Timings
Deity
Address
History
Location
Images

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை

பிற கோவில்களைப் பார்க்க:

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை - 641001 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:30 AM to 12:00 PM
04:00 PM to 08:30 PM
காலை ஆறுமணி முப்பது நிமிடத்திலிருந்து நண்பகல் பன்னிரண்டு மணி வரை மாலை நான்கு மணியிலிருந்து இரவு எட்டு முப்பது மணி வரை

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை (பூக்கள்) : 06:30 AM to 07:00 AM IST
2. காலசந்தி பூஜை (வில்வம்) : 08:30 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (வில்வம் பூக்கள்) : 11:30 AM to 12:00 PM IST
4. சாயரட்சை பூஜை (வில்வம், அருகம்புல், நந்தியா வட்டம்) : 05:30 PM to 06:00 PM IST
5. அர்த்தஜாம பூஜை (பூக்கள், வில்வம், அருகம்புல்) : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): சங்கமேஸ்வரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): மகிழமரம்

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கோயம்புத்தூர்

தாலுகா (Taluk): கோயம்புத்தூர் தெற்கு

தொலைபேசி (Phone): 04222393677

முகவரி (Address):

ஈஸ்வரன் கோயில் வீதி, கோட்டை, நகர் மண்டபம், கோவை, 641001

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Sree Annapoorna

Sree Annapoorna

⭐ 4.1 (2841 reviews)

📍 Big Bazaar Street, Town Hall

🚀 0.2 km away
View
Hotel Sri Ganapathy

Hotel Sri Ganapathy

⭐ 3.6 (268 reviews)

📍 Oppanakaran Street, Near Prakasam, Town Hall

🚀 0.4 km away
View
Sri Saravana Bhavan

Sri Saravana Bhavan

⭐ 4.1 (50 reviews)

📍 Oppanakara Street, Oppanakara Street

🚀 0.6 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், கோட்டை, நகர் மண்டபம், கோவை - 641001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சங்கமேஸ்வரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Coimbatore (4 km), Pollachi (39 km), Tiruppur (41 km), Udhagamandalam (52 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் / கவிதை : பாவ நாரிகள் மாமட மாதர் வீனிகளாணவ பாவை யாரில நீரண முளையாளும் பார்வையாமிகு கூரையி லாலு மாமனி யார்குழை பார காரண லார்குல லதனாலுஞ் சாவ தார வீதரரமு தார்த ராவித ழாலித சாத மூரலி தாமதி முகமாலுஞ் சார்வ தாவடி ஏணிடர் வீற மாளறி வேமிகு சார மாயதி லேயுற லொழிவேனோ ஆவ ஆர்வன நான்மறையாதி மூல பார்வரி யாதி காணரி தாகிய பரமேஸா ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர னாதி தேவர்களி யாவர்கள் பணிபாத கோவ தாமறை யோர்மறை யோத மோதம் விழாவொலி கோடியாகம மாவொலி மிகவீறும் கோவை மாநகர் மேவிய வீர பெருமாளே
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : பிற தமிழ் புலவர்கள்
புலவ அருளாளர் : அருணகிரிநாதர்
ஸ்தல விருட்சம் : மகிழமரம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : பாவ நாரிகள் மாமட மாதர் வீனிகளாணவ பாவை யாரில நீரண முளையாளும் பார்வையாமிகு கூரையி லாலு மாமனி யார்குழை பார காரண லார்குல லதனாலுஞ் சாவ தார வீதரரமு தார்த ராவித ழாலித சாத மூரலி தாமதி முகமாலுஞ் சார்வ தாவடி ஏணிடர் வீற மாளறி வேமிகு சார மாயதி லேயுற லொழிவேனோ ஆவ ஆர்வன நான்மறையாதி மூல பார்வரி யாதி காணரி தாகிய பரமேஸா ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர னாதி தேவர்களி யாவர்கள் பணிபாத கோவ தாமறை யோர்மறை யோத மோதம் விழாவொலி கோடியாகம மாவொலி மிகவீறும் கோவை மாநகர் மேவிய வீர பெருமாளே

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
முருகப்பெருமான் திருவுருவத்திற்கு முன்பு கீழே பாலதண்டாயுதபானி சுவாமி திருஉருவம் வீற்று அருள்பாலிக்கிறார். ஒரே கருவறையில் இரண்டு சுவாமி முகுர்த்தங்கள் வீற்று இருப்பது அரிதான ஒன்றும் கூட. தமிழ்நாட்டிலே நான்கு ஸ்தலங்களில் மட்டுமே முருகப்பெருமானுக்கு ஐராவதம் எனப்படும் வெள்ளையானை வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 1. சுவாமிமலை 2. திருத்தணி 3. உத்திரமேரூர் (காஞ்சிபுரம் அருகில்) 4. நமது திருக்கோயில் (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்) செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு சத்ருசம்கார திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மண் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.திரிசதி அர்ச்சனையில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் மந்திரம் தந்திரம் எந்திரம் மற்றும் ஒளடிதம் எனப்படும் வைப்பு மருந்து ஆகியவற்றால் வரக்கூடிய எதிர்மறையான ஆபிச்சரமமான விஷயங்களில் இருந்து தன்னை தற்காத்து கொள்ளவும் மிகவும் பயனளிக்கிறது. இறைவி அகிலாண்டேஸ்வரி சன்னதியில் பிரதி செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ சக்கர பூஜையும், கல்யாணம் ஆகாத ஆடவர், பெண்களுக்காக சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்கள் நடைபெறுகிறது. இதன்மூலம் திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தடை நிவர்த்தியாகியும், அன்யோன்யம் இல்லாத தம்பதியினர் இந்த சுயம்வர கலா பார்வதி அர்ச்சனை பூஜை ஹோமங்களில் கலந்து கொள்வதால் அன்யோன்யம் அதிகரித்து இல்வாழ்க்கையில் உமையோர் பாகனை போல் பிரியாமல் மனம்ஒத்த தம்பதியராக வாழ்வார்கள் என்பது ஐதீகம். பிரதி பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக செய்யப்பட்டு கலந்து கொள்ளும் அனைத்து சுமங்கலிகளுக்கும் சௌபாக்கிய திரவியங்களுடன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. இறைவன் சன்னிதானத்தில் பிரதி சோமவாரத்திலும் எம்பெருமானுக்கு பிரதி பிரதோஷகாலங்களில் ருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது. விஷேச தினங்களில் பஞ்சமுகா அர்ச்சனை செய்யப்படுகிறது அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனோடு தேவ, ரிஷி, கோ, குரு, கோப சாபங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டாக பிரதிதினமும் தாராபிஷேகம் செய்வதுண்டு.

🛠️ வசதிகள் (Facilities)

கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு டாய்லெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடி தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது
குளியல் அறை வசதி : இந்த கோவிலின் மேற்கு புறத்தில் 1 பாத்ரூம் வசதி உள்ளது

🙏 சேவைகள் (Services)

நன்கொடை : நன்கொடை சேவை
அன்னதானம் : இத்திருக்கோவிலில் 2012ம் வருடம் முதல் அன்னதானம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு அன்னதான வழங்க ரூ.1750/-
Immovable Property : கேட்பு வசூல் நிலுவை பரிவர்த்தனைகள்