Timings
Deity
Address
History
Location
Images

Arulmigu Nagaraja Temple, Nagercoil

பிற கோவில்களைப் பார்க்க:

Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001 - Main View

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:00 AM to 12:00 PM
05:00 PM to 08:00 PM
ஞாயிற்றுசிழமை பகலிலும் இரவிலும் திருநடை சார்ந்த அதிக நேரம் ஒதுக்கப்படும். தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பின்னர் தான் அனந்தகிருஷ்ணனுக்கும் சிவனுக்கும் பூஜைகள் நடக்கும். அர்த்தசாம பூஜையில் மட்டும் அனந்தகிருஷ்ணனுக்கு முதல் பூஜை. இக்கோயில் பூஜை கேரள தாந்திரீக முறைப் படியிலானது. கேரள பாம்பன் மேக்கோடு நம்பூதிகளே இக்கோயில் முக்கிய பூசகராக இருக்க வேண்டும் என்ற மரபு உண்டு. இக்கோயிலின் முக்கிய பிரசாதம் நீருடன் சேர்த்த மண் . இது தட்சணாய புண்ணிய காலத்தில் (ஆடி மாதம் முதல் மார்கழி முடிய ) கறுப்பு நிறத்திலும் உத்ராயண புண்ணிய காலத்தில் (தை மாத் முதல் ஆனி மாதம் வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 05:00 AM to 05:30 AM IST
2. உச்சிக்கால பூஜை : 11:00 AM to 11:30 AM IST
3. சாயரட்சை பூஜை : 06:30 PM to 07:00 PM IST
4. அர்த்தஜாம பூஜை : 07:45 PM to 08:00 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): நாகராஜா

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): Not available


ஸ்தல விருட்சம் (Sacred Tree): ஓடவள்ளி

ஆகமம் (Tradition): தகவல் இல்லை

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): கன்னியாகுமரி

தாலுகா (Taluk): அகஸ்தீஸ்வரம்

தொலைபேசி (Phone): 04652232420

முகவரி (Address):

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில், Nagercoil, 629001

🍴 அருகிலுள்ள உணவகங்கள் (Nearby Pure Veg)

Hotel Gowri Shankar

Hotel Gowri Shankar

⭐ 3.7 (401 reviews)

📍 Vadasery Road, Behind Union Bank Of India, Opposite Vadasery Market, Vadasery

🚀 0.4 km away
View
Hotel Arya Bhavan

Hotel Arya Bhavan

⭐ 3.0 (1 reviews)

📍 Puthukudierupu, Near Vadasery Bus Stand, Vadasery

🚀 0.5 km away
View
Arya Bhavan

Arya Bhavan

⭐ 4.3 (5901 reviews)

📍 Court Road, Opposite Bsnl Kootroad, Puthukudierupu

🚀 0.5 km away
View

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள Arulmigu Nagaraja Temple, Nagercoil - 629001 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு நாகராஜா முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 8th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Nagercoil (5 km), Nanguneri (46 km), Ambasamudram (58 km), Tirunelveli (69 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஸ்தல விருட்சம் : ஓடவள்ளி
விமானம் வகை : இதர விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 8th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன், பாண்டியன்
பாரம்பரிய கோயிலா : Yes

தல சிறப்பு (Thiruthala Special):

பிரார்த்தனை
ஆயில்ய நட்சத்திரத்தில் தோஷம் நீங்க நேர்ச்சை செய்வது இக்கோயிலின் மரபு. மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன் இராமாயண காலத்தின் இலட்சுமனாக அவதாரம் செய்தார். இலட்சுமணன் நட்சத்திரம் ஆயில்யம். ஆதிசேஷனுக்குரிய பூஜை இலட்சுமணனுக்கு பொருந்தும். இராகு கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். காலை 10.00 மணிக்கு பூஜையில் பால்பாயச நேர்ச்சையும் உண்டு.
இதர வகை
இக்கோயில் விழாக்களில் தை மாதம் 10 நாள் விழா. ஆவணி மாத ஞாயிற்றுகிழமைகள் விழா கார்த்திகை விழா ஐப்பசி மாத சூரம்பாடு விழா ஆகியன குறிப்பிட தகுந்தன. ஞாயிற்றுகிழமை பூஜை 1516 ஆம் ஆண்டிலிருந்தே நடக்கிறது என்பதற்குக் கல்வெட்டு சான்று உண்டு. ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு விழா நடக்கும் . இந்த நாட்களில் உப்பு நல்லமிளகு போன்றவையும் கை கால் போன்ற உடலின் மரவடிவங்களையும் நேர்ச்சையாக செலுத்துவர். நாகருக்கும் பாலூற்றும் வழக்கம் பெருகி வருகிறது. தை மாதத் திருவிழா அனந்தகிருஷ்ணனுக்கு நடக்கிறது. இந்த விழாவின் தொடக்க நாளை கேரள மேக்காட்டு நம்பூதிரிகள் உறுதிப்படுத்துகின்றனர். முன்றாம் நாள் விழாவின் இடதுபுறமும் கொம்மண்டையம்மன் கோயிலில் இருந்து வாகனம் வரும். இது நாகராஜா கோயிலுக்கு வருவதில்லை. வடசேரி கொம்மண்டை அம்மன் நாகராஜனின் சகோதரி என்ற கதையே இச்சடங்குகளுக்கு காரணமாக கொள்ளப்படுகிறது. 8 ஆம் நாள் விழாவின் வேட்டை நிகழ்ச்சி. 9 ஆம் நாள் தேர் திருவிழா. 10 ஆம் நாள் பழையாற்றின் ஆறாட்டு நிகழ்ச்சி.

🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)

: இக்கோயிலின் மகாமண்டபத்திலும் உள் பிராகரத்திலும் அருமையான சிற்பங்கள் உள்ளன. இவை ஜைன ஹிந்து மரபின. நாகராஜர் சன்னதி ஏதிரே முன்பகுதி இரு தூண்களிலும் துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இத்தூணின் வலதுபுறம் குறவன் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறான் . அவன் கழுத்தில் வேட்டையாடிய மான் , அவனது இன்னொரு கால் பாதத்தின் முள்ளை குறத்தி எடுக்கிறாள் . இடப்புறம் இவர்களது நாய் நிற்கிறது. இதே பக்கதிதில் ரதி மன்மதன் சிறிய சிற்பங்கள் உள்ளன. இதே மண்டபத்தில் பூசகர் பிரசாதம் கொடுக்கும் இடத்தில் உள்ள தூணில் அனுமன் சிவனை வழிபடுவது ஆகிய சிற்பங்களும் அருகருகே உள்ள தூண்களில் வேணாட்டு அரசன் பூதலவீர உதய மார்தாண்டனின் அஞ்சலி ஹஸ்த சிற்பமும் விஷ்ணு வஜ்ராயுதமும் தாங்கிய சுப்பிரமணியன் காளிங்க நர்தன கிருஷ்ணன் ஆகிய சிற்பங்களும் உள்ளன. அனந்த கிருஷ்ணன் சன்னதி ஏதிரே உள்ள தூண்களில் வாலைச்சுழற்றிய அனுமன் என ராமாயணப்பாத்திரங்களும் பார்சுவநாதர் மாகவீரர் என ஜைன சிற்பங்களும் உள்ளன. இதே பகுதியில் அபய வாத முத்திரை காட்டும் துர்க்கை, கோலூன்றி நடக்கும் பிராமணன் மத்தளம் கொட்டும் கலைஞன் சிற்பங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் கருவறை அதிஷ்டான சுவாரில் மகாவீரர் பசுவநாதர் சிற்பங்கள் உள்ளன.

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இக்கோயில் 14.04.2003 முதல் அன்னதானம் தினமும் வழங்கப்படுகிறது.