⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
08:00 AM to 12:00 PM
06:00 PM to 08:00 PM
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் பிறகு நடை சாத்தப்பட்டு பிற்பகல் 6,00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு முதல் 8,00 மணி வரை திருக்கோயில் நடை சாத்தப்படும்
பூஜை நேரங்கள் (Pooja Timings):
Data not available.
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available
ஸ்தல விருட்சம் (Sacred Tree): தகவல் இல்லை
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): தகவல் இல்லை
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருப்பூர்
தாலுகா (Taluk): காங்கயம்
முகவரி (Address):
-, Siviarpalayam, Kangeyam, 638701
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில், காங்கயம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பரமசிவன் திருக்கோயில், Siviarpalayam, Kangeyam - 638701 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruppur (29 km), Erode (30 km), Dharapuram (40 km), Karur (59 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
வரலாற்று சிறப்பு
இத்திருக்கோயிலில் ஆடி 18-ம் பெருக்கு உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அன்றைய தினம் பார்வதி பரமசிவன் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்வித்து விநாயகர், முருகன், சூலதேவர் மூவருக்கும் தனியாக சப்பரத்திலும் பார்வதி பரமசிவன் ரிஷப வாகனத்தில் தனியான சப்பரத்திலும் எழுந்தருளச் செய்து வான வேடிக்கையுடன் காஞ்சி மாநதி என்னும் நொய்யல் நதிக்குச் சென்று மூலவர் வேல் மற்றும் திருக்கோயிலில் உள்ள அனைத்து வேல்களுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்வித்து, மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் அங்கிருந்து மீண்டும் கோயிலுக்கு வந்து, ஊஞ்சல் உற்சவம், ஊஞ்சல் பாட்டு ஆகியன செய்து ஆடி 19-ம் தேதியன்று மறுபூஜை செய்து விழா பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆடி 18 உற்சவதன்று இத்ருக்கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களும் மற்றும் பழனி வட்டம், அம்பிளிக்கை, இடையன் வலசு, சின்னக்காளியப்ப கவுண்டன்வலசு, கொன்றங்கிகீரனூர், நவக்காணி, வெள்ளியன்வலசு, தங்கச்சி அம்மாபட்டி, கூலச்சின்னம் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இத்திருக்கோயிலைச் சார்ந்த கிராம மக்களும் ஈரோடு மாவட்டம் எல்லக்காட்டு வலசு மற்றும் அந்தியூர் பகுதியிலுள்ள கருவலாடிபுதூர், தாழக்கொட்டைப்புதூர், செங்களப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதி மக்களும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியிலுள்ள கொண்டரசம்பாளையம், குப்பிச்சிபாளையம், வடுகபாளையம், கொமராபாளையம், ஆலாம்பாளையம் மூலனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் கீழ்க்கண்ட பூஜைகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி பூஜை திருகார்த்திகைஜோதி பூஜை, மார்கழி மாதம் தினசரி காலை பூஜை விடியற்காலை 5.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் நடைபெறுகிறது.
தைப்பூசம் பொங்கல் வைத்து பூஜை மகா சிவன்ராத்திரி பூஜை பங்குனி யுகாதிப் பண்டிகை கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. தமிழ் வருடப்பிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி கொடுமுடி சென்று தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேக ஆராதனை அன்னதானம் நடைபெறுகிறது. பௌர்ணமி என்றவுடன் திருவண்ணாமலை கிரிவலம் தான் நினைவுக்கு வரும். எல்லா சிவத்தலங்களிலும் பௌர்ணமி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பௌர்ணமி அன்று சிவபெருமானைக் குறித்துப் பூசைகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமணம் ஆகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் விரைவில் கிட்டவும், செல்வம் செழிக்கவும், அஷ்டலட்சுமிகளின் அருள் கிட்டவும் பௌர்ணமி பூஜை வலுச் சேர்க்கிறது. மாதா மாதம் பௌர்ணமி அன்று இரவு பௌர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. பிரதோஷ பூஜைகள் (வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம்) மாதத்தில் இரண்டு முறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிர தோசம் பிரதோசம் ஆகும். பிர என்பது பாவத்தை தோசம் என்பது போக்கும் நேரம் என்பர் பிரதோசம் என்பது பாவத்தைப் போக்கும் பிரதோச கால வேளையில் சிவாயநம நவசிவாய என்ற ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்தால் நன்மை உண்டாகும். அனைத்து வழிபாடுகளிலும் மிகச் சிறப்பானதாக பிரதோசம் கருதப்படுகிறது.
பிரதோஷ கால பூஜாபலன், பிரதோஷகால வழி பாட்டினால் செல்வம் வளரும், நோய் அகலும், கல்வியில் மேன்மை அடைவார்கள். கடன், மனக்கவலை, வறுமை, மரண வேதனை முதலியன நீங்கும். ஒரு பிரதோஷ வழிபாட்டினால் 1000 நாட்கள் சிவபூஜை செய்த பலன் பெறலாம். இக்காலத்தில் சிவ ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்து அளவிலா பேறு பெறலாம், வருடா வருடம் புரட்டாசி மாதத்தில் செல்வ பார்வதி பரமசிவன் நற்பணி மன்றம் சார்பில் முத்துச்சாமி சிவாச்சாரியார் மற்றும் குப்புச்சாமி சிவாச்சாரியாரின் சந்ததியினரால் அருள்மிகு பரமசிவன் பார்வதிக்கு சிறப்பான ஹோமம், அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் எந்தக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. வயதான பெரியவர்கள் ஏற்கனவே கூறிவிட்டுச் சென்றுள்ள கருத்துக்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவரில் காணப்படும் மீன் வடிவ சிற்பங்கள் இருப்பதால் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு இருக்கலாம். இத்திருக்கோயில் பல நூறு ஆண்டுகளாக கும்பாபிசேகம் செய்யப்படாமல் உள்ளது. இதற்கு முன்னர் எப்பொழுது கும்பாபிசேகம் நடைபெற்றது என்பதற்கான கல்வெட்டுக்களோ ஆதாரங்களோ இல்லை. எனவே இத்திருக்கோயில் திருப்பணி செய்வித்து கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும். இத்திருக்கோயிலுக்கு 64 ஏக்கர் புன்செய் பூமியும் 3 ஏக்கர் நன்செய் பூமியும் உள்ளது. முன்பு இந்த பூமியில் விளைந்த மஞ்சள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் காப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு
சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் காஞ்சி மாநதி என்னும் நொய்யல் ஆற்றின் தென்கரையில் வடக்கு முகமாக அமைந்துள்ளது. சுயம்புஆதிமூலவர் காஞ்சிமாநதியிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய வேலாகும். பழங்கால ஜோதிட நூல்களில் இடம் பெற்ற கோயிலாகும்.
அரசூரிலிருந்து நதிவழி அடைந்த இறைவன் கூத்தாடி வந்த துறை நொய்யல் ஆற்றின் தென்துறை, அருள்மிகு பரமசிவன் கோயிலில் காய்ச்சல், கடுப்பு, கண்வலி, சூன்யம், புத்ரசோகம், ஓடும் பிளவை, சரவாங்கி, செந்தேள், மலைவிரியன், காணாவிதியன், ஓணான் போன்ற கடிநோய்கள் இவ்விடம் வந்து தரிசித்தவர்கள் பூர்ண குணம் அடைந்ததாகவும் மந்திரப்பாடல் மூலமாக அறிய முடிகிறது. கவுலிவாக்கு (பல்லி சகுனம்) கேட்பதும், திருமணமாகாதவர் திருமணத்திற்கு வேண்டி வருவதும், குழந்தை பாக்கியம் பெற வேண்டிக் கொள்வதும், கால்நடைகளுக்காக வேண்டிக் கொள்வதும், மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகள் நிவர்த்திக்காக முன்னோர்களால் வேண்டிக் கொள்ளப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவிலாகும்.
இந்த வரலாறு செவிவழிச் செய்தி ஆகும். மேலும் தங்களிடம் உள்ள வரலாற்று செய்திகளையும் தங்களுக்கு நிகழ்ந்த அற்புதங்களையும் தெரிவித்தால் இறை அருள் கூடிவந்தால் அடுத்த தொகுப்பில் சேர்க்கப்படும். வேல்வழிபாடு, சிவலிங்க வழிபாட்டைப் போல் அருஉருவ வழிபாடாக இருந்தாலும் வேல் அஸ்திரமாகவும், சஸ்திரமாகவும் பயன்படுவது போல் வேல் மூலவராகவும் உற்சவராகவும் அருள்புரிவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.



