொண்ட தங்கும் விடுதி, மற்றும் 10 அறைகள் கொண்ட நவீன தங்கும் விடுதி என இரண்டு தங்கும் விடுதிகள் உள்ளன.
தங்கத் தேர் : தங்கரதம் இழுக்க ஒரு நாளுக்கு, நபர் ஒன்றுக்கு ரூ.2,500 . தங்க ரதம் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வருகிறது.
முடி காணிக்கை வசதி : சரவணப்பொய்கைக்கு மிக அருகில் இலவச முடிகாணிக்கை அமைந்துள்ளது,
துலாபாரம் வசதி : பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பொருள்களை எடைக்கு எடை துலாபார காணிக்கையாக செலுத்தலாம். கோவிலுக்குள் கொடிமரம் அருகில் துலாபார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நூலக வசதி : பக்தர்களின் வசதிக்கேற்ப திருக்கோயிலில் உள்ள சஷ்டி மண்டபம் அருகில் நூலகம் செயல்பட்டு வருகிறது
பூங்கா : கிரிவலப் பாதையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா செயல்பட்டு வருகிறது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கோயிலின் முன்புறம் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச காலணி பாதுகாக்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக சக்கர நாற்காலிகள் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்த விரும்புவோர் 91 8015287819 என்கிற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கழிவறை வசதி : 1) திருக்கோயில் சஷ்டி மண்டபம் அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-8 என 12 இலவச கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. 2) சரவணப்பொய்கை (சலவைக் கூடம்) அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-4 என 8 இலவச கழிவறை வசதி மற்றும் 28 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 3) சரவணப்பொய்கை (கிழக்கு பக்கம்) அருகில் ஆண்களுக்கு-6 பெண்களுக்கு-6 என 12 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 4) கிரிவலப் பாதையில் சுற்றுச் சூழல் பூங்கா எதிரில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-5 என 9 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது. 5) கிரிவலப் பாதையில் பசுமடம் அருகில் ஆண்களுக்கு-4 பெண்களுக்கு-5 என 9 இலவச கழிவறை வசதி மற்றும் 2 இலவச குளியலறை வசதி செய்யப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம் : திருமண மண்டபங்கள் :1) வள்ளி திருமண மண்டபம் 2) தேவசேனா திருமண மண்டபம் எனும் இரு திருமண மண்டபங்கள் உள்ளன. (இரு மண்டபங்களும் சேர்த்தே திருமணத்திற்கு வாடகைக்கு விடப்படுகின்றன.)
பொருட்கள் பாதுகாக்கும் அறை : பக்தர்களின் வசதிக்கேற்ப திருக்கோயிலின் முன்பகுதியில் பக்தர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதுவாக பொருட்கள் பாதுகாப்பு அறை (கண்காணிப்பு கேமராவுடன்) அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : 1) இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் வளாகத்தில் திருவாச்சி மண்டபம் அருகில் சுத்தமான குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. தினமும் சுவாமியை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 2) சுவாமியை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் வளாகத்தில் கம்பத்தடி மண்டபம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 3) கிரிவலப் பாதையில் பூங்கா அருகில் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 4) தங்கும் விடுதியில் பக்தர்களின் வசதிக்கேற்ப இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் தினசரி 125 பக்தர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் நண்பகல் 12.30 மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் 125 நபர்களுக்கு எனில் ரூ.4500/-ம் (ஒரு நாள்), , நிலையான வைப்பு நிதி எனில் ரூ.65000/ம்(வருடத்தில் ஒரு நாள்), பக்தர்கள் திருக்கோயிலுக்கு வழங்கலாம் . நன்கொடையாளர்கள் வருமான வரி விலக்கு (80ஜி ) பெற இயலும்.