06:00 AM to 01:00 PM 02:00 PM to 08:00 PM குறிப்பு:
விசேஷ தினங்களில் முழு நேரம் தரிசனம் நடைபெறும்.(காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை).
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் இரவு 7.00 மணிக்கு மேல் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கு வனத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. கோ பூஜை : 05:15 AM to 05:25 AM IST 2. விஸ்வரூப பூஜை : 05:30 AM to 06:00 AM IST 3. உஷக்கால பூஜை : 05:30 AM to 06:00 AM IST 4. காலசந்தி பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.) : 08:30 AM to 09:00 AM IST 5. உச்சிக்கால பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.) : 11:30 AM to 12:00 AM IST 6. சாயரட்சை பூஜை (ஒரு நாள் முன்பாக அலுவலக கவுன்டர் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ரூ. 1500 செலுத்தி பதிவு மேற்க்கொள்ள வேண்டும் மற்றும் ஒரு கட்டளைக்கு நான்கு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.) : 04:30 PM to 05:00 PM IST 7. அர்த்தஜாம பூஜை : 07:30 PM to 08:00 PM IST
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், பேரூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை - 641046 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 12th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
✨
விசேஷ பூஜை விவரங்கள் (Special Pooja Details)இந்த ஆலயத்திற்கான பிரத்யேக வழிபாடுகள் மற்றும் சேவைகளைக் காணுங்கள்.
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம் பாடல் பெற்றது : அருணகிரிநாதர் ஸ்தல விருட்சம் : மருதமரம் விமானம் வகை : துவித்தலம் விமானம் கருவறை வடிவம் : சதுர வடிவம் எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 12th நூற்றாண்டு பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பிரசாதம் இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 23-04-2022 அன்று துவங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பிரசாதம் விவரங்கள் பின்வருமாறு :
1.காலை 6 மணி முதல் 7 மணி வரை - பஞ்சாமிர்தம்
2.காலை 7 மணி முதல் 10 மணி வரை - கற்கண்டுசாதம்
3. காலை 10 மணிமுதல்மதியம் 3 மணி வரை - சம்பாசாதம்
4. மதியம் 3 மணிமுதல்இரவு 7 மணி வரை - புளிசாதம்
5. இரவு 7 மணி முதல் நடை சாத்தப்படும் வரை - தினைமாவுஉருண்டை பிரார்த்தனை மருதமலையை மருந்து மலையெனக் கூறத்தக்க வகையில் மக்களின் உடற்பிணியும் மனப்பிணியும் நீக்கும் மூலிகை நிறைந்த மலைப்பகுதியாகும்.
மலைமீது உள்ள இத்திருக்கோயிலை சென்றடைய நடந்து செல்ல படிப்பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல தார்சாலையும் உள்ளது. படிப்பாதை துவக்கத்தில் சுயம்பு மூர்த்தியாக தோன்றிய தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது.
இதனை வழிபட்டு மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது. அதற்கு மேலே படிப்பாதையில் செல்லும்பொழுது எழில்மிகு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் குதிரைக்குளம்பு போன்ற சுவடு படிப்பாதையில் காணப்படுகிறது. இது முருகப்பெருமான் சென்ற குதிரையின் குளம்படி எனச் செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.
படிப்பாதை சென்றடையும் இடத்தில் நேரே ஆதிமூலஸ்தானம் உள்ளது. இதில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுட்ன் உருவமில்லாமல் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். இவர் ஆதியிலேயே தோன்றிய சுயம்பு மூர்த்தியாகும். இது தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
இவரை தரிசித்து மேலே வரும்பொழுது கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணைமரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்து செழிப்பாக ஒற்றை மரம் போல் காட்சியளிக்கிறது. இதன் கீழே ஐந்து முக விநாயகர் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் காட்சி வேறு எங்கும் காணகிடைக்காததாகும். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இத்தலத்தில் முருகப்பெருமானை பூஜித்ததாகவும், சுவாமி அவருக்கு பாம்புருவில் காட்சியளித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக சித்தர் சன்னதியில் உள்ள பாறையானது பாம்பு போன்ற வடிவில் இயற்கையாகவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அது மட்டுமின்றி இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியசுவாமி தென்புறம் அருள்மிகு பட்டீஸ்வரர் சன்னதி, வடபுறம் அருள்மிகு மரகதாம்பிகை சன்னதி என அம்மை அப்பன் இடையே அமையப்பெற்ற திருக்கோலம் சோமாஸ்கந்தர் திருக்கோலம் ஆகும்.
🛠️ வசதிகள் (Facilities)
அஞ்சல் வழி பிரசாதம் : பக்தர்களுக்கு பயன்படும் வகையில் அஞ்சல் வழியில் பிரசாத சேவை சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் மாற்றுதிறனாளி பக்தர்களுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டுள்ளது. காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : பக்தர்களின் பயன்பாட்டிற்காக பக்தர்கள் தங்களது காலனிகளை பாதுகாப்பாக விடுவதற்கு அடிவாரம் படிப்பாதை தொடக்கத்தின் வலது புறத்திலும். மலைமேல் படிப்பாதை தொடக்கத்தின் வலது புறத்திலும் கட்டணமில்லா காலணிகள் பாதுகாப்பு நிலையம் உள்ளது. மருத்துவமனை : இத்திருக்கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக முதலுதவி மருத்துவமனை வசதி மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில், படிப்பாதையின் இடது புறத்தில் அமைந்துள்ளது. தங்கத் தேர் : பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாட்களில் வேண்டுதலை நிறைவேற்ற தங்கரத உலா கட்டணம் ரூ.2000/- செலுத்தி மாலை 6.00 மணிக்கு தங்கரதம் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். கழிவறை வசதி : பக்தர்களின் கழிவறை வசதிக்காக ஆண்கள் கழிப்பிடம் 10, பெண்கள் கழிப்பிடம் 10 எண்ணிக்கையில் உள்ளது. தினந்தோறும் தூய்மை செய்யப்பட்டு வருகிறது. குளியல் அறை வசதி : மலைமேல் முடிகாணிக்கை மண்டபம் அருகில் இலவச குழியல் அறை வசதி (ஆண்கள்-2, பெண்கள்-2) அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் : மலைமேல் பக்தர்களின் வசதிக்காக இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை வசதி : மலைமீது முடிகாணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களுக்கு முடிகாணிக்கை மண்டபம் உள்ளது. துலாபாரம் வசதி : பக்தர்கள் தங்களது வேண்டுதல்களில் ஒன்றான எடைக்கு எடை பழங்கள், கற்கண்டு மற்றும் நாணயங்கள் வழங்குவதற்கு ஏதுவாக மலைமேல் நவகிரக சன்னதி அருகில் துலாபாரம் வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் பேருந்து வசதி : பக்தர்களின் பயன்பாட்டிற்காக மலைமேல் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் மூன்று மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்வதற்கும், மலைமேலிருந்து அடிவாரம் வருவதற்கும் குறைந்த கட்டணமாக நபர் 1-க்கு ரூ.10/- கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. குடில்கள் : பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக மலை அடிவாரத்தில் 10 சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மலைமேல் பாம்பாட்டி சித்தர் செல்லும் வழி அருகில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆர்.ஓ.பிளாண்டும் மற்றும் மலைமேல் காலணிகள் பாதுகாப்பு நிலையம் அருகில் 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு ஆர்.ஓ.பிளாண்டும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காது குத்தும் இடம் : திருக்கோயில் மூலம் பெற்றோர்கள் முன்னிலையில் காதுகுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் நடத்துதல் : திருக்கோயில் மூலம் அரசு வழி நெறிமுறைகளின் படி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இரு வீட்டாரிடம் பெறப்படுகிறது. விண்ணப்பங்களில் உள்ள விபரங்கள் பரிசீலனை செய்தபின் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று வருகிறது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : தினசரி திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 23.02.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் (.127(1)-//2010-11 தேதி 25.08.2011) கீழ் வரி விலக்கும் பெறலாம். நன்கொடை : நன்கொடை : பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பணம் (இந்திய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை), பண ஆணைகள், அஞ்சல் ஆர்டர்கள், நிகர வங்கி சேவைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், பற்று / கடன் அட்டைகள், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகையானது கோவிலின் தினசரி நிர்வாகத்திற்காகவும் , பக்தர்களின் உணவு, விடுதி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் ஏழைகளுக்கு முதலுதவி மருத்துவ சேவைகளை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
We use cookies and location data to enhance your experience, show personalized ads, and help you find temples near you.
By continuing to visit this site, you agree to our Privacy Policy.