⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
06:30 AM to 12:00 PM
05:00 PM to 09:00 PM
காலை ஆறு மணி முதல் பகல் பன்னிரண்டு வரை மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நடை சாத்திருக்கும் நேரம் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் மாலை ஐந்த மணிவரை
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:30 AM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): படவட்டம்மன்
ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேம்பு
ஆகமம் (Tradition): தகவல் இல்லை
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): சென்னை
தாலுகா (Taluk): அம்பத்தூர்
தொலைபேசி (Phone): 0
முகவரி (Address):
பாடி, சென்னை, 600050
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)
தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில், அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு படவட்டம்மன் திருக்கோயில், பாடி, சென்னை - 600050 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 19th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Madras (Chennai) (11 km), Chingleput (49 km), Arakkonam (52 km), Mahabalipuram (55 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வேம்பு
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 19th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : இல்லை
பாரம்பரிய கோயிலா : No
பாடல் / கவிதை : இல்லை
தல சிறப்பு (Thiruthala Special):
பரிகாரம்
இத்திருக்கோயிலில் பக்தர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகியநாட்களில் அம்மனுக்கு பொங்கலிட்டு அபிஷேக ஆராதனைகள் செய்வது, சந்தனகாப்பு, வேப்பிலை சாற்றுதல் மற்றும் குங்குமம் காப்பு செய்து வழிபடுவது சிறப்பம்சமாகும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
படவட்டம்மன் : விமானகலசத்தின் கீழ்புறம் படவட்டம்மனின் சுதை வடிவம் வனப்போடு காட்சி அளிக்கிறது. அம்மனின் தலையை அழகிய கரண்டமகுடமும், சுடர்முடியும் அணி செய்ய, அதன் மேல் கவிழ்ந்த நிலையில் ஐந்து தலைநாகம் அலங்கரிக்க காணலாம். நெற்றியில் பட்டமும், காதுகளில் மலர்ந்த மலர்குழைகளும், கழுத்தில் கண்டசரம், மணிவடம், முத்துவடம், சவடி ஆகிய அணிகலும் கட்டு மாலையும் அலங்கரிக்கின்றன. நீள்வட்டமுகம், அகன்றநெற்றி, கோடிட்டபுருவம், எடுப்பானமூக்கு, குவிற்து மலர்ந்த திருவாய்யாவும் கொண்டு கீழ்நோக்கி அருள்பாலிக்கும் அழகிய சுதைவடிவமாக படவட்டம்மன் காட்சி அளிக்கிறது.
மாகேஸ்வரி : சப்தமாதர்களில் ஒருவரான மாகேஸ்வரியின் சுதை வடிவினை மற்றொரு மாடத்தில் காணலாம். இவ்வுருவம் உயர்ந்த மேடை மீது இடக்காலை மடித்துவலக்காலை தொங்க விட்டு நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தென்திசை நோக்கிய வண்ணம்காட்சி அளிக்கிறது. மாகேஸ்வரியின் மேல்வலக்கரம் கடகமுத்திரையில் நாகம் சுற்றிய உடுக்கையை பற்றியுள்ளது. மேல் இடக்கரம் அனல் தண்டை கடகமுத்திரையில் பிடித்துள்ளது.
மாகேஸ்வரியின் தலையை உயர்ந்த ஜடாமகுடம் அலங்கரிக்கிறது. பின்தலையில் சிரசக்கரம் காணப்படுகிறது. மாகேஸ்வரியின் நெற்றியில் பட்டமும், காதுகளில் வட்டமான குழைகளும், கழுத்தில் மங்களநாணும், மணிவடமும், மேற்கைகளில் தோள்வளையும், முன்கைகளில் காப்பும், கைவளையும், மார்பில் குஜபந்தம் எனும் மார்பு கச்சையும், தனசூத்திரமும், இடையில் இருந்து முழங்காலுக்கு கீழ்வரை மடிப்புடைய கீழாடையும், காலில் தண்டையும் மாகேஸ்வரியை அலங்கரிக்கின்றன. வட்டமுகம், விரிந்தநெற்றி, கோடிட்டபுருவம், கீழ்நோக்கி மலர்ந்த கண்கள், எடுப்பானநாசி, குவிந்து விரிந்த திருவாய்யாவும் மாகேஸ்வரியின் சுதைவடிவில் கண்டுகளிக்கதக்கது. மாகேஸ்வரியின் இருபுறமும் இரு சிம்மவாகனங்கள் படுத்த நிலையில் சுதைவடிவில் காணப்படுகின்றன. அவ்வாறு வாகனங்களின் அருகில் இருபெண் பூதகணங்களின் சுதைவடிவங்கள் கையில் கத்தியுடன் திசை நோக்கிய வண்ணம் காட்டப்பட்டுள்ளன.
வைஷ்ணவி : விமானத்தின் மேற்திசை கோட்டத்தில் வைஷ்ணவியின் சிற்பவடிவம் அலங்கரிக்கிறது. இச்சுதை வடிவம் மேடை மீது இடக்காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறது. மேல் வலக்கரம் கத்தரி முத்திரையில் சக்ராயுதத்தை பற்றி உள்ளது. மேல் இடக்கரம் சங்கு ஒன்றினை கத்தரி முத்திரையில் கொண்டுள்ளது. கீழ் இரு கரங்கள் முறையே அபய முத்திரையிலும், வரத முத்திரையிலும் அமைந்து அருள் பாலிக்கின்றன. வைஷ்ணவியின் தலையை கிரீட மகுடம் அலங்கரிக்கிறது. நெற்றியில் பட்டமும், காதுகளில் வட்டமான குழைகளும், கழுத்தில் மணிவடமும், மேற்கைகளில் பூரிம முகப்புடைய தோள்வளையும், முன்கைகளில் காப்பும், மார்பில் குஜபந்தம் எனும் மார்புகச்சையும், இருதனங்களின் இடையே ஓடும் தனசூத்திரமும் இடையிலிருந்து முழங்காலுக்கு கீழ்வரை மலர் முகப்புடைய கீழாடையும் காலில் தண்டையும் வைஷ்ணவியை அலங்கரிக்கின்றன. வைஷ்ணவி அமைதி தவழும் முகத்தோடு அருள் பாலிக்கிறாள்.
பிராமி : பிராமியின் சுதை வடிவம் படவட்டம்மன் கோயில் விமானத்தின் கிரீவ கோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அம்மனின் திருவுருவம் வடதிசை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறது பிராமி இடக்காலை மடித்து வலக்காலை தொங்க விட்டு நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறது. கீழிருகரங்கள் அபயமுத்திரையிலும் வரத முத்திரையிலும் அமைந்து அருள் பாலிக்கிறது. மேல் வலக்கரம் அக்ஷ மாலையை பற்றி உள்ளது. மேல் இடக்கரம்க மண்டலத்தை கொண்டுள்ளது. பிராமியின் மூன்று முகங்களும் மூன்று ஜடா முகுடங்களுடன் அலங்கரிக்கின்றன. நெற்றிபட்டம், கண்டசரம், அட்டிகை, மணிவடம், குஜபந்தம், தனசூத்திரம், தோள்வளை, கைவளை, காப்பு, இடைக்கச்சை, தண்டை ஆகிய அணிகலன்களும் ஆடையும் பிராமியின் முடி முதல் அடிவரை அலங்கரிக்கின்றன.வனப்புடன் விரிந்த முகத்தில் இளம்புன்னகை தவழும் நிலையில் பிராமியின் முகம் வசீகரமாக உள்ளது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில் உட்பகுதியில்
குளியல் அறை வசதி : இத்திருக்கோயிலின் மகாமண்டத்தின் இடதுபக்கம் வெளிபுறத்தில் கழிவறை ஒன்று உள்ளது.
🙏 சேவைகள் (Services)
உழவாரப் பணிகள் : 6 மாதத்திற்கு ஒரு முறை உழவாரப்பணி நடைபெறும்
நன்கொடை : நன்கொடை : பணம் பண ஆணைகள், காசோலைகள் அல்லது டிமாண்ட் டிராப்ட்ஸ், அனைத்து வகையான நன்கொடைகள் மற்றும் நன்கொடை பொருட்கள் பெறப்படுகிறது. இந்த நன்கொடை தொகை கோயிலின் முதல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்பு திருக்கோயிலின் செலவு கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டு திருக்கோயிலின் தூய்மை பணிக்கு மற்றும் திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது



