⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 12:00 PM
04:00 PM to 08:00 PM
காலை 6.3 க்கு திருக்கோயில் திறக்கப்பட்டு நண்பகல் உச்சிக்கால பூஜைக்கு பிறகு 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.மணிக்கு நடை சாத்தப்படும்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை (-) : 08:30 AM to 09:00 AM IST
2. உச்சிக்கால பூஜை (-) : 11:30 AM to 12:00 PM IST
3. சாயரட்சை பூஜை (-) : 06:00 PM to 06:30 PM IST
4. அர்த்தஜாம பூஜை (-) : 07:30 PM to 08:00 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): சிவன்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): பலா மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): தூங்கானை வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): தி௫வாரூர்
தாலுகா (Taluk): நீடாமங்௧லம்
முகவரி (Address):
தெற்கு வீதி, பூவனூர், 612803
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் தி௫வாரூர் மாவட்டத்தில், நீடாமங்௧லம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சதுரங்கவல்லபநாதசுவாமி திருக்கோயில், பூவனூர் - 612803 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு சிவன் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தி௫வாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Mannargudi (12 km), Kumbakonam (24 km), Neyveli (26 km), Thanjavur (28 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் / கவிதை : ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்
தூவெந்நீரு துதைந்த செம்மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரை
பூவனூர் புகுவார் வினை போகுமே
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
புலவ அருளாளர் : அப்பர் (திருநாவுக்கரசு)
ஸ்தல விருட்சம் : பலா மரம்
விமானம் வகை : வட்டம் வடிவம்
கருவறை வடிவம் : தூங்கானை வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
பாடல் / கவிதை : ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்
தூவெந்நீரு துதைந்த செம்மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரை
பூவனூர் புகுவார் வினை போகுமே
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
முற்காலத்தில் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலியில் வசுசேனன் என்ற மன்னன் காந்திமதி என்னும் மனைவியுடன் வசித்து வந்தான். இருவரும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லை.குழந்தை வேண்டி நெல்லையப்பர் காந்திமதியை வேண்டி நோன்பு நோற்றனர்.அவர்கள் வேண்டுதலை ஏற்று உமையம்மையை குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியம்மையை செவிலி தாயாகவும் தோன்றுமாறு அருளிச்செய்தார். மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடுகின்ற பொழுது உமையாம்பிகை ஒரு தாமரை மலரில் சங்குருவாய் தோன்ற அதைக் கண்டு மன்னன் கையில் எடுத்தான். உடன் சங்கு குழந்தையாக காட்சியளித்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். சப்தமாதாக்களில் ஒருவராகிய சாமுண்டியம்மை வளர்ப்புத் தாயாக இருந்து குழந்தையை வளர்க்க, குழந்தை ராஜராஜேஸ்வரி சகல கலைகளையும் கற்றுணர்ந்து பெண்களுக்கே உரிய சதுரங்க ஆட்டத்தில் தன்னை வெல்வார் யாருமின்றி வல்லமையுடன் திகழ்ந்தார். மன்னன் வசுசேனன் சதுரங்கத்தில் தன் மகளை வெல்பவர்க்கே மணம் முடிப்பேன் என்று அறிவித்தான். அனால் சதுரங்கம் ஆடி வெற்றி கொள்ள யாரு முன்வரவில்லை.அதிலும் வெற்றி பெறுவார் யாருமில்லை. அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரைப்படி தன் மகள், வளர்ப்புத்தாய், சாமுண்டியம்மை, மனைவி மற்றும் பரிவாரங்களுடன் தல யாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் வணங்கி வழிபட்டு பூவனூர் வந்து இறைவனை பூசித்து இத்தலத்தில் தங்கியிருந்தான். அப்பொழுது கயிலைநாதனாகிய சிவபெருமான் சித்தர் வேடத்தில் மன்னனைக் காண வந்து தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். மன்னன் தன் மகளுடன் சதுரங்கம் விளையாடுமாறு வேண்ட இறைவனும் அதற்கு இசைந்து ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கத்தில் போட்டியிட்டு சதுரங்கம் விளையாடி வென்றார். மன்னன் பேரானந்தமுற்று மனம், மொழி மெய்களால் இறைவனை தொழுது வணங்கி தனது மகள் ராஜராஜேஸ்வரியை இறைவனுக்கு மணமுடித்து மகிழ்ச்சி அடைந்தான். முழுமுதற் பொருளாகிய செஞ்சடை கடவுள் ஆதி சிவன் சதுரங்க ஆட்டத்தில் வென்று அம்பிகை ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதால் சதுரங்க வல்லபநாதர் என்று இத்தலத்து இறைவன் திருநாமம் விளங்கப் பெற்றார். வருகின்றனர். வசுசேன மகாராஜா வேண்டுதலுக்கு இணங்க இத்தலத்திலேயே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் வீற்றிருந்து, திருமண தடை, நவகிரங்களால் ஏற்படும் திருமண தோஷம் போன்றவற்றை நீக்கி நன்முறையில் திருமணம் நடைபெற அருள்புரிகிறாள். திருமண தடை உள்ளவர்கள் பிரதி மாதம் செவ்வாய் கிழமை தோறும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மாலை சாற்றி மூன்று நெய் விளக்கு ஏற்றி 12 செவ்வாய்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்து வர திருமண பாக்கியம் கண்டிப்பாக கைகூடும்.
சாமுண்டியம்மன் சன்னதி மைசூரிலுள்ள சாமுண்டி மலையி உள்ள சாமுண்டி அம்மன் திருக்கோயிலை அடுத்து தமிழ்நாட்டில் பூவனூரில் தான் சாமுண்டியம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் சாமுண்டியம்மன் வடக்கு நோக்கிய தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். எலிக்கடி மற்றும் விஷக்கடியினால் அவதிப்படுவோர் ஞாயிற்று கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வந்து எதிர்புறம் அமைந்துள்ள பார்க்கலாம் என்கிற ஷீர புட்கரணி திருக்குளத்தில் நீராடி அம்மனுக்கு முன்னால் வேர் கட்டிக்கொண்டு நலம் பெற்று வருகின்றனர். பிரதி மாதம் தோறும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்கள் துயரம் போக்க பௌர்ணமி தோறும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் பாதார விந்தங்களை மனதில் கொண்டு சன்னதியில் 27 தீபங்களை ஏற்றி 27 முறை சன்னதியை வளம் வந்து அர்ச்சனை செய்து 9 பௌர்ணமிக்கு அம்மனை தரிசிக்க தங்கள் சங்கடங்கள் நீங்குவது கண்கூடான உண்மை.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
வெட்டுகுளம் : இத்திருக்குளம் கிழக்கு ராஜ கோபுரத்தின் முன்புறம் அமைந்துள்ளது.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
கற்சிற்பம் : இவ்வாலயத்தின் நுழைவாயில் மண்டபத்தை கடந்து சென்றால் அடுத்து வருவது மகா மண்டபம் ஆகும். இந்த மண்டபம் 27 தூண்களால் ஆனது. இம்மண்டபத்திற்கு வடக்கில் தெற்கு நோக்கியவாறு அருள்மிகு கற்பகாம்பாள் அம்மனும் அதனை அடுத்து பள்ளியறையும் அதனை அடுத்து அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மனும் வரிசையாக சேர்ந்தாற்போல் உள்ளது. இம்மண்டபத்தின் தெற்கு பகுதியில் கிழக்கு நோக்கியவாறு அருள்மிகு ஆடிப்பூர அம்மன் சுக்கிரவார அம்மன் அமைந்துள்ளது. இந்த அம்மன் பித்தளையினால் அமையப்பெற்றது ஆகும். இந்த மண்டபத்தில் உள்ள நுழைவாயில் தான் அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் ஸ்வாமியை தரிசிக்க செல்லும் நுழைவாயில் ஆகும்.
🛠️ வசதிகள் (Facilities)
கழிவறை வசதி : ஆண், பெண்களுக்கு என்று தனி தனி கழிவறைகள் மற்றும் ஒரு குளியலறை உள்ளது
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பொது நன்கொடை சேவை மூலம் திருக்கோயிலுக்கு நன்கொடை செலுத்துபவர்களுக்கு ஆன்லைன் நன்கொடை ரசீது போடப்பட்டுவருகிறது




