← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302

Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302

மாவட்டம்: தஞ்சாவூர் • தாலுகா: பாபநாசம்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

05:30 AM to 12:30 PM
04:00 PM to 08:00 PM
இத்திருக்கோயில் நடை அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதம் மட்டும் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மீண்டும் 4.00 மணிக்கு திறக்கப்பட்டு 8.00 மணிக்கு மூடப்படும்.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை (பூ அலங்காரம்) : 05:30 AM to 06:00 AM IST
2. காலசந்தி பூஜை (பூ அலங்காரம்) : 08:30 AM to 09:00 AM IST
3. உச்சிக்கால பூஜை (பூ அலங்காரம்) : 12:30 PM IST
4. சாயரட்சை பூஜை (பூ அலங்காரம்) : 05:30 PM to 06:00 PM IST
5. அர்த்தஜாம பூஜை (பூ அலங்காரம்) : 08:00 PM to 08:30 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): முல்லைவனநாதர்

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): முல்லைக்கொடி

ஆகமம் (Tradition): காமிக ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): தஞ்சாவூர்

தாலுகா (Taluk): பாபநாசம்

தொலைபேசி (Phone): 88700-58269

முகவரி (Address):

சந்நிதி தெரு, திருக்கருகாவூர், 614302

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முல்லைவனநாதர் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 7th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Thanjavur (16 km), Kumbakonam (18 km), Mannargudi (32 km), Neyveli (42 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நால்வர்
ஸ்தல விருட்சம் : முல்லைக்கொடி
விமானம் வகை : அஷ்டாங்க வைமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 7th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
கருணை மழை பொழியும் கற்பகம் கருகாவூரில் வாழும் அற்புதல் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களுள் திருஞான சம்பந்தர் (ம) மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க பிரார்த்தனை ஸ்தலமாகும். இத் திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவ தில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தி வழிபடுவதே சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணை வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறு இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். மற்றும் இத்திருத்தலம் பற்றி பெரிய புராணம், உமாபதி சிவம் பாடியுள்ள சிவஷேத்திர சிவநாமக கலிவெண்பாவிலும், ராமலிங்க அடிகளார் விண்ணப்பக்கலி வெண்பாவிலும் இடம் பெற்றுள்ளது.
பிரசாதம்
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக இத்திருக்கோயிலில் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருப்பாதத்தில் வைத்து விளக்கெண்ணை மந்திரித்து கொடுக்கப்படுகிறது. இந்த பிரசாத எண்ணையை பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறுகளோ, பேறுகால ஆபத்துகளோ, பின்விளைவுகளோ இல்லாம் சுகப்பிரசம் ஏற்படும்.
பிரசாதம்
குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.
பிரார்த்தனை
இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முல்லைவனநாதர் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமிக்கு அபிசேகம் செய்வது இல்லை. சுவாமியின் திருமேனியில் புனுகுசட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. தீராத நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு வளர்பிறை பிரதோசத்தில் புனுகு சாத்தி நோய் நீங்கப்பெறலாம்.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

ஷீரகுண்டம் : ஷீரகுண்டம் (பாற்குளம்)- கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள இத்திருக்குளம் தெய்வப் பசுவாகிய காமதேனுவின் காலால் உருவாக்க பெற்றது, சிவராத்திரி காலத்தில் பெருமான் இங்குதான் தீர்த்தம் அருளுகிறார். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி முடிவில் விஜயதசமி அன்று இத்திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்படும்.
பிரம்ம தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் - இத்திருக்குளம் திருக்கருகாவூருக்கு தென்மேற்கில் கற்சாலைக்குக் கீழ்ப்பக்கம் இருக்கின்றது. மார்கழித்திருவாதிரையில் நடராசப்பெருமான் சிவகாமி அம்மையாருடன் இங்கு வந்து தீர்த்தம் அருளுகின்றனர்.

🛠️ வசதிகள் (Facilities)

பாலூட்டும் தாய்மார்கள் அறை : 2வது கோபுரத்துக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் தாய்மார்கள் பாலூட்டும் அறை வசதி உள்ளது
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : ராஜகோபுரத்தின் முன்புறம் செப்பல் வைக்கும் வசதி உள்ளது.
வாகன நிறுத்தம் : கோயிலின் முன்புறம் ராஜகோபுரத்துக்கும் திருக்குளத்திற்கும் இடையே உள்ள இடத்தில் மேற்கூறையுடன் வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
நூலக வசதி : ராஜகோபுரத்திற்கும் 2வது கோபுரத்திற்கும் இடையில் சமய நூலக வசதி உள்ளது
கழிவறை வசதி : பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் இரண்டு கழிவறைகள் தண்ணீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : தாய்மார்கள் பாலூட்டு அறைக்கு அருகில் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைந்துள்ளது.
சக்கர நாற்காலி : முதியோர்கள் (ம) மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய மின் சக்கர நாற்காலி வசதி உள்ளது
சக்கர நாற்காலி : முதியோர்கள் (ம) மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சக்கர நாற்காலி வசதி உள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : இத்திருக்கோயிலில் திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை 100 நபர்களுக்கும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.