⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
04:00 AM to 12:00 PM
12:00 PM to 09:00 PM
அதிகாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது.
1) மார்கழி மாதம் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
2) வைகாசி விசாகம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
3) மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா காலத்தில் முதல் திருவிழா, ஏழாம் திருவிழா அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் இதர நாட்களில் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
4) கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
5) தை பூசம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
6) பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருக்காப்பு (திறப்பு) (சந்தனக் காப்பு அலங்காரம்) : 04:00 AM to 04:00 AM IST
2. சுப்ரபாதம் பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) : 05:10 AM to 05:25 AM IST
3. விஸ்வரூப பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) : 05:30 AM to 05:35 AM IST
4. காலசந்தி பூஜை (தங்க கவசம்) : 08:00 AM to 08:30 AM IST
5. உச்சிக்கால பூஜை (தங்க கவசம்) : 12:00 PM to 12:15 PM IST
6. சாயரட்சை பூஜை (தங்க கவசம்) : 05:00 PM to 05:15 PM IST
7. பள்ளியறை பூஜை (சந்தனக் காப்பு அலங்காரம்) : 08:45 PM to 09:00 PM IST
8. திருக்காப்பு (நிறைவு) (சந்தனக் காப்பு அலங்காரம்) : 09:00 PM to 09:05 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): பால சுப்பிரமணிய சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): குமர தன்ரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தூத்துக்குடி
தாலுகா (Taluk): திருச்செந்தூர்
தொலைபேசி (Phone): 04639242221
முகவரி (Address):
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், 628215
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruchendur (6 km), Tuticorin (34 km), Nanguneri (44 km), Tirunelveli (51 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : காக்க கடவிய நீ
ஆகமம் : குமர தன்ரம்
பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
புலவ அருளாளர் : நக்கீரர்
விமானம் வகை : கல்விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th - 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : காக்க கடவிய நீ
நிறுவனத்தின் பெயர் : ஆங்கில முறை மருத்துவமனைகள்
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இத்திருத்தலம் முருகப்பெருமான் சூரபத்மனை வென்று வெற்றி வாகை சூடி சிவபெருமானை வழிபட்ட புண்ணிய தலமாகும். அந்த வெற்றி விழாவினை இங்கே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழாவாக கொண்டாடுவது கண்கொள்ளா காட்சியாகும் .
பிரசாதம்
பொருட்கள் உள்ளடக்கம்:
1. புட்டமுது - 100 கிராம்
2. இலை விபூதி - 1 எண்ணம்
3. மூலவர் மற்றும் சண்முகர் புகைப்படம் - 1 எண்ணம்
தொடர்புக்கு: 0463924221
பிரசாதம்
முருகன் கோயிலில் பொதுவாக பிரசாதமாக வழங்கும் விபூதி மிகவும் மகத்துவமானது. அப்படி இங்கு பன்னீர் இலையில் வைத்து வழங்கப்படும் விபூதி நோய்களை தீர்க்கக்கூடிய அருமருந்தாக உள்ளது. முருகப்பெருமானுக்கு பன்னிரு கைகள் உள்ளன. அதே போல பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலை என அழைக்கப்படுகிறது. பன்னீர் இலை பார்க்க முருகனின் வேல் போலவே இருக்கும்.
பன்னீர் இலைக்கு வேத மந்திர சக்தி உள்ளது.
பிரார்த்தனை
முருகப்பெருமான் அண்ணாகிய விநாயகப் பெருமான் தன் தம்பியுடன் வள்ளியை சேர்த்து வைப்பதற்காக யானை உருவெடுத்து வள்ளியை துரத்துகிறார். அப்போது அவருக்கு பயந்து குகையில் ஒளிந்து கொண்டார் வள்ளியம்மை. அந்த காட்சி தத்ரூபமாக இங்கு வடிக்கப்பட்டு நம் தரிசித்துக்கொண்டிருக்கிறோம். மாதவம் செய்து மாதவராய் பிறந்த பெண்களின் திருமணத்தடை நீக்கி திருமணம் மற்றும் அனைத்து சுகவாழ்வினையும் அளித்து அருள்பாலிக்கும் அன்னையாக இச்சன்னிதியில் திகழ்திறார் நம் வள்ளியம்மை. குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்கும் அன்னையுள்ளம் படைத்த அம்பாளாக திகழ்கிறார்.
பிரார்த்தனை
பஞ்ச லிங்கம் மூலவருக்கு பின்புறம் சிறிய வாயில் வழியே சென்று வழிபடும் வகையில் அமைந்துள்ளார். ஐந்து லிங்கங்கள் ஒரே பீடத்தில் அமைந்துள்ளதால் பஞ்ச லிங்கம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த லிங்கங்களை முருகப்பெருமானே பூஜிப்பதாக கருதப்படுகிறது
பிரார்த்தனை
திருச்செந்தூரில் இதற்கு முன்பு, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களை குறிப்பிடும் வகையில் 24 தீர்த்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவற்றில் கந்தபுஷ்கரணி என்று அழைக்கப்பட்ட தீர்த்தமே இந்த நாழிக்கிணறு ஆகும். இங்கு மட்டுமே பக்தர்கள் தற்போது நீராடி வருகிறார்கள். கோவிலுக்குத் தெற்கே இந்த நாழிக்கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடிப் பரப்பும், ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உப்புத் தன்மை இல்லாத நன்னீராக இருக்கிறது. கந்தக் கடவுளின் அருளால் அமைந்த இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள், சகல நன்மைகளையும் அடைவார்கள். இதில் எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்கள் நீராடி பயனடையலாம்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
தெப்பக்குளம் : திருச்செந்தூர் நகர் எல்லையில் கோவிலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மேற்கே திருக்கோயில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மாசி திருவிழா வை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறும் .
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
சூர சம்ஹார மூர்த்தி : சூர சம்ஹார மூர்த்தி சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சியினை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.
தேசிக மூர்த்தி சுவாமிகள் : தேசிக மூர்த்தி சுவாமிகள் திருவாடுதுறை ஆதீனத்து கட்டளை தம்பிரானாக இருந்தவர். திருக்கோயிலில் மேல கோபுர திருப்பணி செய்துள்ளார். இவர் திருக்கோயிலில் திருப்பணியில் ஈடுபட்டதன் நினைவாக உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிர்புறம் இவரது சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது .
காசி சுவாமிகள் : காசி சுவாமிகள் திருக்கோயிலுக்கு மேற்கே வசந்த மண்டபம் என்ற மண்டபம் திருப்பணி செய்துள்ளார். மேலும் மௌன சுவாமிகளுக்கு உதவியாக இருந்து திருப்பணி வேலைகளை செய்துள்ளார். இவர் திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டதன் நினைவாக உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிர்புறம் இவரது சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது .
மௌன சுவாமிகள் : மௌன சுவாமிகள் திருக்கோயில் மேல கோபுரத்தை புதுப்பித்துள்ளார். மூன்று மரத்தினால் ஆன தேர்களை செய்து கொடுத்துள்ளார். இரண்டு கொடிமரங்களை நிறுவியுள்ளார். சண்முக விலாச மண்டபத்தை புதுப்பித்துள்ளார். இவர் திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டதன் நினைவாக உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிர்புறம் இவரது சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது .
🛠️ வசதிகள் (Facilities)
தங்குமிட வசதி : பக்தர்களின் வசதிக்கேற்ற வாடகையில் 7 விடுதிகள் செயல்பட்டு வருகிறது
1. குகன் விடுதி - 28 அறைகள்
2. கந்தவேல் விடுதிகள் - 20 அறைகள்
3. குமரன் விடுதி - 4 அறைகள்
4. வேலவன் விடுதி - 4 அறைகள்
5. ஆறுமுகம் விடுதி - 4 அறைகள்
6. செந்தில் ஆண்டவர் விடுதி - 4 அறைகள்
7. ஜெயந்திநாதர் விடுதி - 4 அறைகள்
தொடர்புக்கு : 04639 246993
முடி காணிக்கை வசதி : இத்திருக்கோயில் வளாகத்தில், வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முடியிறக்கும் பக்தர்கள் குளிப்பதற்கு குளியல் அறை வசதியும் உள்ளது . இந்த கட்டணமில்லா சேவை நாழிக்கிணறு அருகில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
அஞ்சல் வழி பிரசாதம் : 1. புட்டமுது - 100 கிராம்
2. இலை விபூதி - 1 எண்ணம்
3. மூலவர் மற்றும் சண்முகர் புகைப்படம் - 1 எண்ணம்
தொடர்புக்கு: 0463924221
பொருட்கள் பாதுகாக்கும் அறை : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அலைபேசியினை ராஜ கோபுரம் வடக்கு பகுதியில் உள்ள அலைபேசி பாதுகாக்கும் இடத்தில் செலுத்தி அதற்கான அத்தாட்சி ரசித்தினை பெற்றுக்கொள்ளலாம். வழிபாடு நிறைவு பெற்று திரும்பும் வேளையில் மேற்படி ரசித்தினை காண்பித்து தங்கள் அலைபேசியினை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கான சேவை தொகை அலைபேசி ஒன்றுக்கு ரூபாய் 5 ஆகும்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் மண்டபம் முகப்பு , ராஜகோபுரம் அருகில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோயில் வேன் வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் வயது முதிர்ந்த/மாற்றுத்திறனாளி பக்தர்கள் திருக்கோயில் வளாகத்துக்கு வந்தடையும் வகையில் 4 எண்ணம் சிற்றுந்து திருச்செந்தூர் பேருந்துநிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் கட்டணமில்லா சேவையாக பக்தர்களுக்கு திருக்கோயில் மூலம் வழங்கப்படுகிறது
மின்கல ஊர்தி : இத்திருக்கோயில் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு கட்டணமில்லா சேவையில் ஐந்து மின்கல ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டணமில்லா சேவை ராஜகோபுரம் அருகே அமைந்துள்ள காவடி மண்டபம் முன்புறம் துவங்கி கடற்கரை சண்முக விலாசம் வரை செயல்படும் .
தொடர்புக்கு : 9442089105
சக்கர நாற்காலி : மாற்றுத் திறனாளி பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் சார்பில் கட்டணமில்லா சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. இராஜ கோபுர எதிரில் அமைந்துள்ள தகவல் நிலையத்தில் இந்த கட்டணமில்லா சக்கர நாற்காலி சேவை செயல்பட்டு வருகிறது .
தொடர்புக்கு : 9442073108
கழிவறை வசதி : கோவில் வளாகத்தைச் சுற்றி, திருக்கோயில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் வடக்கு / தெற்கு டோல் கேட் அருகில் 193 கட்டணமில்லா மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளன.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : இத்திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு திருக்கோயில் நாழிக்கிணறு செல்லும் வழியில் பொருட்கள் பாதுகாப்பு அறை செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் ரூ.10/- கட்டணம் செலுத்தி தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
தகவல் மையம் : திருக்கோயில் பற்றிய முழு விபரங்கள் அளிக்கும் வகையில் திருக்கோயில் தகவல் நிலையம் மூலம் 24 மணி நேரமும் ராஜகோபுரம் பின்புறம் பக்தர்களுக்காக செயல்பட்டு வருகிறது .
தொடர்புக்கு : 04639 242271
துலாபாரம் வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் எடைக்கு நிகரான காணிக்கை பொருள்களை துலாபாரம் மூலம் செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம். தொடர்புக்கு: 04639242270
வாகன நிறுத்தம் : இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சேவை தொகை
1. கார் - ரூபாய் 50/-
2. வேன் -ரூபாய் 75/-
4. பஸ் / லாரி - ரூபாய் 200/-
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : பக்தர்கள் தங்கள் காலணிகளை பாதுகாக்கும் வகையில் திருக்கோயிலில் கட்டணமில்லா காலனி பாதுகாக்கும் இடம் காவடி மண்டபம் ஏதிர்புறம் செயல்பட்டு வருகிறது
முதலுதவி மருத்துவ மையம் : திருக்கோயில் வள்ளி குகை அருகில் பக்தர்களின் வசதிக்காக இலவச அலோபதி மற்றும் சித்த மருத்துவ சேவை மையம் திருக்கோயில் மூலம் 31.12.2021 அன்று துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் இலவசமான சேவை. சித்த மருத்துவர்- 1 , மருத்துவ உதவியாளர் - 1, அலோபதி மருத்துவர்- 2 நபர் , செவிலியர் - 2 நபர் , மருத்துவ உதவியாளர் - 2 நபர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . தொடர்புக்கு : 9442087108
தங்கத் தேர் : இத்திருக்கோயிலின் தங்கரதப்புறப்பாடு நாள்தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும். தங்கரதப்புறப்பாட்டில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் , இணைய வழியாகவும் ரூ.2500/- கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம் . தொடர்புக்கு : 04639 242270
🙏 சேவைகள் (Services)
தரிசனம் முன்பதிவு : இணைய தள முன் பதிவு
அன்னதானம் : இத்திருக்கோயில் ராஜகோபுரம் பின்புறம் 16.09.2021-ம் தேதி முதல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 6500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவருகிறது. திருவிழா நாட்களில் தினசரி சுமார் 7000 முதல் 8000 பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர்.
மேற்படி சேவையில் பங்குபெற நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க காணிக்கை வரவேற்கப்படுகிறது.
அன்னதான நான்கொடைகளுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80(ஜி) இன் படி வருமான வரி விலக்கு உண்டு .
அன்னதான நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் நபர் ஒன்றுக்கு ரூ .43/- வீதம் , 5000 பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் .2,15,850/- செலுத்தலாம்.
நன்கொடை : பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை எளிமையாக்க திருக்கோயில் நிர்வாகத்தால் கியூ ஆர் கோட் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் செலுத்த விரும்பும் காணிக்கையை விரைவில் செலுத்த முடியும்



