⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
07:00 AM to 12:30 PM
05:00 PM to 09:00 PM
விஸ்வரூபம்,
திருவனந்தல்,
திருப்பாவை சேவாகாலம்,
காலசந்தி திருவாராதனம்,
திருப்பாவை சாற்று முறை,
உச்சி காலம்,
நடை சாத்துதல்,
சந்நிதி திறப்பு,
நித்யானு சந்தானம் சேவாகாலம்,
சாற்று முறை,
இரண்டாம் கால திருவாராதனம்,
அர்த்த ஜாமம்,
நடை சாத்துதல்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை (மலர்) : 08:00 AM to 08:30 AM IST
2. காலசந்தி பூஜை (மலர்) : 09:00 AM to 10:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (மலர்) : 12:00 PM to 12:30 PM IST
4. நித்ய அனுஷ்டானம் (மலர்) : 06:00 PM to 06:30 PM IST
5. இரண்டாம்கால பூஜை (மலர்) : 07:30 PM to 08:00 PM IST
6. அர்த்தஜாம பூஜை (மலர்) : 09:00 PM to 09:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): ஆராவமுதன்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு கோமளவல்லி தாயார்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): குருக்கத்தி மலர்
ஆகமம் (Tradition): பாஞ்சராத்திரம்
கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தஞ்சாவூர்
தாலுகா (Taluk): கும்பகோணம்
தொலைபேசி (Phone): 0435-2430349
முகவரி (Address):
சாரங்கபாணி சந்நதி தெரு, கும்பகோணம், Kumbakonam, 612001
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சாரங்பாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு ஆராவமுதன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 2nd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Kumbakonam (4 km), Thanjavur (31 km), Mannargudi (35 km), Mayiladuthurai (39 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள்- 1பாசுரம்,
பெரியாழ்வார்-3பாசுரம்,
திருமாழிசையாழ்வார்-7பாசுரம்
,பூதத்தாழ்வார்-2பாசுரம்,பேயாழவார்-2பாசுரம்,நம்மாழ்வார்-11பாசுரம்,
திருமங்கையாழ்வார்-25பாசுரம் மொத்தம்-51
ஆகமம் : பாஞ்சராத்திரம்
பாடல் பெற்றது : வைணவ ஆழ்வார்கள்
புலவ அருளாளர் : திருமழிசையாழ்வார்
ஸ்தல விருட்சம் : குருக்கத்தி மலர்
விமானம் வகை : சாலகோபுரம்
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 2nd நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : நாயக்கர், பிற்கால சோழர்கள், விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள்- 1பாசுரம்,
பெரியாழ்வார்-3பாசுரம்,
திருமாழிசையாழ்வார்-7பாசுரம்
,பூதத்தாழ்வார்-2பாசுரம்,பேயாழவார்-2பாசுரம்,நம்மாழ்வார்-11பாசுரம்,
திருமங்கையாழ்வார்-25பாசுரம் மொத்தம்-51
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
திருக்கோயில் சிறப்புகள்
ஸ்ரீ சார்ங்கராஜாவின் பெருமையை, இக்கலியுகத்தில் எவர்கள் சொல்லுகிறார்களோ? கேட்கிறார்களோ? அவர்களுக்கு ஸ்ரீ கோமளவல்லியுடன் கூடிக் களிக்கும் ஸ்ரீ சார்ங்கராஜா எல்ல அபிஷ்டங்களையும் தந்து காத்தருள்வான் என்ற கருத்துக் கொண்ட தலபுராணச் செய்யுள்:-
ஸ்ரீ சார்ங்கபாணே : விபவம் சுபாஸ்பதம்
யேச்ராவயந்தீஹ கலௌயுகேபரம்
ச்ருண்வந்தி தேஷாம் அகிலேஷ்டதாயீ
பவத் பஸெள சார்ங்கதர : ப்ரியாயுத :
இத்திருக்கோயலில் மூலவர் கோமளவல்லித்தாயார் படிதாண்டா பத்தினி என்ற சிறப்பு திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக உற்சவத்தின் போது தாயார் திருக்கோயிலை கொடிமரத்தை தாண்டி வெளியே செல்வதில்லை.
எனவே, ஆண்டு தோறும் நடைபெறும் கனு உற்சவத்தின்போது அருகிலுள்ள சக்கரபாணிசுவாமி திருக்கோயில் விஜயவல்லித் தாயார், இராமசாமி திருக்கோயில் சீதாமகாலட்சுமி, இராஜகோபாலசுவாமி திருக்கோயில் செண்பகவல்லித்தாயார், ருக்மணித்தாயார் இத்திருக்கோயிலில் எழுந்தருளி கனுபடி உற்சவத்திற்கு அருள்பாளிப்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
பெருமாள் கருவறையில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் குழந்தை உருவத்தில் உள்ள கிருஷ்ண விக்கிரகம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. நீண்ட நாட்களாக மகப்பேறு இல்லாத தம்பதிகள் இவ்விக்கிரகத்தைத் தங்கள் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர்கள் விரைவில் மகப்பேறு பலனை அடையலாம் என்பது இக்கோயிலின் ஐதிகம். இன்று இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் மகப்பேறு இல்லாத தம்பதியர் இத்திருக்கோயிலுக்கு வந்து பலனைப் பெற்று பலனைப் பெற்று இருக்கிறார்கள்.
இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாக தை 01 முதல் ஆனி 32 முடிய உத்ராயண வாசலும் ஆடி 01 முதல் மார்கழி 31 வரை தட்சணாயன வாசலும் திறந்திருக்கும். இவ்விரண்டு வாசல்களும் தை 01 மற்றும் ஆடி 01 அன்று மட்டும் இரு வாசல்கள் திறப்பினை காண முடியும். இவ்விரண்டு வாசல் திறப்பினை காணுதல் என்பது காணக்கிடைக்காத புண்ணியமாக கருதப்படுகின்றது.
மேலும், பலர் இப்பெருமானைச் சேவிப்பதன் மூலம் தங்களின் பல கொடிய பாவங்களைப் போக்குகின்றனர். இப்பெருமானைச் சேவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் வீட்டிலிருந்து திருக்கோயிலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தாலும் பூமியில் அவர்களுக்கு மறு பிறப்பு இல்லை என்ற ஐதிகம் இருப்பதாகத் தல வரலாறு கூறுகின்றது.
பெருமாளின் உத்திராயண தட்சணாயணவாசலைக் கடந்த ஜீவனுக்கு வைகுண்டப் பிராப்தம் கிட்டுகிறது என்றும், பெருமாளுக்கு உற்சவம் முதலிய கைங்கரியம் செய்பவர்களுக்குச் சகல சம்பத்துகளும், போகங்களும் கிடைக்கின்றன என தல புராணம் கூறுகிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
பொற்றாமரைத் திருக்குளம் : ஸ்ரீ சார்ங்கபாணிக் கோயிலின் தீர்த்தங்கள் பொற்றாமரைக்குளம், காவேரி, அரிசல் ஆறு முதலியன ஸ்ரீ சார்ங்கபாணிக் கோயிலின் தீர்த்தங்கள் ஆகும். பொற்றாமரையின் வேறு பெயர்கள் இத்தீர்த்ததிற்கு ஹேம புஷ்கரணி, லெக்ஷ்மி தீர்த்தம், அமுதத் தீர்த்தம் என்று வேறு பெயர்களும் உள்ளன. பெயர்க் காரணம் பொற்றாமரை எனும் இக்குளத்தில் பொன் தாமரையில் கோமளவல்லி குழந்தையாக அவதரித்ததால் இது பொற்றாமரைக் குளம் எனவும், அமிர்தக் குடம் சிவபெருமானால் சிதைந்த போது குடத்தில் இருந்த அமிர்தத் துளிகள் இக்குளத்தில் சிந்தியதால் இது அமுதக்குளம் எனவும், இத்திருக்குளத்தில் இலக்குமியான கோமளவல்லி ஆயிரம் இதழ்களுடன் கூடிய பொன்மயமான தாமரைப் பூவிலிருந்து அவதாரம் செய்தபடியால் லெக்ஷ்மி தீர்த்தம் எனவும் கூறுவர். பொற்றாமரைத் திருக்குளம் அமைப்பு ஸ்ரீ சார்ங்கபாணித் திருக்கோயிலின் மேலைக்கோபுரவாசல் எதிரே வெளிப்புறம் பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. பொற்றாமரைக் குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. இதில் பதினாறு தூண்கள் உள்ளதால் பதினாறு கால் மண்டபம் என்றும் இது அழைக்கப்படுகிறது. குளத்தின் மேற்பகுதியின் நான்கு மூலைகளிலும் நாலுகால் மண்டபங்கள் நான்கு உள்ளன. வடக்குப் படித்துறையில் கோமளவல்லித் தாயார், ஹேம மகரிஷி சந்நதிகள் உள்ளன. பொற்றாமரைக் குளம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் கீழ்மேல் நீளம் 370 அடி, அகலம் (தென்வடல்) 257 அடி ஆகும். தேவாரத்தில் இக்குளம் பற்றி நாவுக்கரசர் கீழ்க்கண்டவாறு பாடுகின்றார். சரசுவதி பொற்றாமரைப் புட்கரணி (ஆறாம் திருமறை 75-6) அச்சுதப்ப மன்னர் காலத்தில் சார்ங்கபாணித் தீர்த்தங்களில் ஒன்றான காவிரி நதியின் பயன்பாட்டை நன்குணர்ந்து மன்னரின் ஆலோசனைப்படி கோவிந்த தீட்சதரே காவேரியின் கரைகளின் ஆங்காங்கே படித்துறைகளையும், மண்டபங்களையும் அமைத்தார். பொற்றாமரை தோன்றிய வரலாறு சிவபெருமானின் உத்திர தாண்டவத்தின் காரணமாகக் கும்பம் சிதைந்த போது குடத்தில் இருந்த நீர் இரண்டு பிரிவாகச் சிதறியது. ஒன்று கும்பகோணம் மகாமகத் திருக்குளம், மற்றொன்று பொற்றாமரைத் திருக்குளமாகும். பொற்றாமரைப் புட்கரணி திருக்குளத்தின் கிழக்குத் துறையின் படிக்கட்டுகளின் ஒரு துண்டுக் கல்வெட்டுள்ளது. சக ஆண்டு 1556 ஸ்ரீமுக வருடம் வைகாசி மாதம் குறிக்கப்பெற்ற இத்தெலுங்கு சாசனம் இரகுநாத நாயக்கரின் நன்மைக்காகச் செய்யப்பெற்ற அறக்கட்டளை பற்றிய ஒரு பகுதி மட்டும் உள்ளது. இக்கல்வெட்டு கி.பி.1633 ஆம் ஆண்டு மே மாதம் எழுதப் பெற்றது என்பதறியலாம். பலன்கள் மாசிமக நாளில் பெருமாளின் தெப்ப உற்சவம் நடைபெறுகின்றது. சித்திரைப் பருவத்திலும், கார்த்திகை சோமவாரத்திலும், அமாவாசை அன்று இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்பவர் அளவிலாச் செல்வமும் வளமும் பெற்று வாழ்வர். இக்குளத்தில் நீராடுபவர்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்று தலவரலாறு கூறுகின்றது. மிகக் கொடிய பாவம் செய்தோர் இத்தீர்த்தத்தில் மூழ்கினால் நற்பேறு பெறுவர் என்பது நம்பிக்கை. எமனுக்கு மோட்சம் அளித்த கோமளவல்லியை மணந்து இத்தலத்திலே சார்ங்கபாணி சிறக்க அமர்ந்ததால் சார்ங்கபாணிக்கே இப்பொற்றாமரைக்குளம் சொந்தமாயிற்று. மகாமகப் பெருவிழாவில் மகாமகக் குளத்திலும், ஸ்ரீ சார்ங்கபாணிக் கோயில் தீர்த்தமான பொற்றாமரைக் குளத்திலும், காவேரி ஆற்றிலும் ஆக இந்த மூன்று தீர்த்தத்திலும் நீராடி பாவத்தை நீக்கி புண்ணியம் தேட மக்கள் திருக்குடந்தை நோக்கி பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை வருகை தருகிறார்கள். இத்திருக்கோயிலின் பொற்றாமரை தீர்த்தமானது மகாமகப் பெருவிழாவில் மிகவும் இன்றியமையாததாகும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
35.ஸ்ரீ சண்டி : ஸ்ரீ சண்டி தாயார் சந்நியில் அமைந்துள்ளது.
36.ஸ்ரீ ப்ரசண்டி : ஸ்ரீ ப்ரசண்டி தாயார் சந்நியில் அமைந்துள்ளது.
20.திருபானாழ்வர் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
11.மதுரகவியாழ்வார் : ஆழ்வார் சன்னிதியில் அமைந்துள்ளது.
15.பூதத்தாழ்வாரர் : ஆழ்வார் சந்நதிதியில் அமைந்துள்ளது.
12.திருமங்கையாழ்வார் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
4.துவரபாலகர்-1 : ராஜகோபுரம் முன் பக்கம் பாதுகாவலர்
பொய்கையாழ்வார் : ஆழ்வார் சந்நதிதியில் அமைந்துள்ளது.
14.பேயாழ்வார் : ஆழ்வார் சந்நதிதியில் அமைந்துள்ளது.
16.திருமழிசையாழ்வார் : ஆழ்வார் சந்நதிதியில் அமைந்துள்ளது.
27.துவாரபாலகர்-1 (மஞ்சள் கோபுரம்) : மஞ்சள் கோபுரம் துவாரபாலகர்-1
19.தொண்ரடிப்பொடியாழ்வர் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
நாதமுனிகள் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
28.துவார பாலகர்-2 (மஞ்சள் கோபுரம்) : மஞ்சள் கோபுரம் துவார பாலகர்-2
26.கொடிமர பலிபீடம் : பலிபீடம் கொடிமரம் முன்பு அமைந்துள்ளது.
31.துவார பாலகர் -1 (திருமாமணி மணடபம்) : திருமாமணி மணடபத்தில் அமைந்துள்ள துவார பாலகர் -1
29.மாடத்து கிருஷ்ணன் : மஞ்சள் கோபுரத்தில் மாடத்து கிருஷ்ணன் அமைந்துள்ளது.
6.கோபாலகிருஷ்ணன் : ராஜகோபுரத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ணன்
22.கூரத்தாழ்வார் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
25.நிகமாந்த தேசிகன் : தேசிகன் சந்நிதியில் உள்ளது.
30.அய்யா குமார தாத தேசிகன் : அய்யா குமார தாத தேசிகன் சந்நிதியில் அமைந்துள்ளது.
32.துவார பாலகர் -2 (திருமாமணி மணடபம்) : திருமாமணி மணடபத்தில் அமைந்துள்ள துவார பாலகர் -1
33.பலிபீடம் (திருமாமணி மணடபம்) : திருமாமணி மணடபத்தில் அமைந்துள்ள பலிபீடம்
34.கிருஷ்ணர் : கிருஷ்ணர்
7.நாககிருஷ்ணன் : ராஜகோபுரத்தில் அமைந்துள்ள நாககிருஷ்ணன்
17.குலசேகர ஆழ்வார் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
5.துவாரபாலகர்-2 : ராஜகோபுரத்தின் முன் பக்கம் பாதுகாவலர்
நம்மாழ்வார் : ஆழ்வார் சன்னிதியில் அமைந்துள்ளது.
18.பெரியாழ்வார் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
திருக்கச்சிநம்பிகள் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
24.ஆளவந்தார் : ஆழ்வார் சந்நிதியில் அமைந்துள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
சக்கர நாற்காலி : அலுவலக நுழைவாயில் உள்ளது.
நூலக வசதி : புத்தகங்கள், செய்திதாள், நாற்காலிகள், மேசைகள், மின்விளக்குகள், மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தம் : இராஜகோபுரம் இடது பக்கம்
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : அலுவலகத்தின் முன் பக்கம், அன்னதான கூடம்
கழிவறை வசதி : கோவிலில் மூன்று கழிப்பறை வசதி உள்ளது
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : அன்னதான நன்கொடை
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 14.01.2006-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 50 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதானக் கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வாசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வாரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு சார்ங்கபாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
நாள் ஒன்றுக்கு ரூ.2,000/-
நிரந்த வைப்புத்தொகை ரூ.30,000/-
நன்கொடை : பொது நன்கொடை
பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம், பக்தர்கள் வசதிக்காக ... என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (செயல் அலுவலர், அருள்மிகு சார்ங்கபாணிசுவாமி திருக்கோயில், கும்பகோணம்) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
கோசாலை நன்கொடை
தானத்தில் சிறந்து விளங்குவது கோதானம் மற்றும் அன்னதானம், இவ்விரண்டும் இத்திருக்கோயிலில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. பசுமாடுகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. ஸ்ரீ ஆண்டாள் இவ்வாராவமுதனை கோலால் நிறைமேய்த்து ஆயனாய் குடந்தைக்கிடந்த குடமாடி என்று நாச்சியார் திருமொழியில் கண்ணனாக பாவித்து பாடியதன் விளைவால் இத்திருக்கோயிலின் கோசாலை அபிவிருத்திக்கு நன்கொடை அளித்து கோதானம் செய்த பலனைப்பெற்று வாழ்வில் வளம்பெற வேண்டுகிறோம்.
கோசாலை பராமரிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.3,000/-
நிரந்தர வைப்புத்தொகை ரூ.25,000/-









