← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010

Arulmigu Patteeshwaraswamy Temple, Perur - 641010

மாவட்டம்: கோயம்புத்தூர் • தாலுகா: கோயம்புத்தூர் தெற்கு

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

06:00 AM to 01:00 PM
04:00 PM to 09:00 PM
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. காலசந்தி பூஜை : 07:30 AM to 08:00 AM IST
2. கோ பூஜை : 08:00 AM to 08:15 AM IST
3. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 11:30 AM IST
4. சாயரட்சை பூஜை : 04:30 PM to 05:00 PM IST
5. அர்த்தஜாம பூஜை : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): பட்டீசுவரர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): பச்சைநாயகி அம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): பன்னீர் மரம்

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கோயம்புத்தூர்

தாலுகா (Taluk): கோயம்புத்தூர் தெற்கு

தொலைபேசி (Phone): 04222607991

முகவரி (Address):

சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், 641010

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், பேரூர் - 641010 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு பட்டீசுவரர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 3rd நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Coimbatore (10 km), Pollachi (39 km), Tiruppur (47 km), Udhagamandalam (51 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

பாடல் பெற்றது : சைவ நாயன்மார்கள்
ஸ்தல விருட்சம் : பன்னீர் மரம்
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 3rd நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

புராதனம்
இத்தலம் பிறவாநெறித்தலம் என்ற சிறப்பு பெயர் பெற்ற தலமாகும். இத்தலத்தில் இறைவன் காமதேனுவிற்கு முக்தி அளித்து பிரம்மா விஷ்ணு, துர்க்கை மற்றும் காலவமுனிவர் ஆகியோருக்கு ஆனந்த தாண்டவ காட்சியை அருள்பாலித்த தலமாகும். பிறதலங்களிலே பாடல்பெற்ற தேவாரங்களிலே மூவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இதனை வைப்புத் தலம் என்று அழைப்பர். காமதேனுவிற்கு முக்கி அளித்தற்கு சாட்சியாக இறைவனால் அருளப்பெற்ற பிறவாபுளி, இறவாப்பனை மற்றும் காஞ்சிமாநதி ஆகியவை இன்றும் உள்ளன. இங்கு காமதேனுவின் வழிபாட்டினை இறைவன் ஏற்றதால், இவ்வூரில் பசுவின் சாணம் புழுப்பதில்லை. பிறவாப்புளி என்ற இம்மரத்தின் விதைகள் மீண்டும் முளைப்பதில்லை. இது இத்தலத்தில் இறைவனை தரிசித்த பக்தர்களுக்கும் மற்றும் இங்கு வாழ்ந்து இறப்போருக்கு இனி மீண்டும் பிறப்பில்லை என்பதற்கு சாட்சியாக உள்ளது. இறவாப்பனை என்னும் இப்பனை மரம் அமைந்துள்ள வடகைலாயம் திருக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம் சகலவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தியுடையது. இத்தலம் முக்தி தலம் என்பதற்கு சாட்சியாக இங்கு இறப்போர் வலது காது வான்நோக்கி இருக்குமாறு இறப்பர். காஞ்சிமாநதி என்று அழைக்கப்படும் நொய்யல் நதி பிறவி பிணியும் மற்றும் ஆன்மாக்களின் சகல பாவங்களையும் நீக்கும் புனித நதியாக பேரூர் புராணத்திலே கச்சியப்ப முனிவரால் பாடப்பெற்றுள்ளது. ஆகையால் இந்நதிக்கரையில் இறந்த முன்னோர்க்கு இறுதி கடன்களும் மற்றும் பரிகாரங்களும் செய்யப்படுகிறது. இங்கு முன்னோர்களின் அஸ்திகளை நொய்யல் நதியில் கரைத்து முக்தி பெரும் பொருட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருக்கோயிலின் வடமேற்குப் பக்கம் அமைந்துள்ள திருநீர்மேடு எனும் இடத்தில் பிரம்மா சிவனை குறித்து யாகம் செய்ததால், பிரம்ம குண்டம் எனும் பெயர் பெற்றது. இவ்விடத்தில் மண் திருநீறாக காட்சியளிக்கிறது. இது சகல பாவங்களையும் நீக்கும் தன்மையுடையது. இதனை ஆற்றங்கரை பிள்ளையார் கோயிலில் இன்றளவும் பிரசாதமாக வழங்குகின்றனர். தொல்பொருள் துறையில் அகழ்வாராய்ச்சியில் பேரூர் மற்றும் அதன் மேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி மற்றும் ரோமானிய காசுகள் ஆகியவை இத்தலத்தின் தொன்மையையும், சிறப்புகளையும் கூறுவதாக உள்ளது.
தல விருட்சம்
இத்தலத்தில் ஸ்தல விருட்சம் பன்னீர் மரமாகும். இம்மரம் இறைதன்மையுடையது. இம்மரம் தெய்வீக அருளை மக்களுக்கு வழங்குகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

திருக்குளம் : திருக்கோயிலின் முன்புற மைதானத்தில் திருக்குளம் ஒன்று உள்ளது.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

அக்னி வீர பத்திரர் : தட்சனின் யாகமும், அசுரர்களையும் வதைப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டவர். இச்சிற்பத்தில் பலவிதமான போர்க்கருவிகள் காட்டப்பட்டுள்ளது.
அகோர வீரபத்திரர் : அகோர வீரபத்திரர், தட்சன் மற்றும் அசுரர்களை வதம் செய்ய இறைவனால் படைக்கப்பட்டவர். இவரது திருமேனியில் பலவிதமான போர் கருவிகளின் பயன்பாடு காட்டபப்பட்டுள்ளது சிறப்பு.
ஆறுமுக பெருமான் : ஆறுமுக பெருமான் மயில் மேல் அமர்ந்த திருக்கோலம். ஐந்து முகங்களும், பன்னிரண்டு கரங்களும் காட்டப்பட்டுள்ளது. ஆறாவது முகத்தை பக்தர்கள் மனக்கண்ணில் தியானம் செய்து பார்க்க வேண்டும்,.
ஆலங்காட்டு காளி : நடன போட்டியில் காளியின் தோல்வி நிலைளை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.
கஜசம்கார மூர்த்தி : கஜமுக அசுரனை வதம் செய்த காட்சி சிற்பி தன் கற்பனையில் சிவபெருமான் யானையின் தோலை போர்வையாக போர்த்திய வண்ணம் காட்டியுள்ளார். இதனை 1975-ம் வருடம் இந்திய அஞ்சல்துறை தபால் வில்லையாக வெயிட்டது மிக சிறப்பாகும்.
ஊர்த்துவ தாண்டவர் : இறைவன் காரைக்கால் அம்மையாருக்காக ஆடிய நடனமாகும்.இந்நடனம் திருவாலங்காட்டில்பார்வதியை வெல்லும் பொருட்டு வலது காலை தலை வரை தூக்கி ஆடப்பட்டது. இச்சிற்பத்தில் மிக அழகிய கிரிடமும் பதினாறு கரங்களும் காட்டப்பட்டுள்ளது சிறப்பாகும்.
பிச்சாடனார் : தாருக வனத்து ரிஷிகளின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு இறைவன் பிச்சாடனர் கோலத்தில் காட்சியளிக்கின்றார். அதன் தொடர்புடைய சிற்பங்கள் தூணில் பின்புறம் காட்டப்பட்டுள்ளது,
நர்த்தன கணபதி : நர்த்தன கணபதி மூஷிகத்தின் காதுகளின் மேல் ஒரு காலை ஊன்றிய வண்ணம் நடனமாடும் வகையில் எட்டுகரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

அஞ்சல் வழி பிரசாதம் : பக்தர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல்வழி பிரசாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு திருக்கோயிலில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு அருகாமையில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மின்கல ஊர்தி : ஊனமுற்றோர் மற்றும் முதியோர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேட்டரி இலவசமாக கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
கருணை இல்லம் : கருணை இல்லம் பேரூரில் அமைந்துள்ளது. கருணை இல்லம் அமைந்துள்ள கட்டிடம் நவீன கான்கிரீட் கட்டிடம் ஆகும்.
சக்கர நாற்காலி : மாற்று திறனாளிகள் தரிசனம் செய்வதற்காக இரண்டு சக்கர நாற்காலிகள் உள்ளது.
நூலக வசதி : திருக்கோயிலில் நூலகம் ஒன்று உள்ளது. இந்நூலகத்தில் திருக்கோயில் தலவரலாறு மற்றும் ஆன்மீகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் நூல்கள் உள்ளது.
வாகன நிறுத்தம் : திருக்கோயில் முன்புற மைதானத்தில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுஏலம் மூலம் விடப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் காலணி பாதுகாக்க தனியாக இராஜகோபுரம் முன்புறம் இலவச காலணி பாதுகாப்பு அறை உள்ளது.
திருமணம் நடத்துதல் : திருக்கோயிலில் நடராஜர் சன்னதி, பெருமாள் சன்னதி மற்றும் பாலதண்டாயுதபாணி சன்னதியில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : தினசரி திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 15.08.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.3,500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதாத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமான வரிச்சட்டம் 80(ஜி)-ன் (..127(5)/11-12/-//2012-13 : 09.08.2012) கீழ் வரி விலக்கும் பெறலாம். 3500(ஒரு நாள்) : 100 நபர்கள் 70,000 : டெபாசிட் தொகை
நன்கொடை : திருக்கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் விருப்பப்படி திருக்கோயில் யானை மற்றும் கோசாலை கால்நடைகள் பராமரிப்பிற்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.