⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:00 AM to 12:00 PM
04:30 AM to 09:00 AM
தினமும் காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.00 மணிக்கு நடை மூடப்படுகிறது. பின்பு மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணிக்கு நடை மூடப்படுகிறது.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. சுப்ரபாதம் பூஜை : 07:00 AM to 07:15 AM IST
2. விஸ்வரூப பூஜை : 07:30 AM to 07:45 AM IST
3. காலசந்தி பூஜை : 09:30 AM to 09:45 AM IST
4. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:15 PM IST
5. திருவாராதனம் பூஜை : 07:00 PM to 07:15 PM IST
6. இராக்கால பூஜை : 08:00 PM to 08:15 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 09:00 PM to 09:15 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): நீலமேக பெருமாள்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): வைகாணசம்
கருவறை வடிவம் (Sanctum Shape): அறுங்கோண வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): நாகப்பட்டினம்
தாலுகா (Taluk): நாகப்பட்டினம்
தொலைபேசி (Phone): 04366299264
முகவரி (Address):
சன்னதி தெரு, திருக்கண்ணபுரம், 609704
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் - 609704 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு நீலமேக பெருமாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 5th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mayiladuthurai (26 km), Kumbakonam (34 km), Mannargudi (34 km), Neyveli (52 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : வைகாணசம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : திருமங்கையாழ்வார்
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : அறுங்கோண வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 5th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
பிரசாதம்
குழந்தையில்லாத தம்பதியா்கள் குழந்தை வேண்டி நித்யபுஷ்கரணியில் நீராடி பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
நாள்தோறும் அா்த்த ஐாமத்தில் பொங்கல் அமுது செய்யக் கட்டளை நிறுவினாா் முனையதரையா். இது இன்றும் நடந்து வருகின்றது. 5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய் இவைகளை சோ்த்து பக்குவமாய் செய்து தயாரிக்கப்படும், இதனை முனியோதரன் பொங்கல் எனக் கூறுவா் இஃது விற்பனைக்குரியது.
பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக சனியினால் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, ஹஸ்தம் இவற்றில் பஞ்சவர்வ புறப்பாடு பிரகாரத்தில் நிகழும். இந்த ஐந்து நாட்களிலே தான் பெரிய பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யக்கூடும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடு உண்டு. திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும்.
உற்சவமூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்துக்கு மேல் சிறு தழும்பு இன்றும் காணலாம். முன்காலத்தில் அன்னியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர் மனம்புழுங்கி பெருமானே.. பொருவரை முன்போர் கையிலிருந்த பொன்னாழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ என்று கையில் இருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானின் நெற்றியில் பட்டது. அந்த தழும்பு இன்றும் காணலாம்.
நம்மாழ்வாரின் வாக்குப்படி திருக்கண்ணபுரம் திருத்தலம் பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு தனியே வாசல் கிடையாது.
108 திவ்யதேசங்களுள் ஒன்று
பெருமாள் அத்யயன உத்ஸவம் முடிந்தபிறகு தாயாருக்கும் 9 நாள் உத்ஸவம் உண்டு. இதில் கடைசி உத்ஸவம் தை அமாவாசையன்று வரும். அன்று தாயாா் பெருமாள் சன்னதிக்கு எழுந்தருளி பெருமாளுடன் ஸோ்த்தி உத்ஸவம் கண்டருளிகிறாா். நவராத்திரி உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரா்கள் உபயம் செய்து வருகிறாா்கள். பங்குனி உத்திரத்தின்று ஸ்ரீ செளரிராஐப் பெருமாள் தாயாா் சன்னதிக்கு எழுந்தருளி தயாாருடன் ஸோ்த்தி உத்ஸவம் நடைபெறுகிறது.
திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.
பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும்.
வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாக்கள் இங்கு சிறப்பானவை.
மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற்கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜப் பெருமாளை மாப்பிள்ளைப் பெருமாள் என்று அழைக்கின்றனர்.
இத்தலத்தினை, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர்.
திருக்கண்ணபுரம் கோவிலை சுற்றி அமைந்துள்ள தீா்த்தம் முதலில் பூதாவடம் தீா்த்தத்தில் நீராடி பின்பு ஆனந்த ஸரஸ் தீா்த்தத்தில் நீராடி இறுதியாக நித்யபுஷ்கரணியில் நீராடி ஸ்ரீ செளரிராஜபெருமாள் மற்றும் ஸ்ரீ கண்ணபுரநாயகியை தரிசனம் செய்து உத்பலாவதக விமானத்தை வலம் வந்தால் நோய்கள் மற்றும் நாம் ஏழேழு ஜன்பத்தில் செய்த பாவங்கள் நீங்கி சகல விதமான செல்வங்கள் பெற்று பின்னா் பரமபதமும் பெறலாம்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
ஆனந்த ஸரஸ் தீா்த்தம் : ஸ்ரீ செளரிராஜ பெருமாளுக்கு மேற்கு புறத்தில் ஒரு தீா்த்தமிருக்கிறது. இது ஆனந்தன் என்ற ஸா்பராஜன் தன் அனங்களோடு இதன் வழியே வந்து பெருமானை வழிபட்டுச் சென்றதால் இப்பெயா் பெற்றது. இந்த தீா்த்தத்தில் நீராடுவோா்க்கு ஸகல ஐஸ்வரியமும் சித்திக்கும். அவா் எல்லா சித்தியும் பெற்று வாழ்வா். ஆனந்தன் சூழ்ந்து கொள்ளப்பட்டிருப்பதால் இதற்கு ஆனந்த ஸரஸ் என்று பெயா் வந்தது.
பூதாவடம் குளம் : ஸ்ரீ செளரிராஜனது திருக்கோயிலின் தென் புறத்தில் ஒரு தாடாகம் உள்ளது. இதனைச் காப்பது ஒரு பூதம். ஆதலால் இது பூதாவடம் என்ற பெயா் வந்தது. இந்தப் பூதம் உலடதகம் தோன்றிய போதே தோன்றியது வடக்கு நோக்கி நின்று எப்போதும் ஸ்ரீ செளரிராஐனையே தியானஞ் செய்து வருகின்றது.
முன்பு தக்ஷிமுனிவனது சாபத்தால் சந்திரனை க்ஷயரோகம் பற்றிக் கொண்டது. திருப்பாற்கடலு்ககு அதிபதியான ஸமுத்ர ராஜன், தன் மகனான சந்திரனைக் காப்பாற்றுவதற்காக ஸ்ரீ செளரிராஜனது ஆணையால் இந்தப் பூதம் சந்திரனைப் பிடித்துக் கொண்டு வந்து கோர வடிவலிருந்து ரோகத்தைத் தன் காலின் கீழிட்டுத் துவைத்து வெருட்டித் துரத்தியது. சந்திரனை அந்தத் தடாகத்தில் நீராடச் செய்து பரமசிவனிடத்துச் சென்னியிற் சூட அளித்தது.
இந்தத் தாடகத்தில் நீராடுவோா் எவ்வகைக் கொடிய நோயாயாகினும் நோய் நீங்கி இன்புறுவா்.
நித்யபுஷ்கரணி : 4.36 ஏக்கரில் திருக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தை சுற்றி 9 படிதுரை உள்ளது மேலும் திருக்குளத்தை சுற்றி மதில்கள் உள்ளது.
இத்திருக்குளம் நித்ய புஷ்கரிணி என்று பெயா் பெற்றது. இத்திருத்தலத்தின் ஸப்த புண்யங்களுள் இதுவும் ஒன்று ஆகும். பாத்ம புராணத்தில் இந்த புஷ்கரிணியின் மேன்மை கூறப்பட்டுள்ளது. உத்தராயண புண்ய காலத்தில் முதல் நாளிலும் புண்ய காலத்தின் மறுநாளிலும் கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணவேணி, காவிரி, தாமிரபரணி, வைகை போன்றநதிகளும் புஷ்கரம் போன்ற ஏரிகளும் புனித தீா்த்தங்களும் இங்கு தமது முழு அம்சத்துடன் விளங்குகின்றன. என புராணம் கூறுகின்றது. மற்றதிருக்குளங்களில் நீராடி புனிதம் பெறகால நியமங்கள் உண்டு. ஆனால் எப்பொழுதும நீராடுபவா்களை துாய்மைப்படுத்துவதால் இதற்கு நித்திய புஷ்கரணி என்று பெயா் ஏற்பட்டதாக புராணம் கூறுகிறது. இப்புஷ்கரணியில் உத்தராயண புண்ய காலமான சங்கராந்தியை ஒட்டிய முன்று தினங்களிலும் இத்திருக்குளத்தின் ஒன்பது படித்துறைகளிலும் நீராடி ஸ்ரீ செளரிராஐப் பெருமானை வலம் வந்து வழிபடுவதால் மக்கட்பேறு முதலிய எல்லா நலன்களையும் பெறலாம் என்றும் புராணம் கூறுகிறது. அமாவாசையன்று இப்புஷ்கரணியில் நீராடி நீத்தாா் கடன்கள் பித்ரு கா்மாக்கள் செய்வதால் கயை க்ஷேத்ரத்தில் செய்த பலனை பெறலாம் என்றும் பாத்ம புராணம் கூறுகிறது.
இது கடலைச் சாா்ந்த புனித நீா் என்றும் அதன் சாட்சியமாக கடல் சிப்பிகளின் வகைகள் இதன் அடியில் காணக் கிடைக்கும் என்றும் பாத்ம புராணம் கூறுகிறது. இந்த நித்ய புஷ்கரணியில் அமாவாவச தினத்தன்று நீராடி கோவிலை வலம் வந்து விபீஷண ஆழ்வாருக்காக செளரிமுடி தரித்து நடையழகு காட்டும் ஸ்ரீ செளரிராஐபெருமாளின் திருக்கைத்தல சேவையை தரிசிப்பதின் முலம் இப்பிறவி பலனையும் பெறலாம்.
இதன் தீா்த்தத்தை பானம் செய்தால் மறுபிறவி இனியில்லை
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
ஆண்டாள் : 2அடி 2அங்குலம்
அருள்மிகு பெருமாள் : அருள்மிகு பெருமாள்
அருள்மிகு பிடாரி அம்மன் பீடத்துடன் : அருள்மிகு பிடாரி அம்மன் பீடத்துடன்
பூதேவி : 2அடி
மணியம் செளரிராஜ பெருமாள் : 2 அடி 10 அங்குலம்
சக்ரவா்த்தி திருமகன் : 3அடி 4 அங்குலம்
சீதாபிராட்டியா் : 2அடி 8 அங்குலம்
லெட்சுமணன் : 2அடி 10 அங்குலம்
இராஜகோபாலசுவாமி : 3அடி 3அங்குலம்
செளரிராஜபெருமாள் : 2அடி 2அங்குலம்
செல்வா் : 1அடி 1 அங்குலம்
பூதேவி : 2அடி
கண்ணப்புரமுடையாா் : 1அடி 2அங்குலம்
திருப்பணாழ்வாா் : 1அடி 11அங்குலம்
நம்மாழ்வாா் : 1அடி 11அங்குலம்
மணவாளமாமுனிகள் : 8அங்குலம்
பத்மினி : 2அடி 3அங்குலம்
சக்ரத்தாழ்வாா் : 1அடி 10அங்குலம்
சந்தாணகிருஷ்ணன் : 8அங்குலம்
யாகசாலைபெருமாள் : 2அடி 5அங்குலம்
தாமோதரகண்ணன் : 1அடி 7அங்குலம்
திருமங்கையாழ்வாா் : 2அடி 11அங்குலம்
ஸ்ரீ தேவி : 11அங்குலம்
ஸ்ரீ தேவி : உயரம் 2அடி
குலசேகராழ்வாா் : 1அடி 11அங்குலம்
குமுதவள்ளிநாச்சியாா் : 1அடி 8அங்குலம்
பெரியாழ்வாா் : 1அடி 8அங்குலம்
நாதமுனிகள் : 1அடி 5அங்குலம்
ஆழவந்தாா் : 11அங்குலம்
மதுரகவியாழ்வாா் : 1அடி 7அங்குலம்
பேய்யாழ்வாா் : 1அடி 11அங்குலம்
பொய்கையாழ்வாா் : 1அடி 11அங்குலம்
பூதத்தாழ்வாா் : 1அடி 11அங்குலம்
குரத்தாழ்வாா் : 1அடி 4அங்குலம்
சேனை முதலியாா் : 1அடி 7அங்குலம்
இராமனுஜா் : இராமனுஜா்
தொண்டரடி பொடியாழ்வாா் : 1அடி 7அங்குலம்
திருக்கட்சிநம்பிகள் : 1அடி 11அங்குலம்
பிள்ளைலோகயாச்சியா் : 1அடி 5அங்குலம்
திருமிசையாழ்வாா் : 1அடி 8அங்குலம்
ஆதீஷேசன் பீடம் : 1அடி 11அங்குலம்
சந்தானகிருஷ்ணன் : 2அங்குலம்
தாயாா் : 1அடி 10அங்குலம்
ஆஞ்சநேயா் : 1அடி 7அங்குலம்
உபரீஸ்வரன் மகாராஜா : 1அடி 11அங்குலம்
அருள்மிகு பிடாரி அம்மன் பீடம் தனியாக உள்ளது : அருள்மிகு பிடாரி அம்மன் பீடம் தனியாக உள்ளது
🛠️ வசதிகள் (Facilities)
கழிவறை வசதி : இத்திருக்கோயில் கழிப்பறை வசதி உள்ளது,
திருக்குளம் : இத்திருகோயில் எதிர்புறமும் ஆஞ்சநேயர் சன்னதிக்கு அருகிள் உள்ள திருக்குளத்தில் மாசி மக பெருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடைபெறும்
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக குளியலறை இத்திருக்கோயிலின் வலது புறம் ஆண்களுக்கென ஒரு குளியலறையும் பெண்களுக்கென ஒரு குளியலறையும் கட்டப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : -
சக்கர நாற்காலி : திருக்கோயில் அலுவலகத்தில் உள்ளது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : தினமும் 30 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.








