⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:00 AM to 12:30 PM
04:00 PM to 09:00 PM
காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு நடை சாற்றப்படும். வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய வாரநாட்களில் மட்டும் 1.00 மணிக்கு நடை சாற்றபடும், மாதந்தோறும் கடைசி வெள்ளிகிழமை அன்று மட்டும் நடை சாத்தப்படுவதில்லை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. திருவனந்தல் பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. விளா பூஜை : 06:30 AM to 06:45 AM IST
3. சிறுகால சந்தி பூஜை : 08:30 AM to 08:45 AM IST
4. காலசந்தி பூஜை : 10:30 AM IST
5. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:10 PM IST
6. சாயரட்சை பூஜை : 05:30 PM to 06:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 09:00 PM to 09:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு சங்கரலிங்க சுவாமி
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு கோமதி அம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): புன்னை மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தென்காசி
தாலுகா (Taluk): சங்கரன்கோவில்
தொலைபேசி (Phone): 04636222265
முகவரி (Address):
சுவாமி சன்னதி தெரு, சங்கரன்கோயில், 627756
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் - 627756 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு சங்கரலிங்க சுவாமி முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 11th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tenkasi (31 km), Rajapalayam (32 km), Sattur (51 km), Ambasamudram (52 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 11th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : அண்மை காலம்
ஸ்தல சிறப்பு வகை : அருளாளர்களின் அபிமான ஸ்தலம்
பாரம்பரிய கோயிலா : Yes
நிறுவனத்தின் பெயர் : சிறுவர் விடுதி
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
சைவமும் வைணவமும் ஒன்றே என உணர்த்திய ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது மண் ஸ்தலமாகும் (நிலம்) சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இத்திருக்கோவிலின் நாகசுனை தெப்பத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு புற்று மண் எடுத்து பூசிவர தீராத நோய் எல்லாம் தீரும் என்பது உண்மை. அம்பாள் சன்னதியில் உள்ள சக்ர பீடத்திலிருந்து அம்பாளை நினைத்து வழிபட நினைத்த காரியம் வெற்றி அடையும் என்பது தனிச் சிறப்பாகும்.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
நாகசுனை : சைவமும் வைணவமும் ஒன்றான தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது பூமி ஸ்தலமாகும் (நிலம்) சிவனும் விஷ்ணுவும் சங்கரநாராயணராக ஒன்றாக காட்சியளிப்பது இத்திருத்தலத்தின் சிறப்பு. சுவாமி அம்பாளை வணங்கி, புத்திரபூஜை செய்து வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
மன்மதன் : சங்க கால இலக்கியத்தை பறைசாற்றும் வகையில் இச்சிற்பம் அமையப்பெற்றுள்ளது, இது ரதி சிற்பத்தின் எதிர் பக்கத்தில் அமையப்பெற்றுள்ளது.
ரதி : சங்க கால இலக்கியத்தை பறைசாற்றும் வகையில் இச்சிற்பம் அமையப்பெற்றுள்ளது. இது மன்மதன் சிற்பத்தின் எதிர் பக்கத்தில் அமையப்பெற்றுள்ளது.
மணிக்ரீவன் : மணிக்கிரீவன் எனும் தேவன் காவற்பறையன் என்றும் அழைக்கப்படுகிறார் அவர் அன்னை பார்வதி தேவியின் சாபத்தால் பறையனாகி புன்னைவனத்தில் காவலாக இருந்தான். அதனால் அவன் காவல் பறையன் என பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதருக்கு புன்னை வனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் காவல் பறையனே காவல் இருந்து வந்தார். அந்தோட்டத்தின் அருகில் புற்று ஒன்று வளர்ந்திருந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்து பாம்பின் வால் வெட்டப்பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டு அந்நேரம் உக்கிரபாண்டியன் அடுத்தவனத்தில் வந்த சேதி குறித்து நடந்த செய்தியை தெரிவிக்க ஓடினான்.
🛠️ வசதிகள் (Facilities)
அஞ்சல் வழி பிரசாதம் : அஞ்சல் பிரசாதம்
தங்குமிட வசதி : சாதாரண அறைகள் 18ம் குளிரூட்டப்பட்ட அறைகள் 2ம் அனைத்து வசதிகளுடன் பசலி 1432முதல் மூன்றாண்டு கால குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. .
முடி காணிக்கை வசதி : வசதிகள் விவரம் - பக்தர்களின் வசதிக்கென முடிகாணிக்கை செலுத்தும் மண்டபம் தண்ணீர் வசதியுடன் உள்ளது. .
கழிவறை வசதி : இக்கோயிலில் பக்தர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலில் 3 வீல் சேர்கள் உள்ளது. வயதான மற்றும் நோயுற்ற பக்தர்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. வீல்சேர்கள் பயன்படுத்தும் வகைக்கு இத்திருக்கோயில் பாரா தொடர்புகொள்ளலாம். தொடர்புகொள்ளும் .
தொலைபேசி எண் 9791972174.
கல்யாண மண்டபம் : பொது மக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கொண்ட திருமண மண்டபம் சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு வரப்படுகிறது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : இந்து சமய அறநிலையத் துறை 2014-2015 இல் திருக்கோவிலை ஆய்வு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க இந்த காலனி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டு இன்று வரையில் நல்ல முறையில் செயல்படுத்தப் பட்டு வரப்படுகிறது .
மருத்துவமனை : திருக்கோயில் அருகில் பக்தர்களின் வசதிக்காக இலவச மருத்துவ சேவை மையம் திருக்கோயில் மூலம் 02.12.2022 அன்று துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இது முற்றிலும் இலவசமான சேவை.
தொடர்புக்கு : 04636222265
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி அருகில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
🙏 சேவைகள் (Services)
அன்னதானம் : இத்திருக்கோயிலில் தினமும் 150 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 5250/- செலுத்தினால் செலுத்துபவர் பெயரில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதான உபயதாரர் விபரம் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்படும். ரூ. 1,05,000/- செலுத்தினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு 150 நபர்களுக்கு வருடந்தோறும் ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும்.



